#சங்குகுளம் பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தின், கடற்கரையை ஒட்டி மந்தர் மலைப்பகுதியில் பாகல்பூர் என்ற ஊரிலிருந்த 25 கி்மீ தொலைவில் சங்கு குளம் உள்ளது. இந்த குளத்தில் தான் பஞ்சகன்ய சங்கு தோன்றியது. இது பாற்கடலில் அமிர்தம் தோன்றுவதற்கு முன் தோன்றியது. இதைக் கொண்டுதான் சிவன் கொடிய
ஆலகால விஷத்தை எடுத்து உண்டதாக ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி தினத்திற்கு முதல் நாள் இந்த சங்கு இந்த குளத்தில் தெளிவாகத் தெரிகிறது. அந்நாள் வரை நல்ல ஆழமான குளத்தில் 70, 80 அடி ஆழத்தில் அமைதியாக உறங்குகிறது. சிவராத்திரிக்கு முதல் நாள் அவ்வளவு நீரும் வற்றிப் போகிறது. சங்கு
பார்வைக்கு நன்கு தெரிகிறது. காணாமல் போன குளத்து நீர் மீண்டும் மறுநாள் குளத்தை நிரப்பி சங்கை தன் அடி மடியில் கிடத்திவிடுகிறது. நீரானது எப்படி அந்த சிவராத்திரி தினத்தில் எங்கு போகிறது? எப்படிப் போகிறது? மறுநாள் சரியாக எப்படி திரும்ப வருகிறது? புரியாத ரகசியம். புராணத்தின் படி இந்த
மந்தர் மலையை பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் மத்தாக பயன்படுத்தினர் என கூறப்படுகிறது. பீகார், கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற, மந்தார மலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த மலைக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த மலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதி பெற வேண்டியது அவசியம். இங்கு மலை மேல் ராஜா சத்திரா சென் என்கிறஅரசன் கட்டிய கோவில் உள்ளது. வேறெங்கும் காணக்
கிடைக்காத குப்தர் காலத்து மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதார சிற்பம் இங்குள்ளது. இதில் அவர் ஹிரண்யகசிபுவை கொல்லாத தோற்றத்தில் உள்ளார். 34 இன்ச் உயரத்தில் கருப்பு கல்லால் ஆன சிற்பம் இது. இங்கு கிடைத்த கல்வெட்டில் ஆதித்தியசேனா என்ற குப்த அரசர் தன் ராணி ஶ்ரீ கொண்ட தேவியுடன் மகாவிஷ்ணுவின்
அவதாரமான நரஹரியை பிரதிஷ்டை செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ராணி ஒரு பிரசித்தமாக அங்குள்ள பாபஹாரிணி என்ற குளத்தை வெட்டியதாகவும் குறிப்பு உள்ளது. பாபஹாரிணி என்கிற குளத்தின் இன்னொரு பெயர் மனோஹர் குண்ட். விஷ்ணு பகவான் மது என்கிற அரக்கனை வதம் செய்து மதுசூதனன் என்ற திருநாமத்துடன்
வசிக்கும் இடமும் இதுவே என்றும் புராணங்கள் கூறுகின்றன. 12வது சமண தீர்த்தங்கரர் நினைவாகவும் இங்கு ஒரு சமண கோவில் உள்ளது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹீ
தந்நோ ஸ்ரீகிருஷ்ண ப்ரசோதயாத். #கோகுலாஷ்டமி#ஸ்பெஷல் #HappyJanmashtami#HappyKrishnaJanmastami2022
ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்களுக்கு
கண்ணனின் மீது அதீத பிரேமை இருக்கும். இதில் சொல்லப்பட்டிருக்கும் அவர் லீலைகள் நம்மை பக்தி கடலில் ஆழ்த்தும்
ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா என்று கூவிக் கொண்டு இருந்தாள். அந்த சத்தத்தைக் கேட்ட கண்ணன் வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை
எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவில் வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கண்ணன் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த
#NahaPeriyava#Happyjanmashtami2022#HappyKrishnaJanmashtami
Sri Maha Periyava’s Message on Gokulashtami.
“Bhagawan Sri Krishna, in the Gita, says that when the entire world is sleeping, Jnani is awake, to convey the meaning that the enlightened soul is always present in the
light of Superior knowledge, which is not visible to the non-enlightened, ignorant world. When it is absolutely dark everywhere and if a light appears, we welcome it. In a desert, if water and shade is found, it gives unlimited joy. The lightning that appears between two dark
clouds, is much brighter. Sri Krishna Paramathma, was born in the midnight of Krishna Paksha Ashtami, in the month of Avani during the Dakshinayana. What is one year for us, is one day for Devas. Our Utharayana is their day time. Dakshinayana is their night time. Therefore, the
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன் ஒரு பக்தர் மதன் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரகம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் திருமஞ்சனம், அலங்காரம் செய்வது
மலர்களைக் கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார். அந்த குட்டி கிருஷ்ணனுக்கு #சதங்கைஅழகர் என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, “இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை மாலை அணிவித்தோம், ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம்” என்று பக்தி
மேலிட கூறி மகிழ்வார் மதன். ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும் போது, அவரது கனவில் ஒரு அழகான குழந்தை, தெய்வீக களையுடன் தோன்றியது! அவரை பார்த்து அழகாக சிரித்தது
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் ஓர் அந்தணர், தீவிர விட்டல பக்தர் வசித்து வந்தார். குடும்பம் பெரியது என்பதால் அவருக்குப் பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப் பட்டது. ஒரு நாள் யாத்திரைக்கு கிளம்பிவிட்டார். போகும் வழியில் விட்டல பஜனையும் ஆச்சு, கையில் ஏதோ கொஞ்சம்
குடும்பத்திற்கு திரவியமும் கிடைத்தது. வித்யா நகர் என்று ஒரு ஊர் வந்து சேர்ந்தார். அந்த ஊருக்கு ராஜா ராமராஜா என்பவர். சிறந்த பக்திமான், மேலும் நிறைய தான தர்மங்கள் செய்பவர் என்று கேள்விப் பட்டு அவரை பார்க்க அவர் அரண்மனை வந்தார். அப்போது ராஜா பூஜை செய்யும் நேரம். காவலாளி யார்
நீங்கள் என்றான். பண்டரி புரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன் என்று ராஜாவிடம் சொல்லு என்றார். உள்ளே சென்று திரும்பிய காவலாளி அவரை ராஜாவிடம் அழைத்து சென்றான். ராஜா அவரை உபசரித்தான். நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று அம்பாளுக்குப் பூஜை செய்து விட்டு
#நற்சிந்தனை போர்களத்திலே தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறந்து கிடந்ததை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும், கதறி கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுக பற்றி கொண்டு, கண்ணா அபிமன்யு
உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ என்று கேட்டான். "இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன்" என்றான் கண்ணன். கண்ணா நீ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும்
கிடையாது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது என்றான் அர்ஜுனன். "உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா" என்று கூறினார் கண்ணன். அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச பந்தம் அவர்களை விட்டு போகாது என்றான் அர்ஜுனன்.
"அப்படியா இப்பொழுதே வா
#ம்காபெரியவா#ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி#கோகுலாஷ்டமி
"ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், 'உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்' என்கிறார். எங்கும் ஒரே
இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயத்தில் ஆவண
மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல், தக்ஷிணாயனம் அவர்களுக்கு இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு