இலவசங்களால் என்ன பயன் ? தமிழ் மக்கள் வாழ்வு எப்படி மேம்பட்டிருக்கிறது எனப் பிரதமருக்கு முட்டு கொடுத்து சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கலைஞர் தந்த இலவச டிவி திட்டத்தின் பலன்கள் பற்றி இந்த இழையில் பார்ப்போம் #thread#freebies
1996ல் கலைஞர் இலவச டிவி அறிவிக்கும் போது 14" டிவியின் சந்தை விலை ₹5000/-. திமுக அரசு 2006-11 நடந்த 5 ஆண்டு ஆட்சியில் 1,62,59,526 குடும்பங்களுக்கு 3687 கோடி ரூபாய் செலவில் டிவி வழங்கியது. அதாவது ஒரு டிவியின் விலை சுமார் ₹2200/-. டெண்டர் முறை மூலம் அரசு வாங்கியதால் மக்களிடம்
இருந்து போயிருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான கோடிகள் மிச்சமாகி அது புழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் டிவி ஊடுருவல் (penetration) 95% ஆனதால் தமிழில் இத்தனை சேனல்கள் வந்தன. மற்ற மாநிலங்களில் HUL, P& G, ITC போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளே கோலோச்சும் போது இங்கே கோல்டுவின்னர்
சக்தி மசாலா, ஆச்சி மசாலா, சிக் ஷாம்பு, இதயம், லயன் டேட்ஸ் என தமிழ்நாட்டில் இத்தனை பிராண்டுகள் உருவானதற்கு காரணம் இந்த டிவி ஊடுருவல் தான். இந்த சேனல்கள் ஏற்படுத்திய மூதலீடுகளை கணக்கில் எடுத்தாலே அரசு போட்ட காசை விட பல மடங்கு திரும்ப வந்திருக்கும். இந்த முதலீடு
உருவாக்கிய வேலை வாய்ப்புகள் மற்றும் விஸ்காம் கல்வி தான் இன்று யுடியூப் சேனல் நடத்துவதில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கு காரணம் எனச் சொன்னால் மிகையல்ல. கலைஞர் தந்தது வெறும் டிவியல்ல. அனைவருக்குமான சமூக, பொருளாதார முன்னேற்றம் 🖤❤
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பட்டினப் பிரவேசம் நிகழ்வில் வலதுசாரிகளுக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றி மட்டுமே. மனிதனை மனிதனே சுமந்து செல்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் சொல்லவே வாய்ப்புகள் அதிகம் என்கிறது இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்துள்ள கட்டுரை. 1/4
மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் "அவசியமற்ற பழக்கங்கள்" (non essential practices) என பலவற்றை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. உ.தா. சபரிமலையில் பெண்கள் அனுமதி, ஹிஜாப் விவகாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பே தருமபுரம் ஆதீனம் கைவிட்ட பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் ஏறியதை எந்த விதத்திலும் 2/4
நியாயப்படுத்த முடியாது. ஏற்கனவே தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் யாரையும் பல்லக்கில் சுமக்க முடியாது எனத் தீர்மானம் இயற்றி உள்ளது. சம்பிரதாயம் என்னும் பெயரில் மடத்தின் ஊழியர்களை பல்லக்கு தூக்க யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அது மனித உரிமைக்கு எதிரானது 3/4
"சார், லீஸ்ல போன வீட்டை காலி பண்ணப் போறேன். வாங்கிய காசைத் திருப்பித் தர முடியாதுன்னு சொல்றாங்க. என்ன பண்ணட்டும்?" என காலையில் ஒரு போன். விவரங்களை விசாரிக்கும் போது தான் அவர் நம்மூரில் பல ஆண்டுகளாக நடந்து வரும் மோசடிக்கு பலியாகி இருக்கிறார் எனத் தெரிய வந்தது #fraud#alert 1/4
இரண்டு ஆண்டுகளுக்கு முன் முகப்பேரில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒர் ஃப்ளாட்டை 12 லட்சத்திற்கு லீஸுக்கு எடுத்திருக்கிறார் நண்பர். போன வருடம் ஒரு வங்கியிலிருந்து வந்து கடன் கட்டாததால் வீட்டை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள். அரண்டு போன நண்பர் ஓனருக்கு 2/5
போன் செய்திருக்கிறார். அவர் பிடி கொடுக்காததால் ஓனரைத் தேடிப் பார்த்ததில் அவர் சாலையோரம் இஸ்திரி போடும் நபர். மோசடி செய்து வீட்டு மதிப்பை அதிகமாக காட்டி 100% கடன் பெற்று வீட்டை வாங்கி இருக்கிறார். ஒரு ஈ.எம்.ஐ கூட கட்டாத நிலையில் வீட்டுக்கு possession notice கொடுத்த 3/5
திமுக வின் பதவி வகித்த திரு. சாதிக் பாட்சாவின் வீட்டுக்கு எதிரில் நாங்கள் வசித்ததால் 1987 எம்ஜியார் மறைவின் போதும், 91 ராஜீவ் காந்தி கொலையின் போதும் அவர் வீட்டின் மேல் பொறுக்கிகள் கல் எறிவதை பார்த்திருக்கிறேன். அவர் மட்டுமல்ல, பல திமுகவினர் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன
ஆனாலும், அவர்கள் கரை வேட்டி கட்டுவதை விடவில்லை. இறுதிப் போரின் போதும், 2ஜி வழக்கு நடந்த போதும் திமுகவினர் மீது வார்த்தைக் கணைகள் வந்து விழுந்தன. ஆனாலும், ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து விடாமல் கழகத்திற்காக பல உடன்பிறப்புகள் கம்பு சுற்றினார்கள். இதோ, இன்று ஒரு தோழரை
சில பொறுக்கிகள் மிரட்டியவுடன், "திமுக வேஸ்ட், இனிமே நான் திராவிட ஸ்டாக் இல்லை" என சொல்லும் தோழர்களுக்கு :
உங்களுடன் சில நாள் பயணித்ததில் மகிழ்ச்சி. இந்த வண்டியில் பலர் ஏறுவர், சிலர் இறங்குவர். ஆனால், DMK will go on forever 🖤❤