#ஸ்ரீமன்நாராயணீயம் நூறு தசகங்களை கொண்டது. ஒவ்வொரு தசகத்திலும் தோராயமாக பத்துப் பாடல்கள் இருக்கும். இதை இயற்றியவர் #நாராயண_பட்டத்திரி அவர் தன் குருவின் வியாதியை தான் வாங்கிக் கொண்டு தன்ஆச்சாரயனுக்கு அந்நோயிலிருந்து விடுதலை கொடுத்து, மற்ற மாணாக்கர்களுக்கு அவர் தொடர்ந்து பாடம்
எடுக்கும்படி உதவினார். ஆனால் அவர் ஏற்றுக் கொண்ட வாத நோய் அவரை மிகவும் வருத்தியது. அவர் பணக்கார வீட்டுப் பிள்ளை. அவர் வீட்டு வேலையாள் அவரின் துன்பத்தைக் காண பொறுக்காமல் ஒரு ஜோசியரிடம் சென்று பரிகாரம் வேண்டினார். அவர், நாக்கில் மீனை வைத்துக் கொண்டு குருவாயூரப்பன் கோவிலில் அவரை பாட
சொல்லு என்றார். இதை வந்து பட்டத்திரியிடம் வேலையாள் சொன்னார். முதலில் அதிர்ச்சி அடைந்தார், பின் புரிந்து கொண்டார். மகா விஷ்ணுவும் மச்சாவதாரத்தில் இருந்து பாட ஆரம்பித்தார். தினம் அவரை தூக்கிக் கொண்டு கோவிலில் ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டுப் போய் விடுவார்கள். மாலை வந்து திரும்பவும்
தூக்கிக் கொண்டு போவார்கள். பக்கவாட்டில் திண்ணையில் உட்கார்ந்திருந்த அவரால் அவரால் சன்னதியில் இருக்கும் கிருஷ்ணனை கழுத்தைத் திரும்பிக் கூட பார்க்க இயலாது. நூறு தசகம் வரை அவர் நோயை கண்ணன் குணப்படுத்தவில்லை. நூறாவது தசகத்தில் பாதாதிகேசமாக அவர் கண்ணனை வர்ணிக்க ஆரம்பித்தவுடன் அவருக்கு
காட்சி தந்து அவரை நோயின் கோரப் பிடியில் இருந்தும் விடுவித்தார். இந்த நாராயானத்தை சித்த சுத்தியுடன் பாராயணம் செய்பவர்களுக்கு தீராத நோயும் தீரும் என்பது உறுதி. இது கண்ணனின் அருட் கடாக்ஷம். இந்த நூறு தசகத்தையும் நாம் யுடியுபில் போட்டும் அல்லது ஒரு குரு முகமாகவும் (அது தான் சிறந்தது)
கற்றுக் கொள்ள முடியும். பொருள் தெரிந்து படித்தால் தான் நமக்கு என்ன பாராயணம் செய்கிறோம் என்பதுடன் பட்டத்திரி எவ்வளவு அழகாக எழுதியுள்ளார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஸ்ரீமத் நாராயணீயம் ஸ்ரீமத் பாகவத சாரம் (ஸ்ரீமத் பாகவத புராணத்தின் சாரம்) . சமஸ்கிருத இலக்கியத்தில் ஒரு
கவிதையாகவும், பக்திப் பாடல்களாகவும் நாராயணீயம் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. பட்டத்திரி குருவாயூரப்பனின் திருவுருவத்தை உன்னதமாகச் சித்தரிக்கிறார்.
“சம்மோஹனம் மோகனாத், காந்தம் காந்திநிதானதோபி, மதுரம் மாதுர்ய துர்யதாபி, சௌந்தர்யோதரதோபி சுந்தரதரம்”
நாராயண பாராயணம் பக்தர்களின்
மனம் மற்றும் உடல் ரீதியான துன்பங்களைக் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. நாராயண #நித்யபாராயணம் பக்தர்கள் #ஆயுராரோக்யசௌக்யம் அடைய உதவும். ஒவ்வொரு தசகத்தின் பொருளையும் இங்கே அடியேன், ஆச்சார்யன் திருவருளாலும், ஸ்ரீ @Raamadaasan1 அவர்களின் உந்துதலினாலும் பிதிவிட உள்ளேன்.
கண்ணன் தான் நடத்தி வைக்க வேண்டும். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾 #தசகம்_1
பகவானின் பெருமை 1. பகவானாகிய அந்த பரப்ரம்மம் ஆனந்தமாகவும், அறிவாகவும் மோக்ஷத்தை அளிக்கவல்லதாகவும் உள்ளது. ஒப்புயர்வற்றது. கால தேசத்திற்கு அப்பாற்பட்டது. உலக மாயைகளில் சம்பந்தமற்றது. அந்த மெய்ப்போருளே
குருவாயூரில் குருவாயூரப்பானாக, ஜனங்களின் பாக்யமாக விளங்குகிறது. 2. இவ்வாறு, கிடைப்பதற்கு அரிதான பொருள் எளிதில் கிடைத்திருந்தும் மக்கள் அறியாமையால் உடலாலும், மனத்தாலும், வாக்காலும் வேறொன்றை வழி படுகிறார்கள். அனைத்து உயிர்களிடத்தும் வியாபித்திருப்பவரான குருவாயூரப்பனையே உலகோரின்
கஷ்டம் நீங்க, உறுதி பூண்ட உள்ளத்தோடு நம்பியிருக்கிறோம். 3. ஓ குருவாயூரப்பா! தங்கள் திருவுருவம் ரஜோ, தமோ ஆகிய குணங்களின் சம்பந்தமற்று, ஸத்வ குணம் நிரம்பியதாகவும், பஞ்ச பூதங்களாலும் பதினொரு இந்த்ரியங்களாலும் ஸ்ருஷ்டிக்கப் பட்டது என்று வியாசர் கூறுகிறார். பரமானந்தா ஸ்வரூபமான உன்
அழகுருவம் பிரகாசிப்பதாய், எளிதில் அடையக் கூடியதாய், காதிற்கும், மனத்திற்கும் இனியதாய் இருக்கிறது. புண்யசாலிகள் அந்த ரூபத்தைக் கண்டு களிக்கிறார்கள். 4. தாங்கள் என்றும் நிறைந்து இருப்பவர். பேரின்பமாகிய அம்ருதஸ்வரூபி. முக்தர்கள் கூட்டத்தால் அழகு நிரம்பியவர். அப்படிப் பட்ட ஸத்வ
ரூபியான தாங்களே முழுமுதற்கடவுள். பரிபூரணர் 5. ஓ குருவாயூரப்பா! பிறப்பற்றவரே! நீங்கள் எவ்விதச் செயலுமற்றவர். ஆயினும், கடைக்கண் பார்வையால் மாயையை ஏவும் செயலைச் செய்து வருகிறீர்கள். அந்த மாயையும் தங்களிடம் அடங்காதது போல் தோற்றம் அளிக்கிறது. விவரிக்க முடியாத அந்த தூய்மையான மாயையின்
ஓர் அம்சமே உம்முடைய திருவுருவம். 6. தங்கள் சரீரமானது, கார்மேகம் போலும், காயாம்பூங்கொத்தைப் போல் அழகாக உள்ளது. புண்ணியசாலிகளின் கண்களுக்கு முன்ஜன்ம புண்ணியத்தின் பயனாக விளங்குகிறது. ஸ்ரீ மகாலக்ஷ்மி விளையாடுவதற்கு ஏற்ற இருப்பிடமாக இருக்கிறது. பக்தர்கள் மனத்தைப் பேரானந்த வெள்ளத்தில்
மூழ்கச் செய்கிறது. அப்படிப்பட்ட தங்களை நான் என்றும் ஸ்மரிக்கிறேன். 7. மாயையால் ஜயிக்கப்படாத குருவாயூரப்பா! இதுவரை, தங்கள் ஸ்ருஷ்டி பிறவித் துன்பத்தை அளிக்கிறது என்று நினைத்தேன். இப்போது அந்த எண்ணம் எனக்கில்லை. ஏனென்றால், இவ்வாறு படைக்காதிருந்தால், மிகவும் ஆனந்தமான உன் திருமேனியைக
கண்களாலும், காதுகளாலும் அனுபவித்து பேரின்பக் கடலில் மகிழ்ச்சி அடைந்திருக்க முடியுமா? 8. குருவாயூரப்பனான பாரிஜாதம் அளவற்ற பயன்களை அளிக்கும். எளிதாக அடைய முடியும். மோக்ஷத்தையே கொடுக்கும். அப்படியிருக்க, அழியக்கூடிய இந்திரலோகத்து பாரிஜாத மரத்தை யாசகர்கள் விரும்புவது ஏன்? 9. உலகில்
மற்ற தெய்வங்கள் அபீஷ்டங்களைக் கொடுக்கின்றனர். நீயோ, உன்னையே, உன் ஸ்வரூபமான ஆத்மாவையே அளிக்கின்றாய். வாசுதேவா, உன்னைத் தொழுகின்றேன் 10. முரனைக் கொன்றவனே! எல்லா தெய்வங்களையும், அவரவர்கள் வேலையைச் செய்ய ஏவுகின்றீர்கள். முற்றும் துறந்தோர் உன்னைப் பாடும் புகழ் பெற்றிருக்கிறீர்கள்.
தாங்கள் பற்றற்று இருப்பதால், பகவான் என்ற சொல்லுக்குப் பொருளாக விளங்குகின்றீர்கள்.
#ஸ்ரீமன்நாராயணீயம்#தசகம்_2
பகவான் திருமேனி வர்ணனை:
1.சூர்யனை விட பிரகாசமானதாக உன் கிரீடம் ஒளிவிடுகிறது. மேல் நோக்கியுள்ள திலகத்தால் உனது நெற்றி மிக அழகாக உள்ளது. கருணை பொங்கும் கண்கள், புன்சிரிப்புடன் கூடிய செவ்வாய், எடுப்பான நாசி, கன்னங்களில் ஒளி வீசும் காதின் மகர குண்டலங்கள்,
மார்பை அலங்கரிக்கும் கௌஸ்துப மணி, வனமாலை, முத்துமாலை, ஸ்ரீவத்ஸம் இவற்றால் அழகாக விளங்கும் உன் திருமேனியைத் தினமும் தியானிக்கிறேன். 2. தோள்வளைகள், கங்கணம், சிறந்த ரத்னங்களால் இழைத்த மோதிரம் முதலியவை அணிந்து பிரகாசிக்கின்ற உன் நான்கு கைகள், சங்கம், சக்ரம், கதை, தாமரை ஆகியவற்றையும்
ஏந்தி இருக்கின்றன. இடுப்பில் பொன் அரைஞாணும், பீதாம்பரமும் அலங்கரிக்கின்றன. திருவடிகள் தாமரை மலர்கள் போல விளங்குகின்றன. இப்படிப்பட்டது என்று வர்ணிக்க முடியாதபடி இருக்கின்ற உன் திருமேனி துன்பங்களை போக்குகின்றது. நான் அதையே பற்றுகிறேன். 3. பிரபுவே! உன் திருமேனி மூவுலகிலும் போற்றப்
படுகின்ற பொருளை விட மேலாகப் போற்றப்படுகின்றது. மனங்கவர்ந்த பொருளை விட மனம் கவர்கிறது. இனியதாக இருக்கின்ற பொருளை விட பெரிதும் இனியதாக இருக்கிறது. அழகுமிக்க பொருளை விட அழகு வாய்ந்ததாக, ஆச்சர்யம் மிக்க பொருலை காட்டிலும் ஆச்சர்யம் மிகுந்தவையாக தோன்றுகிறது. இத்தகைய திவ்ய ஸ்வரூபம்
உலகில் யாருக்கு தான் மகிழ்ச்சியை உண்டு பண்ணாது? 4. ஓ குருவாயூரப்பா! சகல செல்வத்திற்கும் இருப்பிடமான மகாலக்ஷ்மி உன் திருமேனியில் பற்று கொண்டு உன்னிடத்திலேயே நிலைத்து விட்டாள். அதனால் அவள் தன் பக்தர்களிடம் கூட தங்குவதில்லை. இதனால் அவளுக்கு 'நிலையற்றவள்'என்ற அவப்பெயர் ஏற்பட்டது. அது
வருந்தத்தக்கதே ஆகும். 5. உன் அழகினால் மகாலட்சுமி கவரப்பட்டு இருக்கிறாள். அதனால் பகவத் பக்தி இல்லாதவர்களிடம் நிலைத்து நிற்பதில்லை. உன்னைப் பற்றிய சிந்தையிலும், நாம சங்கீர்த்தனத்தால் உன் புகழ் பாடும் பக்தர்களிடத்தில் அன்பு கொண்டு நித்யவாஸம் செய்கிறாள். இது உறுதி. 6. உன் திருவுருவம்
ஸௌந்தர்யமான அமுதத்தைச் சொரிகிறது. ஆனந்தமாகவும், மனம் கவர்வதாகவும் உள்ளது. அது உன்னைப் பற்றி கேட்கின்றவரின் அறிவை மறுபடியும் கேட்கும்படி தூண்டுகிறது. ஆனந்தப் பரவசத்தில் உடல் புல்லரிக்கிறது. கண்களில் நீர் பெருகி உடலையே நனைத்து விடுகிறது. 7. யோகங்களில் சிறந்தது பக்தி யோகம். கர்ம-ஞான
யோகங்களை விட பக்தி யோகமே சிறந்தது என யோகிகள் கூறுகின்றனர். அத்தகைய பக்தி யோகம், அழகே உருவான உன்னிடத்தில் அன்பின் எழுச்சியான பக்தி, எல்லா மக்களாலும் எளிதில் அடையக் கூடியதாக உள்ளது. 8. செய்யவேண்டிய கர்மாகளை பற்றற்று செய்வதும், அதனால் உண்டாகும் ஞானமும் கர்ம-ஞான யோகமாகும். இது நீண்ட
காலத்துக்குப் பின்பே பலனளிக்கும். ஞானத்தால் உண்டாகும் பலனோ இந்திரியங்களுக்குப் புலப்படாதது. அதனால் அது மனதிற்கு எட்டாதது. உன்னிடத்தில் செலுத்தும் அன்பு வடிவான எப்பொழுதும் சுவையாகவும், பேரின்பத்தை அளிக்க வல்லதாகவும் இருக்கிறது. 9. மிகவும் சிரமப்பட்டு கர்மாக்களைச் செய்து அதனால்
வைராக்கியம் பெற்றால் ஞானயோகத்திலும், இல்லையேல் பக்தி யோகத்திலும் மக்கள் செல்கிறார்கள். அதனால் என்ன பயன்? மற்ற சிலரோ வேதாந்தமார்க்கத்தில் மிகவும் சிரமப்பட்டு, “பிரம்மம்” என்ற உன்னைத் தியானித்து, பல ஜன்மங்களுக்குப்பின் முக்தி அடைகிறார்கள். 10. பிரபுவே! உன்னிடம் செலுத்தப் படுகின்ற
பக்தியானது உன் கதைகளில் பெருகும் அம்ருத வெள்ளத்தில் மூழ்குவதால் அதுவே மோக்ஷத்தை அளிக்கவல்லது. அதுவே தூய்மையான பிரம்ம ஞானத்தை எளிதிலே அடையச் செய்கிறது. உடனேயே பலனைத் தருகிறது. உன் திருப்பாதங்களில் ஏற்பட்ட அன்பினால் இடைவிடாமல் உன்னிடம் பக்தி செய்ய எனக்கு அருள வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
பல வருஷங்களுக்கு முன் காஞ்சி மஹா ஸ்வாமிகள் மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவ புரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானை தரிசிக்க அங்கே சென்றிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களைக்
கொடுத்து, அதில் ராம நாமம் எழுதிக் கொண்டு மாலையில் வரும்படி சொல்லி அனுப்பினார் மகாபெரியவா.
அதே போல மாலையில் அச்சிறுவர்கள் ராம நாமம் எழுதி வந்து அவரிடம் தந்தனர். அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான். பக்கத்தில் இருந்தவர்கள் தயங்கியவாறு,
அவனால் பேசமுடியாது ஸ்வாமி என்றனர். அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்து, "ம் நீ ராம நாமம் சொல்லு!" என்று பணித்தார். என்ன ஆச்சரியம்! வாய் பேச இயலாத அந்தச் சிறுவன் முதலில் சற்று திணறிவிட்டு, பின்பு படிப்படியாக தெளிவான உச்சரிப்பில் ராம நாமம் சொல்ல
#நற்சிந்தனை விச்வரதன் என்ற மன்னரின் மகன் க்ஷத்திர பந்து. அவன் சிறு வயது முதலே தீய சகவாசத்தால் எந்த நற்குணமும் இல்லாதவனாகவும், பிறரைத் துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டவனாகவும் வாழ்ந்து வந்தான். அவனது இம்சைகளால் வேதனைப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரண்மனைக்குச் சென்று,
அந்த இம்சை இளவரசனான க்ஷத்திரபந்துவை நாட்டை விட்டு வெளியேற்றும்படி மன்னரிடம் வேண்டினார்கள். தன் மகனைத் திருத்த மன்னரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவன் திருந்தாததால், க்ஷத்திரபந்துவைக் காட்டுக்கு அனுப்புவது எனத் தீர்மானித்தார். அனுப்பியும் வைத்தார். நாடு நிம்மதியானது. ஆனால்,
காட்டுக்குச் சென்ற பின்னும் க்ஷத்திரபந்து திருந்துவதாகத் தெரியவில்லை. காட்டில் வாழும் மிருகங்களுக்கும், தவம் புரியக் காட்டில் வசிக்கும் துறவிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்தக் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அங்கிருந்த ஒரு குளத்தில் நீராட சென்றார். அப்போது ஈரமாக இருந்த
#மகாபெரியவா
என் மனைவிக்கு எப்போதும் உடம்பு சரியில்லை. தலைவலி என்று படுத்துக் கொண்டே கிடக்கிறாள். சமையல் செய்வதில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில்லை சொல்லிக் கொண்டே போனார் நடுத்தர வயது பக்தர். கொஞ்ச நேரத்துக்குப் பின் பெரியவா சொன்னார்கள், "இதையே உன் சிநேகிதர்களிடம் சொல்லி
பார், சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணுன்னு உபதேசம் பண்ணுவா. உன் பந்துக்களிடம் சொல்லு, அவள் கிடக்கிறாள் கழிசடை, பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டு, வேற நல்ல பெண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோ என்பார்கள். ஜோஸ்யரிடம் போய்க் கேட்டுப் பார், ராகு தசை,கேது தசை பரிகாரம் பண்ணணும் என்பார்.
டாக்டரிடம்
போ. எக்ஸ்-ரே ரத்தப் பரிசோதனை இஸிஜி டெஸ்ட் எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் நிறைய மருந்து எழுதிக் கொடுப்பார். சொந்தக்காரப் பாட்டியைக் கேள், உனக்குத் திருஷ்டி தோஷம், செய்வினை,ஆபிசாரம் இருக்கு. மந்திரவாதியிடம் போ என்பாள். சரி என்னிடம் வந்தே, என் சம்சாரத்துக்கு உடம்பு குணமாகணும்னு என்னை
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம். 1) மத்ஸ்ய 2) கூர்ம 3) வராஹ 4) நரசிம்ம 5) வாமன 6) பரசுராம 7) ஸ்ரீராம 8) பலராம 9) கிருஷ்ண 10) கல்கி
அவதாரங்களை வரவழைத்தார். முதல் சுற்றில் மத்ஸ்ய, கூர்ம,
வராஹ மூன்று அவதாரங்களும் முறையே மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார். நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை. நரசிம்மர் முதல் கல்க
வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள். இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார். மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு, பின் பெரிய காலால், மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதுபோல போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள
#மகாபெரியவா#நற்சிந்தனை
உத்தமமான குரு தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பர். அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய தொடங்கி விடும்.
மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம் குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது மிக அவசியம். அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை
நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு. காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய கணவனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள் தான் என்ற ஒரு பேதைமையும் உண்டு. ஒருமுறை அந்த
#மகபெரியவா மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க அமர்த்தி விட்டார். இரவு எல்லாருக்கும் பிரஸாதம் வழங்கினார்கள். அப்போது
பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார். பல வருஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்து வந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குநரோடு பெரியவாளை தரிசனம் பண்ணப் போனார். போகும் போது ஞாபகமாக அந்த சிவப்புப் பட்டையும் எடுத்துக்
கொண்டு போனார். பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு "இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள்” என்றதும், "ஆமா அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்" என்று சொன்னதும், ஆடிப்போய் விட்டார் வித்வான்! 45 வருடங்களுக்கு முன்பு நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார்.