#புரட்டாசி
மாதங்களில் #அவன் மார்கழி என்று கண்ணன் கீதையில் சொல்லியிருந்தாலும் புரட்டாசியும் அவன் மாதம் தான். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களே புரட்டாசி மாதம். தெய்வ வழிபாடும், முன்னோர் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் புனிதமான மாதமாக
விளங்குகிறது. காக்கும் கடவுள் விஷ்ணுவுக்கு உகந்த மாதம் இது. அதனால் வைணவக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை #மஹாளய_அமாவாசை என்று குறிப்பிடுவர். புரட்டாசி அமாவாசைக்கு 15 நாட்கள் முன்பு வருவது #மஹாளயபக்ஷம் ஆகும். மறைந்த நம்
முன்னோர்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு மொத்தமாக ஒன்று சேரத் தங்கிச் செல்லும் காலமே மகாளய பட்சம் ஆகும். மகாளய பட்சம் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பு.
பல தெய்வங்களுக்கு விரதங்கள் அனுஷ்டிக்கும் மாதமாக புரட்டாசி உள்ளது. சிவ பெருமானுக்கும், விநாயகப் பெருமானுக்கும் விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது. #தூர்வாஷ்டமி_விரதம், #ஜேஷ்டா_விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். விரதங்கள் அனுஷ்டிப்பது மூலம் விநாயகப்
பெருமானின் நல் ஆசியைப் பெறலாம். சக்தி ஸ்வரூபமான பார்வதிதேவி சிவனை நினைத்து வழிபட்டு அதன் பலனாக அர்தநாரியாகவும், அர்தநாரீசுவராகவும் ஒன்று பட்ட தினமே #கேதார_கௌரி விரதமாகும். லட்சுமி விரதம், அம்மன் விரதம், கௌரி நோன்பு, கௌரி காப்பு நோன்பு என்று பல பெயர்களால் அழைக்கப் படுவதுண்டு.
புரட்டாசி மாதம் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்துக்குரியதாக காணப்படுகிறது. புரட்டாசி அம்பிகைக்கும் உகந்த மாதமாகும். புராட்டசி #நவராத்திரி நவராத்திரிகளில் மிக முக்கியமானது. துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தேவியர் மூவரையும் நாடு முழுக்க இந்துகள் இந்நாட்களில் கொண்டாடுகிறார்கள்.
சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது சிறப்பென்றாலும் புரட்டாசி சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்வது கூடுதல் சிறப்பு. புரட்டாசி சனிக் கிழமைகளில் பச்சரிசி வெல்லம் கலந்து மாவு உருண்டை செய்து தீபம் ஏற்றி பெருமாளை வணங்க திருமண தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பெருமாள்
திருமலையில் அவதரித்தது புரட்டாசி திருவோண நட்சத்திரத்தில். மகா விஷ்ணுவின் அவதாரமாக காஞ்சிபுரத்தில் #வேதாந்த_தேசிகர் அவதரித்தது புரட்டாசியில். புரட்டாசி சனிக்கிழமையில் #திருப்பதி_வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் #மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
மாவு உருண்டை என்பது ஏழுமலையையும் அதன் மேல் வைக்கும் தீபம் வேங்கடவனையும் குறிக்கும். #சனி_பகவான் அவதரித்ததும் ஒரு சனிக் கிழமையில் தான். இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சனி பகவானின் கெடு பலன்களிலிருந்து பக்தர்களை காப்பாற்றுகிறார்.
திருமணம் நடைபெறுவதில் தோஷங்கள், தடைகள் நீங்கி திருமணம் நடைபெற புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஒரு வருடம் 6 ருதுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. வர்ஷ ருது தனங்களையும், தானங்களையும் அளிக்கக்கூடியது. ஆறு ருதுக்களில் முக்கியமான ருது புரட்டாசி மாதத்தில்
தான் வருகிறது.
போற்றுவோம் புரட்டாசியை!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 21
#KB_சுந்தராம்பாள் நமக்கு ஔவையாராக மட்டுமே அறிந்த கொடுமுடி பாலம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பற்பல துறைகளில் புகழ் ஈட்டியவர். அவர் கொடுமுடி கோகிலம் என்ற சிறப்புப்
பெயருடனும் அழைக்கப்பட்டவர் ஆவார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் Image
பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு, 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 11ல் சுந்தராம்பாள் பிறந்தார். அவருக்கு
கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம் வயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாள், தாயார் ஆதரவில் வளர்ந்தார். லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி பயின்றார். குடும்ப வறுமைநிலை காரணமாக Image
இவர் ரயில்களில் பாடி பிச்சை எடுத்து வந்ததாகவும், அப்போது ஒரு நாள் நடேசையர் என்பவர் இவரது பாடும் திறமையைக் கண்டு இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டதாகவும் சுந்தராம்பாள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். பாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த சுந்தராம்பாள்,இளம் வயதிலேயே பாடும் Image
Read 20 tweets
Sep 21
#MahaPeriyava
Dr. S. V. Narasimhan was the chief advisor to the West Bengal government. He came to pay his respects to Periava.
Periava: Buy a big building in the centre of Calcutta and start a Sama Veda school for Bengali children there.
Dr: Right now, the South Indian Bhajan Image
Samaj is in a rental building
and it is in a central place of the city.
Periava: Very good. Buy that building. Let the Bhajan Samaj stay there.
Dr: That will cost a lot of money, Periava. I don’t have that kind of
money.
Periava: How much will be the cost ?
Dr: Nearly 50 crore
rupees. (The Dr desired to fulfill the wishes of Periava and at the same time did not know how to generate that kind of money)
Periava: You go to Madras right now. There, meet Annathurai Iyengar who will give you 50 rupees, which is equivalent to 50 crore rupees. Periava was
Read 8 tweets
Sep 20
#Narayanavanam_Perumal_Temple
This temple is equal to 1000 Athi Varahar and 100 Tirupathi. Here we can worship Lord Srinivasa peacefully for however long we want without being pushed and jostled. This is where Lord Srinivasa married Goddess Padmavathi Thayar. This is also called ImageImage
Sri Kalyana Venkateswara Swamy temple. Srinivasar is the main deity here. In the Tamil month of Vaikasi on Sukla Paksha Dasami thithi the divine wedding of Srinivasar and Padmavathi took place here. They both give Dharshan in their wedding attire as they appeared on their wedding Image
day, face filled with happiness and beauty. In Tirupathi Srinivasa Perumal resides alone and in Thiruchanur Padmavathi Thayar is alone. But here both are together. This temple is older than Tirupathi. This is where Padmavathi Thayar Avataar happened. Perumal graces with a sword
Read 15 tweets
Sep 20
#சடாரி சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பட்ட கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப் படுகிறது. சடகோபன நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக Image
அறியப் படுகிறார். சடாரி சாற்றப் படுவதற்கு வைணவ சம்பிரதாய ரீதியாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஒரு குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன், இந்த பூவுலகத்தில் உள்ள மாயை அந்த குழந்தையை பிடிக்கும் வகையில் செயல்படும் வாயு ‘சடம்’ என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் கர்ம Image
வினைகளால் கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும் பொழுது, அதன் உச்சந்தலையில் சடம் என்ற காற்று படுகிறது. அவ்வாறு பட்டவுடன், குழந்தை அதன் முன் ஜென்ம நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக் கொள்கிறது. மாயையை தோற்றுவிக்கும் சடம் என்ற அந்த வாயு உச்சந்தலையில் படும் காரணத்தால் குழந்தைகள்
Read 14 tweets
Sep 20
#நற்சிந்தனை அரச்சனை முடிந்து மணியடித்து தீபாராதனை காட்டியபடி அர்ச்சகர் சொன்னார், கனகவல்லி தாயாரை நன்னா தரிசனம் பண்ணுங்கோ. ஒரு மண்டலம் தரிசனம் பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும். அவ்வளவு சக்தி தாயாருக்கு!
ராமசந்திரன் பயபக்தியுடன் வணங்கினார்.
இப்போ பெருமாள் சன்னதிக்கு போலாம் என்று தாயார் Image
சன்னிதியை பூட்டிவிட்டு நடந்தார். அது ஒரு புராதனமான கோவில். ராமசந்திரன் தன் முன்னோர்கள் அங்கு வழிபட்டதாக அறிந்திருந்தார். கூகிளீல் விலாசம் தேடி கண்டுபிடித்து தன் குடும்பத்தாருடன் மகனின் காரை தானே ஓட்டி வந்திருந்தார். மெயின் ரோடிலிருந்து கரடு முரடான சாலையில் 3கிமீ பயணத்தின் பின்
தான் கோவிலை அடைய முடிந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் கௌதம் புலம்பிக் கொண்டே வந்தான். இப்படி ஒரு மட்டமான ரோடு இருக்குன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன் என்று தாத்தாவை கடிந்து கொண்டான். தாத்தாவுக்கு பேரன் மீது மிகுந்த பிரியம். அவனுக்கும் இவர் மீது அன்பு தான். ஆனால்
Read 14 tweets
Sep 19
#MahaPeriyava All human beings must express their gratitude to their fathers (pitrs) and to the gods- they have a debt to pay their fathers, rites to perform for the gods. We must serve our fellow creatures to the best of our ability and extend hospitality at least to one guest a
day. This is atithya or what Thiruvalluvar calls "virundu", also known as manusyayajna. Then there is Brahmayajna to perform, the word "Brahma" here denoting the Vedas. Brahmayajna means chanting the Vedas and making others chant them. This is a duty carried out by a few on
behalf of all. One of the rites common to all is bhutayajna, demonstrating our love to all creatures, feeding them etc. Pitryajna, devayajna, manusyayajna, bhutayajana are rites all are duty-bound to perform in one way or other. If each individual does his work according to Vedic
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(