#BREAKING | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 17 போலீசார் மீது நடவடிக்கை
அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை
எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்; கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது
கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது; எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை
போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது; காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது
துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர்
அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார்; எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்
தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது
போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்
2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்
இது தொடர்பான விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது
#BREAKING | பொதுக்குழு தகுதியான நபரால் கூட்டப்படவில்லை; ஒரு கட்சியின் உறுப்பினர் உரிமை பாதிக்கப்படுகிறது என்றால் அதில் தலையிட முடியாது என நீதிமன்றம் மறுக்க முடியாது
- அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பின் முழு விபரங்கள் வெளியானது
பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர் அனுமதி இல்லாமல் கூட்ட முடியாது; தற்காலிக அவைத்தலைவரால் கூட்டத்தை கூட்ட முடியாது
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஜூன் 23ல் காலவதியாகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; கற்பனையானது, அடிப்படை இல்லாதது - தீர்ப்பு
கட்சி தலைமை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது; ஆனால், தேர்வு நடைமுறை மீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிட முடியும்
செல்லாத பொதுக்குழு முடிவுகளை அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - தீர்ப்பு
“விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருக்கவேண்டும்; அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு” - ஓ.பன்னீர்செல்வம்
#BREAKING | "இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்" - முதலமைச்சர் ஸ்டாலின்
"இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் ‘தேசபக்திக்கு’ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"தேசியக் கொடி பொருத்தப்பட்ட மாண்புமிகு அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்