ஒருமுறை #ஸ்ரீஆதிசங்கரர் ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்த போது, அவரை பார்த்து ஒரு விவசாயி, "சிலர், பக்தி கோயில் பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் வேறு சிலர் சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறார்களே, எது சரி" என்று கேட்டார்.
ஆதிசங்கரர் அவரிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றார். அவர் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தார். சங்கரரும் அந்தக் குச்சிய
பிடித்தபடி பாலத்தைக் கடந்தார். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தார். அதற்கு அவர், "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றார். "ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால்
அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள்?" என கேட்டார். "மரப் பாலத்தை கடக்கிறபோது, திடீர்னு வழுக்கி விழுந்தால், பிடிச்சுக்கத்தான் சுவாமி!"
"உன் கேள்விக்கும் அதுதான்பா விடை! அவனவன் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை
அடையமுடியும். ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, கடவுளின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றார் ஆதிசங்கரர்.
நாம் வழிபடவும், வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள், நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவர் வேண்டும். எனவே தான்
"கல்லோடு ஆயினும் சொல்லி அழு" என்பது முன்னோர்கள் வாக்கு. ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை இப்படி இருப்பவர்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை. #அர்த்தமுள்ள_இந்துமதம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
விநாயகரை பற்றி தெரிந்து கொள்வோம். #வினாயகசதுர்த்தி#GaneshChathurthi#மகாபெரியவா
“விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன்
சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப் போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச்
சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார். சிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான்
#நற்சிந்தனை#மகாபெரியவா
வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும்.
இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப் படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீட்சை வைத்துக் கொள்ளலாம். அதாவது அன்றன்றைக்கும் நாம்
தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரி என்று தான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. ‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் ‘சாகிற’
போது பகவானையே ஸ்மரித்துக் கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்து விட வேண்டும். வேறே நினைப்பு வரக் கூடாது. சொல்லும்போது சுலபமாக இருக்கும். ஆனால்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்#வினாயகசதுர்த்தி#ஸ்பெஷல்#HappyGaneshChaturthi
ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதை எண்ணிக் குழப்பம் அடைந்தனர். இதற்குத் தீர்வு காண பரமேஸ்வரனிடம் முறையிட்டனர்.
பரமன் தனது தர்ம பத்தினியாம் பார்வதி தேவியை ஞானக் கண்ணால் உற்று நோக்கினார். அந்த சமயத்தில் அதிசயிக்கும் வகையில், மோகன வடிவத்தில், எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான். மற்றவர்களது கண் படாமல் இருக்கப் பார்வதி தேவி பிறரை மயங்கச் செய்யும் அழகான வடிவத்தை மாற்றி
பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி புது உருவத்தை தந்தாள். பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கு எல்லாம் தலைவனாக நியமனம் செய்தார். இனிமேல் எந்தக் காரியம் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத்
#மணிமூர்த்தீஸ்வரம் #உச்சிஷ்டகணபதி#பிள்ளையார்சதுர்த்தி_ஸ்பெஷல்
தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். இக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு விநாயகர் தன்னுடைய 32 திருத்தோற்றங்களில் 8வது வடிவமாக போற்றப் படுகின்ற உச்சிஷ்ட
கணபதியாக அவதரித்து அருள் பாலித்து வருகிறார். ஜீவநதியான தாமிரபரணி கரையில் 5 நிலை ராஜகோபுரத்துடன் எட்டு மண்டபங்கள், 3 பிராகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய மூலவராக விநாயகர் எழுந்தருளியுள்ள தனித்திருக்கோயில் இது. இக் கோவிலுக்குள்
நுழைந்தால் பலி பீடம், கொடி மரம் தாண்டி விநாயகரின் மூஷிக வாகனம் இருக்கிறது. அதனை தாண்டி உள்ளே நுழைந்தால் நேராக கருவறை. கருவறையில் உச்சிஷ்ட கணபதியும் அவருக்கு அடுத்த தனி சன்னதியில் நெல்லையப்பரும் காட்சித் தருகிறார்கள். திருக்கோவில் உள் சுற்று பிரகாரத்தில் 32 விநாயகரின் சன்னதிகள்,
#மகாபெரியவா
சொன்னவர்- இந்திரா சௌந்தர்ராஜன்
ஒரு சிந்தனையாளர் நாம் பெரிதும் போற்றும் காஞ்சி முனிவரைச் சந்தித்தார். முனிவரிடம் பாகிஸ்தானுடன் நடந்துவரும் யுத்தம் பற்றி கூறியவர் மேற்கண்ட ஆபத்துக்களையும் எடுத்துக் கூறியதோடு, காஞ்சி முனிவரிடம் வருத்தத்தோடு ஒரு பெரும் கேள்வியையும்
கேட்டார்.
"எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இந்த பூமியில். எத்தனையோ அருளாளர்களும் இந்த பூமியில். சகல பாவங்களையும் போக்கிடும் கங்கையும் பாய்ந்து செல்கிறது. மக்களும் பக்தி உணர்வுடன் வாழ்கிறார்கள். இப்படியிருக்க ஏன் இந்த மண்ணே எப்போதும் அடிமைப் படுத்தப்படுகிறது? ஏன் இந்த மக்களே கஷ்டப்
படுகிறார்கள்? இதிகாசங்களும் இறவாப் புகழ் பெற்ற காப்பியங்களும் தோன்றிய இந்த மண்ணின் மீது தெய்வத்துக்கு கருணை இல்லையா இல்லை பகுத்தறிவாளர்கள் கூறுவது போல தெய்வமே ஒரு கற்பனையா?” என்பது தான் அவர் கேட்ட கேள்வி. காஞ்சிப் பெரியவரிடம் ஒரு மந்தகாசமான புன்னகை. மிகுந்த வருத்தமுடன் கேள்வி
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
கண்வ மகரிஷி யசோதையின் தந்தை சுமுகரின் இல்லப் புரோகிதர். அவர் தினமும் சாளக்கிராம வடிவிலுள்ள திருமாலுக்குப் பக்தியுடன் பூஜை செய்வார். தான் எந்தப் பொருளை உண்டாலும், அதை முதலில் சாளக்கிராமப் பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணிய பிறகு தான் உண்பார். நந்தகோபர் கண்வரிடம்
அடியேனுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நீங்கள் வந்து அக்குழந்தையைப் பார்த்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று நெடு நாட்களாக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். கண்ணன் பிறந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் கண்வர் கோகுலத்துக்கு வந்தார். தான் பூஜிக்கும் சாளக்கிராமத்தை
நந்தகோபரின் மாட்டுக் கொட்டகையில் வைத்தார். ஏனெனில் மாட்டுக் கொட்டகையில் ஒரு மந்திரத்தை ஒருமுறை சொன்னால், நூறு முறை சொன்னதற்குச் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அங்கேயே அவர் பெருமாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டிய உணவுகளைத் தயாரிக்கவும் யசோதை ஏற்பாடு செய்து தந்தாள்.
காய்கறிகள்,