இன்று #ஸ்ரீசேஷாத்ரி_ஸ்வாமிகள் ஆராதனை தினம். ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஒரு பெரிய சித்த புருஷர். அவர் காஞ்சீபுரத்தில் பிறந்தவர். அவருக்கு சிவபெருமானே ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற பேரில் நாலு சிஷ்யர்களோடு வந்து தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தந்து சன்யாசம் தந்தார். அவரின் அப்பா அம்மா அவர்
சின்ன வயதில் இருக்கும் போதே காலமாகி விடுகிறார்கள். “அவர் மூக பஞ்சசதியை சொல்லிக் கொண்டு இரவு முழுவதும் காமாக்ஷி கோயிலை ப்ரதக்ஷிணம் செய்வார்”, என்று ஸ்ரீ #மஹாபெரியவா கோவிந்த தாமோதர சுவாமிகளிடம் சொல்லி இருக்கிறார். அப்பேற்பட்ட மகான். அவருக்கு ஞானமும் ஏற்பட்டு விடுகிறது. அவரை அவரின்
சித்தி சித்தப்பா தான் வளர்க்கிறார்கள். ஶ்ரீ பாலாஜி சுவாமிகளிடம் இருந்து சன்யாசம் பெற்ற பிறகு, நான் ஒரு சன்யாசி வீட்டுக்குள் வரமாட்டேன் என்கிறார். அவரோட சித்தி சித்தப்பாவிற்கு, இப்படி இவர் சொல்கிறாரே! நாம் சரியாக கவனிக்காமல் விட்டோமோ என்று கவலை வந்து விடுகிறது. அப்போது ஒரு நாள்,
சேஷாத்ரி சுவாமிகளுடைய அப்பா ஸ்ராத்தம் வருகிறது. அவரோ, எனக்கு ஸ்ராத்தம் எல்லாம் இல்லை. நான் ஒரு சன்யாசி, எனக்கு கர்மாக்கள் எல்லாம் இல்லை என்கிறார். அவரோட சித்தி சித்தப்பாவும் என்னடா இப்படி சொல்கிறாரே என்று அவரை பிடித்து, ஸ்ராத்தம் முடியும் வரை நீ இங்கு தான் இருக்கணும் என்று கூறி
அவரை ஓர் அறையில் அடைத்து வைத்து விடுகிறார்கள். ஸ்ராத்தம் முடிந்து அந்த அறையை திறந்து பார்த்தால் அவரைக் காணவில்லை. அவர் மறைந்து விடுகிறார். அவர் அதோடு திருவண்ணாமலைக்கு போய் விடுகிறார். அப்படி ஒரு மகான்! சித்த புருஷர். அவருடைய லீலைகள் அற்புதம். அவரின் பெருமையை சொல்ல வேண்டும்
என்றால் ஒரே நிகழ்ச்சியில் சொல்லி விடலாம். மஹாபெரியவா காஞ்சிபுரத்தில் அவர் பிறந்த வீட்டை தேடி கண்டு பிடித்து ஒரு பூஜா ஸ்தலமா வைத்திருக்க எற்பாடு செய்திருக்கிறார். அந்தப் பணியை பரணீதரன் என்ற ஒரு எழுத்தாளரிடம் கொடுத்தார். பரணீதரன் அந்த வீட்டை கண்டு பிடித்தவுடன், அந்த வீட்டில் வைக்க
ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு சித்திரம் வரைய மஹாபெரியவா எற்பாடு செய்ய சொன்னார். அப்போது, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் எப்படி யோகாசனத்தில், குக்குடாசனத்தில் உட்கார்ந்திருப்பார் என்று மஹாபெரியவா உட்கார்ந்து காட்டினாராம். அப்போது, “இப்படித்தான் அவர் உட்காந்து
இருப்பார். இதை பார்த்துக்கோ!
அப்புறம் அவருடைய பழைய சித்திரம் எல்லாம் பார்த்துக்கோ! இதை வச்சு அவருடைய படம் வரை” என்று சொன்னார். அப்போ மஹாபெரியவா, “சேஷாத்ரி ஸ்வாமிகள் போல ஆசனத்தில் வேண்ணா நான் உக்காரலாம். ஆனா, அவரைப் போல ஒரு நிலை வர எனக்கு எத்தனை ஜன்மா ஆகுமோ?” என்றாராம். அதைப்
போல #ஸ்ரீரமணரும், ஒரு சோபா போட்டு உட்கார்ந்துக் கொள்ளுங்கள் என்றவுடன், “ஆமா! நான் இருக்கேன். சோபா இருக்கு. உட்கார்ந்துக்க போறேன். தெரியறதே! நான் என்ன சேஷாத்ரி ஸ்வாமிகளா?” என்றாராம். அப்படி எல்லோரும் பிராத்தனை பண்ணக் கூடிய உயர்ந்த ஞான நிலையிலே ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் இருந்தார்.
மகான்கள் பிறந்த புண்ணிய பூமி நம் பூமி. அவர்களை நித்தமும் வணங்குவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Ref: valmikiramarayanam.in

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 19
#மார்கழி_ஸ்பெஷல் #ஶ்ரீஆண்டாள்_நாச்சியார் #திருப்பாவை

1.துயிலெழும் போது ஹரிஹரி என்று சொல்லி எழுந்திருக்கவேண்டும் ('உத்திஷ்ட சிந்தய
ஹரிம்').
2. குளிக்கும் போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும் ('வ்ரஜன்
சிந்தய கேசவம்').
3. உண்ணும் போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ண Image
வேண்டும்
('புஞ்சன்சிந்தய கோவிந்தம்').
4.தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும் ('ஸ்வபன்சிந்தய
மாதவம்')
இந்த நான்கு செயல்களை செய்யும் போது இந்த நாமாகளை சொல்வதால் அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். முந்தைய காலத்தில் மக்கள் இதை தவறாமல் செய்து வந்தனர்
என்பதை விளக்குவதை
போல் ஆண்டாள் நாச்சியாரின் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.

1. துயில் எழும் போது ஹரிஹரி என்பது புள்ளும் சிலம்பின காண் என்கிற பாசுரத்தில்
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ (பாசுரம் 6) என்கிறார்.
Read 8 tweets
Dec 19
#MahaPeriyava
Tiruppavai-Tiruvembavai
From "Acharya's Call"- invaluable speeches given by His Holiness Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Mahaswamiji
December 3, 1957

“Visitors to Cambodia can see even today dilapidated temples dedicated to Siva, Vishnu or Ambikai, Image
mostly to Siva, in the forests of that country. They bear testimony to the fact that our civilization and culture had penetrated those parts of South-East Asia more than a thousand years ago. What is more, valuable Sanskrit inscriptions on stone, about 800 in number, have been
recovered by French archaeologists from the walls of those temples in ruins. From the point of view of diction and substance, these inscriptions are even superior to those found in India. Various trading communities from India travelled in their own ships to these parts of the
Read 19 tweets
Dec 18
We can plan to visit one #temple a day or one temple a week if we are in Chennai. Distance from Vani Mahal T.Nagar is given in minutes & mentioned if over 500 Years Old

15 Minutes or Under

1. Agasthyar Temple (75 years old), T. Nagar

2. Shiva Vishnu Temple (1935), T. Nagar.
3. Raghavendra Swamy Temple (1987), T. Nagar, 8 mins

4. Iyappan Temple (1974), Mahalingapuram, 10 mins

5. Agatheeswarar Temple (over 500 years old) Nungambakkam, 10 mins

6. Angala Parameswari Temple (1978), West Mambalam, 10 mins

7. Kasi Viswanathar Temple (400 years old),
West Mambalam, 12 mins

8. Karaneeswarar Temple (12th century CE) Saidapet, 14 mins

9. Parthasarathy Perumal Temple (6th century CE) Triplicane, 15 mins

16 Minutes to Half-an-Hour

10. Balasubramanya Swamy Temple (500 years old) Teynampet,

11. Thiruvateeswarar Temple (May be
Read 16 tweets
Dec 18
When Maha Periyava does special Puja to Kamakshi Amman the screen will be closed and held by an attendant. People have asked have you peaked inside to see what is happening and he will always reply that it is forbidden and he will never go against the sastras. On that particular
Day just after two minutes of holding the screen, his hands became heavy and his body was burning with fever and he was unable to continue holding the screen. As it may so happen that day the puja too took longer than the usual 5 minutes. So the attendant unable to continue
Holding the screen turned inside to tell Maha Periyava that He should do the Harathi as he is not able to hold the screen any longer. What he saw as he turned in was sakshath Ambal Herself and Maha Periyava offering flowers at Her holy feet. He was speechless. Maha Periyava
Read 5 tweets
Dec 18
#திருமங்கையாழ்வார் அவரின் திருவவதார நன்னாள் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம். அன்று ஒரு பௌர்ணமி நன்னாள். அந்த நன்னாளில் ஆழ்வார் அரங்கன் சந்நிதியில் நின்று கொண்டு இருக்கிறார். #ஸ்ரீவைஷ்ணவ பக்தகோடிகள் எழுந்தருள அப்போதுதான் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடந்து ImageImage
அவர்கள் குளிர்ந்திருந்த நேரம். தன் திருநட்சத்திரமான அந்நன்னாளில் நம்பெருமாளுக்கு ஏதேனும் பெரிய அளவில் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்தது ஆழ்வாருக்கு. நாராயணன் அருள் பரிபூர்ணமாகக் கிடைத்தவர் அன்றோ அவர். அதன் மூலம் அயர்வற மதிநலம் படைத்தவர்! கண்கள் மூடி பகவானையே மனதில் Image
நினைத்து அவர் சந்நிதியில் நின்று கொண்டிருக்கையில் எம்பெருமானைப் புகழ்ந்து அவரிடம் இருந்து பாசுர வரிகள் மடை திறந்த வெள்ளமென கொட்டின. அன்று அந்த பகவத் சந்நிதியில் ஒரு புது பிரபந்தம் உருவாயிற்று. அந்த பாசுர வரிகள் தான் பின்னர் #திருநெடுந்தாண்டகம் என்ற பெயரில் நாலாயிரத்தில் ஒரு
Read 9 tweets
Dec 18
#முத்துமாலையம்மன்
#குரங்கணி தூத்துக்கு மாவட்டம் ஏரல் அருகே உள்ளது குரங்கணி கிராமம். இங்கு கோயில் கொண்டு அருள்கிறாள் முத்துமாலையம்மன். சீதாதேவியின் ஆபரணமே இந்த அம்மன் என்று சொல்லப்படுகிறது. ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதாதேவி, தனது முத்துமாலையை ராமபிரான் கண்டு வரவேண்டும், தான் Image
கடத்தி செல்லப்படும் வழிப்பாதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை எடுத்துப் போட்டார். அதோடு தன் ஆத்ம சக்தியையும் சேர்த்தே போட்டார். இலங்கைக்கு ராவணனால் கவர்ந்து செல்லப்பட்டு நந்தவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தது சீதாதேவியின் மாயைதான்
என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே, சீதாதேவிதான் இந்த முத்துமாலையம்மன் என்றும் நம்பப்படுகிறது. ராமபிரானோடு கானகத்தில் இருந்த சீதாதேவியை, ராவணன் புஷ்பக விமானத்தில் வான் வழியாக இலங்கைக்குக் கொண்டு சென்றான். செல்லும் வழியில் சீதாதேவி, ராமபிரானுக்கு அடையாளம் தெரியவேண்டி, தன் ஆபரணங்களை Image
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(