#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் பிறந்து செருப்பு தைக்கும் வேலையில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தன்னுடைய குடும்பம் வயிறு கழுவினாலும், இரவும் பகலும் பாண்டுரங்கன் மேல் அளவில்லாத பக்தி கொண்டு அவனை போற்றி பாடுவதிலே தான் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டவர் ஸந்த் ரோகிதாசர். ஏகாதசி
அன்று அவர் பஜனை நாள் பூரா கோவில் அருகே நடக்கும். அனைவரும் பக்தி ரசத்தில் மூழ்கி அனுபவிப்பார்கள். இதனால் அவரால் ஒரு மாசத்துக்கு 10 ஜோடி செருப்பு தான் பண்ண முடிந்தது. அதை வைத்து அரை வயிற்று கஞ்சி தான் அவருக்கு இருந்தாலும் பகவன் நாமா சொல்லி ஆனந்தமாக நாட்களை நகர்த்தினார். அப்படி
இருக்க ஓர் நாள் அந்த ஊர் ராஜாவுக்கு திடீரென்று அடுத்த ஊர் ராஜாவின் மேல் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் படை வீரர்களுக்கு காலணி வழங்க ஊரிலுள்ள அனைத்து செருப்பு தைக்கும் தொழிலாளிகளிடமும் ஒருமாத காலத்தில் தலா 1000 ஜோடி செருப்பு தைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். எல்லா
தொழிலாளிகளும் இரவும் பகலும் உழைக்க கிளம்பிவிட்டார்கள். ரோஹிதாசருக்கு நிச்சயம் தன்னால் 1000 ஜோடிசெருப்பு செய்ய முடியாது என்று தெரியும். எல்லாம் இறைவன் செயல் என்று வழக்கம் போல பாண்டுரங்க பஜனையிலே நிறைய நேரம் செலவானது. இன்னும் மூன்று நாள் இருக்கு அதற்குள் 1000ஜோடி செருப்பு செய்தாக
வேண்டும். இல்லையேல் அரசனின் கடும் தண்டனை நிச்சயம். அவர் மனைவி அழுதாள், எப்படியாவது ஏற்பாடு பண்ணுங்களேன் என்று.
“என்னால் எப்படி அம்மா அவ்வளவையும் பண்ண முடியும்?ரெண்டே நாளில் ஆககூடிய காரியமா இது?”
தம்புரா மூலைக்கு போனது. முக்கி முனகி செய்தாலும் 11 ஜோடி கூட தயாராகவில்லை. பாண்டுரங்கா
நீயே வழிகாட்ட வேண்டும் என்று பாண்டுரங்கன் மேல் பொறுப்பை போட்டுவிட்டார்.
“அய்யா” என்ற தெருவில் ஒரு குரல் கேட்டது.
“யாரப்பா?”
“இந்த ஊரிலே ரோஹிதாசர் என்பது யார்?”
“ஏன்? நான் தான்”
“உங்களுக்கு செருப்பு தைக்க உதவிக்கு ஆள் வேண்டும் என்று கேட்டீர்களாமே”
“சொல்லியிருந்தேன் பல பேரிடம்.
ஆனால் இதுவரை ஒருவரும் கிடைக்கவில்லை, இனி கிடைத்தாலும் பிரயோஜனமில்லை நாளை விடிந்தால் அரசனின் ஆட்கள் என்னை இழுத்து போய் தண்டனை கொடுக்க போகிறார்கள். ஆகவே எனக்கு உதவிக்கு இப்போ ஆள் வேண்டாம்.”
“இல்லை அய்யா, எனக்கு ஓர் வாய்ப்பு கொடுங்கள். நான் வேலையை முடித்து விடுகிறேன்.”
“உன்னால்
முடியாதப்பா”
“அதென்ன அந்த மூலையில்?”
“என்னுடைய தம்புரா”
“நீங்கள் பாடுவீர்களா? எனக்கு பாட்டு ரொம்ப பிடிக்கும். நீங்கள் பாடிக்கொண்டே இருங்கள் நான் முடித்து விடுகிறேன்.”
“பாடினால் என்னை நான் மறந்து போய்விடுவேன். உனக்கு கொஞ்சம் கூட உதவ முடியாதே தம்பி.”
“பரவாயில்லை அய்யா உங்கள் உதவி
வேண்டாம் நீங்கள் பாட ஆரம்பியுங்கள் நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன். அடடே! இன்று ஏகாதசி ஆயிற்றே. நீங்கள் பாடுங்கள்.”
“தம்பி, ஏகாதசி அன்று நான் கோவிலில் பாடுவது வழக்கம் இன்று இந்த வேலையால் அதை கூட செய்யவில்லை. என் கவலை எனக்கு.”
“கோவில் கிட்டே உக்காந்து பாடறதை இங்கே உக்காந்து பாடுங்க
நானும் கேட்பேன் இல்லையா.”
ரோகி தாசர் விட்டல விட்டல விட்டல விட்டல என நாமஸ்மரணம் செய்ய ஆரம்பித்து பின்னர் தன்னையே மறந்து பாட ஆரம்பித்தார்.நேரம் சென்றதே தெரியவில்லை. நாள் போனதே தெரியவில்லை. நாள் பூரா பஜனையில் ஈடுபட்டார் ரோஹிதாசர். பையன் 1000 ஜோடி செருப்பு தயார் செய்து நூறு நூறாக
மூட்டை கட்டி வைத்து விட்டான்.
“தம்பி, ரொம்ப நன்றிப்பா.
என் மானத்தை மட்டுமல்ல என் உயிரையும் காப்பாற்றினாய். ராப்பகலா உழைச்சே. இந்தா எண்ணெய் சீயக்காய் ஆத்தில் போய் குளிச்சுட்டு வா சாப்பிடுவோம்.”
போனவன் வரவில்லை.
“ஏம்மா, அந்த பையன் வரவில்லையே ஏதாவது பேர் ஊர் கேட்டாயா அவனிடம்.”
“பண்டரிபுரம் தானாம். பேர் பாண்டுவாம்.”
ராஜாவின் ஆட்கள் செருப்பை எல்லாம் தூக்கி போய் கை நிறைய காசு கொடுத்தார்கள். காசை தூக்கிக் கொண்டு பையனை எங்கெல்லாமோ தேடி கிடைக்காமல் கோவிலுக்கு சென்றார். தூரத்திலிருந்தே பாண்டுரங்கன் தெரிந்தான். ஒருகணம் அவன் முகம் அவருக்கு அந்த பையன் முகமாக
தோன்றி சிரித்தது, ஆனந்த கண்ணீர் விட்டு அழுது புலம்பி அரற்றி ஆர்ப்பரித்து கிடந்தார் ரோகிதாசர் விட்டலனோ புண்முறுவல் பூத்தான் அங்கே.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 27
#WhatIsGolu or #Kolu. It simply means divine presence. We know #Navarathiri as the festival of the 3 Devis Durga Lakshmi Saraswathi. Golu is part of this celebration. It is the festive display of dolls and figurines in South India during the Saradha Navaratri (Dussehra Dasara) ImageImage
Golu is kept on Mahalaya Amavasai. It is a Hindu festival where women and artistic men display dolls, figurine, which are thematic, narrate a Hindu purana, ithu has a like Ramayana, Mahabharatha, Dasavathara, 6 abides of Subramanya, Siva in Kailash, dances of Nataraja, court life ImageImageImage
everyday scenes and miniature kitchen utensils Ratha Yatra, processions etc along with the divine presence of the Goddesses Saraswati, Parvati and Lakshmi. The steps may also be interpreted as the evolution ladder that we are all traversing in the journey of life. Keeping golu is
Read 22 tweets
Sep 27
#மகாபெரியவா #நவராத்திரி சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது. பக்தர் குழுவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று, எல்லோரையும் போல் நமஸ்காரம் செய்துவிட்டு, பெரியவாளை நோக்கிப் போயிற்று. பெரியவாள் எதிரில், தட்டுத் தட்டாக பழங்கள், கற்கண்டு, திராட்சை. பெரியவாள் அருகிலிருந்த Image
தொண்டர் பிரும்மசாரி ராமகிருஷ்ணனைப் பார்த்து ஒரு ஆப்பிள் எடுத்து குழந்தை பழத்துக்காக வந்திருக்கிறதோ என்று குழந்தையிடம் கொடுக்கச் சொன்னார்கள். குழந்தை ஆப்பிளை லட்சியம் செய்யவில்லை. பெரியவாளைப் பார்த்து, "ஏன் கொலு வைக்கல்லே?" என்று கேட்டது. குழந்தை சொன்னது, தெய்வம் சொன்ன மாதிரி.
கூடியிருந்த பக்தர்களை, ஆளுக்கு ஒரு பொம்மை வாங்கி வரும்படி கூறினார்கள் பெரியவா. ஒரு மணி நேரத்தில் ஏராளமான பொம்மைகள் வந்து சேர்ந்து விட்டன. அதற்குள் படிக்கட்டு தயார். தினந்தோறும் இரவில், சுண்டல் நைவேத்தியம் விநியோகம்.சுமங்கலிகளுக்குத் தாம்பூலம், குங்குமம். நவராத்திரி முடிந்ததும்,
Read 6 tweets
Sep 27
#MahaPeriyava #Navarathiri This is an incident that happened many years ago. It was a time when the construction work of Uttara Sri Nataraja temple was going on in accordance with Kanchi Paramacharyal's orders in the Satara town of Maharashtra. People thronged daily to have Image
darshan of Sri Maha Periyava who was camping in the town. It was three o' clock in the afternoon on a Sunday. A 30-year-old youth prostrated before Periyava and got up. Tears were seen in his eyes. Noticing it, Periyava asked him with affection, "Enpa, Who are you? Where are you
from? Why are your eyes watery?" Without replying, he started crying. People nearby consoled him and made him sit before Periyava.
"Where are you from Appa?" Periyava asked him.
"Palakkad, Periyava."
"You are coming all the way from Palakkad?" asked Periyava immediately.
"Yes
Read 30 tweets
Sep 26
#தசகம்_25
நரசிம்ம அவதாரம்
1. ஹிரண்யகசிபு தூணை அடித்தான். உடனே, காதுகளைக் கிழிக்கும் பயங்கரமான சத்தம் கேட்டது. அந்த சத்தம், அண்டங்களை நடுங்கச் செய்வதாக இருந்தது. இதுவரை எவராலும் கேட்கப் படாத சத்தமாக இருந்தது. அந்த சத்தத்தைக் கேட்ட ஹிரண்யகசிபுவின் உள்ளம் நடுங்கியது. பிரும்மதேவன் Image
கூட நடுங்கினாராமே? என்று பட்டத்ரி கேட்க குருவாயூரப்பான் “ஆம்” என்று தலையை ஆட்டி அங்கீகரித்தாராம்.
2. எங்கும் நிறைந்தவரே! அந்த அசுரன், எல்லா திசைகளையும் கண்களால் பரபரப்புடன் நோக்கினான். அப்போது, தூணிலிருந்து, மிருக வடிவமும் அல்லாத, மனித வடிவும் அல்லாத உருவத்துடன் நீ தோன்றினாய்.
இது என்ன என்று அசுரன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பிரகாசிக்கின்ற பிடரியுடன், சிங்க உருவத்துடன் நீ பெரிதாக வளர்ந்தாய்.
3. சுழலும் உன் கண்கள், உருக்கிய தங்கத்தைப் போல ஜொலித்தன. பிடரி மயிர்கள், விரிந்து ஆகாயத்தை மறைத்தன. வாய் குகையைப் போன்றிருந்தன. வாளைப்போல் கூர்மையாக சுழன்று
Read 10 tweets
Sep 26
#மகாபெரியவா #நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம்
பரதேவதைய வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும்
இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே
Read 14 tweets
Sep 26
#Navarathiri #MahaPeriyava
Kanchi Mahaperiyava had asked Shri Joshi to make a Kuthu Vilakku (lamp) of gold and bring it to Him. For some reason Shri Joshi could not go to the Matam and instead sent it through another devotee Shri Ramanan. Shri Ramanan submitted the lamp to Him
when he went to have His Darshan. It was around 8.30 pm and He was sitting in the Mena. On seeing the lamp Periyava took it in His Hand and tells those who had assembled near Him:
“During all days of Navarathri, Ambal comes physically and sits exactly at 8 pm on the Meru in
Kamakshi Amman Temple in Kanchipuram. So, take this lamp, light it and place it near the Meru! Since the Meru will become hot due to the heat of the flame, prepare a ball of sandhanam (sandalwood paste) and place the lamp on top of it!”
So, please do visit Kamakshi Amman temple
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(