#நவராத்திரி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்
-மகாகவி சுப்ரமணிய பாரதியார்
சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு #பிரம்மோத்சவம் என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தலும், அவற்றுள்
முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நவராத்திரி தான். ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. சக்தியைப் பங்குனி/சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி. மாசி மாதம் ஷியாமளா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது
பாத்ரபத நவராத்திரி அல்லது #சாரதாநவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது.
நவராத்திரி
வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி,
மன நிறைவு. எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி, கொலுவைத்து கொண்டாட்டம்! நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே. கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக
அலங்கரித்து வைப்பது. ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக
எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலன்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள். நவராத்திரியின் போது தேவியர்களை முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ள வேண்டும்.
#வீரம்_தரும்_துர்க்கை துர்க்கை வீரத்தின் தெய்வம்.
வீரர்கள் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள். நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை #இச்சாசக்தி. #கொற்றவை என்றும் #காளி என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை,
தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.
#செல்வம்_தரும்_லட்சுமி
இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, #கிரியாசக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற
மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள் பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, மகா இலட்சுமி
தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

#சகலவித்தை_தரும்_சரஸ்வதி
சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். பிரம்பிரியை. #ஞானசக்தி.
நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுத பூஜையாகவும் கொண்டாடுகின்றனர். சமுதாயத்தில் தொழில், புலமை என்ற
இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. புலமை பெறுவதும் ஒரு தொழில் தான், இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. சரஸ்வதி தேவியும் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி என அஷ்ட
சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்
#விஜயதசமி
நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே
விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை. வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு
புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐய தசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்து கொண்டான்.
நவராத்திரியை நன் முறையில்
கொண்டாடுவோம். வாழ்வில் அத்தனை நலன்களையும் பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 30
#ஊட்டத்தூர்_சிவபெருமான்_கோவில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் அதன் உருவாக்கத்திற்காக உலக பிரசித்தி பெற்றது. ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கு தெரியாது. நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும். Image
பல இடங்களில் இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் கல்லாலும் செய்யப் பட்டிருக்கும் ஆனால் இங்குள்ள நடராஜர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல. பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை உளி கொண்டு செதுக்கப் பட்டதல்ல. Image
சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய அற்புதமான சிலை ஆகும். இந்த சிலை உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள். இது மிகவும் அபூர்வமான பாறையாகும் 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும். இந்த கோவிலில்
Read 13 tweets
Sep 30
#கும்பம்_தேங்காய்_வழிபாடு
எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், யாகம் செய்யும்போதும் கலச பூஜை முக்கியத்துவம் பெறுகிறது. நவராத்திரி போன்ற பண்டிகைகளிலும் வீட்டில் பலர் கலசம் வைத்து வழிபடுகின்றனர். இதன் தாத்பரியத்தைத் தெரிந்து கொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர். நீர் இன்றி Image
அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப் படுத்துகிறோம். ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைப்
போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்து பூஜிக்கிறோம். கலசம் வைக்க பித்தளை அல்லது தாமிரச் சொம்பினை பயன்படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இயற்பியலில் கடத்திகள் என்று என்பதுசொல்வார்கள். ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்
Read 12 tweets
Sep 29
#நவராத்திரி #அரிய_தகவல்கள்
1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. நவராத்திரி விழா பற்றி தேவி மாகாத்மயத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
3.நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
4. விஜயதசமி தினத்தன்று Image
பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
5. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. நவராத்திரி விரதத்தை கடை
பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.
6. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம்.
7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று
Read 13 tweets
Sep 29
#MahaPeriyava During Sri Maha Periyava’s camp at Andhra Pradesh, a Pooja was arranged for Goddess Kamakshi Amman and all arrangements were made for the Pooja. Ambal Kamakshi was dressed in a divine and soulful manner by the Sreekaryam people. When Sri Maha Periyava was about to Image
start the Pooja, He noticed that the saree of Kamakshi Amman was torn at the knee. But Sri Maha Periyava decided to go ahead with the Pooja without changing the saree. The Pooja was in excellent progress and a lot of devotees were assembled for the Pooja. Unexpectedly, a lady
beggar with her saree torn at many places came running and asked for a saree and food. Everyone in the crowd was about to prevent that lady from nearing Sri Maha Periyava. Maha Periyava instructed the people not to stop her but allow her to come near Maha Periyava.
Karuna Sagaran
Read 10 tweets
Sep 29
#கூட்டிக்கழிச்சு_பார்த்தால்_கணக்கு_சரியா_வரும்
ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் செல்வாவும் சிவாவும் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவர் ரமேஷ் என்பவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்
அதற்கென்ன, தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். செல்வா, என்னிடம் 5 ரொட்டிகள் இருக்கிறது என்றார். சிவாவோ என்னிடம் 3 ரொட்டிகள் இருக்கிறது என்றவர், ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாகப்
பிரித்துக்கொள்ள முடியும் என்றார். மூன்றாம் நபர் ரமேஷ் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் 3 துண்டுகள் போடுங்கள். இப்பொழுது 24 துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று
Read 10 tweets
Sep 29
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆறு விதத்தில் கடன்பட்டுள்ளோம்.
முதலாவதாக, தேவர்களுக்குக் கடன் பட்டுள்ளோம். நாம் சுவாசிக்கக் காற்று, பார்க்க வெளிச்சம், பருக நீர் என நம் எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர்.
இரண்டாவதாக, நாம் ரிஷிகளுக்குக் கடன்
பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர்.
மூன்றாவதாக, இதர உயிர்வாழ் இனங்களுக்குக் கடன்பட்டுள்ளோம். பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவிற்கு கடன்பட்டுள்ளோம்.
விவசாயத்திற்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம்.
நான்காவதாக பித்ருக்களுக்குக் கடன் பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம்.
ஐந்தாவதாக குடும்ப
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(