#பவித்ரோத்சவம் பவித்ரோத்சவம் என்பது வைஷ்ணவ கோவில்களில் நடக்கும் ஒரு முக்கிய உத்சவம். புனிதப்படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். ஒவ்வொரு கோயிலிலும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் பவித்ரோத்ஸவம் 3, 5, 7 அல்லது 9 நாட்களுக்குக் கொண்டாடப்படும்.
போதும் மற்றைய திருவிழா காலங்களில் மந்த்ர லோபம் (தவறான மந்திர உச்சரிப்பு) ஏற்படக்கூடும். அதனால் எம்பெருமானுடைய ஸாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் பவித்ரோத்சவம் கொண்டாடப்படுகிறது. அதே போல பூஜை செய்யும்போது தவறுகள் ஏற்படலாம். சில உத்சவங்கள்
நடைபெறாமல் தடைப் பட்டு போகலாம் (கரோனா காலத்தில் ஏற்பட்ட மாதிரி). கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை
அம்சங்களில் மாறுபாடு ஏற்படும். அவற்றை சரிஇவற்றால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப் படுவதே பவித்ரோத்சவம் ஆகும். மூர்த்திகளின் சாந்நித்யம் குறையாமல் இருக்க பவித்ரோத்ஸவம் கொண்டாடப் படுகிறது. ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம். இந்த
சமயத்தில் உத்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும். பவித்ரம் என்பது பட்டு நிறத்தால் செய்யப்பட்ட பல வண்ண மாலைகளுக்குப் பெயர். ஐந்து வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ள மாலைகளை பவித்திர மாலைகள் என்பார்கள். (நீலம், சிவப்பு, கருப்பு,
மஞ்சள், பச்சை) ஆகியவை. இந்த உத்சவத்தில் பவித்ர மாலைகளை பெருமாளுக்குச் சாற்றுவார்கள். அனைத்து சன்னதிகளில் இருக்கும் பெருமாள், தாயார் மற்றும் ஆழ்வார்களுக்கும் பவித்திர மாலைகள் சாற்றப்படும். உத்சவத்தின் போது எம்பெருமானுக்குத் திருவாராதனம் சமர்பிக்கப்படும். ஹோமங்கள் செய்யப் படும்.
வேத பாகங்கள் புருஷ சூக்தம், விஷ்ணு
சூக்தம், ஸ்ரீசூக்தம், பூ சூக்தம், சுதர்சன
காயத்ரியும் ஓதப்படும்.கடைசி நாளில் பிரமாண்டமான பூர்ணாஹுதி நடைபெறும். உத்சவம் முடிந்ததும், பவித்ரமாலைகள் எடுக்கப்படும். பிறகு, திருமஞ்சனம் நடைபெறும். இந்த உத்சவத்தின் பலன் அபாரமாகச் சொல்லப் பட்டுள்ளது.
உத்சவத்தில் ஈடுபடுபவர்கள், உதவி செய்பவர்கள் ஆகியோர் பாவங்கள் தீரும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இந்த உத்சவம் நடத்துவதன் மூலம் அந்த பகுதியில் நன்கு மழை பொழியும். வியாபார விருத்தியும், செல்வச் செழிப்பும் ஏற்படும். உலக நலன் கருதி செய்யப்படுவது தான் புனிதப்படுத்தும்
பவித்திர உத்ஸவம். (“சவம்” என்றால் சோகம் அல்லது துக்கம். “உத்” என்றால் அதிலிருந்து மீள்வது. உத்சவங்களின் மூலம் சோக விமோசனம் பெறுகிறோம். இது எல்லா உத்சவங்களுக்கும் பொருந்தும். )
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#புரட்டாசி
மாதங்களில் #அவன் மார்கழி என்று கண்ணன் கீதையில் சொல்லியிருந்தாலும் புரட்டாசியும் அவன் மாதம் தான். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களே புரட்டாசி மாதம். தெய்வ வழிபாடும், முன்னோர் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் புனிதமான மாதமாக
விளங்குகிறது. காக்கும் கடவுள் விஷ்ணுவுக்கு உகந்த மாதம் இது. அதனால் வைணவக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை #மஹாளய_அமாவாசை என்று குறிப்பிடுவர். புரட்டாசி அமாவாசைக்கு 15 நாட்கள் முன்பு வருவது #மஹாளயபக்ஷம் ஆகும். மறைந்த நம்
முன்னோர்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு மொத்தமாக ஒன்று சேரத் தங்கிச் செல்லும் காலமே மகாளய பட்சம் ஆகும். மகாளய பட்சம் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பு.
#MahaPeriyava All human beings must express their gratitude to their fathers (pitrs) and to the gods- they have a debt to pay their fathers, rites to perform for the gods. We must serve our fellow creatures to the best of our ability and extend hospitality at least to one guest a
day. This is atithya or what Thiruvalluvar calls "virundu", also known as manusyayajna. Then there is Brahmayajna to perform, the word "Brahma" here denoting the Vedas. Brahmayajna means chanting the Vedas and making others chant them. This is a duty carried out by a few on
behalf of all. One of the rites common to all is bhutayajna, demonstrating our love to all creatures, feeding them etc. Pitryajna, devayajna, manusyayajna, bhutayajana are rites all are duty-bound to perform in one way or other. If each individual does his work according to Vedic
#நற்சிந்தனை
ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருமால் கருடனை பார்த்து கேட்டார். “இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா?”
சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார், “மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு.”
மகாவிஷ்ணு "என்ன
மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.
“மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர் பிரபு. முதல் வகையினர் பறவையும் அதன் குஞ்சுகளும் போல்
உள்ளனர். பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது. காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும்.
#பகவத்கீதை கீதையில் கண்ணன் 18 விதமாக குறிப்பிடப்படுகிறார். அவை: 1. ஹ்ருஷீகேச - இந்திரியங்களுக்கு ஈசன் 2. அச்யுத - தன் நிலையிலிருந்து வழுவாதவன் 3. கிருஷ்ண - கருப்பு நிறமானவன்.
க்ருஷ் என்றால் பூமி. ண என்றால் ஆனந்தமளிப்பவர் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு ஆனந்தமளிப்பவர், அனைவரையும்
கவர்ந்து இழுப்பவர் 4. கேசவ - அழகிய முடியுடையவன்,
கேசி என்ற அசுரனைக் கொன்றவன் 5. கோவிந்தன் - கோ என்றால் பசு மற்றும் புலன்கள். எனவே பசு மற்றும்
புலன்களுக்கு ஆனந்தம் அளிப்பவன் 6. மதுசூதன - மது என்ற அசுரனை அழித்தவன், மதுவை(தேனைப்) போல இனிமையானவன் 7. ஜநார்தன - மக்களால் துதிக்கப்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்னொரு சமயம் குருவாயூர் கண்ணனின் தீவிர பக்தையான ஒரு மூதாட்டி குருவாயூர் அருகே வாழ்ந்து வந்தாள். ஒவ்வொரு நாளும் காலை மாலை குருவாயூரப்பன் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது அவள் வழக்கம். ஒரு நாள் #சீவேலி_தரிசனம் முடிந்து வீட்டுக்குத்
திரும்பும் போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக் கொண்டே சென்று கொண்டு இருந்தாள். அப்போது ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “பாட்டி, கவலைப் படாதீர்கள். உங்களை
நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான். மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள். வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, உன் பெயர் என்ன என்று கேட்டாள். அதற்கு அவன் #கோபாலன் என்று சொன்னான். மூதாட்டி, நீ
வரலாற்றை அறிந்து கொள்வதால் மட்டுமே ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு #இந்துகள்_இடையே_ஒற்றுமை_ஓங்கும். ஸ்ரீரங்கம் கோவிலை இஸ்லாமிய படைகளிடம் இருந்து பாதுகாக்க எத்தனையோ இந்துகள் பலியாகினர். தலை சீவி கொல்லப்பட்ட 12000 இந்துகளில் எத்தனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று தெரிந்தால் அவர்கள் தியாகத்தின்
மகிமை புரியும். கொடிய இஸ்லாமிய படைத் தலைவனை கொன்ற வெள்ளையம்மா என்ன ஜாதி என்று தெரிந்து கொண்டால் அன்றைய இந்துகள் எப்படி ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது தெரிய வரும். ஆழ்வார்களிள் அதிகம் கொண்டாடப் படும் #நம்மாழ்வார் பிராமணர் அல்லர். அவருக்கு ஏன் முதல் மரியாதை என்பதை தெரிந்து கொண்டால்
இந்துமதத்தின் சமத்துவம் புரியும். கவிச் சக்கரவர்த்தி #கம்பர் பிராமணர் அல்லர். பிராமணர் அல்லாத கம்பர் எப்படி ‘கல்வியிற் பெரியர்’ என்று பெயர் பெற்றார் என்பதை அறிந்து கொண்டால் அக்காலத்தில் கல்வி எல்லோருக்கும் சமமாக கிடைத்தது என்பது புரியும். கல்வியிற் பெரியர் கம்பரே வியந்து நின்ற