#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் மன்னன் இளங்கோவன் வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு, தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான். நிறைய பேர் தினமும் வரத் துவங்கினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரத்தைச் சொன்னர். நமசிவாய என்றார
ஒருவர். ஓம் சக்தி என்றார் மற்றவர். உன்னையே நம்பு என்றார் இன்னொருவர். ஆனால் மன்னன் இளங்கோவன் திருப்தியாகவில்லை. எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான். அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை.
இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான். அவன் மன்னனிடம்
ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள். அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்
மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும், மன அமைதியையும் தந்தது. இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான். சில வருடங்களுக்குப் பின் திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது. தயார் நிலையில் இல்லாததால்
மன்னன் இளங்கோவன் தோற்றுப் போனான். நாடு, மனைவி, மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான். தப்பித்து உயிர் பிழைத்த தன் நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன். தூரத்தில் ஒரு மலையினை கண்டான். இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ள
தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான். தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன், வேங்கடவா என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான். அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான். உடனே, அவன் மனதில்
அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன. "மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னது போல் ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள். அதுவரை இதனை பார்க்க வேண்டாம்” இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்ன தான்
உள்ளது பார்ப்போம் என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கிறது என பார்த்தான். மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது, அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான். ஒரே ஒர
வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப் பட்டிருந்தது. அந்த வாசகம் இதுதான். #இந்த_நிலை_மாறும். அவ்வளவு தான், வேறொன்றும் இல்லை. முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான். தான் தற்போது உள்ள நிலை மாறும், இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க
வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான். தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான். கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான். அரண்மனையில் இருந்த
இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான். மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தமானார்கள். இந்நாளை விமரிசையாக
கொண்டாட எண்ணிய மன்னன், இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான். நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது. அரண்மனையில் மக்கள் கூட்டம்.
அரியணையில் மன்னன். அருகில் மகாராணி, மன்னனின் குழந்தைகள், மந்திரி, பிரதானிகள். ஆடல் பாடல் என்று எங்கும்
சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான், மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான். தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் மன்னன் இளங்கோவன். "மன்னா, நாட்டினை ஆளும் தகுதி
கொண்டவர் தாங்கள்தான், எனக்கு ஏதும் வேண்டாம்" என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன். மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன். இறுதியாக மன்னன் இளங்கோவன் சொன்னான், அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள். அந்த மனிதன், "மன்னா
இப்போது நீங்கள் வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் இருக்கிறீர்கள் என்பது உண்மைதானே?" மன்னன், "ஆமாம் அது உண்மை தான் அன்பரே அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன். உடனே, மன்னன் தனது விரலில் இருந்த மோதிரத்தை எடுத்து உள்ளிருக்கும் அந்த
சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் அதே மந்திர வாசகம் இருந்தது. இந்த நிலை மாறும். எதிலும் எப்பொழுதும் சமநிலை. இதுவே கீதாச்சார்யனின் வாழ்க்கை முன்னிலை. இதை நாம் என்றும் மறக்கக் கூடாது. இதை நாம் மனத்தில் பதிந்து விட்டால் சமநோக்கோடு ஸ்திதப்ரஞ்சனாக எளிதாக இருக்க முடியும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பகவானின்_குணவைபவம்#நற்சிந்தனை
1.சௌசீல்யம்
பெரியவன் சிறியவன் என்ற பேதம் இல்லாமல் அடியார்களுடன் இரண்டற கலக்கும் மேன்மை குணம். இராம அவதாரத்தில் வேடர்களுடன் குரங்குகளுடன் ஏழை குகனோடும் நெருங்கி பழகினார். கண்ணன் இடையர்களுடன் ஒன்றர கலந்திருந்தார்.
2.வாத்சல்யம்
குற்றம் குறைகளோடு
அடியவர்களை அப்படியே ஏற்று கொள்ளும் குணம்! பிறந்த கன்றை பாசத்தோடு பசு நக்குவதை போல விபீஷணனை ஆராயமல் அப்படியே இராமன் ஏற்றுக் கொண்டான்.
3.மார்தவம்
அடியார்கள் தன்னை விட்டு பிரிவதை பொறுத்து கொள்ள முடியாத குணம்!
நாமதேவர் சேத்ராடனம் செல்லும் போது கதறி அழுதான் விட்டலன்.
4.ஆர்ஜவம்
உடல்
உள்ளம் வாக்கு இவைகளில் மாசு இல்லாத தன்மை. சீதையோடும், லட்சுமணனோடும் பஞ்சவடியில் இருந்தபோது ராவணனின் தங்கை சூர்ப்பனகை வருகிறாள். பார்த்த அக்கணமே அவள் அவனுடைய அழகில் தன் மனதை பறி கொடுத்து விடுகிறாள். அழகிய வாலிபனே! நீ யார்? உன் மனைவியோடும் நீ வந்திருக்கிறாய். இங்கே ஏன் எதற்காக
#Amazing_facts_about_SriGanesha
There are 250 temples of Ganesha in Japan. There Ganesha is known as 'Kangiten', the God of fortune and the harbinger of happiness, prosperity and all that is good. Ganesha was worshipped in the early days in Central Asia and other parts of the
globe. Ganesha statues have been found in Afghanistan, Iran, Myanmar, Sri Lanka, Nepal, Thailand, Laos, Cambodia, Vietnam, China, Mongolia, Japan, Indonesia, Brunei, Bulgaria, Mexico and other Latin American countries. It means the worship of Ganesha was prevalent all over the
world in ancient times. Ganesha's idol and paintings are exhibited in all the important museums and art galleries of all the European countries especially in the UK, Germany, France and Switzerland. They are also present in thousands of houses/offices of successful business/
#அர்த்தமுள்ளஇந்துமதம் #கவியரசர்_கண்ணதாசன் #அஷ்டமியும்_நவமியும்
அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள். நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. நம் முன்னோர்கள்
அஷ்டமி அன்றும் நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை? அதற்குக் என்ன காரணம்? அதில் தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது. கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது. ஸ்ரீ ராமன் நவமி அன்று
பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா? இல்லை. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம். அதே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம். நிலவு தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமியை
#நற்சிந்தனை இராமர் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த இராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது இராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன், ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவன் அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளது. நீ அவனிடம் போய் நான்
கேட்டதாகக் கூறி, சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று அனுப்பினார். சென்றவன், இராவணன் ஒன்றும் உபதேசிக்கவில்லை என்று இராமரிடம் வந்து கூறினான். அப்போது இராமர் நீ எப்படி அவனிடம் கேட்டாய் என்றார். நான் தலைமாட்டில் நின்று கேட்டேன் என்றான். உடனே இராமர் வினயத்துடன் கால் மாட்டில் நின்று
கேள் என்று அறிவுறுத்தி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக இராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்து விடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். லட்சுமணனை சிரித்துக் கொண்டே
#மகாபெரியவா
பல வருஷங்களுக்கு முன் காஞ்சி மஹா ஸ்வாமிகள் மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவ புரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானை தரிசிக்க அங்கே சென்றிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களைக்
கொடுத்து, அதில் ராம நாமம் எழுதிக் கொண்டு மாலையில் வரும்படி சொல்லி அனுப்பினார் மகாபெரியவா.
அதே போல மாலையில் அச்சிறுவர்கள் ராம நாமம் எழுதி வந்து அவரிடம் தந்தனர். அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான். பக்கத்தில் இருந்தவர்கள் தயங்கியவாறு,
அவனால் பேசமுடியாது ஸ்வாமி என்றனர். அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்து, "ம் நீ ராம நாமம் சொல்லு!" என்று பணித்தார். என்ன ஆச்சரியம்! வாய் பேச இயலாத அந்தச் சிறுவன் முதலில் சற்று திணறிவிட்டு, பின்பு படிப்படியாக தெளிவான உச்சரிப்பில் ராம நாமம் சொல்ல
#நற்சிந்தனை விச்வரதன் என்ற மன்னரின் மகன் க்ஷத்திர பந்து. அவன் சிறு வயது முதலே தீய சகவாசத்தால் எந்த நற்குணமும் இல்லாதவனாகவும், பிறரைத் துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டவனாகவும் வாழ்ந்து வந்தான். அவனது இம்சைகளால் வேதனைப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரண்மனைக்குச் சென்று,
அந்த இம்சை இளவரசனான க்ஷத்திரபந்துவை நாட்டை விட்டு வெளியேற்றும்படி மன்னரிடம் வேண்டினார்கள். தன் மகனைத் திருத்த மன்னரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவன் திருந்தாததால், க்ஷத்திரபந்துவைக் காட்டுக்கு அனுப்புவது எனத் தீர்மானித்தார். அனுப்பியும் வைத்தார். நாடு நிம்மதியானது. ஆனால்,
காட்டுக்குச் சென்ற பின்னும் க்ஷத்திரபந்து திருந்துவதாகத் தெரியவில்லை. காட்டில் வாழும் மிருகங்களுக்கும், தவம் புரியக் காட்டில் வசிக்கும் துறவிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்தக் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அங்கிருந்த ஒரு குளத்தில் நீராட சென்றார். அப்போது ஈரமாக இருந்த