மெட்ராஸ் மாகணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையான காமரஜரை எதிர்த்து போராடி 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று 1/1
சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருதுநகரில் அவர் போரட்டத்தை துவங்கினார் அந்த போரட்டாம் முதல்வர் காமராசரின் ஆட்சியை அலட்சியப்படுத்தியது பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரை பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம் இந்த பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை என்றார் 1/2
இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற வேலை அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது என்று பதிலளித்தார் காமராஜர் மேலும் சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் நான் ஒரு வேலை இறக்க நேரிட்டால் 1/3
என் உடலை தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என் போரட்டதிற்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள் என பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்தார் போரட்டத்தை நிறுத்தும் படி ம.பொ.சி, அண்ணாதுரை, ஜீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர் 1/4
அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்தார் அப்போது “எல்லையை வாங்க முடியாதா ? இதில் என்ன கஷ்டம்? இதய சுத்தியோடு ஆந்திரா சர்க்காருடன் பேசினால் காரியம் நடக்காதா? என்று கண்ணீர் சிந்தியபடி கேட்டதாக அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார் 1/5
அவரின் போரட்டம் 60 நாட்களை தாண்டியது ஆனாலும் காமராசரின் கல்மனம் கரையவில்லை அவரின் போராட்டத்திற்கு பொதுவுடைமை கட்சி முழுமையாக துணை நின்றது
அவர் உயிருக்கு போராடிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கும் போரட்டத்தை தொடர்ந்தார் 79வது நாளில் உயிர் பிரிந்தது 1/6
காங்கிரஸால் தோற்கடிக்கப்பட்ட தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைந்த பிறகு 1968 ஜுலை 18 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது பேரவை தலைவர் ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா "தமிழ்நாடு" என மூன்று முறை கூற "வாழ்க" என்று உறுப்பினர்கள் வின்னதிர முழக்கமிட்டார்கள் 1/7
சங்கரலிங்கனார் தோழர் ஜீவானந்தம் ம.பொ.சி , அண்ணா என்று தலைவர்கள் போராடி தீர்மானத்தை பல முறை முன் மொழிந்து தோற்க்கடிப்பட்ட தமிழ் நாடு பெயர் திமுக ஆட்சிக்கு வந்த உடனே நிறைவேறியது “நான் பேரவையில் தமிழ் நாடு என்று கூறுவேன் நீங்க எல்லாம் வாழ்க வாழ்க என்று கூற வேண்டும் என்றார் அண்ணா 1/8
சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் ஆனதும் அதை மறக்காமல் நிறைவேற்றினார். இதை ஒரு வெற்றியாக சொல்லாமல் இது தமிழுக்கு வெற்றி. தமிழருக்கு வெற்றி. தமிழ் வரலாற்றுக்கு வெற்றி. தமிழ்நாட்டுக்கு வெற்றி அனைவரும் இந்த வெற்றியிலே பங்குகொள்ள வேண்டும்" என்றார் அண்ணா 1/9
யார் இந்த நாட்டை ஆள்கிறார்கள் நானா இல்லை இராமசாமி நாயக்காரா ? பார்த்து விடலாம் என்ற ஆணவத்தில் 1938- இல் இந்தியை கட்டாய பாடமாக அறிவிக்கிறார் இராசகோபாலாச்சாரியார் ஆனால் 1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு 1/1
பெரியார் குடிஅரசு இதழில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி வடமொழி உயர்வுக்கு வகை தேட பார்ப்பனர்கள் இந்தியை திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார் 1930-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார் 1/2
1938- பிப் மாதம் காஞ்சிபுரத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது மாநாட்டில் பெரியார் இந்தியை எதிர்த்து போர்முரசு கொட்டினார்
“இந்தி” கட்டாய பாடமாக்குவது ஒழித்தால் மட்டும் போதாது. அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார் தந்தை பெரியார் 1/3
பலருக்கும் தெரியாத ஒரு போராளி தான் பெரியாரின் தங்கை “கண்ணம்மாள்” பெரியார் காங்கிரசில் இருந்த போது ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடந்தது பெரியார் துணைவி நாகம்மையாரும் சகோதரி கண்ணம்மாவும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர் எப்படியாவது மறியலை நிறுத்த வேண்டும் என்று 1/1
காந்தியாரிடம் கேட்டபோது அது என் கையில் இல்லை ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது என்று காந்தி கூறியதாக வரலாற்று குறிப்பு இருக்கிறது வைக்கத்தில் நடந்த போராட்டத்திலும் இவர்கள் கலந்து கொண்டனர் கொட்டும் மழையிலும் கலையாமல் போராடினார்கள் 1/2
குடிஅரசு ஏட்டில் 29.10.1933 இன்றைய ஆட்சி ஒழியவேண்டும் ஏன்? என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியதற்காக அதன் ஆசிரியர் பெரியார் அவர் சகோதரி கண்ணம்மா (பத்திரிகையின் பதிப்பாளர்) ஆகியோரின் மீது இராஜதுரோக வழக்கு தொடுக்கப்பட்டது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள் இருவரும் 1/3
பகலில் பூசை நேரங்களில் இறைவனுக்கு முன் இவர்கள் நாட்டியமாடுவார்கள் இரவிலோ வசதி படைத்தவர்களின் விளையாட்டு பொம்மைகள் இவர்கள் இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் ஆனால் தந்தை யாரென்று தாய்க்கு கூட தெரியாது இறைவனின் குழந்தைகள்.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பெண்ணாகப் பிறந்தால், 1/1
அவர்களும் தாயின் வழியில்தான் வாழ்ந்தாக வேண்டும் இவர்கள் தான் தேவதாசிகள் இறைவனின் பெயரால் இந்த இழிவு நடந்தது இந்த இழிவு கோழி ஆடு மாடுகளை போல் பெண்கள் நேர்ந்துவிடப்படார்கள் செல்வந்தர்களின் போக பொருளாய் மாறி இவர்கள் தவித்த தவிப்பும் அனுபவித்த கொடுமையும் கொஞ்ச நஞ்சமல்ல 1/2
இதை ஒழிக்க சென்னை மாகாண சட்டசபையின் மேலவை துணை தலைவரான Dr. முத்துலட்சுமி அம்மையார் 1927 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள், தேவதாசி முறை ஒழிப்பிற்கான தீர்மாணத்தை முன் மொழிந்தார் பலர் கொதித்து எழுந்தனர் நாட்டிய கலையே அழிந்து போகும் அபாயம் வந்து விட்டது கலை காப்பாற்றப்பட வேண்டாமா? 1/3
நான் பெரியாரியலை உள் வாங்க காரணமே சுபவீ தான் அவரின் பெரியாரின் “இடதுசாரி தமிழ் தேசியம்” நூல் என்னை பெரியாரை மூர்க்கமாக ஏற்க தூண்டியது
அவர் முகத்திற்கு நேர் எதிர் கருத்து வைக்கும் நபர்களை கூட அருகில் நின்று பாரட்டும் நபர் சுபவீ அதற்கு இரண்டு உதாரணங்கள் என் கண் முன் நடந்தவை 1/1
ஒன்று லண்டனில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்ப்பில் கூட்டம் ஏற்ப்பாடு செய்திருந்தோம் அதில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஈழ தமிழர் “மயூரன்” என்ற நபர் வந்து சுபவீயை சாடி தான் எழுதி கேள்விகளை கேட்டு குட்டி கலவரம் செய்தார் அதை சுபவீ மிக எளிமையாக எடுத்து கொண்டு 1/2
அவருக்கு அங்கே பதில் கொடுத்தார் கொடுத்தது மட்டுமல்லாது நிகழ்வின் இறுதியிலும் மயூரை கை குழுக்கி அருகில் நின்று பாரட்டினார் ( நேருக்கு நேர் நின்று தயவு தாட்சனை பாரால் கேள்வி கேட்ட உங்க நேர்மையை நான் பாரட்டுகிறேன் என்று கூறினார் ) 1/3