#புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம்.
ஆண்டு
முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் #விஷ்ணு_சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையை தரும். அந்த வகையில் இன்று 15.10.2022 புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஆகும். விரதம் இருப்பவர்கள் வீட்டை சுத்தம் செய்து
வீட்டிலிருக்கும் பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை ஒரு செம்பில் ஊற்றி படத்தின் முன் வைத்து வணங்க வேண்டும். அதை சிறிதளவு அருந்தி விரதத்தை துவங்க வேண்டும். பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம். விஷ்ணு
புராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவை இன்று பாராயணம் செய்வது மிகவும் உத்தமம். மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு
பலன்கள் குறைய திருமாலை வணங்க வேண்டும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று வறியவர்கள், எளியவர்கள் முதலியவர்களுக்கு தானம் செய்வது அதிக நற்பலன்களை தரவல்லது. புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும், செல்வம் செழிக்கும் மற்றும் துன்பங்கள் விலகும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 16
#டாலர் வலுவாகிறதா அல்லது #ரூபாய் வீழ்ச்சி அடைகிறதா?
விளக்கம் இழையில்👇
பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு இருந்தாலே, இந்தக் கேள்விக்கான பதில் தெரியும். ஆனால் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் தரம் மிகக் குறைவு!அடிப்படைகள் கூட அவர்களுக்குத் தெரியாதது சோகம். Image
உலகில் சுமார் 200 நாடுகள் உள்ளன, ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டுக்கான பணம்! அது மற்ற நாடுகளின் பணத்துடன் மாற்று விகிதத்தை பராமரிக்கின்றன. அதற்குப் பெயர் நாணய மாற்று விகிதம் அந்த நாணயத்தின் வழங்கல் மற்றும் தேவையைப் பொறுத்து அது அமையும். (demand and supply)
இப்பொழுது அமெரிக்க டாலர
வலுவடைகிறதா (அ) ரூபாய் வலுவிழக்கிறதா என்பது கேள்வி
கடந்த 1 வருடத்தின் USD INR செயல்திறனைப் பார்க்கவும்.
அக்டோபர் 2021 : $1 = ரூ 75
அக்டோபர் 2022 : $1 = ரூ 82
இது, USD இன் நல்ல செயல்திறன் காரணமாகவா? அல்லது INR இன் மோசமான செயல்திறன் காரணமாகவா?
அதை இந்த வளைவின் அடிப்படையில் சொல்ல
Read 20 tweets
Oct 16
#நற்சிந்தனை ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். மறுநாள் பொழுது விடிந்தது. குருவும் சீடனும் ஆற்றில் நீராடி Image
சூரியனை வணங்கினார்கள். அப்பொழுது சூரிய பகவான் அசரீரியாக தோன்றி, "வேத குருவே! உமக்கு வணக்கம். உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக் கொண்டேன். இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை
காப்பாற்றுங்கள்! என்று கூறி மறைந்தான். குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார். இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோயிலின் இறைவனை வணங்கினர். பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர். சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து
Read 14 tweets
Oct 16
#MahaPeriyava A family went to have the darshan of Maha Periyava. Along with them, they took one of their family friends who had been living in the USA for some decades. The friend did not have any great faith in our religion, system and especially the monks wearing the saffron. Image
He went along with them, utterly disinterested in meeting Him. He was under the impression that Maha Periyava was a fundamentalist, an uneducated monk. This NRI had no great respect for Him at all. Not only that, he uttered such inauspicious things about Him, “What does He know?
Does He know English?”
There was a big throng of devotees at the Mutt and the family was standing at a decent distance from Him. As usual, Maha Periyava saw this family with His graceful eyes, and called all of them near Him.
They all went near Him, the friend too. After all the
Read 9 tweets
Oct 16
முக்கூர் #ஸ்ரீமதழகியசிங்கர் சாமான்யமான லௌகிக விஷயங்களின் மூலம் ஆழமான சம்பிரதாயக் கருத்துக்களை சிஷ்யர்களின் மனதில் பதிய வைப்பதில் வல்லவர். ஒரு சமயத்தில் சிஷ்யர் ஒருவா் ஸ்ரீமதழகியசிங்கரிடம் விண்ணப்பித்தார், ஸ்வாமி! விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள Image
தூரத்தை அளக்க முடிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. இதே போல் பெருமாளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை அளப்பது சாத்யமா? என்று கேட்டார்.
ஸ்ரீமதழகியசிங்கரும் “ஆஹா! அளக்கலாமே! நாளை வரும்போது ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டு வா” என்றார். அந்த சிஷ்யரும் மறுநாள்
பேப்பா் பேனா ஸகிதமாக வந்தார்.
ஆசார்யனும், “இந்த பேப்பரில் என்னுடையவை என்று ஒரு தலைப்பு போட்டுக் கொண்டு, என் பத்னீ, என் புத்ரன், என் வீடு, என் கார், என் பேனா, என் கடிகாரம், என் வேஷ்டி என்று உன் உடமைகளாக நீ நினைப்பவை எல்லாவற்றையும் ஒரு பட்டியலிடு. எல்லாம் முடிந்தபின் கடைசியில்
Read 7 tweets
Oct 15
#choose_your_teacher_wisely
There lived a woodcutter named Mari who was a big devotee of Sri Krishna. He will go to the temple first thing in the morning and then go to the forest to cut wood. One day he saw a fox which had lost its front feet. It was just lying under a tree. Image
The wood cutter became curious. How will this fox hunt and eat when it has no legs he wondered. His query was soon answered. A tiger appeared there with its hunted prey, ate to its heart content and went away leaving the rest. The fox moved slowly and came to the prey and ate Image
till it was full. The wood cutter got an idea observing this! He thought when God could provide food for this animal with no effort on its part why wouldn’t He provide all my requirements, especially being a devotee of Him. So he decided to not work from the next day onwards. He
Read 7 tweets
Oct 15
#சனாதனதர்மம் ராமர் காட்டில் இருக்கும் போது ஓர் ஆற்றங்கரையில் துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர். ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக்
கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்வி தான் ஏதோ ஆரம்பிக்கப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான். துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, கோதுமை மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச்
சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம், இரண்டு குரங்குகள் அவர் எதிரே வந்து அமர்ந்து அந்த ரொட்டிகளை எப்படி
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(