#சிறுவாபுரி_முருகன்
மூலவர் ஶ்ரீபாலசுப்பிரமணியர். 500 வருடங்கள் பழமையான கோவில் சிறுவாபுரியில் உள்ளது. ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது. லவ-குசா இருவரும் ராமனுடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு சின்னம்பேடு என்றும், சிறுவை, சிறுவர்புரி, சிறுவாபுரி
என்று அழைக்கப் படுகிறது. மயில் மேலேறி வந்து அருணகிரியாருக்கு முருகன் காட்சி கொடுத்த இத்தலத்துக்கு நான்கு திருப்புகழ் பாடல்கள் உள்ளன. மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள பிற சன்னதிகள் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன்,
ஆதி விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில் உள்ள வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் ஆதி முருகப் பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியவை. முருகனைத் தவிர அனைத்து தெய்வச் சிலைகளும் மரகதக் கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள
கொடி மரத்தின் முன்னால் முருகனின் வாகனமான பெரிய பச்சை வண்ண மயில் இருப்பது விசேஷமானக் காட்சி. வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக் கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இந்த திருக்கோலத்தை காண்பது அரிது. இவரை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில்
திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஏனெனில் வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையைத் துண்டித்தார்.
அப்போதும் இவர் முருகன் சிந்தனையில் இருந்தார். அவரின் பக்தியை மெச்சி அம்மையாருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து அருள் புரிந்தார். இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்குத் திரும்பியது. சிறுவாபுரி கிராமத்தில் மூன்று ஆலயங்கள் இருந்தும், லவ-குசர்கள் பெருமை பெற்று இருந்தாலும், அங்கு
அமைந்து உள்ள முருகப் பெருமானின் ஆலயமே பெரும் பெருமைப் பெற்ற ஆலயமாக உள்ளது. அதற்குக் காரணம் இங்கு அமர்ந்துள்ள முருகப் பெருமான் பல சக்திகளைக் கொண்டவர். 1. லவ-குசா இருவரும் சிவபெருமானையும், முருகனையும் இங்கு வழிபாட்டு உள்ளார்கள். 2. வள்ளியுடன் திருமண ஜோடியாக இங்கு வந்து முருகன்
தங்கியதினால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் நடைபெறும். 3. நல்ல தங்கும் இடம் அமையும் (வீடு, நிலபுலங்கள் வாங்குதல்) 4. நோய் நொடிகள் விலகும், 5. செல்வம் சேரும் 6. இது அருணகிரிநாதர் பாடல் பெற்றத் தலம். 7. வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு
செய்வது சிறப்பு. வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள் தொடர்ந்து ஆறு செவ்வாய் கிழமை வந்து வேண்டிக் கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம். அதனால் செவ்வாய் கிழமைகளில் இங்கு நல்ல கூட்டம். இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியது இல்லை.
இங்கு நேரில் வரவும் வேண்டியது இல்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை! சென்னை-கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிமீ தூரத்தில் இடது புறமாக திரும்பி பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிமீ போனால் சிறுவாபுரி
முருகனை தரிசிக்கலாம். சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். பூ, மாலை மற்றும் பூஜை சாமான்கள் மட்டுமல்லாது இங்கு கோவில் வாசலில் காய்கறிகளையும் விற்கிறார்கள்.
#பாரத_நாட்டின்_அதிசயங்கள் 1. தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநி என்ற இசை வரும்.
2. 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.
3. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை
குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
4. சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் காலை, மதியம் மாலை சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது.
5. சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில்
குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
6. திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத கல் சிற்பங்களை காணலாம்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
தாஸியா ஒரு அப்பாவி. அவருக்கு பூரி ஜகந்நாதனை பற்றி அவ்வளவாக தெரியாது, ஆனால் அவர் ஊரில் வந்த பாகவதர்கள் ஜகந்நாதன் சரித்திரம் சொல்லவதை தூரத்தில் இருந்து கேட்டு இருப்பார். ஓ இவ்வளவு பரமக்ருபாகரனா இந்த ஜகந்நாதன் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டு அவனை தியானிக்க
ஆரம்பித்தார். தினமும் ஹரி பஜனை செய்து வாழ்வை பயனுள்ளதாக மாற்றி கொள் என வந்த ஒரு பாகவதர் உபதேசம் செய்தார். இவரும் தினமும் ஜகந்நாதா! ஜகந்நாதா! என சொல்லி கொண்டு வாழ்வை நகர்த்தி வந்தார். ஒரு நாள் இவருக்கு ஜகன்னாதனை நேரில் தரிசிக்க ஆவல் வந்தது. இவர் ஊரில் இருந்து கிளம்பி நடக்க
ஆரம்பித்தார். நடந்தார் நடந்தார் நடந்து கொண்டே இருந்தார், ஒரு வழியாக வந்து சேர்ந்தார். நம் ஜகந்நாதனுக்கு ஏதாவது கொடுக்கலாமே என்று தன் கையில் இருந்த சிறு தொகையை வைத்து ஒரு தேங்காய் வாங்கி, அதை சமர்ப்பிக்க ஒரு துண்டில் வைத்து முடிந்து கொண்டு சென்றார். போகும் வழியில் வாயில் காப்பாளன்
#நற்சிந்தனை கண்ணனின் வெண்ணை என்பது என்ன?
மனிதன் தனது பிறப்பின் நிலையை உணர்ந்து, பிறப்பின் ரகசியத்தை அறிய முற்பட்டு, நான் யார் நான் யார் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு உஷ்ணப் பட்டு பதமாகி ஒரு குருவை நாடி அவரது வழிகாட்டுதலால், மனமிருகி தன்னுள் ஆழ்ந்து தீவிர பயிற்சியில்
ஈடுபடும்போது ஞானம் வெளிப்படும். ஞானம் வெளியாகும் போது மனிதன் பூரண நிலையை அடைகிறான். இப்போது ஆசை அவனை ஆட்கொள்வதில்லை. இவனை ஆட்டி வைத்த ஆசையை இவன் ஆட்டி வைக்கிறான். வெண்ணை எப்படி கிடைக்கிறது? பாலை காய்ச்சி, தயிராக்கி, அதை மத்தால் கடைந்த பின் வெளிவருகிறது. இங்கே பால் என்பது மனிதன்,
தண்ணீர் என்பது ஆசை. பதமாக காய்ச்சுதல் என்பது, தன்னுள்ளே எழும் நான் யார் எனும் கேள்விகள். தயிர் என்பது ஒரு குரு. மனமிருகுதல் மத்து என்பது, தீவிரமான பயிற்சி. வெண்ணை என்பது ஞானம். ஸ்ரீ கண்ணன் தேடியது வெண்ணையைப் போன்று தண்ணீரின் மேலே சவாரி செய்யும், ஆசையை வென்ற ஞானவான்களை தான்.
#MahaPeriyava The time when MahaPeriyava did Kasi Yatra, end of January 1934 He camped at SriSailam. That was a night of the lunar eclipse. He set out to conduct the full moon puja in the thatched shed constructed for the purpose, after taking His bath in the Patala Ganga. His
idea is to spend the night there, take bath in the morning and then return. He had permitted some of the children from the Veda Patashala to accompany Him on this yatra. The extra affection He had for the children came to be expressed in many ways on that occasion. While He had
permitted His entourage to come with Him traversing on foot, the rugged paths through the jungles, and some of them to travel by different kinds of vehicles, He made special arrangements for the children to be brought by trains, though it involved circuitous routes, to places
#திருமுருக_கிருபானந்த_வாரியார் பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்த இவருக்கு எத்தனை நமஸ்காரங்கள் செய்தாலும் போதாது. வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூரில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியரின் 11 குழந்தைகளில் 4வது
குழந்தையாக 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தவர் ஸ்ரீ கிருபானந்த வாரியார். இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை இவருக்குச் சூட்டினார். வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும்
வழங்கியதும் இவரே. வீட்டிலேயே இலக்கியம், இலக்கணம், இசை எல்லாம் கற்றுக் கொடுத்தார். பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் 4 வருடங்கள் வீணை கற்றார் வாரியார். 8 வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது. 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார். 5வது வயதில் திருவண்ணாமலையில், பாணிபாத்திர
#மகாபெரியவா
மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், நிதி என்று வரும் போது தான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!
“காஞ்சிபுரம் காமாக்ஷிக்குன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க
வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"
“அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான் அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"
“மக்கள் சேவையே மகேசன் சேவை. ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு,
அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?" இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டி இருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்று தான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது. அது, பெரியவாளுக்காக பண்ணுகிறோம் என்ற சந்தோஷம்! பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா?