#சிருங்கேரி_சாரதாம்பாள் (சரஸ்வதி தேவி) திருக்கோயில் வரலாறு

அத்வைத வேதாந்தத்தின் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், சனாதன தர்மம் மற்றும் அத்வைத வேதாந்தத்தைப் பாதுகாக்கவும் அதைப் பிரச்சாரம் செய்யவும் இந்தியாவில் நான்கு பீடங்களை நிறுவினார். அவை தெற்கில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம்
(கர்நாடகம்), மேற்கில் துவாரகா சாரதா பீடம் (குஜராத்), கிழக்கில் பூரி கோவர்தன் பீடம் (ஒடிசா) மற்றும் வடக்கில் பத்ரி ஜோதிஷ்பீடம் ஆகும். குரு சிஷ்ய பரம்பரையில் இன்றும் குரு காட்டிய வழியில் நமது ஸனாதனமாகிய ஹிந்து வைதீக ஸம்பிரதாயங்களைக் கைக்கொண்டு செயல்படுவதும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா
பீடம். சிருங்கேரி சாரதா மடம் கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் 7/8 நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம். யஜுர் வேதப் பிரிவு. இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும்
தன் சீடரை நியமித்தார் சங்கரர். பெருவாரியான ஸ்மார்த்தர்கள் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை பின் பற்றுகிறார்கள் பொ.யு 1336ல் விஜயநகரப் பேரரசை நிறுவ வழிகாட்டிய வித்யாரண்யர், இம்மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். ஆதி சங்கரர் துங்கா நதிக்கரையோரம் நடந்து போய்க் கொண்டு இருக்கும் போது
அவர் பார்த்த காட்சி- தவளைக்கு வெயிலின் கொடுமை தெரியாமல் இருக்க நாகம் குடைபிடித்த காட்சி- பகைமை உணர்ச்சி இல்லாமல் ஒற்றுமையாகப் பாம்பும் தவளையும் இருப்பதைப் பார்த்து சாரதா பீடத்தை அமைக்கச் சிறந்த இடம் என்று ஆதிசங்கரர் பீடத்தை அமைத்து 12 ஆண்டு காலம் தன் சீடர்களுக்கு இங்கிருந்து
அத்வைதத்தைக் கற்பித்தார். தற்போதைய 36 வது ஜகத்குரு ஆச்சார்யா ஜகத்குரு பாரதி தீர்த்த மஹாஸ்வாமி ஆவார். இவரது குரு ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமி ஆவார். ஆதி காலத்தில் துங்கபத்திரா நதியின் நடுவில், மலைப்பாறையில் கூரையினால் வேயப்பட்டு ஸ்ரீ யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டு சந்தன
மரத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீ தேவியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின் வித்யாரண்யரை அடுத்து வந்த ஆச்சாரியர்களால் கற்களால் மேலே கோபுரம் எடுத்துக் கட்டப்பட்டது. 1906ல் மைசூர் மகாராஜா முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சாரதாம்பாள் கோவில் நுழைவாயில், கோபுரம், பிரதட்சிணம்
செய்ய மூடிய பாதையுடன் கூடிய விஸ்தாரமான ஹால், பெரிய கல் தூண்கள், வளைவுகளுடன் அமைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ சாரதா தேவி வியாக்யான தர்ம சிம்மாசன ஸர்வஜன பீடத்தில் அமைக்கப் பட்டுள்ளாள். சாரதாம்பாள் குரு ரூபமாக அருள்கிறாள். கையில் அமிர்த கலசம், புத்தகம், அக்ஷர பீஜங்களைக் குறிக்கும் ஜபமாலை,
ஜீவன், பிரம்மனைக் குறிக்கும் சின்முத்திரையுடன், உபநிஷத அறிவின் ஒளியாக, பிரம்ம வித்யாவாக விளங்குகிறாள். ஸ்ரீயந்திரத்தில் அமர்ந்துள்ளதாலும், லலிதா திரிபுர சுந்தரியாகவும் சாரதா பரமேஸ்வரியாகவும் துதிக்கப் படுவதாலும், தினம் லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி சொல்லி பூஜை செய்யப்படுகிறது.
ஸ்ரீசாரதாம்பாள் பிரம்ம வித்யாவாக பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களது சக்தியான சரஸ்வதி, லக்ஷ்மி, உமை ஆகியோர்களுடன் துதிக்கப் படுகிறாள். இக்கோவிலில் சாரதாம்பாள் சகுண பிரம்மமாக கருதப் படுவதாலும், எல்லாவித சக்திகளுடன் இருப்பதாலும் சுவாமி, அம்பாள் யாவும் ஸ்ரீசாரதா பரமேஸ்வரியே என வணங்கப்
படுகிறாள். சாரதா நவராத்திரி விழா இக்கோவிலில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி ஒன்பது நாளும் ஒன்பது வித வாகனத்தில் தேவி அலங்கரிக்கப்பட்டு 9ம் நாள் சரஸ்வதி பூஜையன்று மிகவும் சிறப்பாக வழிபாடு நடத்தப்படும். மடத்தில் ஆசார்யர்களால் மாணவர்களுக்கு வேதம், உபநிஷதம்,
சமஸ்கிருதம் என யாவும் போதிக்கப் படுகின்றன. காசி, கயா, ஹரித்வார், சென்னை, திருப்பதி, ராமேஸ்வரம் எனப் பல இடங்களில் இம்மடத்தின் கிளைகள் உள்ளன. யாத்திரீகர்கள் தங்க வசதி, இலவச மருத்துவமனை, மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு உயர்தரக் கல்வி, வேதாந்தப் பாடங்கள்
கல்லூரிகளில் போதிக்கப் படுகின்றன. ஆன்மீக வளர்ச்சிக்காகப் பத்திரிகைகள், இதழ்கள், நூல்கள் வெளியிடப்படுகின்றன. வருடம் தோறும் சிறந்த பண்டிதர்களைக் கொண்டு நடத்தப்படும் 'சதஸ்' மிகச் சிறப்பானது. சங்கரர் மடத்தை ஸ்தாபித்த போது சிருங்கேரி கிராமத்தை தீயசக்தி மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க
நான்கு திசைகளிலும் நான்கு கோயில்களை அமைத்தார். கிழக்கில் கால பைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், தெற்கில் துர்கை, வடக்கே காளி ஆகியோருக்குக் கோயில்கள் கட்டினார். சாரதாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள வித்யா சங்கரர் ஆலயம் கலை, நுணுக்க வேலைப் பாடுகளுடன் கற்களால் மிக அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
அளவற்ற ஆன்மீக அதிர்வலைகளை உடையது இவ்வாலயம். இங்கு வந்து தரிசித்தால் மன அமைதியையும், ஆன்மீக உணர்வுகளையும் ஒருவர் நன்கு உணர முடியும். திரும்ப ஒருமுறை சிருங்கேரி செல்ல மாட்டோமா என்ற ஆர்வத்தையும் ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறாள் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள்.
கோவிலின் தெற்குப் பிரகாரத்தில்
அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப் படுகிறது. தங்க தரமும் உள்ள்து. பக்தர்கள் பணம் கட்டி வெள்ளி, தங்க ரதங்களில் அம்பாளை வைத்து ரத உத்சவம் நடத்தலாம். சிருங்கேரி மடத்தில்
உலகிலேயே மிகப் பெரிய வீணை உள்ளது. இந்த வீணைக்கு #சார்வபவும_வீணை என்று பெயர். தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை கடந்த 2003-ம் ஆண்டு சிருங்கேரி மடத்துக்கு வழங்கப்பட்டது. 10 அடி நீளம், 76 செ.மீ. அகலம், 74 செ.மீ. உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது. நாட்டிய சாஸ்திரத்தில்
வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்குப் பேர் சிருங்காரம். சிருங்காரம் என்றால் அழகு என்று அர்த்தம் வரும். சிங்காரி அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்தில் இருந்து வந்த ரீங்காரம்தான் சிருங்கம் + கிரி = சிருங்கேரி.
சிருங்கேரியில் உள்ள சாரதா தேவி
‘பிரம்ம வித்யா’ சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன தருகிறாள். அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம்பாவுக்காக ஆன
தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் கட்டப்பட்டு 14-ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப் பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப் பட்டதாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப் பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு
உள்ளது. கோவில் கட்டிடம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணத்தால், தென் இந்திய இந்து கலாச்சார கட்டிடக்கலைப்படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.
நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை
இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்ற வற்றை இந்த புனித தலத்தில் கொண்டாடுகின்றனர். ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய
3 சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. சிருங்கேரி மடத்தின் முதல் தளத்தில் நூலகம் ஒன்று உள்ளது. இதில் பண்டைய சமஸ்கிருதக் கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் சுமார் 500 பனை ஓலைச் சுவடிகளும், மிகப்பெரிய காகிதக் கையெழுத்துப் பிரதியும் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை
சமஸ்கிருதத்தில் உள்ளன. இந்த கையெழுத்துப் பிரதிகள் அத்வைத தத்துவத்தும், சமஸ்கிருத இலக்கணம், தர்மசூத்திரங்கள், நெறிமுறைகள் மற்றும் கலைகள் போன்ற செவ்வியல் பாடங்களுடன் தொடர்புடையவை ஆகும்.
சிருங்கேரியில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது சங்கர ஜெயந்தி. ஏப்ரல், மே மாதங்களில் வைகாச
சுக்ல பஞ்சமியன்று கொண்டாடப் படுகின்றது. வியாஸ பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ணாஷ்டமி, விநாயக சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாப விரதம், உமா மகேஸ்வர விரதம், சாதாம்பாள் அபிஷேக, ரத சப்தமி ஆகியவை குறிப்பிடும்படியான திருவிழாக்கள். மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் சந்திர
மௌலீசுவரருக்கு சுவாமிஜி பூஜை செய்வார். ரிஷ்யசிருங்க பர்வதம் ஒரு பச்சைப் பசேல் வனப் பிரதேசம். மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள். கடுமைமான கோடையில் கூட, ஜிலு ஜிலுவென்று அருமையான சீதோஷ்ண நிலை, மனதிலும் உடலிலும் எப்போதும் ஒரு நிம்மதி நிலவ வைக்கும் சூழல் உள்ளது. இங்குள்ள அத்வைத
ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள், வேதம், உபநிடதம், சாஸ்திரம், தர்க்கம் முதலான மேன்மையான சமஸ்கிருத நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. இங்கு வேத பாடசாலை மாணவர்களும் அயல்நாட்டினரும் அமைதியாக அமர்ந்து நூல்களை ஆராய்ந்து குறிப்பு எடுக்க அனுமதிக்கப் படுகிறார்கள். குரு நிவாஸ்
என்ற பிரம்மாண்ட அழகிய கட்டிடத்தில் ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதீ தீர்த்த மகா சுவாமிஜி காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். சிருங்கேரிக் கோவில்களையும் மடத்தையும் நிர்வகிக்கும் சாரதா பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் அருமையான தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைவான
வாடகையில் கிடைக்கின்றன. வரும் யாத்ரீகர்கள் யார் வேண்டுமானாலும் வரிசையில் நின்று தங்கள் ஊர், பெயரைப் பதிவு செய்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம். வெள்ளிக் கிழமை தோறும் விசேஷமாக ஸ்ரீசக்கர பூஜை நடத்தப்படுகிறது. அது அற்புதமான தெய்வீக அனுபவமாக இருக்கும். வித்யா சங்கரர் கோவிலின் அமைப்பு
திராவிட, ஹொய்சாள கலைப் பாணிகளின் கலவையாக உள்ளது. கோவில் மண்டபத்திலேயே கூட்டம் கூட்டமாக குழந்தைகளை கைப் பிடித்து அரிசியில் எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கிறார்கள். அன்னை சரஸ்வதியின் சன்னதியில், அறிவுக் கண் திறக்கும் இந்த பாரம்பரிய சடங்கை அனைத்து பக்தர்களும் எளிய முறையில்
நடத்திக் கொள்ள வசதி செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். துங்கபத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரை அருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல்
பார்த்துக் கொண்டிருக்கலாம். படித்துறையில் மீன் கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம். சிருங்கேரியில் மூவாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய நேர்த்தியான, சுத்தமான, காற்றோட்டமுள்ள உணவுக் கூடம் இருக்கிறது. சுடச்சுட சாதம்,
பூசணிக்காய், கத்தரிக்காய் என கலந்து கட்டிய சாம்பார், ரசம், ஒரு பாயசம், இனிப்பு, மோர் என்று எளிய உணவுதான். சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்க கோபுர கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்ப்பகிரகத்தின் விமானத்தில் அமைந்த தங்க கலசங்களுக்கு, பாரதி தீர்த்த
சன்னிதானம் மற்றும் சன்னிதானம் விதுசேகர பாரதி அபிஷேகம் செய்தனர். சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பாரதி சுமார் 1900-ல் நெல்லை மாவட்டம் கோடக நல்லூருக்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை “தட்சண சிருங்கோ” என்று வர்ணித்தார். இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும்,
மிகவும் பழமையானதும் ஆகும். பெருமாள் வராக உருகக் கொண்டு கடலுக்குள் புகுந்து தன் இரு கொம்புகளால் பூலோகத்தை மீட்டு தூக்கி நிறுத்திய போது அவரது இரு கொம்புகளும்-சிருங்கம் பதிந்த புண்ணிய பூமி அதனால் சிருங்கேரி எனப்பெயர் பெற்றது. துங்கா நதியினால் புனிதமானதாகிய சிருங்ககிரி பல மகான்களின்
இருப்பிடமாக விளங்குகிறது. வேத சாஸ்திரங்களைக் குறைவறக்கற்ற எண்ணற்றோர், சிருங்க கிரியில் சங்கரரின் அருகில் இருந்து சாஸ்திர ஞானம் பெற்றார்கள். சிருங்ககிரி காசி தலத்திற்கு நிகரானது. கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்பது தொன்மையான பழமொழியாகும். சிருங்கேரி மடத்துக்கு உலகம் முழுவதும்
பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒரு தடவையாவது சிருங்கேரிக்கு சென்று வழிபடுவதை அவர்கள் முதன்மை கடமையாக வைத்துள்ளனர். சிருங்கேரி சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகளின் பூர்வாச்சிரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. இவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் கன்னடம், தமிழ்,
இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் பேசுவார். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், மேல்மங்கலம், பெரியகுளம், கோவை, கல்லிடைகுறிச்சி, பத்தமடை, வத்தலகுண்டு, நாகர்கோவில், கரூர் ஆகிய 11 ஊர்களில் சிருங்கேரி சாரதா
மடத்துக்கு கிளைகள் உள்ளன. சாரதாதேவியின் அருளால்
தர்மநெறி ஆன்ம நெறி பாரதம் முழுவதும் புத்துயிர் பெற்று உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே சிருங்கேரி சாரதா பீடத்தின் லட்சியமாகும். சாரதா பீடத்திற்கு பல்வேறு மரபைச் சேர்ந்த மன்னர்கள் கொடைகளை வழங்கியுள் ளார்கள். விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள், மராட்டிய பேஷ்வாக்கள்
கேரள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பிரிட்டிஷ் அரசும் இந்த மடத்திற்கு தனது பங்கை செய்துள்ளது. மிகச்சிறந்த கல்விமான்களாகவும், மத ஆச்சாரியார்களாகவும் விளங்கிய வித்யா தீர்த்தர், பாபதி தீர்த்தர், வித்யாரணயர், நரசிம்மபாரதி, சந்திர சேகர பாரதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்கள் இந்த மடத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். இவர்களுக்கு எல்லாம் மூலகாரணமாக விளங்குபவர் ஆதிசங்கரர்.
தினமும் காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.
சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம்.
சென்று தரிசிப்போம். ஆசி பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 16
#மகாபெரியவா "மாமா, இந்த மாசம் அப்பா ஶ்ராத்தம் அதுதான் உங்களுக்கு ஞாபகப் படுத்திட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் சந்துரு.
"இத நீ எனக்கு, ஞாபகபடுத்தணுமா? இந்த மாசம் 26ஆம் தேதி, தசமி திதிதானே எனக்கு ஞாபகம் இருக்கு, கார்த்தால பத்து மணிக்கு நான் அங்க இருப்பேன். நீ கவலைப்படாதே வழக்கம் Image
போல நல்லபடியா நடத்தி குடுத்துடறேன். பிராமணாள் கூட ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"ரொம்ப சந்தோஷம் மாமா. நமஸ்காரம் பண்றேன், ஆசீர்வாதம் பண்ணுங்கோ" என்ற சந்துரு, நமஸ்காரம் பண்ணி அபிவாதயே சொல்லி முடித்தவுடன், "க்ஷேமமா சௌக்யமா, இருப்பேடா அம்பி, தீர்காயுஷ்மான்பவா.
சீக்கரமேவ விவாக பிராப்திரஸ்து" என்று ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார். சந்துரு சென்ற கொஞ்ச நேரத்தில் ஒரு சாஸ்திரிகள் அவரை பார்க்க வந்தார். வந்தவரை வரவேற்ற மகாதேவா சாஸ்திரிகள் என்ன விஷயம் என்று விசாரிக்க, "டெல்லியில் வேதபுரின்னு ஒருத்தர், மத்யஅரசுல பணி. நல்ல செல்வாக்கானவர்.
Read 52 tweets
Jan 16
#MahaPeriyava MahaPeriyava asked the devotees which deity has no teeth. None knew the answer. He said the Sun God does not have teeth. So for every #Pongal He offered the inside of tender coconut which is very soft to SunGod. Also He offered vada made from urud dhal which is soft
Also bananas were important as offering to Sun God. Whenever He was in Kanchipuram during Pongal the place was cleaned and the walls painted in stripes of white and saffron. Maha Periyava will do Surya Namaskar in the morning and along with sweet Pongal, soft vada, tender coconut
And bananas offered to the Sun God, He will ask the Matam employees to distribute the prasadham to all the devotees. If so far we had not offered this let us start doing it from now on. When men folk came to Him for blessings on He will advice them not to scold. If it were women
Read 4 tweets
Jan 16
#MahaPeriyava
Sri Maha Periyava's power of memory is incredible. It was His speciality to keep every little thing keenly in His mind and express it at the right time. We shall recollect one such incident here. This sage was a cherisher of nature and solitude. He liked staying in
places such as open sheds and choultries, shade of trees and roadside places during his yatra.
He was touring in the state of Andhra Pradesh once. He stayed in a shed by the roadside. A devotee came in a car to have a darshan of Sri Maha Periyava.
"My name is Kalyanam. I am
appellate authority in the customs department. I belong to the Thanjai district. There are lots of problems in my family, there is no peace of mind. Only Periyava should solve them. This is the reason why I have come for darshan."
Periyava asked him to sit down and heard his
Read 13 tweets
Jan 16
#மகாபெரியவா
பொங்கல் நாளன்று, வழுக்கை தேங்காய் நைவேத்யம் செய்வார் காஞ்சி மகாபெரியவர். அதற்கென்ன காரணம் என பக்தர்கள் கேட்ட போது, "பல் இல்லாத கிரகம் எது என தெரியுமா?'' என்று திருப்பிக் கேட்டார். பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. "அதுதான் சூரியன்” என்ற பெரியவர், பல் இல்லாதவர்களால்
கடினமான தேங்காயைச் சாப்பிட முடியுமா? அதனால் தான் வழுக்கை தேங்காயை நைவேத்யம் செய்ய வேண்டும் என்றார். இன்னொரு நைவேத்யமும் சூரியனுக்கு முக்கியம்.
அது தான் உளுந்து வடை. தீபாவளிக்கு தானே நாம் வடை செய்வோம். பொங்கலுக்கும் அது உண்டு. காரணம், பல் இல்லாத சூரியனுக்கு மெதுவடை சாப்பிட இதமாக
இருக்குமே! அதற்காகத்தான். இதுதவிர வாழைப்பழமும் முக்கியம். பெரியவர், சங்கர மடத்தில் இருந்த காலத்தில், பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, மடம் சுத்தம் செய்யப்படும். அவர் பூஜிக்கும் சந்திர மௌவுலீஸ்வரர் பூஜா மண்டபத்தில், சுண்ணாம்பு வெண் பட்டையும், காவியும் அடிக்கப்படும். வாழை,
Read 9 tweets
Jan 15
#கடவுள்_எங்கே கடவுளைக் காண்பிக்க இயலுமா? நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? என சிலர் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க
வேண்டும் என கூறினார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் பார்க்கிறார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர் பார்வையிலிருந்து வேறுபட்டுகிறது. காரில் ஏற்பட்டுள்ள பழுதைக் காணும் தகுதியை அவர்
பெற்றுள்ளார். அதனால், அவர் பழுதைச் சரி செய்ததும் கார் இயங்குகிறது. ஒரு காரைக் காண்பதற்கே தகுதி தேவைப்படும் பொழுது, கடவுளைக் காண்பதற்குத் தகுதி ஏதும் தேவையில்லை என்று நாம் நினைக்கிறோம்! கீதையில் கிருஷ்ணர், ‘நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருதா:’ நான் அனைவருக்கும் என்னை வெளிப்
Read 7 tweets
Jan 15
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ராயவரம் பாலு,ஸ்ரீமடம்
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள் பெரியவாள்.
சதாசிவப் பிரும்மேந்திரரிடம், பெரியவாளுக்கு இருந்த பக்திக்கும்,
மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் உருகிப் போய்விடுவார்கள் பெரியவாள். அதிஷ்டானத்தில், ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார்கள். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவில் நின்று
கொண்டார்கள். பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ, யாரும் பார்க்கக் கூடாது என்பது ஸ்ரீமடத்து சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள் அவை. இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(