அன்பெழில் Profile picture
Dec 2, 2022 10 tweets 8 min read Read on X
#நம்பிக்கை #பக்தி
என பணத்தேவைகளை கவனித்துக் கொள்ள திருக்கோளூர்
#வைத்தமாநிதி_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க திருஎவ்வுள்ளூர்
#வைத்திய_வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் மனத்தில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று
சொல்ல திருக்கச்சி #பேரருளாளன்_வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

குறைவில்லாமல் அழகழகான, அற்புதமான வஸ்திரங்கள் எப்பொழுதும் தர த்வாரகாநாதன்
#ரண்சோட்ஜீ என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு வேண்டிய ருசியான ஆகாரத்தை என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன் #ஜகந்நாதன்
என்னோடு எனக்காக
இருக்கிறார்.

என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற திருமலை மேல் #திருப்பதி_ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம் #மாலோல_நரசிம்மன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் வாழ்க்கையை சரியான பாதையில் நடத்த
திருவல்லிக்கேணி
#பார்த்தசாரதி என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை இரவில் சுகமாக தூங்க வைக்க திருப்புளியங்குடி #பூமிபாலர்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை காலையில் அன்போடு அழகாக எழுப்ப திருக்குறுங்குடி
#சுந்தர_பரிபூரண_நம்பி
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னோடு ஆனந்தமாக
குள்ளக்குளிர குடைந்து நீராட
யமுனைத்துறைவன் #பாங்கே_பிகாரி
என்னோடு எனக்காக இருக்கிறார்.

நான் சொன்னபடி செய்யவும்,
என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
திருவெஃகா
#சொன்ன_வண்ணம்_செய்த_பெருமாள் என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை உரிமையோடு தொட்டுப்
பேசவும், என்னோடு விளையாடவும்
பண்டரீபுரம்
#விட்டலன்_பாண்டுரங்கன்
என்னோடு எனக்காக இருக்கிறான்.

எனக்கு பொழுது போகாத
சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச தென்திருப்பேரை
#மகர_நெடுங்குழைக்காதர்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு வேண்டிய உபதேசங்களைச்
சொல்லித்தரவும், என்னைக் குளுமையாக வைக்கவும் எப்போதும்
பத்ரிகாஸ்ரமம்
#நாராயணன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு எல்லா ஆழ்வார்களையும்
தரிசிக்க வைப்பதற்கும், பூமியில் வாழ எல்லா வளங்களையும் தருவதற்கும்,
ஸ்ரீரங்கம் #ரங்கராஜன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

நான் கொஞ்சி மகிழவும், எனக்கு அன்புத் தொல்லை தரவும், குருவாயூர்
#உன்னி_க்ருஷ்ணன் என்னோடு
என்னோடு எனக்காக இருக்கிறான்.

என்னோடு கடற்கரையில் காலார நடந்து கொண்டு, வயிறு குலுங்க சிரிக்க வைக்க, திருக்கடல்மல்லை
#ஸ்தல_சயனப்_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னிடம் தைரியமாகப் பொய்
சொல்ல, என்னை உரிமையோடு
மத்தால் அடித்துத் திருத்த, உடுப்பி
#ஸ்ரீக்ருஷ்ணன் என்னோடு எனக்காக
இருக்கிறான்.

எனக்காக தூது செல்ல, எனக்காக வாதாட, திருப்பாடகம்
#பாண்டவர்_தூத_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு மோக்ஷத்தைத் தர, என் மனதிற்கு சாந்தி தர, எனக்கு புகழைத் தர, திருவனந்தபுரம்
#ஸ்ரீ_அனந்தபத்மநாப_ஸ்வாமி
என்னோடு எனக்காக இருக்கிறார்.

இத்தனை பேர் என்னோடு இருக்க,
நான் எதைப்பற்றி கவலைப்பட வேண்டும்? இன்னும் இது போன்று எனக்காக நிறைய பேர் இருக்க நான் #ஆனந்தத்தில் நீந்திக் களித்துக் கொண்டு இருக்கிறேன். எப்போதும் ஆனந்தமாகவே இருக்கிறேன். எப்போதும் ஆனந்தமாகவே இருப்பேன்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 18
The #Padmavyuha A War Technique in Lotus form, known as Abhimanyu death trap refers to a scene depicted on the walls of the Hoysaleswara Temple in Halebidu, Karnataka, India. In this scene, Abhimanyu, a character from Mahabharata, is depicted being trapped and killed in theImage
Padmavyuha formation during the Kurukshetra War. Abhimanyu, the son of Arjuna and Subhadra, was a skilled warrior known for his valor and bravery. However, during the Kurukshetra War, he was unfairly surrounded and attacked by multiple Kuru warriors, including Drona, Karna, and
Duryodhana, while trapped in the intricate Padmavyuha formation.
The depiction of this scene on the temple wall is a testament to the artistic and storytelling prowess of the artisans of the Hoysala Empire, who used the temple walls as a canvas to portray scenes from Hindu Epics
Read 5 tweets
Jun 18
#SriDevanathaPerumalTemple Thiruvahindrapuram
The temple is among the 108 Divyadesams with Mangalasasanam by Thirumangai Azhwar. The presiding deity is Sri Devanathan Perumal in standing posture and thayar in a seperate sannadhi is Hemambujavalli thayar. Vedanta Desikar scriptedImage
Image
the Vadagalai Sampradayam here. He lived in this place for nearly 40 years and wrote a large number of books. He had dug a well. He also made his own idol when a challenge was thrown to him. The place where he lived is called Desikan Thirumaligai. There is also a small hillImage
called Aushadagiri besides the temple where Desikar is believed to have prayed to Garuda and Hayagreeva. There is a sannadhi to Lord Hayagreeva, the Lord of Learning is in this hillock.
As per sthala puranam, once the Lord was feeling thirsty. He sent Garuda to fetch water.Image
Read 20 tweets
Jun 18
#நற்சிந்தனை #மகாபாரதம்
போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கிலேசம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் பகவான் கிருஷ்ணர்! தர்மன் வரவேற்க, மற்றவர் தலை வணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர். யாகம் தொடங்கலாமே, சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய Image
பாகத்தை வைத்தாயிற்று அல்லவா எனக் கேட்டார்.
ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர், பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம் என்றான் அர்ஜுனன்.
யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்? கேட்டார் கிருஷ்ணர்.
குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்Image
தான் என்றார் தர்மன்.
வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர்.
பீமன் பல்லைக் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது.
என்னாயிற்று கண்ணா உனக்கு! முதல் பாகம்Image
Read 26 tweets
Jun 18
#நம்_ஆன்மிக_வரலாறு #காளையார்_கோவில்_தேர்
ஒரு கோயிலுக்குள் 3 மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்கு உரிய கோயில் காளையார் கோயில். இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மருது சகோதரர்களுக்கு எண்ணம் ஏற்பட்டது.Image
தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் சிற்பி. புதிதாக வடிவமைக்கப்பட்டுImage
வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்ட போது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது. இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து தேர் செய்யக் கூடிய கூலியை Image
Read 17 tweets
Jun 17
#கஜேந்திர_மோட்சம்
நன்றி: இணையதளத்தில் வெளியான முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
அவர்களின் கஜேந்திர மோட்சம் ஆன்மீக கட்டுரை.

இறை நம்பிக்கை என்பது நம்மில் மிகப் பலருக்கு ஆழ்மனது வரையில் ஊடுருவி இருக்கும் ஒரு விஷயம். ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பது மிக உண்மையான வாக்கியம். Image
இந்த இறை நம்பிக்கை என்பது ஒரு நாளில் வருவதல்ல. ஜென்ம ஜென்மாந்தரங்களாக, நம் ஆன்மாவில் தொடர்ந்து வரும் வாசனைகளின் விளைவே ‘பக்தி’. அதாவது, ஒரு பிறவியில் இறையருளால் இறைவனைப் பற்றிய சிந்தனை கிடைக்கப் பெற்று, அதை விடாது தொடருவோமானால் அது அடுத்தடுத்த பிறவிகளில், காயாகி, கனிந்து, ஆன்ம‌
பரிபக்குவ நிலையைக் கொடுக்கும். அதன் விளைவாக முக்தியும் கிடைக்கும். ‘அவனருளால் அவன் தாள் வணங்கி’ என்பதைப் போல், இறையருள், நம் மீது மழையெனப் பொழிவதாலேயே ஒருவருக்கு இறைச் சிந்தனை வாய்க்கிறது. இதற்கு ஓர் அருமையான உதாரணமாக, கஜேந்திர மோக்ஷம். கஜேந்திரன், முற்பிறப்பில், பாண்டிய நாட்டு
Read 23 tweets
Jun 16
ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையான ஆலயங்கள்:
ஸ்ரீசக்ர பிரதிஷ்டையான ஆலயங்கள், தமிழகத்தில் ஏராளம். ஸ்ரீ காஞ்சி ஸ்ரீகாமாட்சி, திருவொற்றியூர் மற்றும் ஸ்ரீமூகாம்பிகை ஆகிய புண்ணியத் தலங்கள் புகழ்பெற்றவை! இங்கெல்லாம், ஸ்ரீசக்ரத்துக்கு சக்தியூட்டி பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீஆதிசங்கரர்.Image
Image
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் காதுகளை அலங்கரிக்கும் ஸ்ரீசக்ர ஆபரணத்தின் தெய்விக கிரணங்கள், பக்தர்களின் குறை தீர்க்கும் ஆற்றல் மிக்கது!
பாஸ்கரராயர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து, தஞ்சையில் வாழ்ந்த மகான்- ஸ்ரீ பாசுரானந்தநாதர் எனும் பாஸ்கரImage
ராயர். இவர் வாழ்ந்த தலம், தஞ்சை மாவட்டத்தில் பாஸ்கரராஜபுரம் எனும் பெயரில் பிரபலமாக விளங்குகிறது. இங்கே பாஸ்கர ராயரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாமேரு உள்ளது. ஸ்ரீவித்யா உபாஸனை மற்றும் தியானத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்.

கன்னிவாடி ஸ்ரீராஜகாளியம்மன் கோவில்Image
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(