#மகாபெரியவா "சமஸ்கிருதத்தில் புலமை மிக்க மன்னர் ஹர்ஷர், நளன் வரலாற்றை #நைஷதம் என்ற பெயரில் எழுதியுள்ளார். நிஷத நாட்டு மன்னர் என்பதால் நைஷதம் என்று பெயரிடப்பட்டது. நேர்மையும், ஒழுக்கமும் கொண்டவன் நளன். அவன் அழகைக் கேள்விப்பட்ட தமயந்தி நளனைப் பார்க்காமலே காதல் கொண்டாள். ஆனால், இதை
அறியாத தமயந்தியின் தந்தை பீமன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். பூலோக அரசர்கள் மட்டுமில்லாமல் தேவர்களும் தமயந்தியின் அழகு கண்டு மயங்கினர். தமயந்தி நளனை விரும்பும் விஷயம் அறிந்த தேவர்கள் தாங்களும் நளன் போல உருமாறினர். சுயம்வர மண்டபத்தில் ஐந்து நளன்கள் அமர்ந்திருந்தனர். மணப்பெண்
தமயந்திக்கு சரஸ்வதி தேவி ஒவ்வொரு ராஜகுமாரன் பற்றியும் விளக்கம் அளித்தாள். அதில் இருந்த காஞ்சிபுரம் மன்னர் பற்றி, இவர் காஞ்சியில் கடல் போல பெரிய குளம் உருவாக்கியுள்ளார். ஸ்படிகம் போல தூய நீர் நிரம்பிய, அந்தக் குளத்தின் அழகை வர்ணிக்க முடியாமல் கவிஞர்களே மௌனமாகி விட்டனர். அதில்
இருந்து தெளித்த நீர்த்துளி சந்திரனாக மாறியதோ என எண்ணத் தோன்றும். ஸ்படிக நிறம் கொண்ட யோகேஸ்வரரின் அபிஷேகத்திற்கு இக்குளத்து நீரே பயன்படுகிறது என்றாள். #யோகேஸ்வரர் என இங்கு குறிப்பிட்டது காஞ்சி சங்கர மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வர ஸ்படிக லிங்கமே. இதை ஆதிசங்கரர் கைலாயத்தில் சிவனிடம்
இருந்து பெற்றார். ஹர்ஷரின் நைஷதத்தில், #யோகேஸ்வர என்றே இருக்கிறது. ஆனால், மூல ஸ்லோகத்தைப் பிரதி எடுத்தவர்கள் கவனக்குறைவாக யாகேஸ்வர என்று குறிப்பிட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தான், "எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்" என்ற பழமொழி வந்தது. காஞ்சிபுரம் முழுவதிலும் ஆராய்ச்சி
செய்தாலும் யாகேஸ்வரர் என்றொரு ஸ்படிகலிங்கம் இருப்பதாக தெரியவில்லை. அதன் பின், நைஷதத்திற்கு உரை எழுதியவர்கள் #யோகேஸ்வர என்று மூலத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு தவறைச் சரி செய்தனர்."
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 17
#வேல்மாறல் அருணகிரிநாதர் பாடிய 9 நூல்களுள், திருவகுப்பும் ஒன்று. அழகான சந்தத்தில் அமைந்த அந்த 25 வகுப்புகளுள், முருகவேள் திருக்கரத்து வேலாயுதத்தின்  பெருமையை விரிவாகக் கூறுவன வேல்வகுப்பும், வேல்வாங்குவகுப்பும். ஆண்டவனின் ஆயுதங்களை, வாகனங்களை, த்வஜங்களை (கொடி) ஓதுதலும்கூட அவனைப்
போற்றுதலைப் போலவே ஆகும்.  முருகனின் படையாம் வேலாயுதத்துக்கும் அருணகிரிநாதர் துதிகள் பாடியிருக்கிறார். அந்த இரண்டினுள் வேல்வகுப்பை எடுத்துக்கொண்டு அதன் 16 அடிகளை முன்னும்  பின்னுமாகவும், திரும்பத் திரும்பவும் அழகுறத் தொகுத்து அதன் பாராயண பலனை பன்மடங்காக்கி வேல்மாறல் என்ற பெயரில்
1923ம் ஆண்டில், மந்திர  நூலாக மக்களுக்குத் தொகுத்தளித்தார், வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள். சாக்த வழிபாட்டில் உள்ள பல்லவ ப்ரயோக முறையின்படி, 16 x 4 = 64 அடிகளிலும், ‘திருத்தணியில் உதித்தருளும்… வேலே’ எனும் வேல்வகுப்பின் 16வது  அடியை  ஓதுமாறு செய்தும், தொடக்கத்திலும்
Read 4 tweets
Dec 17
#வள்ளிமலை_சச்சிதானந்த_ஸ்வாமிகள் என்று ஒரு மகான் இருந்தார். இன்று நாம் எல்லோரும், உலகம் முழுக்க #திருப்புகழ் படிக்கிறோம் என்றால் அது அந்த வள்ளிமலை ஸ்வாமிகள் அளித்த அருட்கொடை என்றே கூறலாம். அவர் ஓர் வள்ளல். அவர் திருப்புகழை விடாமல் அவர் காலம் முழுவதும் எல்லா இடங்களிலும் கானம் Image
செய்ததால் தான் நாம் இன்று இவ்வளவு பேர் திருப்புகழை படிக்கிறோம். அவருக்கு ஆரம்பத்தில் அர்த்தநாரி என்ற பெயர். சின்ன வயதில் வறுமையினால் படிக்க முடியவில்லை. அவர் தன் மாமாவுடன் சமையல் வேலை செய்ய மைசூர் அரண்மனை போய்விட்டார்.
நல்ல புத்திமான். அதனாலே, நல்ல சமையல் செய்ய வந்தது.
கெட்டிக்காரராய் இருந்தார். எல்லோரிடமும் நல்ல பேர் வாங்கினார். ரொம்ப புஷ்டியாக பயில்வானாய் இருந்தார். அதனால் மல்யுத்தம் போடும் அளவிற்கு நல்ல சக்திமானாகவும் இருந்தார்.
புத்திமானாகவும் சக்திமானாகவும் இருந்தவருக்கு பக்திமானாக ஆகும் வேளை வந்தது. திடீரென்று நாற்பது வயதில், மனைவி
Read 25 tweets
Dec 17
இன்று #ஸ்ரீசேஷாத்ரி_ஸ்வாமிகள் ஆராதனை தினம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஒரு பெரிய சித்த புருஷர். அவர் காஞ்சீபுரத்தில் பிறந்தவர். அவருக்கு சிவபெருமானே ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற பேரில் நாலு சிஷ்யர்களோடு வந்து தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தந்து சன்யாசம் தந்தார். அவரின் அப்பா அம்மா அவர் Image
சின்ன வயதில் இருக்கும் போதே காலமாகி விடுகிறார்கள். “அவர் மூக பஞ்சசதியை சொல்லிக் கொண்டு இரவு முழுவதும் காமாக்ஷி கோயிலை ப்ரதக்ஷிணம் செய்வார்”, என்று ஸ்ரீ #மஹாபெரியவா கோவிந்த தாமோதர சுவாமிகளிடம் சொல்லி இருக்கிறார். அப்பேற்பட்ட மகான். அவருக்கு ஞானமும் ஏற்பட்டு விடுகிறது. அவரை அவரின்
சித்தி சித்தப்பா தான் வளர்க்கிறார்கள். ஶ்ரீ பாலாஜி சுவாமிகளிடம் இருந்து சன்யாசம் பெற்ற பிறகு, நான் ஒரு சன்யாசி வீட்டுக்குள் வரமாட்டேன் என்கிறார். அவரோட சித்தி சித்தப்பாவிற்கு, இப்படி இவர் சொல்கிறாரே! நாம் சரியாக கவனிக்காமல் விட்டோமோ என்று கவலை வந்து விடுகிறது. அப்போது ஒரு நாள்,
Read 10 tweets
Dec 17
#சூர்தாஸ் #பக்தி
நந்தவனத்தில் ஒருநாள் ராதையும் கிருஷ்ணரும் பேசிக்கொண்டு இருந்தனர். ராதை பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் தலை மட்டும் ஏதோ பாட்டை கேட்டு ரசித்த வண்ணம் அசைந்தவாரே இருந்தது. நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா இல்லையா? அப்படி என்னத்தைத் தான் Image
ரசிக்கிறீர்களோ என்று கோபித்தாள் ராதை. என்ன அருமையான பாடல்,
சூர்தாஸரின் பாடல்! அவர் எப்போதும் என்னை விடுபட முடியாதவாறு பாடலின் மூலம் கட்டிப்போடுகிறார் என்றார். எப்போது பார்த்தாலும் சூர்தாஸ் சூர்தாஸ் என சொல்லியபடி இருக்கின்றீர்களே! அவரை போய் பார்த்துவிட்டு வருகிரேன் என கிளம்பினாள்
ராதை. நீ அவரை பார்க்க நீ போக வேண்டாம் என தடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சை கேளாமல் ராதை சூர்தாஸரை பார்க்க ஓடினார். சூர்தாஸ் பாடிக் கொண்டு இருந்த கோவிலுக்கு வந்தாள் ராதை. பிறவிக் குருடரான சூர்தாஸரின் அருகில் அவள் போய் நின்றாள். அவளது கொலுசில் இருந்து தெய்வீக சப்தம்
Read 7 tweets
Dec 17
#MahaPeriyava
Sri Maha Periyava was travelling to SriSailam through a path that went through a jungle. He asked the people in his entourage to do parayana (recitation) of the Vishnu Sahasranamam and walk their way.
However slowly recited, the Vishnu Sahasranamam would be over in Image
half an hour. But on that day, for whatever reason, the shishyas were not able to recite the stotram in unison and had to repeat the stanzas whenever a mistake was committed. The next camping site was also not in sight. Periyava said, "Neither does the Sahasranamam seem to end,
nor does the village of our destination seem to arrive."
After a long time they reached the village of their camping. Periyava said humorously, "You people did not recite Vishnu Sahasranamam. You have done a Laksharchana for Vishnu!"
Their night stay was at the Perumal temple in
Read 7 tweets
Dec 17
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவந்தான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்து இருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. Image
அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர். ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம் என
பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள். ஆச்சார்யர்கள் சொன்னதை விட, ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார். “கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று! பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார சேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(