#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
தாஸியா ஒரு அப்பாவி. அவருக்கு பூரி ஜகந்நாதனை பற்றி அவ்வளவாக தெரியாது, ஆனால் அவர் ஊரில் வந்த பாகவதர்கள் ஜகந்நாதன் சரித்திரம் சொல்லவதை தூரத்தில் இருந்து கேட்டு இருப்பார். ஓ இவ்வளவு பரமக்ருபாகரனா இந்த ஜகந்நாதன் என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டு அவனை தியானிக்க
ஆரம்பித்தார். தினமும் ஹரி பஜனை செய்து வாழ்வை பயனுள்ளதாக மாற்றி கொள் என வந்த ஒரு பாகவதர் உபதேசம் செய்தார். இவரும் தினமும் ஜகந்நாதா! ஜகந்நாதா! என சொல்லி கொண்டு வாழ்வை நகர்த்தி வந்தார். ஒரு நாள் இவருக்கு ஜகன்னாதனை நேரில் தரிசிக்க ஆவல் வந்தது. இவர் ஊரில் இருந்து கிளம்பி நடக்க
ஆரம்பித்தார். நடந்தார் நடந்தார் நடந்து கொண்டே இருந்தார், ஒரு வழியாக வந்து சேர்ந்தார். நம் ஜகந்நாதனுக்கு ஏதாவது கொடுக்கலாமே என்று தன் கையில் இருந்த சிறு தொகையை வைத்து ஒரு தேங்காய் வாங்கி, அதை சமர்ப்பிக்க ஒரு துண்டில் வைத்து முடிந்து கொண்டு சென்றார். போகும் வழியில் வாயில் காப்பாளன்
இவன் என்ன சுற்றி கொண்டு போகிறான் என வாசலில் நிறுத்தி நீயெல்லாம் கோவிலுக்கு வர தகுதி இல்லாதவன் என நிறுத்தினான். இவரும் வாசலில் நின்ற பட்டரிடமெல்லாம் இந்த தேங்காயை ஜகந்தாதனிடம் சேர்த்து விடுங்கள் என கூற அவர்களோ, பெரிய அதிசய தேங்காய் போ போ என விரட்டி அடித்தனர். மனம் நொந்து இவர்
துவஜஸ்தம்பம் வந்து ஹே ஜகந்நாதா! நீ கருணை மிக்கவன் அல்லவா எம்மை போன்ற அனாதைகளின் தாயல்லவா நான் ஆசையோடு உனக்காக வாங்கி வந்த இந்த தேங்காயை ஏற்று கொள்ள இங்கு யாருக்கும் மனம் இல்லை. அன்று குசேலர் கொண்டு வந்த அவலை ஆசையுடன் ஏற்று கொண்ட பரம கிருபாநிதி நீ அல்லவா! ஜகந்நாதா! இந்த அபலை
வாங்கி வந்த தேங்காயை திருப்பி எடுத்து செல்ல போவது இல்லை, இதோ உனக்கு சேர வேண்டியது நீயே எடுத்து கொள் என்று அவர் தேங்காயை நீட்ட ஜகந்நாதன் வந்து உடனே அதை வாங்கி கொண்டான்.
தூய பக்தியை மட்டுமே பறக்கிறான் இறைவன். அவனைப் போன்ற பரம தயாளன் ஒருவர் உண்டோ!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 28
நம் கோவில்களை பற்றிய அரிய தகவல்கள் சொல்லில் அடங்காது. #பெருமாள்_கோவில்கள் பற்றிய சில விசேஷ தகவல்கள் இதோ:
திருமகைக்கு மேலுள்ள நாராயணகிரியில் ஸ்ரீவாரி பாதம் எனப்படும் இடத்தில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாக நம்பிக்கை. இங்கு அவரின் பாதச்சுவடுகள் வழிபடப்படுகின்றன. Image
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனி மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ImageImage
நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சிவனைப் போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்ம மூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

திருக்கண்ண Image
Read 10 tweets
Aug 28
#MahaPeriyava One day few village leaders had come for Sri Maha Periyava’s darshan. The Ganesha idol in their village temple had been stolen. So, they had come to Periyava to request for a new Ganesha idol that they could install in the temple. They informed Periyava about this Image
and waited for His response.
“Is there a lake in your village?"asked Periyava.
“Yes"
"Is there water in it?"
The villagers looked at each other and replied, “It has not been cleaned by the Panchayat, and so water is very less”
“If there is plenty of water in the lake, it will be
useful for all people and cattle, is it not?"
The villagers replied in unison, “Yes.”
Periyava replied, “First clean up the lake.” He also gave then prasadam indicating that they had the permission to leave. The villagers at first did not understand that once they had received
Read 13 tweets
Aug 28
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் #மகாபாரதம்
சல்லியன் மத்திர நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாதுரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன் மற்றும் சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர். பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன். வில் வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன். நகுலன், Image
சகாதேவனுக்குத் தாய் மாமன் ஆனபோதும் துரியோதனின் தந்திரத்தால் குருட்சேத்திரப் போரில் கௌரவர்கள் தரப்பில் போரிட நேர்ந்தது. அத்தினாபுரத்தில் பாண்டவர்கள் அரண்மனை என நினைத்து துரியோதனனின் உபசரிப்பில் மகிழ்ந்திருந்த போது விருந்தளித்தவருக்கு எந்த உதவியும் செய்ய வாக்களிக்கிறான். அப்போது
துர்யோதனன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கௌரவர் சேனைக்கு ஆதரவு கேட்கிறான். தனது தவறை உணர்ந்த சல்லியன் தருமனிடம் நிகழ்ந்தவற்றைக் கூறி மன்னிக்க வேண்டுகிறான். அப்போது தருமன், சல்லியனின் தேரோட்ட வலிமையைக் கருத்தில் கொண்டு, கண்ணனுக்குச் சாரதியாக இருக்கும் வாய்ப்பு உண்டானால் அவனது மன
Read 13 tweets
Aug 27
#மகாபெரியவா 1947ஆம் ஆண்டு அக்டோபர் -நவம்பர் மாதங்களில் பூஜ்யஸ்ரீ ஆசார்யாள் அவர்கள் கும்பகோணத்திற்குக் கிழக்கில் சுமார் 15 மைல் தொலைவில் உள்ள குத்தாலத்திற்கு எழுந்தருளி இருந்தார்கள். அப்போது ஐப்பசி மாதமாக இருந்தபடியால், மாதம் முழுவதும் மாயூரம் ரிஷப தீர்த்த கட்டத்தில் காவிரியில் Image
நீராடுவது விசேஷம் என்பதால் மயிலாடுதுறை துலாகட்டத்தில் புனிதநீராடி வரத் தீர்மானிக்கப் பட்டது. குத்தாலத்திலிருந்து அங்கு சென்று திரும்பும் தூரம் சுமார் 32 கிமீ. ஐப்பசி மாதம் முதல் நாள்
குத்தாலத்திற்கு விஜயமாகியிருந்த பூஜ்யஸ்ரீ ஆசார்யர்கள் அவர்கள் அதிகாலையில் கிளம்பி விடிவதற்குள்ளாக
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்திற்கு எழுந்தருளி ஸ்நானம் முடிந்து உடனே காலை வேளையில் குத்தாலம் ஸ்ரீமடம் முகாமிற்குத் திரும்பினார்கள். ஜகத் குருநாதர்களுடன் துலாஸ்நாநம் செய்யும் பேறு கிட்டியதில் அடியவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.
அடுத்த நாளும் அதிகாலையில் கிளம்பிய பூஜ்யஸ்ரீ பெரியவாள்
Read 6 tweets
Aug 27
#MahaPeriyava
A wealthy man, had great devotion to Periyava. He came to Ilayanthangudi for darshan. He brought two wooden boxes full of apples and placed them before Periyava. Periyava glanced at the boxes and then went inside.
"I have bought these apples for Periyava. You Image
bandicoots of the Matam don't devour and empty them" he told the helpers there after Periyava left. Periyava did hear these words but He did not give a hint that He heard those words. Some Nari kurava - gypsy, families had pitched a tent in the place and were staying at that time
On the evening the apple boxes came, Periyava sent word for the boys of the Nari kurava families and gave each one of them an apple, and that in front of the wealthy man! That man’s face showed his distress. "I too am a peruchchALi--bandicoot, in the Matam", said Periyava. The
Read 6 tweets
Aug 27
#நற்சிந்தனை
மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதன் என்பவனை, சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்திருந்தான் அர்ஜுனன். அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன். துரியோதனன், கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர்.
அர்ஜுனனால் அவனை
நெருங்கவும் முடியவில்லை. அவனிருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் நெருங்கியது. என்ன கிருஷ்ணா சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே. ஜயத்ரதனை எப்படிக் கொல்வது என்றான் அர்ஜுனன். சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான். இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்
சூரியன் அஸ்தமித்து விட்டான். இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான் என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடன் அர்ஜுனனைப் பார்த்து, "அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது பார். ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல் அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரனின் மடியில் தள்ளு”
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(