#நங்கவரம்_சுந்தரேஸ்வரர்_ஆலயம்
திருச்சி அருகேயுள்ள பெருகமணி கிராமத்தை அடுத்துள்ள நங்கவரத்தில் அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் ஆலயம். சோழ நாட்டை ஆண்டுவந்த சோழ மன்னர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. மன்னனும், ராணியும் வேண்டாத தெய்வம் இல்லை. ஒரு சிவனடியாரின் அறிவுறுத்தலில் சிவ
தலங்கள் பலவற்றிற்கு சென்று தரிசித்து வந்ததன் பயனாக அரசனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நரி முகம் கொண்டிருந்தாள். குழந்தையின் உடலமைப்பு பெண் உருவில் இருந்த போதிலும் முகம் மட்டும் நரியின் முகமாக இருந்தது. மன்னரும் ராணியும் வேதனைப் பட்டனர்.
வருடங்கள் ஓடின. பேதை பெதும்பையாகி
மங்கை பருவம் அடைந்தாள். ஆனாலும் அவள் முகம் நரி முகமாகவே இருந்தது. மந்திரிகளும், மன்னனின் நலம் விரும்பிகளும் இறைவனுக்குப் பரிகாரம் பூஜைகள் செய்தால் இந்தக் குறையை சரி செய்துவிடலாம் என்றனர். அதன்படி மன்னனும் ஒவ்வொரு ஆலயமாகச் சென்று பரிகாரப் பிரார்த்தனைகள் செய்தார். பலன் கிட்டவில்லை.
ஒரு நாள் மன்னனின் கனவில் மகாதேவன் தோன்றினார். “மகாராஷ்டிரா தேசத்திலுள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் முனிவர் ஒருவர் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வருகிறார். அந்த சிவலிங்கத்தை எடுத்து வா. இந்த ஊரில் ஓர் ஆலயம் கட்டி அந்த சிவலிங்கத்தை அங்கு பிரதிஷ்டை செய். அந்த சிவ
லிங்கத்தை நீ தினமும் பூஜை செய்து வந்தால் உன் பெண்ணின் நரி முகம் மாறி நங்கை முகமாக ஆகும்” என்றார் ஈசன். விடிந்தும விடியாத பொழுது விழித்து எழுந்தான் மன்னன். உடனே தன் படைகளை பஞ்சவடிக்கு அனுப்பினான்.அங்கு சிவலிங்கத்தை பூஜை செய்து வந்த முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். படைவீரர்கள்
அந்த சிவலிங்கத்தை தூக்கி வந்து மன்னனிடம் கொடுத்தனர். இறைவனின் ஆணைப்படி மன்னன் அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் ஒரு ஆலயம் கட்டி, அங்கு அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். தினமும் இறைவனை பூஜித்து வந்தான். அதன் பயனாக இறைவனின் அருளால் மன்னன் மகளின் நரிமுகம் மாறி, அழகான முகம்
உருவானது. அவள் பேரழகியாய் திகழ்ந்தாள். இறைவன் நங்கையின் முகம் மாற வரம் கொடுத்தால் இந்த அரிஞ்சிகை சதுர்வேதி மங்கலம்
என்ற ஊர் நங்கைவரம் என அழைக்கப்பட்டது. பின்னர் சற்றே மருவி தற்போது நங்கவரம் என அழைக்கப்படுகிறது. பஞ்சவடியில் நிஷ்டையில் இருந்த முனிவர் நிஷ்டை கலைந்தார். தான் பூஜித்து
வந்த சிவலிங்கத்தைக் காணாது திகைப்புற்றார் வேதனையடைந்தார். அவர் கனவில் தோன்றிய இறைவன் அந்த சிவலிங்கம் இருக்கும் இடத்தைக் கூறினார். முனிவர் கால் நடையாக சிவலிங்கம் இருக்கும் ஊருக்குப் புறப்பட்டார். பல மாதங்கள் கடந்தன. முனிவர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தை அடைந்தார். நேரம்
நடுநிசியாகிவிட்டதால் ஆலயத்தின் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. என்ன செய்வது என்று புரியாத முனிவர் கோயில் மதில்மேல் ஏறி உட்புறம் குதித்தார். உள்ளே தரை சேறும் சகதியுமாக இருந்தது. குதித்த முனிவரின் இரண்டு கால்களும் சேற்றில் புதைந்து போக முனிவர், சிவ, சிவாய நமஹ, என்று முழங்க, சிவபெருமான்
முனிவருக்கு முக்தி அளித்தார். முனிவர் அதே இடத்தில் சிலையாகி நின்றார். அந்த இடத்தில் அவருக்கு தனி சந்நதி அமைக்கப்பட்டது. இன்றளவும் முனிவர் நின்ற கோலத்தில் அங்கு அருள் பாலிக்கிறார். அந்த முனிவர் #அகண்டேஸ்வரர் என்றும் #தீண்டாத்_திருமேனி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இங்கு
சிவபெருமானுக்கு என்னென்ன பூஜைகள் நடைபெறுகிறதோ அவை அனைத்தும் அகண்டேஸ்வரருக்கும் நடைபெறுகிறது. அகண்டேஸ்வரரை தொடாமல் தான் அனைத்து பூஜைகளும் நடை பெறுகின்றன.
நெற்றியில் சந்தனப் பொட்டை வைக்கக்கூட அவரது திருமேனியை தொடுவதில்லை. மாறாக, அர்ச்சகர், சற்றுத் தொலைவில் இருந்தபடி சந்தனத்தை
நெற்றியை நோக்கி வீசுவார். அது அகண்டேஸ்வரர் திருமேனியில் நெற்றிப் பகுதியில் சரியாக போய் ஒட்டிக் கொள்கிறது. சுந்தரேஸ்வரர் ஆலய முகப்பின் முன் நந்தியும் பலிபீடமும் இருக்க, முகப்பைத் தாண்டியதும் மகா மண்டபத்தின் வலதுபுறம் அகண்டேஸ்வரர் சந்நதி சற்றே உள்ளடங்கி உள்ளது. அடுத்து
அன்னை
கோமளாம்பிகையின் சந்நதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள் பாலிக்கிறாள். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டாயுதபாணியும், தேவக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி மேற்கில் மகாவிஷ்ணு வடக்கில் பிரம்மா
ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
பிரகாரத்தில் தெற்கில் சப்தமாதர்கள் மேற்கில் கன்னிமூலை கணபதி, அருணகிரி நாதர், வள்ளி, தேசேனாவுடன் ஷண்முகநாதர், பாலசுப்பிரமணியர், ஜேஷ்டாதேவி, துர்கை, சண்டிகேஸ்வரர், வடக்கில் பைரவர், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள் பாலிக்கின்றனர்.
கருவறையில் சுந்தரேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதம் சஷ்டியின் போது சூரசம்ஹார விழா 6 நாட்கள் வெகு சிறப்பாக நடை பெறுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகமும், கார்த்திகை சோமவாரத்தின் போது 108 சங்காபிஷேகமும் நடை
பெறுகிறது. ஆலயத்தின் தல விருட்சம் மகிழமரம். இங்கு கண்டு
எடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சில
பரகேசரிவர்மன் முதலாம் பராந்தகர்
மற்றும் அரிஞ்சயர் கால கல்வெட்டுகள் என்று அறியப் படுகிறது. இங்குள்ள கல்வெட்டு, கருவறை ஆவுடைலிங்கத்தின் பெயர்
திருமறவனீஸ்வரத்துப் பெருமாள்
என்று குறிப்பிடுகிறது.
தற்போது சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப் பெறுகிறது. நான்காம் பரகேசரிவரமன் கல்வெட்டில் நிலம் கொடையாக வழங்கப் பட்ட செய்தியும் அந்நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானம் இரண்டு
இசைக் கலைஞர்களுக்கு செலவிடப்
பட்ட செய்தியும் அறியப்படுகிறது.
ஆலயம் அமைந்திருக்கும் ஊர்
அரிஞ்சய சதுர்வேதிமங்கலம்
எனவும் தேவதானம். பிரம்மதேயம்
என்று அழைக்கப்பெற்று காவேரி
தெற்கு வடகரையில் அமைந்ததாக,
கல்வெட்டுத் தகவல் குறிப்பிடுகிறது. பரகேசரிவர்மரின் பத்தாம் ஆண்டு
ஆட்சிக் கால கல்வெட்டு சோழப்பெருவுடையாரின் மனைவி
பெருநங்கை என்கிற செம்பியன்
இருக்குவேள் (பூதி பராந்தகனார்) 1080 கழஞ்சு பொன்னைத்
தன் பிறந்தநாள் பரிசாக அளித்த
தகவலை கூறுகிறது. இவர் பிறந்த நாள் ஒரு சூரிய கிராமத்தில் அமைந்ததாகவும் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு, அரிஞ்சய சோழர்
காலத்தில் சதுர்வேதிமங்கலத்து
பொது சபையில் இவ்வாலயத்தின் அன்னதான செலவுகளுக்காக பொருள் மற்றும் நிலக்கொடைகள்
அளிக்கப்பட்ட செய்தியை கல்வெட்டு
தெரிவிக்கிறது. இராஜகேசரிவர்மரின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,
கார்கோடை என்னும் ஊரிலிருந்து
திரைலோக்கியன் என்கிற கோதண்டராம மறையன் 80 கழஞ்சிற்கு நிலம்
இவ்வூரில் அமைந்துள்ள குளத்தில்
படகு பராமரிப்புக்குக் கொடையாக
அளிக்கப்பட்டதை தெரிவிக்கிறது.
பரகேசரிவர்மரின் பன்னிரண்டாம்
ஆட்சியாண்டுக் கல்வெட்டு புறம்
போக்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது.
(பராந்தகர் காலத்துக் கல்வெட்டு)
தனிப்பட்ட கொடை கருவறை தெய்வத்துக்கு அளித்ததகவலைக்
கூறுகிறது. கருவறை மற்றும் அர்த்த மண்டப போகேஸ்வரி சிற்பங்கள் இக்காலத்தவை எனவும் கல்வெட்டின் வழி அறியப்படுகிறது.
அஷ்டபரிவாரத்தில் மைய விமானம்
நங்கவரம் சுந்தரேஸ்வரர் ஆலயம்
முதலாம் பராந்தக காலத்தவை
என்ற சான்றினை இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். அக்காலத்தில் வழியாடு ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு கோயில்கள் கட்டப் படவில்லை. கோயில்கள் ஊர்ச்சபை கூடும் நிர்வாக ஸ்தலமாக, கல்விக் கூடங்களாக, தமிழ்
மொழி வளர்க்கும் சாலைகளாக, பிணி தீர்க்கும் ஆதுர சாலைகளாக, சிற்பக் கலைக் கூடங்களாக, நீதி வழங்கும் மன்றங்களாக, இயல், இசை, நாடகம் போன்ற நுண்கலைகளை வளர்க்கும் கூடங்களாகவும் விளங்கின.
(இத்தனை ஆதாரங்கள் இருந்தும் இன்றோ நாளையோ இந்தக் கோவில் வஃப் போர்டுக்கு சொந்தம், பாவாடைகளுக்கு சொந்தம்
என்று செய்தி வரலாம்) மேலும் இது இந்து அற நிலையத் துறையின் கீழ் வந்து, சரியாக பராமரிக்க படாமல் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலின் அழகிய வேலைப்பாடமைந்த கோஷ்டத் தெய்வங்கள் வெளியே வீசி எறியப்பட்டு சிமெண்ட் சிலைகளை நிறுவியும், கல்வெட்டுக்கள் மீது சுண்ணாம்பு பூசி தடயமே இல்லாமல்
செய்தும், சிற்பங்களுக்கு பல வண்ண பெயிண்ட் பூச்சினை செய்தும் கும்பாபிஷேகம் செய்துள்ளனர். கும்பாபிஷேகம் மூலம் காசு பார்ப்பது மத்துமே அவர்கள் நோக்கம். நங்கவரம், திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த சுந்தரேஸ்வரர் ஆலயம் செல்வதற்கு
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்தில் சென்று பெருகமணி என்ற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது நங்கவரம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்து மற்றும் மினி பஸ் வசதி உள்ளது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வரலாற்றை அறிந்து கொள்வதால் மட்டுமே ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு #இந்துகள்_இடையே_ஒற்றுமை_ஓங்கும். ஸ்ரீரங்கம் கோவிலை இஸ்லாமிய படைகளிடம் இருந்து பாதுகாக்க எத்தனையோ இந்துகள் பலியாகினர். தலை சீவி கொல்லப்பட்ட 12000 இந்துகளில் எத்தனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று தெரிந்தால் அவர்கள் தியாகத்தின்
மகிமை புரியும். கொடிய இஸ்லாமிய படைத் தலைவனை கொன்ற வெள்ளையம்மா என்ன ஜாதி என்று தெரிந்து கொண்டால் அன்றைய இந்துகள் எப்படி ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது தெரிய வரும். ஆழ்வார்களிள் அதிகம் கொண்டாடப் படும் #நம்மாழ்வார் பிராமணர் அல்லர். அவருக்கு ஏன் முதல் மரியாதை என்பதை தெரிந்து கொண்டால்
இந்துமதத்தின் சமத்துவம் புரியும். கவிச் சக்கரவர்த்தி #கம்பர் பிராமணர் அல்லர். பிராமணர் அல்லாத கம்பர் எப்படி ‘கல்வியிற் பெரியர்’ என்று பெயர் பெற்றார் என்பதை அறிந்து கொண்டால் அக்காலத்தில் கல்வி எல்லோருக்கும் சமமாக கிடைத்தது என்பது புரியும். கல்வியிற் பெரியர் கம்பரே வியந்து நின்ற
#பூம்பாரை_வேலப்பர்_கோவில் கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும். இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாஷான முருகன்.
இந்தியாவில் உள்ள எல்லா
கோவில்களிலும் ஐம்பொன், வெங்கலம் கல்லால் ஆன சுவாமி மூர்த்தங்களை காண முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமானமூர்த்தங்கள் உள்ளன. 1. பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் 2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர்
உலகிலேய
நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர். ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது தெரியாத செய்தி. அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி
#MahaPeriyava Once a devotee asked Mahaswamigal, why do we keep food for Crows during Mahalayam? Are our ancestors taking forms of Crows? Why do they come as this low standard bird? Why not a high standard bird? With a gentle smile Mahaswamigal answered, "We call the Crow Kaka in
Tamil. Do we address any other creature by its sound? Do we call a Cat 'Meow?' Because a Parrot says 'Kiki' do we call it a 'Kiki?' A Crow is called by its sound that makes it special. Ka means Kaapaathu or Protect me. So, when you keep food for a Crow and say 'Kaa kaa' you are
asking your ancestors to protect you. You say a Crow is lowly because it is freely available and it eats anything! But let me tell you, a Crow is beautiful. Why? It wakes up at 'Brahma Muhurat', 'Amrit Vela'. It caws and wakes you up. Even Cocks may not wake up on time many days
#பவித்ரோத்சவம் பவித்ரோத்சவம் என்பது வைஷ்ணவ கோவில்களில் நடக்கும் ஒரு முக்கிய உத்சவம். புனிதப்படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். ஒவ்வொரு கோயிலிலும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் பவித்ரோத்ஸவம் 3, 5, 7 அல்லது 9 நாட்களுக்குக் கொண்டாடப்படும்.
போதும் மற்றைய திருவிழா காலங்களில் மந்த்ர லோபம் (தவறான மந்திர உச்சரிப்பு) ஏற்படக்கூடும். அதனால் எம்பெருமானுடைய ஸாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் பவித்ரோத்சவம் கொண்டாடப்படுகிறது. அதே போல பூஜை செய்யும்போது தவறுகள் ஏற்படலாம். சில உத்சவங்கள்
நடைபெறாமல் தடைப் பட்டு போகலாம் (கரோனா காலத்தில் ஏற்பட்ட மாதிரி). கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை
#மகாபெரியவா 1933இல் திருவிடைமருதூரில் தைப்பூசத் திருவிழா. எட்டாம் நாள் தேர் உலா. கொல்லன்கோடி மூலையைத் தேர் அடைந்த போது முட்டுக்கட்டைகள் நசுங்கியதால், தேர் நேரே வடம் போக்கித் தெருவழிச் சென்று பள்ளத்தில் இறங்கிவிட்டது. அந்த ஆண்டு கும்பகோணம் மஹாமகத்திற்கு விஜயம் செய்த மகாபெரியவா
புனித நீராடலை முடித்துக்கொண்டு திருவிடைமருதூருக்கு வந்து பச்சையப்பன் தெருவில் தங்கினார். மஹாலிங்க சுவாமி தேர் தடைப்பட்டு நிற்பதைக் கேட்டறிந்தார். ஒருநாள் திடீரென்று எழுந்து புறப்பட்டு வேகமாக நடக்கலானார். மக்களும் கூடவே பின்தொடர்ந்தனர். பெருங்கூட்டமே சேர்ந்து விட்டது. ஸ்ரீ
சுவாமிகள் தேர் இருந்த இடத்தையடைந்து மஹாலிங்கேஸ்வரரைச் சுற்றிவந்து தரிசித்தார். பிறகு தேரின் வலப்புறமாகச் சென்று நின்று, தேரின் வடத்தைத் தம் கரத்தால் பற்றி கூடியிருந்த மக்களைப் பார்த்து, ஒன்றாகத் தேரை இழுக்குமாறு உரக்கப் பணித்தார். இதற்குள் கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் கூடினர்.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கலியுகத்தில் முக்திக்கு ஒரே வழி பகவானின் ரூப லாவண்யங்களின் மகிமை கேட்டால் போதும் ஜென்மாந்திர பாவங்கள் தீயினில் தூசாகும். அதேபோல பகவானின் நாம சங்கீர்த்தனம் பஜனை எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கு நாம் உட்கார்ந்து அதை பக்தியோடு கேட்டாலே போதும். பாட்டு பாடத் தெரியவில்ல
என்ற கவலை வேண்டாம். பஜனை பண்ணத் தெரியவில்லை என்கிற வருத்தம் வேண்டாம். சமஸ்க்ருத ஸ்லோகங்களை பிழை இல்லாமல் உச்சரிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் வேண்டாம். பகவானின் ஆயிரம் நாமங்களான விஷ்ணு ஸகஸ்ரநாமத்தை பீஷ்மாச்சாரியார் நமக்கு மிகப் பெரிய பொக்கிஷத்தை வழங்கியுள்ளார். மனதார, பக்தியுடன்
விஷ்ணு சஹாஸ்ரனாமத்தை சொன்னாலே போதும் முக்தி அடைந்து விடலாம். முழுவதும் சொல்ல முடியாதவர்கள் #இலகு_பாராயணமாக
ஶ்ரீராமராமேதி ரமேராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
என்பதை மட்டும் சொன்னாலே விஷ்ணுஸகஸ்ரநாமத்தை முழுவதும் சொன்ன பலன் கிடைத்து விடும்.