#தூயபக்தி #ராமாயணம் #சனாதனதர்மம்
ராமன் தசரத சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காட்டுக்குச் செல்கிறார். அவர் கூட சீதையும் லக்ஷ்மணனும் அவர் கூட சென்றார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போது தான் முதன் முதலாக #குகன் ராமனை பார்க்கிறான். ராமனைப் பற்றி சகல விஷயங்களும்
அவனுக்கு தெரியும். நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை.
“என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?”என பக்தியோடு கேட்கிறான்.
“கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா.”
அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டு விட்டு புறப்பட
தயாராகியது. கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி '”கேவத் உன் படகை இங்கே கொண்டுவா” என, படகு நெருங்கி வந்தது.
“கேவத், இதோ நிற்கிறார்களே யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா, ராமர், அது சீதாதேவி ராணி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவரின் வீர சகோதரன். இவர்களை அக்கரை கொண்டு சேர்.”
கேவத் ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும்போதும் இரவில் பாட்டுக்கு முன்பும் ராம நாமம் சொல்பவன்.
“ஐயா குகனே, நான் இவர்களை கங்கையின் மறுகரை கொண்டு சேர்க்கிறேன். ஆனால் முதலில் இந்த ராமரின் கால்களை நன்றாக கழுவிவிடவேண்டுமே. தூசு தும்பு இருக்கக்
கூடாது.”
“ஓ அவருக்கு பாத பூஜையா, அதை அப்புறம் மறுகரையில் இறக்கி விடும்போது வைத்துக் கொள்” -குகன்.
“அப்படி இல்லை ஐயா, என் படகில் ஏறுவதற்கு முன்னால் தான் அதை செய்யவேண்டும்.”
குகனின் கண்கள் கோபத்தால் சிவந்தது. என்ன பிடிவாதம் இந்த கேவத்துக்கு. கேவத் இதை கவனித்துவிட்டு நேராக ராமனை
வணங்கி சொல்கிறான்.
“மஹாராஜா, நான் ஒரு ஏழை ஓடக்காரன். இந்த பழைய சிறிய ஓடம் தான் எனக்கு ஜீவனோபாயம். இதில் கிடைக்கும் சிறிய வருமானம் என் மனைவியையும் என்னையும் வாழ வைக்கிறது. என்னிடம் வேறு படகு கிடையாது, இன்னொன்று வாங்க வசதியும் இல்லை.”
“எதற்கு இப்படி பேசுகிறாயப்பா?”-ராமர்.
“எனக்கு
உங்களை பற்றி தெரியுமய்யா. உங்கள் காலிலுள்ள தூசி பட்டால் போதும் கல்லும் கூட பெண்ணாகும். உங்கள் கால் தூசி பட்டு என் படகும் ஒரு பெண்ணானால் நான் அவளை எப்படி காப்பாற்றுவேன், என் படகு காணாமல் போய்விடுமே! அந்த ஆபத்து என் படகுக்கு வரக்கூடாது என்பதற்காகவே நீங்கள் என் படகில் கால் வைக்கும்
முன்பே உங்கள் கால்களை தூசி இல்லாமல் முதலில் கழுவ ஆசைப் பட்டேன். கேட்டுக் கொண்டேன். என்னையும் என் படகையும் நீங்கள் தான் ரக்ஷிக்க வேண்டும்.”
ராமர், சீதை லக்ஷ்மணன் குகன் அனைவரும் கேவத்தின் எளிமை, பக்தி சமயோசிதம் ஆகியவற்றை ரசித்து மகிழ்கிறார்கள். கேவத் அவன் மனைவி இருவரும் கங்கை
ஜலத்தால் ஸ்ரீ ராமரின் பாதங்களை கழுவி வணங்கி அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொண்டார்கள். கேவத் தனது வஸ்திரத்தால் ஸ்ரீ ராமர் பாதங்களை துளியும் தூசி இல்லாமல் துடைத்தான். அவர்களை கங்கை நதியின் மறுகரையில் கொண்டு சேர்க்கிறான். அவர்கள் மறுகரை சேர்ந்ததும், ராமர் பாதங்களை தனது உள்ளங்கையில்
முதலில் வைத்து விட்டு இறங்க வேண்டும் என்று சொன்னான். இவ்வாறு ஸ்ரீ ராம பாத சேவை முழுதும் பெற்றான் கேவத். கையைப் பிடித்து எல்லோரையும் படகில் இருந்து கரை இறக்கினான் கேவத். சீதா தேவி மன நிறைவோடு தனது மோதிரம் ஒன்றை கழற்றி ராமனிடம் தந்து, “இதை அவருக்கு பரிசாக கொடுங்கள்” என்றார்.
“அம்மா ஸ்ரீ ராமனுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய பரிசு வாங்கினால் என் புண்ணியம் குறைந்து விடும்” என பரிசை ஏற்க மறுக்கிறான்.
“ஓ அப்படியா? நீ இதை பரிசாக ஏற்க வேண்டாம். எங்களை படகில் ஏற்றி கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள்” என சிரித்துக் கொண்டே மோதிரத்தை நீட்டினார் ஸ்ரீ
ராமன்.
“ஸ்ரீ ராமா, ஒருவேளை நான் பரிசாகவாவது ஏற்றுக் கொண்டு இருப்பேன். நிச்சயம் கூலி வாங்க மாட்டேன் ஐயா”
“என்னப்பா கேவத் நீ பேசுது விநோதமாகவே இருக்கிறதே. ஏன் என்னிடம் கூலி வாங்கமாட்டாய்?”-ராமர்
“தொழில் விசுவாசம் ஐயா”
“அப்பா கேவத் கொஞ்சம் புரியும்படி சொல்லேன்”
“ஒரு நாவிதன் மற்றொரு
நாவிதனுக்கு சேவை செய்யும்போது கூலி வாங்கமாட்டான். துணி வெளுப்பவனும் அப்படித்தான்.”
“புரியவில்லை. விளக்கமாக சொல். நீ படகோட்டிதானே” என்றார் ராமர்.
“உங்களுக்கா புரியாது? என்னை சோதிக்கிறீர்கள். நாம் இருவருமே ஓடக்காரர்கள். படகோட்டிகள். நான் ஒரு கரையிலிருந்து இந்த நீரை மட்டும் கடக்க
உதவும் ஓடக்காரன். நீங்களோ எல்லோரையும் ஜனன மரண துன்பங்களிலிருந்து இந்த ஸம்ஸார கடலிலிருந்து கரை சேர்க்கும் தாரக ராமன். நாம் இருவரும் படகோட்டிகள் தானே. நான் சின்ன படகோட்டி. நீங்கள் பெரிய பெரிய படகோட்டி. தொழில் ஒன்றுதானே பகவானே. என்னையும் ஒருநாள் இந்த சம்சார சாகரத்தை கடக்க உதவி
செய்து உங்கள் கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள்.” என்று ராமர் காலில் விழுந்து வணங்கினான் கேவத். ராமர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். என்ன ஒரு அருமையான பக்தன் இவன்!
புனரபி ஜனனம் புனரபி மரணம்.
புனரபி ஜனனி ஜடரே சயனம்.
இஹ சம்சாரி, பஹு துஸ்தாரே ,
க்ரிப்பாயா பாரே பாஹி முராரே
என ஆதி சங்கரர்
இதைத் தான் சொல்கிறார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 23
#FoodForThought Never compare one’s self with others. X takes 30 minutes to walk a distance of 2kms. Y takes 15 minutes to cross the same distance. Who is fitter? Of course the answer will be Y. But then you say X walked in a rugged unpaved road and Y walked in a paved jogger’s Image
pathway we will change our answer and say X is better! If we say X is 25years and Y is 50years old, X is 65 kgm and Y is 120 kgm our assessment will keep changing. This is the same with our lives. Each is dealt with a certain set of cards with which each one has to play. Without Image
the knowledge of who has what capacity and what problems we start comparing our lives with others. Each one’s opportunity will be different. The solution to each one’s problem will also be different. Let us focus on being the best we possibly can be within our means and Image
Read 4 tweets
Oct 23
#மகாபெரியவா மகா பெரியவா காஞ்சி மடத்தில் அருளொளி துலங்க அமர்ந்திருந்தார். அப்போது ஓர் அடியவர் பெரியவாளிடம் உரிமையோடு கேட்டார். "சுவாமி வெளிநாட்டைச் சேர்ந்தவரான #பால்பிரண்டனுக்கு அவர் தங்கியிருந்த உணவகத்தில் நள்ளிரவில் காற்று வெளியில் தோன்றி நீங்கள் காட்சி கொடுத்தீர்களாமே! அது Image
பெரியவாளின் நிஜமான தோற்றம் தான், என் மனப் பிரமையல்ல என்று அவர் தன் புத்தகத்தில் அந்த சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறார். அப்படியானால் இங்கிருந்து கொண்டே இன்னோர் இடத்தில் உங்களால் தோன்ற முடியுமா?”
இந்தக் கேள்விக்குப் பெரியவா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எல்லாரும் ஆவலோடு
காத்திருந்தனர். அந்த பதில் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன், அந்தக் கேள்வியின் பின்னணியைத் தெரிந்து கொள்வோம். கே.எஸ். வெங்கடரமணி ஓர் எழுத்தாளர். ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியவர். முருகன் அல்லது உழவன், கந்தன் ஒரு தேச பக்தன் போன்ற நாவல்களால் தமிழ் இலக்கியத்தை
Read 21 tweets
Oct 22
#Dhanteras2022 Dhanteras (Dhan represents riches, and Teras denotes the 13th day), also called Dhanvantri Trayodashi and Dhanatrayodashi. Dhanteras marks the beginning of the five-day festival of Deepavali. Today people buy utensils, jewelry, vehicles, and home appliances, since ImageImage
it is considered auspicious to buy metals on Dhanteras. Goddess Lakshmi is worshipped today for happiness, prosperity and wealth. The house is cleaned and decorated for Her arrival and Puja is done in the evening. Kubera is also worshipped today. On this day, traders worship Image
their books of account and pray for business success to Kubera the god of wealth. This day is also dedicated to lord of medicine Sri Dhanvantri. Today is the day when Mahalaksmi and Dhanvantri came out of the milky ocean. Another deity who is worshipped today is Lord Yamaraj. Image
Read 8 tweets
Oct 22
சிவபெருமானுடைய திருவுருவங்கள் போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என்ற 3 வகைப்படும். இந்த மூன்று வடிவங்களுள் யோக வடிவம் தாங்கியவர் #தக்ஷிணாமூர்த்தி
தக்ஷிணாமூர்த்தி, சதாசிவ மூர்த்தியின் 5 திருமுகங்களில் ஒன்றான் அகோர முகத்திலிருந்து தோன்றியவர். தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எல்லோரும் Image
ஜபம் செய்யலாம். எந்தவித நிர்பந்தங்களும் இல்லாத மந்திரங்கள் சிலவற்றில் தலையாய மந்திரம் இந்த தக்ஷிணாமூர்த்தி மந்திரம்.
#மூலமந்திரம்
ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

#தியானம்
ஸஹஸ்ர தள பங்கஜே சகல சீத ரஸ்மிப்ரபம்|
வராபய கராம்புஜம் விமல கந்த
புஷ்பாம்பரம்|
ப்ரஸன்ன வதனே க்ஷணம் ஸகல தேவதா ரூபிணம்
ஸ்மரேத் சிரஸி ஹம்ஸகம் ததவிதான பூர்வம் குரும்.

#துதி
குரு ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

#காயத்ரீ
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு: ப்ரசோதயாத்|
Read 4 tweets
Oct 22
#MahaPeriyava
Once when Periyava was camping at a place called Puchamalaikkupam, the shed where the Mutt's elephant was kept caught fire and the elephant broke its chain and ran away. Next day morning the employees of the Mutt noticed that the shed where the elephant was kept had Image
burned down fully and the elephant was missing. Later it was found that the elephant was near a tank some five miles away and the mahout went there to fetch the elephant, but the elephant refused to accompany him despite his best efforts. Then Periyava went there and the elephant
slowly got up from the tank and came near Periyava and saluted Him. There were a few burns on the body of the elephant. Periyava patted the elephant with His own hand and ordered proper treatment for burns to be completed. Like all human devotees, the Mutt elephant also had
Read 5 tweets
Oct 22
#நாமசங்கீர்த்தனம் #நாம_மகிமை காசியில் வாழ்ந்து வந்த பெரும் செல்வந்தரான குமரன் எனும் வியாபாரி ஒருவர், குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டார். மன வருத்தம் அடைந்த அவர், மனைவி, மக்கள், ஏராளமான செல்வம் எல்லாம் இருந்தும், ஆரோக்கியம் இல்லாவிட்டால் என்ன பலன் என்று புலம்பினார். ஒரு நாள் மனைவி, Image
மக்கள், சுற்றத்தார் என, அனைவரையும் அழைத்து, 'இனிமேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கும் தொல்லை. என்னை அழைத்து போய் கங்கையில் போட்டு விடுங்கள்' என்றார். முதலில் மறுத்த உறவினரும், மற்றவர்களும், வேறு வழியின்றி, செல்வந்தரின் வற்புறுத்தலுக்கு இணங்கினர். செல்வந்தர்
குமரனை துாக்கிப்போய், அவர் தலையிலும், கால்களிலும் காலி பானைகளை கட்டி, கங்கையில் மிதக்கவிடத் தயாராகினர்.
அந்த நேரத்தில், #கபீர்தாசரின் சீடரான #பத்மநாபர், அங்கு வந்து விவரம் அறிந்தார். “என்ன அக்கிரமம் இது! புல்- பூண்டு என, பல பிறவிகள் எடுத்த பின்பே, அரிதான இந்த மனிதப் பிறவி
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(