#ராமாயணம் #யுத்தகாண்டம் #மஹிராவணன
#பஞ்சமுக_ஆஞ்சநேயர்
#ஜெய்ஸ்ரீராம்
#ஹனுமத்ஜெயந்தி_ஸ்பெஷல்

ஶ்ரீமத் ராமாயணத்தில் ஶ்ரீராம ராவண யுத்தம் நடக்கிறது. யுத்தத்தில் ஶ்ரீராமரும் லஷ்மணனும் வானர வீரர்களான சுக்ரீவன், நளன், அங்கதன், நீலன், ஹனுமன் மற்றும் உள்ள வானர சைன்யமும் அரக்கர் சேனைகளை
துவம்சம் செய்ய ராவணனது பல சேனாதிபதிகள், மகன்களான இந்திரஜித் உட்பட பலர் மரணம் அடைந்தனர். ராவணன் மிகுந்த கவலையடைந்து இவர்களை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்த போது, பாதாள லோகத்தில் இருந்த அஹிமஹி ராவணர்களை நினைக்க உடனே மஹிராவணன் ராவணன் முன் தோன்றி, நண்பா ராவணா என்னை நினைத்து அழைத்தது
ஏனோ? உன் முகமும் கவலையில் உள்ளதே என வினவினான். ராவணன் சூர்ப்பனகை மானபங்கம் தொடங்கி தான் சீதாதேவியை சிறைப் பிடித்தது, ஜடாயு வதம், மாதா சீதாவின் பிடிவாதம், மற்றும் வானர ஹனுமன் வந்தது, இலங்கையை எரித்தது, இப்போது ஶ்ரீராமன் வானரப் படையுடன் போர் செய்ய வந்து அரக்கர் கூட்டத்தையும்
இந்திரஜித் உட்பட பலரை அழித்தது என எல்லாவற்றையும் கூறி, எனக்காக நீ இப்போது அவர்களை எதிர்த்து சண்டையிட வேண்டும் என்றான்.
ஹா ஹா என பலமாக சிரித்த மஹிராவணன் நாளை நடக்கபோகும் போரில் ஶ்ரீராம லஷ்மணனுடன் அந்த வானர சேனைகளையும் துவம்சம் செய்து விடுகிறேன் என கூறி படைகளுடன் வர புறப்பட்டான்.
மறுநாள் சொன்னபடி மஹிராவணன் தன் படைகளுடன் வந்து ஶ்ரீராம லஷ்மணனர்களுடன் கடும் போர் புரிந்தான். ஒரு புறம் வானர சேனையை மஹிராவணனின் சேனை விரட்ட வானர சேனையின் முக்கிய வீரர்கள் அவர்களை காப்பாற்ற துணையாக நிற்க, மறுபுறம் ஶ்ரீராம லஷ்மணர்களுடன் மஹிராவணன் தந்திர போர் புரிய, ஒரு கட்டத்தில்
ஶ்ரீராம லஷ்மணர்கள் சோர்வடைந்தனர். மாலை நேரம் வந்து விட்டதால் மறுநாள் போர் என இரண்டு பக்க படையும் பிரிந்தது. ராம லஷ்மணர் நிலையை கண்ணுற்ற ஹனுமன் வேகமாக சென்று விபீஷணனிடம், விபீஷணரே! இப்போது ஶ்ரீராமருடன் போரிடுபவரை நான் இலங்கையில் கண்டதில்லையே, அந்த வீரன் யார் இவ்வளவு வீரம் எப்படி
வந்தது? இவர்கள் அம்புகளை தாங்கும் இவனுக்கு மரணமில்லையா என வினவினார். ஹனுமனே! வந்தருப்பது பாதாள லோக அசுரன் மஹிராவணன். இவனும் ராவணனை போல் பிரம்மாவிடம் தவம் இருந்து அழியா வரம் வாங்கியுள்ளான். இவன் தன் உயிரை பத்திரமாக ஏழுகடல் தாண்டி ஒரு தடாகத்தில் அழகிய தாமரை மலரில் ஐந்து வண்டுகள்
உருவில் வைத்துள்ளான். இதை ஒருமுறை அவன் ராவணனிடம் கூறிய போது கேட்டுள்ளேன். இவனை அழிக்க வேண்டும் எனில் அந்த தடாகத்தில் உள்ள ஐந்து வண்டுகளை அழித்தால் மட்டுமே முடியும் எனக் கூறினான். அவ்வளவு தான்! ஹனுமன் இரவோடு இரவாக ஏழுகடலை தாண்டி அந்த தாடகம் உள்ள இடத்துக்கே சென்று விட்டார். அங்கோ
அழகிய தடாகம்! தடாகம் முழுவதும் அழகிய பலவிதமான தாமரை மலர்கள், ஆனால் யாருமே இல்லாத இடமாக தோன்ற, ஹனுமன் தடாகத்தில் உள்ள தாமரை மலர்களில் வித்யாசமான ஒரு தாமரை மலரை கண்டதும் அதனை பறிக்க தடாகத்தில் இறங்கினார். உடனே, ஓர் அசுரபடையே ஹனுமனை சூழ்ந்து போரிட, ஹனுமன் ஶ்ரீ்ராமரை துதித்தபடியே
அத்தனை அசுரர்களையும் தன் வாலில் அன்று இராவணன் வைத்த தீயால் இலங்கையை எரிக்க எப்படி நீட்டினாரோ, அப்படியே நீட்டி கொண்டு அவர்களை அந்த நீட்டிய வாலால் சுருட்டி நெருக்க, அத்தனை அசுரர்களும் வலிதாளாமல் கதறி மாண்டனர். அவர்களை காய்ந்த இலைகள் மரத்தில் இருந்து காற்றடித்தால் உதிருவது போல்
வாலில் இருந்து உதறி தள்ளி வாலை முன்பு போல சுருக்கி தடாகத்தின் மத்தியிலிருந்த அந்தத் தாமரைப் பூவை நெருங்கி அதில் விபீஷணன் கூறியபடியே தாமரைபூவின் நடுவே ஒரு சிறிய பெட்டி இருப்பதைக் கண்டார். மிகவும் ஜாக்ரதையாக அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு மீண்டும் வாயுவேகம் மனோவேகமாக கண் இமைக்கும்
நேரத்தில் ஸ்ரீராம லஷ்மணர்கள் இருக்கும் இடம் திரும்பினார்.
ஹனுமன் திரும்பும் முன்பே மறுநாள் போர் ஆரம்பித்து ஶ்ரீராம லக்ஷ்மணர் இருவரும் மஹிராவணனோடு கடுமையாக யுத்தம் செய்து சோர்வடைந்த நிலையில் இருந்தனர். பிரம்மனிடம் வரம் பெற்ற மஹிராவணன் தன் மாயா சக்தியால் தன் பலத்தை புதுப்பித்த
வண்ணம் இருந்தான். இந்த நிகழ்வை கண்ட ஹனுமனின் விழிகள் கண்ணீர் வழிய மஹிராவணை நோக்கி கனலை கக்க, அடேய் துஷ்ட மஹிராவணா இதோ உனக்கான எமன் இங்கே இருக்கிறேன். என்னிடம் போர் செய்ய வா என பெருங்குரலில் கர்ஜித்தபடி பார்ப்பவர் மனத்தில் பயம் உண்டாக்குவது போன்ற ஒரு விசித்திரமான வடிவத்தை
எடுத்தார் ஹனுமன். ஶ்ரீராமராவண யுத்த களத்தில், தூதனாக இது வரை செயல்பட்டவர் இப்போது ஶ்ரீராமனுக்காக எப்போதும் எடுத்திராத புதிய உருவமாக ஐந்து வேறு வேறு முகங்கள் பத்து கரங்கள் கொண்ட வானர வீரனாக விஸ்வரூபம் எடுத்தார்.
ஒரு முகம் வராகமாக
ஒரு முகம் சிம்ஹமாக
ஒருமுகம் ( நடுமுகம்) தன் வானர
முகமாக
ஒரு முகம் ஹயக்ரீவ [குதிரை] முகமாக
ஒரு முகம் கருட முகமாக என பஞ்சமுகனாக அன்று போர்களத்தில் காட்சி அளித்தார் அஞ்சனை மைந்தனான வாயுபுத்ரன். வீர ஹனுமனின் இந்த பஞ்சமுக தோற்றம் ஶ்ரீராம லக்ஷ்மணர்களையே மிகவும் அதிசயிக்க வைத்தது. ஐந்து முகம் பத்து கரங்கள் என உரு மாறிய ஹனுமன்
மஹிராவணனின் எதிரே சென்று உக்கிரமாக நின்று கொண்டு
தடாகத்தில் இருந்து கொண்டு வந்த பெட்டியை சட்டென்று திறந்தார்.
உடனே அந்த பெட்டியில் இருந்து ஐந்து வண்டுகளும் திசைக்கொன்றாக பறந்து சென்றன. உயிரை காப்பாற்ற பூமியை குடைந்து உள்ளே நுழைய பிரயத்தனம் செய்த ஒரு வண்டை வராக முகம் துரத்தி இரு
கைகளால் பிடிக்க, திறந்த வேகத்தில் பூமியின் விழுந்து வேகமாகப் பாய்ந்து ஓடிய ஒரு வண்டை சிம்ஹமுகம் துரத்தி இரு கைகளால் பிடிக்க, திறந்த வேகத்தில் பறந்து பறந்து மரத்துக்கும் கோட்டைக்கும் சென்ற வண்டை தன் சுயமான வானர முகம் கொண்டு விரட்டி இரு கரங்களால் பிடிக்க|, திறந்த வேகத்தில் கீழே
விழுந்து மற்றொரு வண்டு தன் 6 கால்களை கொண்டு அதிவேகமாக உதைத்தவாறே பூமியில் ஓட, அந்த வண்டை குதிரை முகமாக கொண்டு துரத்தி இரு கைகளால் பிடிக்க, மற்றொரு வண்டோ கீழேயும் விழாமல் மரம் கோட்டை என ஓடாமல் மேலே ஆகாயத்தை நோக்கி பறந்து செல்ல அந்த வண்டை கருட முகமாக துரத்தி இரு கரங்களால் பிடிக்க,
இப்படியாக 5 முகங்களால் 5 வண்டுகளை தன் 10 கரத்தின் உதவி கொண்டு ஒரே நேரத்தில் பிடித்து மிக உக்ரமாக அவைகளை அந்தந்த உருவில் இருந்த வாயால் கடித்து குதறி எறிந்தார். அந்த யுத்தகளமே அதிரும்படி துடிதடித்து கதறி கொண்டே கீழே விழுந்து இறந்தான் மஹிராவணன். அவன் அழிவை கண்ட வானர சைன்யம் மிகவும்
ஆரவார சப்தமிட்டு ஆனந்த கூத்தாட
அந்த சத்தத்தின் வேகம் ஹனுமனை கோபத்தில் இருந்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது. ஹனுமன் தன் எதிரே இருந்த ஶ்ரீராம லஷ்மணரை விழுந்து வணங்கினார். ஹனுமனை மிகவும் நெகிழ்ச்சியோடும் ஆனந்தத்துடனும் ஏறிட்ட ஶ்ரீராமன், ஹே வாயுபுத்ரா!இன்று எந்த பஞ்ச முகத்தால்
மஹிராவணின் உயிரான விஷ வண்டுகள் எல்லாவற்றையும் அழித்து எனக்கும் லஷ்மணனுக்கும் போரில் உதவி செய்தாயோ அந்த பஞ்சமுகத்தை இந்த நிகழ்வை மனதில் கொண்டு வணங்குவோர்க்கு இதே பஞ்சமுகத்தோடயே இருந்து நீ அவர்கள் உன்னிடம் வேண்டும் நல்ல காரியங்களை ஜெயமாக்கி உதவ வேண்டும் என ஆசி வழங்கினார்.
ஹனுமனை
பஞ்சமுக ஆஞ்சனேயராக த்ரேதா யுகம் தொடங்கி இப்போதைய கலியுகம் வரை வழிபட தொடங்கினர் ஶ்ரீராம பக்தர்கள். அன்று முதல் ஶ்ரீராமனின் கட்டளையைச் சிரம்மேற் கொண்டு பஞ்சமுகத்தால் பக்தர்களின் ஐம்புலன்களால் அவர்களுக்கு நேருகின்ற பலவித கேடுகளையும் எல்லாம் களைகின்றான். அது மட்டுமல்ல உடல் (பூமி)
அக்னி (சூடு) வாயு ( காற்று) நீர்( உடல் தண்ணீர்) ஆகாயம் (புறவெளி) என்ற ஐம்பூதங்களால் ஆன இந்த மனித சரீரத்தில் ஏற்படும் பலவித உடல் (உபாதை) துன்பங்களயும் போக்கி பக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய ஆனந்தத்தை அளிக்கிறான். இவன் அருளை பெற நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். என்றும்
எப்போதும் உச்சரிப்போம்
ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
ஶ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
ஶ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம்
ஜெய் ஶ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 13
#மகாபெரியவா கட்டுரை எஸ்.ரமணி அண்ணா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு, 4 பெண்கள், 2 ஆண் குழந்தைகள். இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால் மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாக Image
செல்வார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. பரம்பரையாக வந்த வீட்டில் வசித்ததால் வீட்டு வாடகை பிரச்னை இல்லை. கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பில் இருந்து வந்த வருமானம் ஒரு நாளில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி செய்தது. மகா பெரியவாளை
நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார் ராமஸ்வாமி. முகத்தில் சோகம் அப்பியிருந்தது. "பெரிய பெண்ணுக்கு 22வயதாகிறது. அடுத்தவளுக்கு 20. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும். அது ஒத்து வரலே, மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது. பணம் தேவைப்
Read 18 tweets
Dec 13
திரு @sujathadesikan அவர்கள் குறிப்பிட்டு இருப்பது போல் இன்னொரு எளிமையானவர், கிருஷ்ண சேவையில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகப்பெரிய தொண்டினை ஶ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு செய்து வருகிறார். அவர் பெயர் திரு வெண்மணி குமார். இவருக்குக் கண்ணன் மேல்
அளவில்லா அன்பு. இவரின் அன்பு ஆழ்வார்களின் அன்புக்கு இணையானது. இவருடைய நோக்கமே சமூக சமயப் பணி தான். இவரின் இருப்பிடம் கோடம்பாக்கம் ஹை ரோடில் சட்டிப் பானைகள் விற்பனை செய்யும் இடத்திற்கு வெகு அருகில் கக்கன் காலனியில் உள்ளது. அங்குள்ள குழந்தைகளின் முன்னேற்றம் தான் இவரின் முதல்
இலக்காக இருந்தது. தன் முயற்சியாலும், தமிழின் மேலும் கண்ணனின் மேலும் உள்ள அதீத ஈடுப்பாட்டினால் முதலில் திருப்பாவை பயின்று பின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் கற்றுக் கொண்டார். பகவத் கீதை முதல் பாகவதம் வரை குரு முகமாக பயின்று பல மணி நேரம் உபன்யாசம் செய்யும் அளவு ஞானம் பெற்றார். பின்
Read 17 tweets
Dec 13
There was a non believer who just witnessed a nama sangeertanam with no respect. A gnani saw this, called him and gave Rama mantra upadesha and said chant Rama nama at least once and never sell the punya palan of this nama at any time. He did chant Ram nama once and eventually
when he died he went to yamaloka and all the good he had done was this one chanting of Rama nama. Yama asked him how much this nama is worth to him. He immediately remembered the sage telling him never to sell it. He said he cannot put a value on it and Yama was not sure how to
value this, so he said let us go to Indra to find the value. This atma said I will come only in a palanquin which is also carried by you. Yama agreed, thinking this Rama nama must be so powerful for him to demand this from him. Indra could not value, so went to Brahma, Indra
Read 5 tweets
Dec 13
#பக்தி ரமாபாய் என்ற ஒரு பக்தை பண்டரிபுரம் கோவிலின் அருகில் வசித்து வந்தார். அவர் தினமும் மோரில் கோதுமை மாவைக் கரைத்து ஒரு உணவு தயாரித்து விட்டலன் கோவிலில் சென்று அவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருவார். வெகு காலமாக தினமும் இவ்வாறு விட்டலனுக்கு உணவு படைத்துவந்தார். ஒருநாள் அவருக்கு Image
உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டு இருந்ததால் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. இன்று கோவிலுக்குப் போக முடியாது என்ற எண்ணம் அவர் மனத்தைப் பிசைந்தது. அவரால் அதைத் தாங்கவே முடியவில்லை, உடல் உபாதையை மீறி பெற்ற அன்னையைப் போல் வருந்திப் புலம்பத் துவங்கினார். விட்டலா! இன்று என்னால் உனக்கு
உணவு கொண்டு வர முடியவில்லையே, இந்நேரத்திற்கு உனக்குப் பசிக்குமே! நான் இப்படிக் கிடக்கிறேனே! நீ எப்படிப் பசி தாங்குவாய்? என்றெல்லாம் பலவாறு புலம்பி அழுதார். மீண்டும் மீண்டும் எழ முயற்சி செய்த போதும் உடல் ஒத்துழைக்கவில்லை. கண்ணீருடன் படுக்கையில் கிடந்தவரை அப்படியே விட்டுவிட விட்டலன
Read 9 tweets
Dec 13
#ராமநாம_மகிமை
வீதியில் ராம நாம சங்கீர்த்தனம் செய்தபடி பஜனை கோஷ்டி ஒன்று சென்றது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, அவனை அழைத்து ராம நாமத்தை உபதேசித்த ஒரு ஞானி, இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார். அவனும் அப்படியே செய்தான். காலகிரமத்தில் Image
இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது.
அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள் என்றான். திகைத்த யமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார். 'நான் வருவது
Read 9 tweets
Dec 12
#திருமலைக்கேணி_கோயில்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள சுப்ரமணியசுவாமி கோயில் ஆகும். திண்டுக்கலிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் கரந்தமலை தொடரில் மலை உச்சியில் அழகிய வனந்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு மயில்களும், வானரங்களும் ImageImage
அதிகமாக காணப்படுகின்றன. இத்தலத்தில் வற்றாத நீர் சுனை உள்ளது. இதன் பெயர் காரணமாகவே இத்தலம் 'திருமலைக்கேணி' என்று அழைக்கப்படுகிது. இக்க்கோயிலில் உள்ள நீர் ஓர் இடத்தில் வெந்நீராகவும், வேறு இடத்தில் சாதாரணமாகவும் மற்றொரு இடத்தில் மிக குளிர்ந்த நிலையிலும் இருப்பது வியப்பு. இங்கு Image
மௌனகுரு சுவாமிகள் என்ற சித்தர் பல காலங்களுக்கு முன்னர் இங்கு ஜீவசமாதி அடைந்துள்ளார். அவருக்கு தனிக்கோயில் உள்ளது. இங்கு
மூலவா்: சுப்பிரமணியா்
உற்சவா்: தண்டாயுதா்
தீா்த்தம்: வள்ளி, தெய்வானை தீா்த்தம்
புராண பெயா்: மலைக்கிணறு
ஊா்: திருமலைக்கேணி
மாவட்டம்:திண்டுக்கல்
இப்பகுதியை ஆண்ட
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(