#BREAKING | "இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்" - முதலமைச்சர் ஸ்டாலின்
"இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் ‘தேசபக்திக்கு’ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"தேசியக் கொடி பொருத்தப்பட்ட மாண்புமிகு அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்
"இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, நிதியமைச்சரை நேரில் சந்தித்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருப்பதுடன், “இனி இவர்களின் சங்காத்தமே வேண்டாம்” எனத் தலைமுழுகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்" - முதலமைச்சர் ஸ்டாலின்
"தனது காரில் வீசப்பட்ட ஒற்றைச் செருப்பை அதற்குரிய ‘சிந்த்ரெல்லா’ வாங்கிச் செல்லலாம் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் தராதரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்" - முதலமைச்சர் ஸ்டாலின்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#JUSTIN | 1938ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போராட்டத்தின் வெப்பம்தான் 2022ம் ஆண்டு வரை தணியாமல் உள்ளது; அன்றைய நாள் தந்தை பெரியார் மூட்டிய நெருப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இருப்பது ஒரு உயிர், அது மொழிக்காக போகட்டுமே என்று சிறைக்கொடுமையால் முதலில் உயிர் துறந்தார் நடராஜன்; அதன் பின்பு உயிர் துறந்தார் தாளமுத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
1938ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் 1940ல் இந்தி கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்படும் வரை நடந்தது; 1948ம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. அப்போதும் பெரியாரும், அண்ணாவும் போர் பரணி பாடினர் - முதலமைச்சர்
#BREAKING | இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
#BREAKING | இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹5 கோடி வாழ்வாதார மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
#BREAKING | தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை அகதி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
#BREAKING | அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
நடப்பு கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படுவதுடன் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
நூலகங்களின் அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்