#ஆதித்யன்_வழிபடும்_திருத்தலங்கள்
சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் உதய வேளையில் கோபுரவாயில் மண்டபங்களைக் கடந்து கருவறையில் நிறைந்து சிவலிங்க மூர்த்தியை ஜோதி மயமாக்கும் திருத்தலங்களும் உண்டு. #பொங்கல் நன்னாளில் இத்தலங்களையும் அருகிலுள்ளோர் தரிசிக்கலாம். இவை #பாஸ்கர_ஷேத்திரங்கள் என்று
அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்களில் சூரியனின் ஒளி ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில நாட்களில் கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. சிலர் இது கட்டிடக்கலை நுணுக்க அமைப்பால் அமைந்த விந்தை என்பர். என்றாலும் பக்திமான்கள் சூரியன் தன் ஒளிமாறாமல் சிவபெருமானை வழிபாடு செய்யும் நிலை என்றே
எண்ணுவர். பெரும்பாலும் காலை வேளைகளில் மட்டுமே இவ்வாறு ஒளிக்கதிர்கள் இறைவன் மீது படியும் வகையில் அமைந்துள்ளதைக் காண்கிறோம். சில மேற்கு நோக்கிய தலங்களில் மாலை நேரத்தில் ஒளி விழும்படியாகவும் அமைக்கப் பட்டுள்ளன. பொதுவாக 3 நாட்கள் மட்டுமே சூரிய ஒளிவிழும் வகையில் பல கோயில்கள் அமைக்கப்
பட்டுள்ளன. திருச்செம்பொன் பள்ளியில் 12 நாட்கள் ஒளிவிழுகிறது. பொதுவாக ஆண்டிற்கு ஒரு முறையே இப்படி ஒளிவிழும் நிலை உள்ளது. அபூர்வமாக திருநெல்லிக்கா எனும் தலத்தில் ஐப்பசி மாதத்திலும் மாசி மாதத்திலும் ஆக இரண்டு முறை கதிர்கள் விழும்படி அமைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அமையப்பட்ட தலங்களில்
சிவலிங்கத் திருமேனியை மட்டுமே சூரியனின் கதிர்கள் ஒளி ஊட்டுகின்றன. #பனையபுரம் எனும் தலத்தில் அம்பிகையின் பாதத்திலும் ஒளி வெள்ளம் சில நாட்கள் விழுவதைக் காண்கிறோம். சூரியனின் ஒளிக்கதிரால் வழிபாடு செய்யும் திருமுறைத் தலங்கள்:
1.மயிலாடுதுறையை அடுத்த அன்னியூரில் பங்குனி 24 முதல் 28 வரை
5 நாட்கள் சூரியக் கதிர்கள் இறைவன் ஆபத்சகாயேசுவரர் மேல் விழுகின்றன. இறைவியின் பெயர் - பெரியநாயகி.
2.கும்பகோணம் நாகேசுவரசுவாமி - சித்திரை 11.12.13, ஆகிய மூன்று நாட்கள். நாகேசுவர சுவாமி - பெரியநாயகி.
3.காரைக்கால் அருகிலுள்ள கோயிற்பத்து எனப்படும் திருத்தெளிச்சேரி - பங்குனி 13 முதல்
10 நாட்களுக்கு- பார்வதீசுவரர்- சத்தியம்மை
4.தஞ்சை மாவட்டம் திருவாரூருக்கு தெற்கேயுள்ள நெல்லிக்கா மேற்கு நோக்கிய சந்நதியாக இருப்பது - ஐப்பசி தீபாவளி (கிருஷ்ண பட்ச சதுர்த்தசி முதல் 7 நாட்கள் - மாசி மாதம் 18 தேதி முதல் 7 நாட்கள் ஆக ஆண்டில் இருமுறை. நெல்லிவனநாதர் - மங்களநாயகி.
5. தஞ்சை மாவட்டம் - சாலியமங்கலத்தை அடுத்து பருதியப்பர் கோயில் என வழங்கும் பருதிநியமம் - பங்குனி 19 ஆம் தேதி - மருதீசுவரர் - மங்களநாயகி.
6.விழுப்புரத்தை அடுத்த பனையபுரம் எனப்படும் புறவார் பனங்காட்டூர். சித்திரை 1 முதல் 7 ஆம் தேதி வரை - பனங்காட்டீசுவரர் - புறவம்பை.
7.தஞ்சாவூரிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள திருக்கண்டியூர் - மாசி 13, 14, 15 ஆகிய நாட்களில் மாலை 4.45 முதல் 6.10 வரை - வீரட்டேசுவரர் - மங்களநாயகி.
8.திருவாரூரை அடுத்த பேரளம் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருமீயச்சூரில் சித்திரை- 21 முதல் 7 நாட்கள்-
மேகநாதர் - சௌந்தரநாயகி. இங்கு ரதசப்தமியில் விழா கொண்டாடப் படுகின்றது.
9.மகேந்திரபள்ளி - பங்குனி 1 முதல் 7 வரை - திருமேனி அழகர் - சோம வடிவாம்பிகை. - இங்கு கதிரவன் வழிபடுவதை சந்திரன், கதிரவன் எனத் தொடங்கும் சம்பந்தரின் பாடல் குறிக்கிறது.
இவையன்றித் திருமுறைத்தலங்களாக இல்லாத பரங்கிப்பேட்டை அகரம் திருமூலநாத சுவாமி கோயில், பிடாகம் சந்திரநாதசுவாமி கோயில் முதலிய எண்ணற்ற கோயில்களில் இத்தகைய சூரியக்கதிர் வழிபாட்டினைக் காணலாம்.
சோழ
நாட்டுத் தேவாரத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வது திருநீடூர் ஆகும். மயிலாடுதுறையில் இருந்து நீடூருக்குப் பேருந்து வசதி உள்ளது.இங்கு முதல் யுகத்தில் சூரியன் வழிபட்டான் என்பர். இங்குள்ள இறைவன் சோமநாதேசுவரர் என்று அழைக்கப் படுகின்றார். இறைவிக்கு ஆதித்ய அபயப்பிரதாம்பிகை என்று பெயர். ஒரு
சமயம் இறைவனுடைய கோபத்திற்கு அஞ்சிய சூரியனுக்கு அபயம் கொடுத்ததால் இவள் ஆதித்ய அபயப்பிராதாம்பிகை என்று அழைக்கப் படுகின்றாள். இங்கு சூரியன் அம்பிகைக்கு வழிபாடு செய்ய எடுத்த குளம் சூர்ய புஷ்கரணி.
சூரியனால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு திருத்தலங்களில் உள்ள அம்பிகைக்கு மங்கலநாயகி என்பதே
பெயராகி விளங்குகின்றது. இத்தலங்களில் உள்ள தீர்த்தங்கள் சூரிய தீர்த்தங்கள் என்றே அழைக்கப் படுகின்றன.நெல்லிக்கா, பருதி நியமம், மங்கலக்குடி, குடந்தை, சிறுகுடி முதலிய தலங்கள் யாவும் சூரியன் தன்பெயரால் தீர்த்தம் அமைத்து சிவ வழிபாடு செய்த தலங்களாகும். இங்குள்ள அம்பிகைளின் பெயர்கள்
காசியில் சூரியன் அமைத்து வழிபட்ட சிவலிங்கம் கபஸ்தீசுவரர், அம்பிகை மங்கள கௌரி. எனவே, சூரியன் வழிபட்ட அம்பிகைக்கு மங்கல நாயகி என்பது சிறப்புப் பெயராக விளங்குவதை அறியலாம்.
தொகுப்பு: திரு அனந்தபத்மநாபன்
உலக அதிசயங்கள் அனைத்தும் பாரதத்திலேயே
உள்ளன. முடிந்த பொழுது இக்கோவில்களுக்கு சென்று தரிசிப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீசயன_நரசிம்மர்
திருவதிகை, பண்ருட்டி, கடலூர்
பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கனை தரிசித்துள்ளோம். வக்ராசுரனை திருவக்கரையில் சம்ஹாரம் செய்த நரசிம்மமூர்த்தியும் களைத்துப் போய் சயன கோலத்தில் காட்சி அளிப்பதை திருவதிகை சரநாராயண திருத்தலத்தில் தரிசிக்கலாம். ஸ்ரீ நரசிம்மரின் சயனக் கோலக்
காட்சியை இக்கோயிலில் மட்டுமே காணலாம் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளி இருப்பதால் இது போக சயனம் ஆகும். 700ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக
கூறப்படுகிறது. இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பிரபஞ்சத்தை ஆளும் மும்மூர்த்திகளும் இந்த அகிலத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் சேர்ந்து போரிட்டு தர்மத்தை நிலைநாட்டுவார்கள். அப்படி மும்மூர்த்திகளும் ஒருங்கிணைந்து நிகழ்த்தியது தான்
#நற்சிந்தனை
பெருமாள் பக்தர் விஜயன் அதிகாலை நீராடி, விஷ்ணுசஹஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் சேவிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார். ஒரு குருவிடம் சென்று, குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன் என்றார்.
குரு
அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து, தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா? என்று கேட்டார். அந்த நபரோ, பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை! என்றார். உடனே பெருமாள் பக்தர் விஜயன் ஆச்சரியத்துடன், எனக்கு அந்த
மந்திரம் தெரியாதே. அதைச் சொல்லேன் என்றார்.
வந்தவர், #கோவிந்தா#கோவிந்தா என்றார். பக்திமான் விஜயன் ஏமாற்றத்துடன், இது தானா! நான் தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது என்றார். குரு அவரிடம், நீ தவறாக நினைக்கிறாய். ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சஹஸ்ரநாமம்.
இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது.
வேதாத்யயனம் நிறைவு பெற்று, இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில் ஸ்ரீமகாசுவாமிகள் முன்னிலையில் நடந்தது. ஒவ்வொரு மாணவனும்,
வேதத்தின் சிற்சில பகுதிகளைக் கூறும்படி ஆக்ஞாபித்து, கவனத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒரு வித்யார்த்தி (மாணவன்), செவிக்கு இன்பமாகவும், தெளிவாகவும் ஒப்பித்தான். பெரியவாளுக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.
“இவனுக்கு என்ன மார்க் போட்டிருக்கு?” என்று தேர்வு நடத்திய
விற்பன்னர்களைக் கேட்டார்கள்.
“இரண்டாம் கிளாஸ்” என்று பதில் வந்தது.
பெரியவா, சில விநாடிகளுக்குப் பின், “மார்க் லிஸ்டை சரியாகப் பார்” என்றார்கள்.
தேர்வு செய்த பண்டிதர்கள் கொடுத்த மதிப்பெண்களை மறுபடியும் கூட்டிப் பார்த்தபோது, அந்தப் பையன் தான் மற்ற எல்லோரைக் காட்டிலும் அதிக மார்க்
#foodforthought
There will always be somebody ahead of us, someone with a better job, nicer car, more money in the bank, more education, a prettier wife, a more handsome husband, better behaved children, better circumstances and better conditions etc. But one important
realisation is that, we can be the best that we can be, when we are not competing with anyone. Some people are insecure because they pay too much attention to what others are, where others are going, wearing and driving, what others are talking. Take whatever we have, the height,
the weight and personality. Accept it and realize, that we are blessed. Stay focused and live a healthy life.
Let us count our blessings! There is no competition in Destiny. Each has his own. Comparison and Competition is the thief of JOY.
Let us run our own Race that leads to
“All of you think of me as a saint and perform namaskara to me. I have also a great yearning to perform namaskara to persons who are known to be real saints. But my position as Jagatguru and Peetadhipathi, and the title of
Bhagavatpada, which have come and stuck to me at a young age, without any merit on my part for deserving them, have deprived me from that young age itself, of the good fortune of doing namaskara to saints, the great ones, moving about before our very eyes. My receiving all your
namaskaras, without my performing namaskaras to any person, makes me think of my janma as empty and in vain.
Our Acharya (Adi Sankara) has done a great good in this regard. What is that? He has reminded that: "Sannyasis, like us, to whom you perform namaskaras, regarding them as
#முஞ்சிகேசர்#முஞ்சிகேசமுனிவர்
சென்னை காளிகாம்பாள் கோவில் அருகே இருக்கும் கச்சாலீஸ்வரர் எனும் பழமையான கோவிலில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி இருக்கிறது. அதே போல தமிழ்நாட்டில் சுமார் 10, 15 பழமையான சிவன் கோவில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி உண்டு. பஞ்ச சபைகளில் மூத்த சபையாக
விளங்கும் திருவாலங்காடு ரத்தின சபை சிவன் கோவில் அருகே இவரது ஜீவசமாதி தனி கோவிலாக இருக்கிறது. சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான். அதனால் சிவனின் சாபத்தை கார்கோடகன் பெற்றான். தனது தவறை பின்னர் உணர்ந்து வருந்தி,
திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க அந்த சாபத்திற்கு பிராயச்சித்தமாக பூமிக்கு சென்று பல சிவ க்ஷேத்ரங்களை வழிபட சொல்லி கார்கோடகனுக்கு சிவன் கட்டளை இட்டார். அவ்வாறு பல க்ஷேத்ரங்களை வழிபட்ட பின்னர் நிறைவாக திருவாலங்காட்டில் என்னை நோக்கி தவமிருக்கும் சுனந்த முனிவர் எனும் மகா