நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக ஐயப்பன் காட்சித் தருகிறார்.
4
2. அச்சன்கோவில் :
செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள்.
5
இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் ஐயப்பனையும் தரிசிக்கலாம். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல் காட்சி தருகின்றனர்.
6
இங்குள்ள ஐயப்பனை 'கல்யாண சாஸ்தா" என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.
7
3. குளத்துப்புழா :
செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இந்த ஊர். இங்கு ஐயப்பன் குழந்தை வடிவில் குடி கொண்டுள்ளதால் பால சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார்.
8
இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டுள்ளது.
9
4. எரிமேலி :
கேரளாவில் உள்ள இத்தலத்தில் ஐயப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். எருமேலியும் கேரளாவிலேயே உள்ளது.
10
5. பந்தளம் :
இந்த தலத்தில் தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் ஐயப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு சுவாமி ஐயப்பனுக்குரிய உரிய திருஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
11
பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கருதப்படும் பந்தள அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன.
12
6. சபரிமலை :
கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, கேட்பவர்களுக்கு கேட்ட வரத்தை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார்.
13
சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பனின் ஆறுபடை வீடுகளான இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை ஆகும்....
மகாபாரத போருக்கு பிறகு தர்மர் நிறைய நன்கொடைகள் வழங்குவதன் மூலம் தன்னை உலகிலேயே ஒரு சிறந்த நீதிமானாக நினைத்து கொண்டார். கிருஷ்ணர் இந்த விஷயத்தில் தர்மருக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க எண்ணி, அவரை அசுவமேத யாகம் செய்ய சொன்னார்.
தர்மரும் யாகத்தை தொடங்கினார். அசுவமேத குதிரை, மற்ற பாண்டவர்களுடன் வலம் வர தொடங்கியது. பாண்டவர்களின் பராக்கிரமம் உலகம் அறிந்த விஷயம் என்பதால் எல்லா மன்னர்களும் தர்மரின் அதிகாரத்தை ஏற்றுக்
கொண்டனர்.
குதிரை மணிப்பூர் ராஜ்ஜியத்தை அடைகிறது. அந்த ராஜ்ஜியத்து அரசன் மயூரத்வஜன் சிறந்த கிருஷ்ண பக்தன்,.அவனுக்கு இந்த குதிரை கிருஷ்ணர் ஆதரிக்கும் பாண்டவர்களை சேர்ந்தது என்று தெரிந்து கொள்கிறான். ஆயினும் விட்டு கொடுக்க மனம் இல்லை.
இங்குள்ள மூலவர் மகாபாரத அர்ஜுனரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பார்த்தசாரதி ஆவார்.
மூலவருக்குத் தங்கக் கவசம் சாட்டப்பட்டு உள்ளது.
2
பம்பை நதி இக்கோவிலின் வடக்கு வாசல் வழியாகச் செல்கிறது. இந்தத் தலத்தில்தான் ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் அணிகலன்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக
சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்படுகிறது.
நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும் போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம்.
ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான். எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும் போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும் பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அசோக வனத்தில் சீதை இருந்த போது, அவளை அரக்கியர்கள்
பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக் கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.