#பூதநாராயணர் திருக்கோவில் #சுருளித்தீர்த்தம்.
தேனியிலிருந்து 48 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சுருளி தீர்த்தம் என்னும் அழகிய ஊர். அங்கு மகாவிஷ்ணு, பூதநாராயண பெருமாள் எனும் திருநாமம் ஏற்று, கோயில் கொண்டிருக்கிறார். திரேதாயுகத்தில் ராவணனின் தொல்லை பொறுக்க முடியாத தேவர்கள், பின்னர்
சுருளிமலைப் பகுதியில் இருந்த #பண்டாரத்துறை என்னும் இடத்தில் மறைந்திருந்தனர். இதை நாரதரின் மூலமாகத் தெரிந்து கொண்ட ராவணன், நாரதர் சொன்னது உண்மைதானா என்பதை அறிந்து வரும்படி, தன்னிடம் அடிமைப்பட்டு இருந்த சனீஸ்வரரை அனுப்பி வைத்தான். அவரும் வேறு வழி இல்லாமல் சுருளிமலைப் பக்கம்
வருகிறார். உடனே பெருமாள் தன் சக்ராயுதத்தை ஏவி, சனீஸ்வரரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறார். அப்படி சனீஸ்வரர் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஊர்தான் #குச்சனூர். பெருமாளின் சக்ராயுதம் தடுத்துத் தாக்கியதால், குச்சனூர் சனீஸ்வரரின் இடது கரம் சேதம் அடைந்தது. அந்தக்
கோலத்திலேயே சனீஸ்வரர் இங்கே காட்சி தருகிறார். சனீஸ்வரர் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி அறிந்த ராவணன், தேவர்களை அழிக்க அசுரப் படைகளை சுருளிமலைக்கு அனுப்பி வைத்தான். தான் அருள் புரியும் இடத்தில் அசுரர்கள் நுழைவதா என்று சினம் கொண்ட பெருமாள், பூத வடிவம் கொண்டு விசுவரூபம் எடுத்து,
அசுரர்களை வதம் செய்தார். மீண்டும் அசுரப் படைகள் தேவர்களை துன்புறுத்தா வண்ணம் காக்க அந்த இடத்திலேயே கோவில் கொணடார்.அன்று முதல் இந்தத் தலத்து இறைவன் #பூதநாராயண_பெருமாள் என்று திருப்பெயர் கொண்டார். பூத வடிவம் கொண்டு ஆக்ரோஷமாய் நின்ற பெருமாளை பிரம்ம தேவனும், சிவபெருமானும் சாந்தப்
படுத்தினர். அதனால் இக்கோவிலில் நம் பெருமான் சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார். மனிதர்கள் அடைக்க வேண்டிய மூன்று கடன்களில் ஒன்று #பித்ரு கடன். அதை நிறைவேற்றுவதற்கு காசியை போலவே உகந்த தலமாக இத்தலம் கருதப்படுகிறது. இங்கு சுருளியாறு, அருவியாறு, வெண்ணியாறு என மூன்று ஆறுகள் சங்கமம்
ஆகின்றன. இந்தச் சங்கம தீர்த்தத்தில் நீராடி, பூதநாராயண பெருமாளை வழிபட்டு, அவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தால், பித்ருக்களின் சாபம் நீங்கி நலம் பெறலாம் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. வடக்கே காசி, தெற்கே ராமேஸ்வரம் ஆகிய தலங்களைப் போலவே, மூன்று நதிகளும் ஒன்று
சேரும் இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைப்பது மிகவும் புண்ணியம் என்று சொல்லப் படுகிறது. மகாத்மா காந்தியின் அஸ்தியில் ஒரு சிறு பகுதி இங்கே கரைக்கப் பட்டதாகச் சொல்கிறார்கள். ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் முன்னோர்களுக்கு
இங்கு வந்து தர்ப்பணம் செய்துவிட்டு, இயன்ற அளவு தானம் செய்தால், இறந்த முன்னோர்களின் பரிபூரண ஆசிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு வரும் பக்தர்கள், பெருமாளுக்கு மோட்ச அர்ச்சனை செய்து வழிபட்டால், மறைந்த முன்னோர்கள் மோட்சம் அடைவார்கள் என்ற ஐதீகம் உள்ளது. விரதம் இருந்து சபரி
மலைக்கும் பழநிக்கும் செல்லும் பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து மாலை போட்டுக் கொள்கிறார்கள். அப்படிச் செய்வதால் யாத்திரை சுபமாக நிறைவேறுகிறது. இந்தக் கோயிலில் கிழக்கு நோக்கி அருளும் பூதநாராயண பெருமாளுடன், அத்தி மரத்தால் ஆன உக்கிர நரசிம்மர், தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரக
சந்நிதிகளும் உள்ளன. தினமும் காலை, மாலை என இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பித்ரு கடன் தீர்க்கும் பூதநாராயண பெருமாளை வணங்கி, நாமும் சகல செளபாக்கியங்களும் பெறுவோம். தேனியில் இருந்து கம்பம் சென்று,
பின்னர் அங்கிருந்து டவுன் அல்லது ஷேர் ஆட்டோவிலோ சுருளி தீர்த்தத்தை அடையலாம். கோயில் காலை 8 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும்.
#ஓம்_நமோ_நாராயணாநமஹ
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 17
#சூர்தாஸ் #பக்தி
நந்தவனத்தில் ஒருநாள் ராதையும் கிருஷ்ணரும் பேசிக்கொண்டு இருந்தனர். ராதை பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் தலை மட்டும் ஏதோ பாட்டை கேட்டு ரசித்த வண்ணம் அசைந்தவாரே இருந்தது. நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா இல்லையா? அப்படி என்னத்தைத் தான் Image
ரசிக்கிறீர்களோ என்று கோபித்தாள் ராதை. என்ன அருமையான பாடல்,
சூர்தாஸரின் பாடல்! அவர் எப்போதும் என்னை விடுபட முடியாதவாறு பாடலின் மூலம் கட்டிப்போடுகிறார் என்றார். எப்போது பார்த்தாலும் சூர்தாஸ் சூர்தாஸ் என சொல்லியபடி இருக்கின்றீர்களே! அவரை போய் பார்த்துவிட்டு வருகிரேன் என கிளம்பினாள்
ராதை. நீ அவரை பார்க்க நீ போக வேண்டாம் என தடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சை கேளாமல் ராதை சூர்தாஸரை பார்க்க ஓடினார். சூர்தாஸ் பாடிக் கொண்டு இருந்த கோவிலுக்கு வந்தாள் ராதை. பிறவிக் குருடரான சூர்தாஸரின் அருகில் அவள் போய் நின்றாள். அவளது கொலுசில் இருந்து தெய்வீக சப்தம்
Read 7 tweets
Dec 17
#MahaPeriyava
Sri Maha Periyava was travelling to SriSailam through a path that went through a jungle. He asked the people in his entourage to do parayana (recitation) of the Vishnu Sahasranamam and walk their way.
However slowly recited, the Vishnu Sahasranamam would be over in Image
half an hour. But on that day, for whatever reason, the shishyas were not able to recite the stotram in unison and had to repeat the stanzas whenever a mistake was committed. The next camping site was also not in sight. Periyava said, "Neither does the Sahasranamam seem to end,
nor does the village of our destination seem to arrive."
After a long time they reached the village of their camping. Periyava said humorously, "You people did not recite Vishnu Sahasranamam. You have done a Laksharchana for Vishnu!"
Their night stay was at the Perumal temple in
Read 7 tweets
Dec 17
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவந்தான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்து இருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. Image
அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர். ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம் என
பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள். ஆச்சார்யர்கள் சொன்னதை விட, ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார். “கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று! பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார சேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன்
Read 6 tweets
Dec 16
#BadKarma_due_to_slaughtering_cows
Beef eating among Hindus have become a fad. It is a wile #woke_culture to defy the age old customs and practices without understanding the seriousness or repercussions of such actions. Cow is not a mere animal for Hindus. Cow as an adobe of 33 Image
crore Hindu Deities and hence Cow is considered sacred in Hindu Dharma. Cow is considered auspicious and also a symbol of compassion and piousness. Hindus believe that one can attain salvation (Moksha) by worshipping the Cow and serving her. Both Lord Krishna and Balrama
spearheaded the Cow worship and preservation culture. Of all beings, the Cow is treated as the most sacred and sanctified. This sense of the unique sacredness of the Cow is expressed in the works of ancient in the Vedas, Smritis, Srutis and Puranas and by Indian Rishis. So highly
Read 15 tweets
Dec 16
#மார்கழி_ஸ்பெஷல் 16.12.2022 மார்கழி மாத பிறப்பு. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் சிறப்பித்துக் கூறியிருக்கிறார். இந்த மாதம் தேவர்களுக்கான அதிகாலை நேரமானதால் மாதம் முழுவதும் இறை வழி பாட்டிற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப் Image
படுகிறது. அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வாசலில் வண்ணக் கோலம் இட்டு இறைவனை வணங்குவது தொன்றுதொட்டு வரும் வழக்கம்.
ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில்
மேற்கொள்ளப்படுகிறது. அதிகாலை வழிபாட்டைப் பற்றி மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
Read 18 tweets
Dec 16
#மார்கழி_ஸ்பெஷல்
#சூடிக்கொடுத்த_சுடர்க்கொடி

ஆண்டாள் குரு பரம்பரைப்படி ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் வந்துதித்த பெண் குழந்தை கோதா Image
பெரியாழ்வார் இக்குழந்தையை எடுத்து சீரும் சிறப்புமாக வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை, வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.
பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என Image
எண்ணி தினமும் கொடுத்து அனுப்புவாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு இது தகாத காரியம் என்று கோபித்துக் கொண்டார். உடனே புது மாலை தொடுத்து கோதை சூடாத மாலையை எடுத்துக் கொண்டு சென்ற போது பெருமாள் அந்தப் பெண் சூடிய மாலை தான் எனக்கு உகப்பானது அதை எடுத்து வாரும் என்றார். Image
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(