#பக்தி மங்களவேடா என்ற ஊர் பண்டரிபுரத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. அந்த ஊரில் பீடார் சுல்தானுக்கு வரி வசூல் அதிகாரியாக தாமாஜி வேலை பார்த்து வந்தார். தாமாஜி பண்டிதர் தீவிர விட்டல பக்தர். தினமும்  விட்டலனை பூஜித்து யாரேனும் அதிதி வந்தால் அவருக்கு போஜனம் செய்வித்து பிறகுதான்
சாப்பிடுவார். சுல்தானுக்கு அவரது நேர்மை நல்லொழுக்கம் ரொம்ப பிடித்து விட்டதால் அவனின் கஜானா மற்றும் பண்டக சாலைக்கு அவரை பொறுப்பாளியாக நியமித்தான். எதிர்பாராத விதமாக நாட்டில் பஞ்சம் வந்தது. ஆடு மாடு கோழி எல்லாம் தீவனமின்றி  மெலிந்து போயின. பயிர் பச்சை எல்லாம் வாடி கருகின. மக்கள்
உணவு தட்டுப்பாட்டால் தவித்தனர். ஒருநாள் தாமாஜி வீட்டு வாசலில் ஒரு பிராமணர் பசியோடு வந்தார்.  தாமாஜி அவரை அழைத்து உபசரித்து உணவளித்தார். அந்த மனிதர் அழத் தொடங்கவே தாமாஜி விவரம் கேட்டார். "நான் இங்கே  வயிறார உண்கிறேன். பண்டரி புரத்தில் என் வீட்டில்  மனைவி குழந்தைகள் உணவின்றி
தவிக்கிறார்களே என்று நினைத்தேன். அழுகை வந்தது என்றார். ஒரு வண்டியில் சில அரிசி பருப்பு மூட்டைகளை ஏற்றி அந்த பிராமணர் தன் ஊருக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். பண்டரிபுரம் எல்லை தாண்டுவதற்குள் நிறையப்பேர் அவர் வண்டியை மடக்கி மூட்டைகளை பிய்த்து ஆளுக்குக் கொஞ்சமாக எல்லாவற்றையும்
எடுத்து சென்று விட்டார்கள். எப்படி சாமா உனக்கு இதெல்லாம் கிடைத்தது என்று கேட்டபோது அவர் சுல்தானின் அதிகாரி தாமாஜி பற்றி சொன்னார். சிலர்  உடனே  கிளம்பி மங்களவேடா ஊருக்கு வந்து தாமாஜியை பார்த்து பண்டரிபுரத்தில் பஞ்சம் தலைவிரித்தாடுவது பற்றி சொன்னார்கள். தாமாஜி கொஞ்சம் கூட
யோசிக்கவில்லை. பண்டக சாலையிலுள்ள எல்லா உணவுப் பொருள்களையும் காலி செய்து பண்டரிபுரம் அனுப்பிவிட்டார். அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. சுல்தானின் உள்ளூர் அதிகாரியாக  பண்டரிபுரகுதில் இருந்த  மஜும்தார் மிகவும் ஆத்திரம் அடைந்தான். நீண்ட கடிதம் ஒன்றை சுல்தானுக்கு எழுதினான். சுல்தானால்
நம்ப முடியவில்லை. தாமாஜியா இப்படி செய்தார்? விசாரணையில் இது உண்மையென்று தெரிந்ததும் ஆளை அனுப்பினான். பண்டக சாலையிலிருந்த பொருள்களையோ அவற்றுக்கான பணமோ உடனே தர வேண்டும், இல்லையேல் சிறைபிடித்து அழைத்து வாருங்கள் தாமாஜியை என்று ஆணையிட்டான். அவரிடம் பணமோ பொருளோ இல்லாததால் அவரை சிறை
பிடித்து கால் நடையாக அவரை பிடாருக்கு அழைத்துச் சென்றார்கள் வீரர்கள். போகும் வழியில் பண்டரி புரம் விட்டலன் கோவில் அருகே தாமாஜி வீரர்களிடம், ஒரு நிமிஷம்  பாண்டுரங்கனை தரிசித்து வந்து விடுகிறேனே என்று கெஞ்ச அனுமதி கொடுத்தனர். ஓடினார் விட்டலனிடம். இது தான் நான் உன்னை கடைசியாக தரிசனம்
செய்வது. சுல்தான் எனக்கு நிச்சயம்  மரண தண்டனை கொடுக்க போகிறான். முடிந்தால் அடுத்த ஜன்மத்தில் சந்திப்போம் என்று வேண்டினார். அந்த நேரத்தில் ஒரு வெட்டியான் அரண்மணை வாசலில் சுல்தானை காண வந்தான். அவனை  சுல்தான் எதிரில் கொண்டு நிறுத்தினார்கள். அவன் தன்னை விட்டோ நாயக் எனாறிமுகப் படுத்தி
கொண்டான். விட்டோநாயக்  சுல்தானிடம் ஒரு கடிதம் கொடுத்தான் அத்துடன் ஒரு பை நிறைய  பொற்காசுகளும் கொடுத்தான். பையின் மேல் சுல்தானின் அதிகார முத்திரை இருந்தது. மங்கள வேடாவிலிருந்து வந்திருக்கிறது. "பண்டக சாலையிலிருந்த பொருள்களை அதிக விலைக்கு விற்ற லாபதொகை போக பண்டக சாலையில் வேண்டிய
சாமான்களும் இருக்கிறது. பெற்றுக் கொண்டு ரசீது அனுப்பவும்” என்று  தாமாஜி கைப்பட எழுதிய கடிதத்தையும் பணத்தையும் கண்ட  சுல்தான் தாமாஜியை பற்றி  அவதூறாக கூறிய மஜூம்தாரை  கைது செய்ய ஆணையிட்டான்.
விட்டோ நாயக்கிடம் ரசீதும் கொடுத்தான். பண்டரிபுரத்திலிருந்து 
வீரர்கள் தாமாஜியை கட்டி
இழுத்து வந்தனர். சுல்தான் முன்னால் நிறுத்தினர். சுல்தானுக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது.  அவர்களை திட்டி கட்டுகளை அவிழ்க்க சொன்னான். ஓடி வந்து  தாமாஜியை அனைத்துக் கொண்டான். என்னை மன்னித்து விடுங்கள் தாமாஜி. மஜும்தார் பேச்சை கேட்டு  உங்களை அவமதித்து விட்டேன். உங்கள் நேர்மை எனக்குத்
தெரிந்தும் இவ்வாறு செய்தது என் தவறு. உங்கள் சேவகன்  விட்டோ நாயக்கிடம் பணத்துக்கு ரசீது  தந்துவிட்டேன் என்றான் சுல்தான்.
தாமாஜிக்கு தலை சுற்றியது. சேவகனா?  விட்டோநாயக்கா? பணமா? நவாப் நான் அரசாங்க  பொருள்களை எடுத்து தானம் செய்தது உண்மை. என்னிடம்  பணமே இல்லை. எனக்கு யாரும்  சேவகன்
இல்லை. விட்டோநாயக் என்று  யாரையுமே எனக்கு தெரியாது என்றார். என்னய்யா உளறுகிறீர்  இதோ பாரும் நீர் கைப்பட எழுதிய கடிதம். இதில் என்னுடைய அரசாங்க முத்திரை குத்தியிருக்கிரீர்களே என்றான் சுல்தான். விட்டலனின்  விளையாட்டு தெரிந்தது. என் வாழ்நாளெல்லாம் தேடியும்  கிடைக்காத பாக்கியம்
சுல்தானுக்கு எளிதில் கிட்டி இருக்கிறதே. விட்டலனே நேரில்  வந்து காட்சியளித்திருக்கிறானே என்று கண்ணீர் பெருக்கெடுத்து பண்டரிபுரம் நோக்கி ஓடிய தாமாஜி பண்டரி புரத்தில்  கடைசி மூச்சிருக்கும் வரை விட்டல நாம சந்கீர்த்தனத்திலேயே ஈடுபட்டார்
இராம கிருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 16
#ரிஷி_ஆபஸ்தம்பர்
ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியவர் ஆபஸ்தம்பர். அவருக்கு அந்த பெயர் வந்ததை தெரிந்து கொண்டால் அவரின் அலாதி பெருமை நமக்கு தெரிய வரும். ஒரு சமயம் வேதவிற்பன்னரான பிராம்மணர் ஒருவர் ஸ்ராத்தம் செய்தார். போஜனம் செய்விக்க ஒரு பிராம்மணருக்காக காத்திருந்தார். வெகு நேரம் Image
கழித்து ஒரு பிராம்மணர் வந்தார். அவர் நல்ல பசியுடன் இருந்தார். அவரை அமர்த்தி இலை போட்டு தானே பரிமாறினார் கர்த்தா. வந்த பிராம்மணர் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். பிராம்மணனுக்கு நல்ல பசிபோலும் என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். போடப் போட அனைத்தும்
ஒரு நொடியில் காலியாயிற்று! கர்த்தாவின் கண்களில் முதலில் இருந்த வினயம் மறைந்து ஏளனம் குடி கொண்டது. அதைத் தன் செயல்களிலும் காட்டினார். அதைப் பொருட்படுத்தாத அதிதி இன்னும் போடு இன்னும் போடு என்று கேட்டுக் கொண்டிருந்தார். அபரிதமாக உண்டும் திருப்தி அடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை
Read 16 tweets
Sep 16
Rare pithru stuithi from Skanda Puranam to be chanted during Mahalaya pithru Paksha to please pithrus irrespective of whether pithru dosham affliction is there or not in one's horoscope.
Please take advantage by chanting thrice a day during this time.
Sarvam Sri Krishnarpanam 🙏🏻 Image
Translation in English by @naradauvacha2 Image
Read 4 tweets
Sep 16
#மகாபெரியவா
ஓரு நாள் பெரியவாளை தரிசனம் செய்ய ஒரு வயசான தம்பதி வந்தார்கள்.
"பெரியவாட்ட ஒரு பிரார்த்தனை."
"சொல்லு."
"எனக்கு 81 வயசு ஆறது. கொழந்தைள் எல்லாம் ஸதாபிஷேகம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தறா"
"பண்ணிக்க வேண்டியதுதானே”
"இல்ல பெரியவா எங்களுக்கு அதுல இஷ்டமில்ல. மனசு ஒப்பலை”
"ஏன்?” ImageImage
"ஸதாபிஷேக பத்திரிக்கையில் ஸஹஸ்ர சந்த்ர தர்ஶனம் [ஆயிரம் பிறை கண்டவர்]ன்னு போடறோம். ஆனா, நெஜத்ல நான் அப்டி ஒண்ணும் பாத்ததில்லை. ஒவ்வொரு பக்ஷமும் மூணாம் பிறையை தரிசனம் பண்ற வழக்கமில்ல. அப்படி செய்யாத போது, நான் எப்டி ஆயிரம் பிறை கண்டவன்னு போட்டுக்கறது? அது பொய் இல்லியா? அதான்
வேண்டாம்னு தோணித்து பெரியவா" எளிமைக்கெல்லாம் எளிமையான பெரியவா அழகாக சிரித்துக் கொண்டே, மிக மிக எளிமையான ஒரு உபாயம் சொன்னார்.
“நீயும் ஆயிரம் சந்த்ரனை பாக்காம, பத்ரிகைல தர்ஶனம் பண்ணினேன்னு போட்டுக்க வேணாம். ஸஹஸ்ர சந்த்ர தர்ஶனம் பண்ணிட்டே, கொழந்தேள் ஆசைப்படி ஸதாபிஷேகம் பண்ணிக்கலாம்"
Read 9 tweets
Sep 15
#MahaPeriyava Once some learned people were conversing with Sri Maha Periyava. Even though the topic was on a high level Vedantic matter, Periyava’s talk and the language was so simple that even an illiterate could understand it easily. It was different from the lectures normally
delivered by Pundits. At that time, a young man from Australia came there to have His darshan. The young man was doing research on the comparison of various religions and he could speak small sentences in Sanskrit. After the normal enquiries, Periyava asked him what he wanted.
“How should I be? How should I live? What is way of life? What is the way to perform good deeds in life and to get good results?” The young man piled his queries, politely. After a few minutes silence, Periyava said, “All that is okay. But why come here (Kalavai was the place)
Read 20 tweets
Sep 15
#நற்சிந்தனை
ராம ராம ராம ராம!
ராம நாம ஜபத்தில் நாம் இருந்தால் நமது கர்ம வினைப்படி ஏதேனும் துக்கமோ அவமானமோ நிகழ வேண்டி இருந்தால் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு பாதிப்பின்றி மாற்றி அமைக்கப்படும். ராம நாமத்தின் சிறப்பே ராமாயணம். ஆஞ்சநேயருக்கு உயிராய் இருப்பது ராம நாமமே. எல்லாவித
பயங்களையும் போக்கடித்து, சகல ஞானத்தையும் பக்தியையும் அளித்து, இகபர சுகங்களையும் தரவல்லது ஸ்ரீராம நாமம். ராமா என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதால், ராமா என்ற மந்திரத்துடன் வெற்றி என்ற பொருளுடைய ஜயம் சேர்க்கப்பட்டு ராம ஜயம்
என உச்சரிக்கப்படுகிறது. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அதை ராம நாம ஜபத்தினால் பெற முடியும். ராம நாமாவினால் வினைகள் எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி, ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கப்படும். வினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும்
Read 5 tweets
Sep 15
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஓர் ஆங்கிலேயே ஆளுநர் கஜேந்திர மோக்ஷம் ஓவியத்தைப் பார்த்து விட்டு, தன உதவியாளரிடம், உங்கள் கடவுளான திருமாலுக்கு யாரும் சேவகர்களே கிடையாதா என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், அவருக்கு ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன்
கேட்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததற்காகவா அவரே கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும்? நீர் கூறியது போல் ஆயிரக் கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றி
இருக்கலாமே. அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டார். அதை கேட்ட உதவியாளர் ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆளுநருக்கு தான் நன்றாக இந்து மதத்தை மட்டம் தட்டி விட்டோம் என்று மனத்திற்குள் பெருமை பட்டுக் கொண்டார். ஒரிரு நாட்கள் சென்றன.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(