#ஆதிசங்கரர்#அனாயாச_மரணம் படுக்கையில் பலநாள் படுக்காமல், உடம்பெல்லாம் பீஷ்மர் போல் ஊசி தைத்துக் கொள்ளாமல், அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே, தண்ணீர் குடிக்காதே என்று வெள்ளைக் கோட்டின் கட்டுப்பாடில்லாமல், ஆஸ்பத்திரிகளை அணுகாமல், ஊரெல்லாம் கடன் வாங்கி பில் கட்டியும் பலனின்றி,
உறவினர் நொந்து கொள்ளாமல், யாருக்கும் ஆஸ்பத்திரி, மருந்து, டாக்டர் செலவு, வைக்காமல் வந்தோம் போனோம் என்று மறையக் கொடுத்து வைக்கவேண்டாமா?
ஆதி சங்கரர் அதற்காக இந்த ஸ்லோகத்தை இயற்றியுள்ளார்.
अनायासेन मरणं विनादैन्ये- न जीवनं देहि मे क्रिपय शम्भो भक्तिं अचन्चलं
maraṇaṁ vinādainyena jīvanaṁ। dehānta tava sānidhyam, dehi me parameśvaram॥
அநாயாசேன மரணம் விநா தைன்யேன ஜீவனம்; தேஹாந்த தவ சாந்நித்யம் தேஹி மீ பரமேஸ்வரம்''
கிருஷ்ணா! அப்பா எனக்கு தேஹ உபாதை இல்லாத சிரமப்படாத, யாரையும் படுத்தாமல், எவருக்கும் துன்பமில்லாமல், உன்னை நன்றி கலந்த
பக்தியோடு நினைத்துக் கொண்டே இந்த உலகை விட்டு பறக்கும் மரணத்தை கொடுப்பாயா?
“பரமேஸ்வரா நான் கேட்பது மூன்று வரம். ஒன்று, கஷ்டமே இல்லாத வலி இல்லாத சுக மரணம். இரண்டாவது, நான் எதற்கும், எவரிடமும், கையேந்தி தஞ்சமடையாமல் சுதந்திரமாக வாழ்ந்து மறையவேண்டும். மூன்றாவது வரம் என்ன தெரியுமா?
கிருஷ்ணா!! என்னை நீ விடவே கூடாது என் கடைசி நிமிஷத்தில் நீ என்னோடு இருந்து நான் உன்னை அடைய உதவ வேண்டும்.”
காஞ்சி #மகாபெரியவா ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது. நாம் கண்டிப்பாக இதை மனப்பாடம் செய்து தினமும் பலதடவை வேண்டிக்கொள்வது நமக்கு நல்லது தானே.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பகவத்கீதை
பகவத் கீதை இந்துக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்குமான வாழ்க்கைத் தத்துவ நூலாகும். வயதானவர், ஓய்வு பெற்றவர் மட்டுமின்றி எல்லா வயதினரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். உலகளாவிய நலனுக்கும் வழி வகுக்கிறது, அன்றாட பிரச்சனைகளுக்கும் கீதை பதில் அளிக்கிறது.
கீதையின் அழகு, அதன் பொருள், விளக்கம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவை பகவான் கண்ணனின் உபதேசத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு கோணங்களில் அதைப் பார்த்தார்கள். எனவே, ஆரம்பகால ஆய்வுகள், ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜர், மத்வா, அபிநவகுப்தர்,
பாஸ்கர, நிம்பர்கா, வல்லபா, மதுசூதன சரஸ்வதி, சைதன்யா போன்றவர்களின் கீதைச் செவ்வியல் விளக்கங்களின் தத்துவ அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கப் பட்டிருந்தன. கீதையின் நவீன விரிவுரையாளர்களான பாலகங்காதர திலகர், ஸ்ரீஅரபிந்தோ, ஸ்ரீ சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஸ்ரீ சின்மயானந்தா
#விசிஷ்டாத்வைதம்#ஸ்ரீவைஷ்ணவம்#த்வயம் என்பது
ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ
திருமால் ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். இதன் பொருள் லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுக்கு பிராட்டியின்
சேர்த்தியிலே கைங்கர்யம் புரிய வேண்டும் என்பதே ஆகும். எம்பெருமானின் இரு அவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாஸ்ரமத்தில் உபதேசித்தது. பகவானின் உடைமையான ஜீவாத்மா அவரின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்பது இதன்
எளிய பொருள். #திருவாய்மொழி த்வயத்தின் பொருளை விளக்க ஆழ்வார்களின் தலைவரான #நம்மாழ்வார் நமக்கு அருளியது. ஆறாம் பத்தில் இறுதியில் நம்மாழ்வார் திருவேங்கடமுடையானிடம் சரணாகதி அனுஷ்டிக்கிறார். ரகஸ்ய த்ரயத்திலே வீரு கொண்டு விளக்கும் மகா மந்திரம் முன் வாக்கியத்தாலே சரணாகதி அனுஷ்டிப்பதையும
#ஸ்ரீவைத்யவீரராகவபெருமாள்#திருஎவ்வுள்
புருபுண்ணியர் என்ற முனிவர் புத்திர பாக்கியத்திற்காக மகாவிஷ்ணுவை வேண்டி சாலியக்ஞம் (யாகம்) நடத்தினார். இதன் பலனாக பிறந்த ஆண் குழந்தைக்கு யாகத்தின் பெயரால், #சாலிகோத்ரர் என்று பெயர் சூட்டினார். சாலிகோத்ரரும் பெருமாள் பக்தராக விளங்கினார்.
இங்குள்ள தீர்த்தக்கரையில் பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். பெருமாளுக்கு தினைமாவு படைத்து யாராவது ஒருவருக்கு கொடுத்த பின்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் பூஜையின் போது வந்த முதியவர் பசிப்பதாக சொல்லி உணவு கேட்டார். மகரிஷி அவருக்கு தினை மாவு கொடுத்தார்.
அதைச் சாப்பிட்டவர் தனக்கு மேலும் பசிப்பதாகச் சொல்லவே தான் சாப்பிட வைத்திருந்த மாவையும் கொடுத்தார். தனக்கு களைப்பாக இருப்பதாகச் சொன்ன அந்த முதியவர் உறங்குவதாக கூறினார். சயனத்தில் மகாவிஷ்ணுவாக சுயரூபம் காட்டியருளினார். பெருமாள் காட்சி தந்த நாள் தை அமாவாசை. பின் இவ்விடத்தில் கோவில்
#சந்தியாவந்தனத்தின்_பெருமை#மகாபெரியவா உபதேசித்தது.
ஒருகதை இருக்கிறது இக்கதை “சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னையை சேர்ந்த ஆர்க்கியலாஜி கல் துறை பிரசுரித்திருக்கும் பதிவுகள் இந்தக் கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில்
ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன்உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐஸ்வர்யத்தை வைத்து, தானம் செய்யப் போவதாக விளம்பரம் செய்தார். அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அநேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள் அந்த காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்கபதில் சொல்ல
முடியாமல், தானம் வாங்க வந்தவர்கள் எல்லாம் மரணமுற்றார்கள். கன்னடியர் என்ற ஒரு பிராம்மணர் இருந்தார் ஸந்த்யாவந்தன கர்மாவில் வெகு ஸ்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள் முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது. அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார். அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்று
#மகாபெரியவா 1983 ல் நடந்த சம்பவம் இது. ஜகத்குரு ஆதிசங்கரருக்கு அஞ்சல் தலை வெளியிட விரும்பினார் அன்றைய பிரதமர் இந்திரா. மஹா பெரியவரின் கருத்தை அறிய சி. சுப்பிரமணியம் அவர்களை அனுப்பினார்.
மஹாராஷ்டிராவிலுள்ள சதாராவில் சுவாமிகளைச் சந்தித்தார்
சி. சுப்பிரமணியம்.
"வெளியிடலாமா என்பது
குறித்து மத்திய அரசு எனது கருத்து கேட்கிறதா? அல்லது ஆசியைக் கோருகிறதா? முன்பே முடிவு ஆகிவிட்டால் நான் ஆட்சேபிக்கவில்லை" என்றார் பெரியவா.
"தங்களின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு செய்வோம்" என்றார் சுப்புரமணியம்.
"நல்லது. அப்படியானால் சொல்கிறேன். அஞ்சல் தலை தேவையில்லை. அவதார
புருஷரான ஆதிசங்கரர் பிறப்பிலேயே பெருமை மிக்கவர். தபால் தலையில் அவரது படத்தை வெளியிட்டால் என்னவாகும்? நாக்கால் எச்சில் படுத்தி அஞ்சல் உறை மீது ஒட்டுவார்கள். நடைமுறையில் மக்கள் இப்படித் தான் செய்கிறார்கள். அது மரியாதையாகுமா?” எனக் கேட்டார் பெரியவா. அதிர்ச்சியடைந்த சி.சுப்புரமணியம்
#ஶ்ரீராமானுஜர் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக் கொடுத்தவர் விசிஷ்டாத்வைத ஶ்ரீவைஷ்ணவ ஆசார்யர் ஸ்ரீ ராமானுஜர். அத்துழாய், ஆண்டாள், பொன்னாச்சி, தேவகி, அம்மங்கி, பருத்திக் கொல்லை
அம்மாள், திருநறையூர் அம்மாள், எதிராசவல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்! அவர் பெண் குலம் தழைக்க வந்த ஸ்ரீ பெரும்பூதூர் மாமுனிகள். ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கும் இந்துக் கோயிலில் பூஜைகள் வைத்தார். அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. அதுவும் சுமார்
ஆயிரம் ஆண்டுக்கு முன்பு? பெண்களை அன்றே சரிசமமாக பார்க்கப்பட்ட சமூகம். அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது! அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு என்றால் சும்மாவா?
எப்போதோ ஆண்டாள் பாடிய ஒரு பாட்டு...“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி