#அரங்கன் #பராசர_பட்டர் #ஶ்ரீவைஷ்ணவம் #தமிழ்
பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார்.
‘என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?’ என அரங்கன் கேட்க,
‘முதலில், உம் ஆதிசேஷனைப் போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்’ என்றார் பராசரர்.
‘அட! ஆயிரம்
நாக்குகள் இருந்தால் தான் பாடுவீரோ?’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான். ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர்
”மன்னிக்கவும் ரங்கா! என்னால் உன்னை பாட முடியாது!” என்று சொல்லிவிட்டு, அமைதியாகி
விட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு! பின்னே, பாடு என்று உத்தரவு போட்டாகி விட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகி விட்டது. அப்படியும் ‘பாட முடியாது’ என்று மறுத்தால்?
”என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய், கொடுத்தேன். பிறகென்ன பாட
வேண்டியதுதானே? முடியாது என்கிறாயே!” என்றான் அரங்கன்.
பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக் கொண்டார். மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்
கொண்டார். முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக் கொண்டு, “அரங்கா உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாட முடியாது என்று சொல்வதற்கே, எனக்கு ஆயிரம்
நாக்குகள் தேவையாக இருக்கும் போது, பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ!” என்று சொன்னார் பராசரர். என்னவொரு அற்புதமான உவமை! பகவானின் பேரழகுத் திருமேனியை விவரிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்தித்து, அவனுடன் இரண்டறக்
கலந்திருக்கின்றனர் அடியவர்கள்! அப்பேர்ப்பட்டவனது திருநாமத்தை சொல்வது, எத்தனை வல்லமையை நமக்கு வழங்கும்! பகவான் எனப் படுபவர் ஒளிமயமான, தேஜஸ் நிறைந்த, பரஞ்சோதி என்பதில் யாருக்குத் தான் சந்தேகம் வரும்?
அவருடைய திருமேனியை, பொன்னுக்கு நிகராக ஜ்வலிப்பதாகச் சொல்கிறார் நம்மாழ்வார். ஆனால்
அத்துடன் நின்று விடவில்லை அவர். தகதகத்து மின்னுகிற பொன்னைச் சொல்லியும் மனதுள் நிறைவு தராததால், ‘நன்பொன்’ என்று பாடுகிறார். அப்போதேனும் நிறைவுற்றாரா அவர்?
‘உரைத்த நன்பொன்’ என்கிறார். அதிலும் மனம் சமாதானமாகவில்லை அவருக்கு. பொன் என்று சொல்லியாயிற்று. நன்பொன் என்று சான்றிதழும்
கொடுத்தாகிவிட்டது; ‘உரைத்துப் பார்த்துதான் சொல்கிறேன்’ என்கிற உறுதியையும் தந்தாகிவிட்டது.
இறுதியாக, ‘சுட்டுரைத்த நன்பொன்’ என்று, தங்கத்தைச் சுட்டு, உரைத்துப் பார்த்து, நல்ல பொன் எனத் தெரிந்து கொண்டேன் என்று சொல்லிச் சிலாகிக்கிறார். அப்படியும், அவருக்குள் ஒரு சந்தேகம்,’இது சரிதானா
பகவானின் திருமேனிக்கு இது சரிசமம் தானா?’ என்று உள்ளுக்குள்ளிருந்து கேள்வி வந்து உந்த, சட்டென்று, ‘சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது’ என்று பாடிவிட்டார் ஆழ்வார். 'அடடா பகவானே! உன்னுடைய ஜோதி மயமான திருமேனிக்கு, சுட்டுரைத்த நல்ல பொன்கூட இணையாகாது’ என்று பாடி முடித்து, வணங்குகிறார்.
இதுதான் தமிழின் அழகு. இதுதான் ஆழ்வார் பெருமக்களின் பூரணத்துவமான இறை பக்திக்குச் சான்று! தமிழையும் பக்தியையும் கலந்து, உள்ளிருந்து பாடல்களாகத் தந்திருக்காவிட்டால், நமக்கெல்லாம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் கிடைத்திருக்குமா?
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 28
#விதுரர்_நீதி
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன – குறைகின்றன Image
என்றார். அவை:
முதல் வாள் - அதிக கர்வம்
தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க, தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க
வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.
இரண்டாவது வாள் - அதிகம் பேசுதல்:
அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கடுமையில்லாததும், உண்மை ஆனதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ,
Read 8 tweets
Dec 28
#மகாபெரியவா சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி இருந்தபோது மாலை தினமும் பிரசங்கம் நடைபெறும். பெரியவா பேச்சை கேட்க கூட்டம் அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு செய்யவில்லை. பக்கத்தில் பேராசிரியர் சங்கரநாராயணன் Image
நிற்பதை பெரியவா பார்த்து அவரை பக்கத்தில் கூப்பிட்டார். அவரிடம் ஒரு ஸ்லோகத்தின் முதல் ரெண்டு வரியை சொன்னார்.
"உனக்கு அடுத்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா?”
“பெரியவா மன்னிக்கனும். எனக்கு தெரியலை”
இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்கில் எல்லோருக்கும் கேட்டது.
கூட்டத்தில் ஒருவருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து பேராசிரியர் சங்கரநாராயணனிடம் “சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும். அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை பேராசிரியர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட,
“பெரியவா அந்த மீதி
Read 10 tweets
Dec 27
#பகவான்_ரமணர் பொன்மொழிகள்

தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும். குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

தியானத்தில் ஆன்ம
தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவர் உடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.

கடவுளை ஒவ்வொருவரும் அவர்கள் இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும். கர்த்தா ஒருவன்.
நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும். ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து
Read 4 tweets
Dec 27
#மகாபெரியவா வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது. பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம், எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று மஹாபெரியவா கேட்பார்கள். அவர் கேட்கும் உதவி வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு, காரம் பக்ஷணங்களை பண்ணி நீயே போய்
கொடுத்துட்டு வா என்பது தான். பிறகு சில நாட்களில் கழித்து அந்தப் பாடசாலை குழந்தைகள் மஹா பெரியவாளை தரிசிக்க வந்தால் உடனே அவர்களிடம், அன்று பக்ஷணம் வந்ததா? சாப்பிட்டாயா?என்று அக்கறையோடு கேட்பார்கள்.
மாடு கூடத் திங்காத அழுகல் வாழைப் பழம் வேதபாடசாலைப் பையன்களுக்கு, என்று பழமொழி போல்
கூறப்பட்ட காலத்தில் பெரியவாளின் பெரிய புரட்சி, பாடசாலை குழந்தைகளுக்கு அவர் காட்டிய அலாதி பிரியமும், அவர்களுக்கு செய்து கொடுத்த சௌகர்யங்களும்.
மகா பெரியவா வேதபாடசாலை குழந்தைகளுக்கான வசதிகளை உருவாக்கி கொடுத்த விதமே மிகச் சிறப்பு. ஒருமுறை பெரியவாளுக்கு அப்பளம் கொண்டு வந்த
Read 8 tweets
Dec 27
#மகாபெரியவா
காஞ்சீபுரம் அஷ்டபுஜம் தெரு, சரஸ்வதி அம்மாளுக்கு நெஞ்சுவலி, டாக்டரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போய்க் கொண்டிருந்த போது, பட்டப்பகல் நட்ட நடுத் தெருவில் மஞ்சள் சரட்டில் கோர்த்து இருந்த திருமாங்கல்யம் பறி போய் விட்டது. ஒட்டி உரசினால் போல, சைக்கிளில் வேகமாகப் பறித்துச்
சென்று மறைந்து போனான். வீட்டுக்கு வந்து, பூஜை மாடத்தில் வழக்கமாகப் பூஜிக்கப்படும் பெரியவா பாதுகைகளின் மேலிருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து, மஞ்சள் சரட்டில் கட்டி கழுத்தில் போட்டுக் கொண்டாகி விட்டது. உடனே நகைக் கடைக்குப் போய், திருமாங்கல்யம் வாங்கிக் கொண்டு வந்து, சரட்டில்
கோர்த்து கழுத்தில் போட்டுக் கொள்ளலாம் - என்பதெல்லாம் நடை முறைப்படுத்த முடியாத செயல் திட்டம். எப்படியும் பெரியவாளிடம் சொன்னால் தான் மனம் நிம்மதி அடையும். மறுநாள் தரிசனத்துக்குப் போனபோது கூட்டம் கூடுதகலாகவே இருந்தது. மூகூர்த்த நாள். சிலர் கல்யாண விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
Read 8 tweets
Dec 26
#MahaPeriyava (Excerpts from a meeting of Arthur Isenberg with Sri Maha Periyava on 20th April 1959 at Numbal near Chennai)

The person who sat opposite me was sixty five years old, slim, a bit on the smallish side. The top of his head was almost entirely bald or shaven, the
lower portion of his face was outlined by a white beard. He had white moustache and white eyebrows. His body was clothed in the saffron-coloured mantle of the Sannyasin. Not that any of this mattered. What did matter was his face, and more particularly, his eyes, which looked at
me with a mixture, or rather a fine blending, of intelligence, kindliness and compassion, while at the same time somehow reflecting a most gentle sense of humour. I had the definite sensation of being in the presence of man thoroughly at peace with himself, a Sage. The impression
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(