#ஶ்ரீரங்கம்#பூலோக_வைண்டம்#ஶ்ரீரங்கநாதர்
எங்கும் சுத்தினும் ரங்கனச் சேர் என்பது ஆன்றோர் வாக்கு. ஶ்ரீரங்கத்தில் முழுதாக வாழ கொடுப்பினை இல்லாவிட்டிலும் இறுதி காலத்தையாவது ரங்கனை சேவித்துக் கொண்டு அங்கேயே வாழ விருப்பம் இல்லாதோர் இல்லவே இல்லை என்று அறுதியிட்டு கூறலாம். தினம்
பெருமாள் வீதி உலா வருகிறார். உடல் நலம் இல்லாவிட்டாலும் நம் வாசலில் எழுந்தருளி நமக்கு கடாக்ஷிக்கிறார். அதனால் பலருக்கும் வேலையில் இருந்து ஒய்வு பெற்றதும் ஶ்ரீரங்கத்திலேயே குடியிருக்க முயற்சி செய்கின்றனர். இங்கு ஆசார்யர்கள் செய்யும் உபன்யாசங்களை கேட்டு பயன் பெற வேண்டும் என்று
எத்தனை பேருக்கு ஆசை! நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனை ஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை ஆசார்யர்க்ளை ஈர்த்துள்ளது? அதற்கு என்ன காரணம்? ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல். அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இருந்து கொண்டு அனுபவிப்போம். “வைகுந்தம் அடைவது மன்னவர் விதி” என்று
ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடைவதே. வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்)! ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம். வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் யாருக்குத் தான் அதை அனுபவிக்க ஆசை இருக்காது? #ஆதிசங்கரர் தன்னுடைய #ரெங்கநாத_அஷ்டகத்தில்
இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம
புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேஸ்ம்பு காங்கம்
யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!”
என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார் என்றால் பாருங்கள். ஆசைப்பட்டது அனைத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம். இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார்
ஆதிசங்கரர். ஸ்ரீரங்கம் 108 திவ்விய ஸ்தலங்களில் முதலாவது ஆகும். பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.
ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங்கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில
செழுமறையின்
முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் திர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!
என்று தன்னுடைய #அதிகாரஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி #ஸ்வாமிதேசிகன் குறிப்பிடுகிறார். ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் மொத்தம் எட்டு. அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் இவை. தெற்கே
வானமாமலை, தொண்டை நாட்டிலே ஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம், ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம், ராஜஸ்தானில் புஷ்கரம், நைமிசராண்யம், என்பவை தான் அவை. வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன் படுத்துவதில்லை. நைமிசாரண்யத்தில்
பகவான் காடு ரூபமாக உள்ளார். தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில். ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார். இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில், ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார். மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த
நிலையில் காட்சி அளிக்கிறார். ஆக ஸ்ரீரங்கத்திற்கு விசேஷம் சயனக் கோலம். ஆழ்வார்கள் பனிரெண்டு பேரும் பிறந்த இடங்கள் வெவ்வேறு. பொய்கை ஆழ்வார் காஞ்சியிலும், பேயாழ்வார் மயிலாபூரிலும் பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லையில் என எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்திருந்தாலும் சேர்ந்த இடம்
ஸ்ரீரங்கம். “அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ" என்று அரங்கனைத் தான் வாழ்த்தினர். அப்படிப் பெருமை பெற்றது ஸ்ரீரங்கம். அது மட்டுமா?
“இவ்வளவு நேரம் ஆகிவிட்டது, சயனம் கொள்ளுகிற நேரத்திலே எங்க கிளம்பிட்டீர்” என்று அடியவர் திருமாலிருஞ்சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார்.
“இரும் அடியவரே,
நாளைக் காலை தரிசனம் கொடுப்போம், பள்ளிக்கொள்ள ஸ்ரீரங்கம் செல்கிறோம்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அழகர்மலை அழகன். அவர் மட்டுமல்ல, திருவேங்கடத்தான்,
“எப்போது பொது சேவை முடியும்?”
என்று அர்ச்சகரைப் பார்த்துக் கேட்கிறார்.
“ஏன் ஸ்வாமி" இது அர்ச்சகர்.
“பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்ல
வேண்டும்” என்கிறார் பெருமாள்.
விக்கித்து நிக்கிறார் அர்ச்சகர். இப்படி எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம். இதை நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில் கூறுகிறார்,
“தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளுமிடத்தடி
கொட்டிட
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே”
என்று எல்லா திவ்விய தேசத்து
எம்பெருமான்களும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள் என்று பாசுரத்தில் கூறுகிறார்!
எத்தனை மகிமை ரங்கநாதனுக்கு!
ரங்கா ரங்கா
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் #சப்த_விடங்க_தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் தான் சப்த விடங்க தலங்கள் இருக்கின்றன. இந்த 7 தலங்களிலும் இறைவன் சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். இங்கு இறைவன் அருளிய தாண்டவங்கள் முக்கியத்துவம்
வாய்ந்தவை. ‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாதது’ என்று பொருள். 1. திருவாரூர் வீதிவிடங்கர் - #அசபாநடனம்.
கும்பகோணத்தில் இருந்து 43 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜ பெருமான், இறைவி - கமலாம்பாள். சிதம்பரத்திற்கும் முந்தைய கோவில் என்று சொல்லப்
படுகிறது. இங்குள்ள ஈசன் #வீதிவிடங்கர் என்று அழைக்கப் படுகிறார். இத்தல இறைவன் ஆடிய தாண்டவம் அசபா நடனம். உயிரின் இயக்கமான மூச்சுக் காற்று, உள்ளும் புறமும் சென்று வருவது போன்ற உன்னதத்தை உணர்த்துவது இந்த நடனம் ஆகும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல,
#MahaPeriyava
Author: Dr. Padma Subramanyam, 'Nrutyodaya', Chennai
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Some years back a few Russian and American professors, who came to Chennai, had darshan of
Maha Swamigal. In the year 1987, Soviet Union celebrated the Indian Cultural Festival. It was my custom to write research papers related to our culture and tradition and show it to Periyavargal. We took one such blessed paper to hand over to Professor Ribekov, the President of
the Russian Academy of Sciences and the Institute of Oriental Studies in Moscow. The only picture that adorned his room was of the Kanchi Periyavar! What wonder, he had not even seen Swamigal in person until then. He said, 'When I come to Chennai--one, I should meet the Kanchi
#குலதெய்வம் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் பல பதிவுகளை இங்கே பகிர்ந்துள்ளேன். இதோ இன்னும் ஒன்று: 1. குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. 2. குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு. கோடி நன்மை தரும். 3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை,
குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4. குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
5.நம் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான். 6. வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். 7. நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த
தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். 8. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. 9. குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும். 10. குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால்
#நற்சிந்தனை ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் பரமசிவம் என்பவர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர். அனைத்தும் கற்றவர் மற்றும் புகழ்வாய்ந்தவரும் ஆவார். பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்து இருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை
அழைத்திருந்தார்கள். பண்டிதரை அழைத்து வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார். பண்டிதர் பரமசிவம் வந்த போது அங்கே
யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதருகோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. என்னப்பா பண்ணலாம் என்று குதிரைக்காரனிடம் கேட்டார். அய்யா! நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு
Author: Smt Indira Balasubramaniam
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 6
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Kanchi Mahan needs no introduction. If it is one kind of joy to read about the experiences had by those who
approached Him, it is another kind to share them with others; and to write about them is a third kind. He was also unique in fulfilling the yearnings of those who sought Him. It was the time when Kanakabhishekam was being arranged for the Mahan. A letter received from the Matham
said that those who wished to participate in the service might give according to their Shakti, gold worth one sovereign or an equivalent amount in rupees. I decided to give the pair of bangles that I had made for my marriage. Although it was a month and a half for the day of the
இன்று ஜனவரி 21 #தை_அமாவாசை
அமாவாசை அன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடவும், கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் இரண்டு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று, மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன. பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும்,
ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். தை அமாவாைசயை ஒட்டி காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும். இன்று நீத்தோர்க்கு திதி கொடுக்க மறக்க வேண்டாம்.