ஆண்டாள் குரு பரம்பரைப்படி ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் வந்துதித்த பெண் குழந்தை கோதா
பெரியாழ்வார் இக்குழந்தையை எடுத்து சீரும் சிறப்புமாக வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை, வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.
பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என
எண்ணி தினமும் கொடுத்து அனுப்புவாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு இது தகாத காரியம் என்று கோபித்துக் கொண்டார். உடனே புது மாலை தொடுத்து கோதை சூடாத மாலையை எடுத்துக் கொண்டு சென்ற போது பெருமாள் அந்தப் பெண் சூடிய மாலை தான் எனக்கு உகப்பானது அதை எடுத்து வாரும் என்றார்.
பெரியாழ்வார் வியந்து நம் பெண் மானிடப் பிறவி இல்லை ஒருவேளை பூமித் தாயாராக இருக்கலாம் என்று எண்ணி ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, நீ யாரை மணம் செய்து கொள்வாய் என்று பெரியாழ்வார் வினவ அவள்,
வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர்
வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
[தேவர்களுக்காக அந்தணர்கள் யாகங்களில் சேர்த்த உணவை காட்டில்
திரியும் நரி புகுந்து மோப்பம் பிடிப்பது போல உடலைப் பிளக்கும் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது என்று சொல்லிவிட்டாள். அவன் எந்த ஊரான் என்று பெரியாழ்வார் கேட்டு திருமாலின் திவ்ய
தேசங்கள் அனைத்தையும் சொல்ல திருவரங்கனின் பெயர் கேட்டதும் நாணினாள். இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம்? அரங்கனோடு மணம் புரிவதாவது என்று பெரியாழ்வார் கவலைப்பட அவர் கனவில் பெருமாள் தோன்றி அவளை அலங்கரித்து கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா! என்று கட்டளையிட்டார். கோவில்
பரிசனங்களுக்கும் அவள் வரவைத் தெரிவித்தார். அவ்வாறே கோதையை அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர அவர்களுக்குப் பெரிய வரவேற்பு. பெருமானிடத்தில் அவளை விட்டுவிட கோதை அவருடன் ஐக்கியமாகி மறைந்து போனாள். இது ஆண்டாளை பற்றி குரு பரம்பரை சொல்லும் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள்
ஆண்டாளின் பல பாசுரங்களில் இருக்கின்றன. மேலும் கண்ணன் மேல் ஆசைப்பட்டு அவனை விரும்பிப் பாவை நோன்பு ‘வாரணமாயிரம் சூழ வலம் செய்து’ என்று துவங்கும் நாராயணனுடைய திருமந்திரத்தைப் பற்றி பாசுரங்கள் எல்லாம் இந்த வசீகரமான வரலாற்றின் அடிப்படை ஆகின்றன. ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த
கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக் கொண்டு இருப்பதற்கு சிகரம் வைத்தது போன்றது #திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் #சங்கத்_தமிழ்மாலை என்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்கு ‘சங்கத் தமிழ்மாலை’ என்றுதான் பெயர் என
ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
திருப்பாவையின் முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் அனுசரிப்பது வைணவர்கள் வழக்கம்.
ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
போற்றுதலைப் போலவே ஆகும். முருகனின் படையாம் வேலாயுதத்துக்கும் அருணகிரிநாதர் துதிகள் பாடியிருக்கிறார். அந்த இரண்டினுள் வேல்வகுப்பை எடுத்துக்கொண்டு அதன் 16 அடிகளை முன்னும் பின்னுமாகவும், திரும்பத் திரும்பவும் அழகுறத் தொகுத்து அதன் பாராயண பலனை பன்மடங்காக்கி வேல்மாறல் என்ற பெயரில்
1923ம் ஆண்டில், மந்திர நூலாக மக்களுக்குத் தொகுத்தளித்தார், வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள். சாக்த வழிபாட்டில் உள்ள பல்லவ ப்ரயோக முறையின்படி, 16 x 4 = 64 அடிகளிலும், ‘திருத்தணியில் உதித்தருளும்… வேலே’ எனும் வேல்வகுப்பின் 16வது அடியை ஓதுமாறு செய்தும், தொடக்கத்திலும்
#வள்ளிமலை_சச்சிதானந்த_ஸ்வாமிகள் என்று ஒரு மகான் இருந்தார். இன்று நாம் எல்லோரும், உலகம் முழுக்க #திருப்புகழ் படிக்கிறோம் என்றால் அது அந்த வள்ளிமலை ஸ்வாமிகள் அளித்த அருட்கொடை என்றே கூறலாம். அவர் ஓர் வள்ளல். அவர் திருப்புகழை விடாமல் அவர் காலம் முழுவதும் எல்லா இடங்களிலும் கானம்
செய்ததால் தான் நாம் இன்று இவ்வளவு பேர் திருப்புகழை படிக்கிறோம். அவருக்கு ஆரம்பத்தில் அர்த்தநாரி என்ற பெயர். சின்ன வயதில் வறுமையினால் படிக்க முடியவில்லை. அவர் தன் மாமாவுடன் சமையல் வேலை செய்ய மைசூர் அரண்மனை போய்விட்டார்.
நல்ல புத்திமான். அதனாலே, நல்ல சமையல் செய்ய வந்தது.
கெட்டிக்காரராய் இருந்தார். எல்லோரிடமும் நல்ல பேர் வாங்கினார். ரொம்ப புஷ்டியாக பயில்வானாய் இருந்தார். அதனால் மல்யுத்தம் போடும் அளவிற்கு நல்ல சக்திமானாகவும் இருந்தார்.
புத்திமானாகவும் சக்திமானாகவும் இருந்தவருக்கு பக்திமானாக ஆகும் வேளை வந்தது. திடீரென்று நாற்பது வயதில், மனைவி
இன்று #ஸ்ரீசேஷாத்ரி_ஸ்வாமிகள் ஆராதனை தினம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஒரு பெரிய சித்த புருஷர். அவர் காஞ்சீபுரத்தில் பிறந்தவர். அவருக்கு சிவபெருமானே ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற பேரில் நாலு சிஷ்யர்களோடு வந்து தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தந்து சன்யாசம் தந்தார். அவரின் அப்பா அம்மா அவர்
சின்ன வயதில் இருக்கும் போதே காலமாகி விடுகிறார்கள். “அவர் மூக பஞ்சசதியை சொல்லிக் கொண்டு இரவு முழுவதும் காமாக்ஷி கோயிலை ப்ரதக்ஷிணம் செய்வார்”, என்று ஸ்ரீ #மஹாபெரியவா கோவிந்த தாமோதர சுவாமிகளிடம் சொல்லி இருக்கிறார். அப்பேற்பட்ட மகான். அவருக்கு ஞானமும் ஏற்பட்டு விடுகிறது. அவரை அவரின்
சித்தி சித்தப்பா தான் வளர்க்கிறார்கள். ஶ்ரீ பாலாஜி சுவாமிகளிடம் இருந்து சன்யாசம் பெற்ற பிறகு, நான் ஒரு சன்யாசி வீட்டுக்குள் வரமாட்டேன் என்கிறார். அவரோட சித்தி சித்தப்பாவிற்கு, இப்படி இவர் சொல்கிறாரே! நாம் சரியாக கவனிக்காமல் விட்டோமோ என்று கவலை வந்து விடுகிறது. அப்போது ஒரு நாள்,
#சூர்தாஸ்#பக்தி
நந்தவனத்தில் ஒருநாள் ராதையும் கிருஷ்ணரும் பேசிக்கொண்டு இருந்தனர். ராதை பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் தலை மட்டும் ஏதோ பாட்டை கேட்டு ரசித்த வண்ணம் அசைந்தவாரே இருந்தது. நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா இல்லையா? அப்படி என்னத்தைத் தான்
ரசிக்கிறீர்களோ என்று கோபித்தாள் ராதை. என்ன அருமையான பாடல்,
சூர்தாஸரின் பாடல்! அவர் எப்போதும் என்னை விடுபட முடியாதவாறு பாடலின் மூலம் கட்டிப்போடுகிறார் என்றார். எப்போது பார்த்தாலும் சூர்தாஸ் சூர்தாஸ் என சொல்லியபடி இருக்கின்றீர்களே! அவரை போய் பார்த்துவிட்டு வருகிரேன் என கிளம்பினாள்
ராதை. நீ அவரை பார்க்க நீ போக வேண்டாம் என தடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சை கேளாமல் ராதை சூர்தாஸரை பார்க்க ஓடினார். சூர்தாஸ் பாடிக் கொண்டு இருந்த கோவிலுக்கு வந்தாள் ராதை. பிறவிக் குருடரான சூர்தாஸரின் அருகில் அவள் போய் நின்றாள். அவளது கொலுசில் இருந்து தெய்வீக சப்தம்
#MahaPeriyava
Sri Maha Periyava was travelling to SriSailam through a path that went through a jungle. He asked the people in his entourage to do parayana (recitation) of the Vishnu Sahasranamam and walk their way.
However slowly recited, the Vishnu Sahasranamam would be over in
half an hour. But on that day, for whatever reason, the shishyas were not able to recite the stotram in unison and had to repeat the stanzas whenever a mistake was committed. The next camping site was also not in sight. Periyava said, "Neither does the Sahasranamam seem to end,
nor does the village of our destination seem to arrive."
After a long time they reached the village of their camping. Periyava said humorously, "You people did not recite Vishnu Sahasranamam. You have done a Laksharchana for Vishnu!"
Their night stay was at the Perumal temple in
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவந்தான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்து இருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன.
அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர். ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம் என
பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள். ஆச்சார்யர்கள் சொன்னதை விட, ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார். “கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்று! பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார சேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன்