#திருமங்கையாழ்வார் அவரின் திருவவதார நன்னாள் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம். அன்று ஒரு பௌர்ணமி நன்னாள். அந்த நன்னாளில் ஆழ்வார் அரங்கன் சந்நிதியில் நின்று கொண்டு இருக்கிறார். #ஸ்ரீவைஷ்ணவ பக்தகோடிகள் எழுந்தருள அப்போதுதான் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடந்து
அவர்கள் குளிர்ந்திருந்த நேரம். தன் திருநட்சத்திரமான அந்நன்னாளில் நம்பெருமாளுக்கு ஏதேனும் பெரிய அளவில் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்தது ஆழ்வாருக்கு. நாராயணன் அருள் பரிபூர்ணமாகக் கிடைத்தவர் அன்றோ அவர். அதன் மூலம் அயர்வற மதிநலம் படைத்தவர்! கண்கள் மூடி பகவானையே மனதில்
நினைத்து அவர் சந்நிதியில் நின்று கொண்டிருக்கையில் எம்பெருமானைப் புகழ்ந்து அவரிடம் இருந்து பாசுர வரிகள் மடை திறந்த வெள்ளமென கொட்டின. அன்று அந்த பகவத் சந்நிதியில் ஒரு புது பிரபந்தம் உருவாயிற்று. அந்த பாசுர வரிகள் தான் பின்னர் #திருநெடுந்தாண்டகம் என்ற பெயரில் நாலாயிரத்தில் ஒரு
பகுதியானது. எம்பெருமானுக்கு, அந்த நம்பெருமாளுக்கு இசையுடன் அந்த பாசுரங்களை பாடிக் காட்டினார் திருமங்கையாழ்வார். அத்துடன் தமக்கு முந்தைய காலத்தவரான நம்மாழ்வார் அருளிச் செய்திருந்த #திருவாய்மொழி பிரபந்தத்திலிருந்தும் சில பாசுரங்களை இசையோடு பாடிக் காட்டினார் ஆழ்வார். மேலும்
பரவசமடைந்தனர் அங்கு எழுந்தருளியிருந்த திவ்ய தம்பதிகள்.
அதனால் மனம் குளிர்ந்து, உகந்து ஆழ்வாரிடம் ஏதேனும் விருப்பம் இருந்தால் கேட்கச் சொன்னார் நம்பெருமாள். இதற்காகவே காத்திருந்தது போன்று ஆழ்வாரும் நம்பெருமானிடம் இரண்டு விண்ணப்பங்களை வைத்தார்.
1. தன் காலத்திற்கு முன்னே
அவதரித்திருந்த நம்மாழ்வாரின் பெருமைகளையும் அவரது சிறப்புக்களையும் அன்னாரது அருளிச்செயல்களான பிரபந்தங்களையம் கேள்விப் பட்டிருந்த திருமங்கையாழ்வார், #வைகுண்ட_ஏகாதசி, அதாவது, மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் அன்று எம்பெருமான் அத்யயன உத்ஸவம் கொண்டருளும் போது அதுவரை தனக்கு சேவிக்கப்பட்ட
வேத பாராயணத்துடன், நம்மாழ்வாரின் அருளிச்செயல்களில் முக்கியமானதான திருவாய்மொழியை முழுதுமாக கேட்டு அநுபவிக்க வேண்டும்.
2. அதோடு திருவாய்மொழியை உலகோர் உணரும் வகையில் ஸம்ஸ்க்ருத வேதத்திற்கு இணையான ஒன்று என்று அறிவிக்க வேண்டும் என்பவையாகும்.
எம்பெருமானும் திருவுளம் உகந்து இரண்டு
விருப்பங்களையும் நிறைவேற்றினார். திருமங்கையாழ்வார் தொடர்ந்து பாடியதால் அவருடைய குரல்வள சிரமத்தைக் கண்ட எம்பெருமான், திருக்கார்த்திகை தீபமன்று தன் திருமேனியில் சார்த்தியது போக உள்ள எண்ணெயை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று உடனடியாக உத்தரவு பிறப்பித்தார் என்பது அப்போது நடந்த இன்னொரு
உன்னத விசேஷமாகும்.
ஆழ்வார்கள் பக்தியுடன் தமிழையும் வளர்த்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆழ்வார்கள் அருளிச்செயல்கள் அனைத்தும் தெவிட்டாத தேனமுதம். இவர்களை தமிழகம் பெற என்ன தவம் செய்ததோ!
ஆழ்வார்கள் திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடி அமைவோம்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 20
#மார்கழி_ஸ்பெஷல் #திருப்பாவையில்_திவ்ய_தேசங்கள்
1. மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை தருவான் - பரமபதம்.

2. வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.

3. ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.

4. ஆழிமழை - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் . Image
5. மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .

6. புள்ளும் - வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.

7. கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.

8. கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.

9. தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு -
திருக் கடிகை.

10. நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.

12. கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம்.

13. புள்ளின்வாய் - பள்ளிக்
Read 8 tweets
Dec 20
#MahaPeriyava
A large crowd in a long queue had gathered to have darshan of Maha Periyava. Slightly tilting His head, Periyava glanced at the waiting people and saw a twenty year old youth in the queue. Looking intently at the youth, Periyava called His
(Painting by @keshav61) Image
assistant Ramu, another youth, who came near Him and stood, his hand covering his mouth.
"Ramu, you see the person standing as the fifteenth in the queue? A short boy with a slightly blackish complexion. You need to buy a shirt and pant piece that will suit his size", Periyava
ordered. "Get the cash from the office, and buy good quality cloth from the Mudaliar textile shop near the Matham."
Ramu was surprised and confused at this sudden command from the Sage. He knew that he couldn't ask the reason, so started to proceed on his task.
"Ramu, come
Read 25 tweets
Dec 19
#மார்கழி_ஸ்பெஷல் #ஶ்ரீஆண்டாள்_நாச்சியார் #திருப்பாவை

1.துயிலெழும் போது ஹரிஹரி என்று சொல்லி எழுந்திருக்கவேண்டும் ('உத்திஷ்ட சிந்தய
ஹரிம்').
2. குளிக்கும் போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும் ('வ்ரஜன்
சிந்தய கேசவம்').
3. உண்ணும் போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ண Image
வேண்டும்
('புஞ்சன்சிந்தய கோவிந்தம்').
4.தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும் ('ஸ்வபன்சிந்தய
மாதவம்')
இந்த நான்கு செயல்களை செய்யும் போது இந்த நாமாகளை சொல்வதால் அமைதியான வாழ்க்கை நிச்சயமாக கிட்டும். முந்தைய காலத்தில் மக்கள் இதை தவறாமல் செய்து வந்தனர்
என்பதை விளக்குவதை
போல் ஆண்டாள் நாச்சியாரின் கோதையின் கீதை (திருப்பாவை பாசுரங்கள்) திகழ்கிறது.

1. துயில் எழும் போது ஹரிஹரி என்பது புள்ளும் சிலம்பின காண் என்கிற பாசுரத்தில்
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ (பாசுரம் 6) என்கிறார்.
Read 8 tweets
Dec 19
#MahaPeriyava
Tiruppavai-Tiruvembavai
From "Acharya's Call"- invaluable speeches given by His Holiness Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Mahaswamiji
December 3, 1957

“Visitors to Cambodia can see even today dilapidated temples dedicated to Siva, Vishnu or Ambikai, Image
mostly to Siva, in the forests of that country. They bear testimony to the fact that our civilization and culture had penetrated those parts of South-East Asia more than a thousand years ago. What is more, valuable Sanskrit inscriptions on stone, about 800 in number, have been
recovered by French archaeologists from the walls of those temples in ruins. From the point of view of diction and substance, these inscriptions are even superior to those found in India. Various trading communities from India travelled in their own ships to these parts of the
Read 19 tweets
Dec 18
We can plan to visit one #temple a day or one temple a week if we are in Chennai. Distance from Vani Mahal T.Nagar is given in minutes & mentioned if over 500 Years Old

15 Minutes or Under

1. Agasthyar Temple (75 years old), T. Nagar

2. Shiva Vishnu Temple (1935), T. Nagar.
3. Raghavendra Swamy Temple (1987), T. Nagar, 8 mins

4. Iyappan Temple (1974), Mahalingapuram, 10 mins

5. Agatheeswarar Temple (over 500 years old) Nungambakkam, 10 mins

6. Angala Parameswari Temple (1978), West Mambalam, 10 mins

7. Kasi Viswanathar Temple (400 years old),
West Mambalam, 12 mins

8. Karaneeswarar Temple (12th century CE) Saidapet, 14 mins

9. Parthasarathy Perumal Temple (6th century CE) Triplicane, 15 mins

16 Minutes to Half-an-Hour

10. Balasubramanya Swamy Temple (500 years old) Teynampet,

11. Thiruvateeswarar Temple (May be
Read 16 tweets
Dec 18
When Maha Periyava does special Puja to Kamakshi Amman the screen will be closed and held by an attendant. People have asked have you peaked inside to see what is happening and he will always reply that it is forbidden and he will never go against the sastras. On that particular
Day just after two minutes of holding the screen, his hands became heavy and his body was burning with fever and he was unable to continue holding the screen. As it may so happen that day the puja too took longer than the usual 5 minutes. So the attendant unable to continue
Holding the screen turned inside to tell Maha Periyava that He should do the Harathi as he is not able to hold the screen any longer. What he saw as he turned in was sakshath Ambal Herself and Maha Periyava offering flowers at Her holy feet. He was speechless. Maha Periyava
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(