#சந்தியாவந்தனத்தின்_பெருமை#மகாபெரியவா உபதேசித்தது.
ஒருகதை இருக்கிறது இக்கதை “சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னையை சேர்ந்த ஆர்க்கியலாஜி கல் துறை பிரசுரித்திருக்கும் பதிவுகள் இந்தக் கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில்
ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன்உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐஸ்வர்யத்தை வைத்து, தானம் செய்யப் போவதாக விளம்பரம் செய்தார். அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அநேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள் அந்த காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்கபதில் சொல்ல
முடியாமல், தானம் வாங்க வந்தவர்கள் எல்லாம் மரணமுற்றார்கள். கன்னடியர் என்ற ஒரு பிராம்மணர் இருந்தார் ஸந்த்யாவந்தன கர்மாவில் வெகு ஸ்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள் முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது. அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார். அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்று
விரல்களைக் காட்டியது. முடியாது என்றார் பிறகு இரண்டு விரல்களைக் காட்டியது. அதற்கும் முடியாது என்றார். கடைசியாக ஒரு விரலைக் காட்டியது, சரி என்றார். தான் ஒன்றும் செய்ய முடியாததைக் கண்டு, காலபுருஷன் அந்த உருவத்தினின்றும் மறைந்தான் அந்தத் தானத்தில் அடங்கிய சகல ஐசுவர்யங்களையும் அந்தப்
பிராமணர் வாங்கிக் கொண்டார். மூன்று விரல்கள், மூன்று வேளைகளில் செய்யப்படும் ஸந்த்யா வந்தனத்தின் பலன். இரண்டு விரல்கள், காலை மாலை இருவேளைகளின் ஸந்த்யாவந்தன பலன். ஒருவிரல், ஒரு வேளை, அதாவது மாத்யாந்நிகத்தின் பலன்என்பது காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளின் அர்த்தம். ஸந்த்யா
வந்தனத்தின் ஒரு வேளையின் பலனைக் கொடுத்ததன் மூலமும், ஐசுவர்யத்தைத் தானம் வாங்கியதன் மூலமும் பிராம்மணருக்குப் பாபம் சம்பவித்து விட்டது. அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிய வழியைத் தெரிந்து கொள்ள அகத்திய முனிவர் தவம் செய்து கொண்டு இருப்பதாகச் சொல்லப்படும் மலைச்சாரலுக்குச்
சென்றார். போகும் முன், தம்மிடம் இருந்த தனத்தைப் பாதுகாக்கும்படி, கோவில் பூஜை செய்து வந்த ஒரு குருக்களிடம் ஒப்படைத்தார். எங்கே தேடியிம் அகத்திய முனிவர் காணப்படவில்லை. முனிவரைக் காணாமல் அவர் ஏக்கமுற்றிருக்கும் சமயத்தில், அகத்திய முனிவர் கிழ வடிவத்துடன் பிராம்மணர் முன் தோன்றினார்.
அவரிடத்தில், பிராமணர் நடந்ததைச் சொன்னார். அந்தக் கிழவர், நீ போகின்ற வழியில் ஒரு பசுமாடு உனக்குத் தென்படும். அந்த இடத்தில் இருந்து நீ ஒரு கால்வாய் வெட்ட ஆரம்பிக்க வேண்டும். பசுமாடு எவ்வளவு தூரம் சென்று நிற்கின்றதோ அவ்வளவு தூரத்திற்குக் கால்வாய் வெட்ட வேண்டும். நடுவில் பசுமாடு எந்த
இடங்களில் சாணி போட்டு மூத்திரம் பெய்கிறதோ அந்த இடங்களில், சாணி போட்ட இடத்தில் மடை அமைக்கவும், மூத்திரம் பெய்யும் இடத்தில் வாய்க்கால் வெட்ட வேண்டும் இவ்விதம் செய்தால் உமக்கு ஏற்பட்டிருக்கும் பாபம் போய்விடும் என்று கிழவர் சொன்னார். கன்னடியர் அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்டு,
திரவியத்தைத் திரும்ப வாங்க குருக்களிடம் சென்றார். குருக்களுக்குப் பிராமணர் கொடுத்த தனத்தின் மீது மோகம் ஏற்பட்டு விட்டது. அந்தக் காலத்து பவுன் துவரம் பருப்பை ஒத்திருக்கும். ஆதலால், குருக்கள் பிராமணரிடம் துவரம் பருப்புகளைக் கொடுத்து, நீர்கொடுத்த திரவியம் இதுதான், எடுத்துக்கொள்ளும்
என்றார். குருக்களின் வஞ்சகச் செயலை அறிந்து கொண்ட பிராமணர், “நான் கொடுத்தது இதுவல்ல, நான் கொடுத்ததைக் கொடுங்கள்” என்று மிகவும் பிரார்த்தித்துக் கேட்டுக் கொண்டார். எந்தப் பயனும் ஏற்படவில்லை ஆகவே, ராஜாவிடம் சென்று முறையிட்டார். குருக்களும் தருவிக்கப் பட்டார். ஆனால் குருக்கள்
குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை ஆகவே குருக்கள் பூஜை செய்யும் லிங்கத்தைக் கட்டிக் கொண்டு பிரமாணம் செய்தால் நான் ஒப்புக் கொள்கிறேன் என்று பிராமணர் கூறினார். அவ்விதம் செய்வதாகக் குருக்களும் சம்மதித்து விட்டார். குருக்கள் ஆபிசாரப் பிரயோகத்தில் தேர்ந்தவரானதால், லிங்கத்திலுள்ள ஸ்வாமியைப்
பக்கத்திலுள்ள ஒருமரத்தில் ஆகர்ஷனம் செய்து விட்டார். இதை ஸ்வாமி, பிராமணரின் சொப்பனத்தில் தோன்றி, நடந்ததைச் சொல்லி விட்டார். பிராமணர் மறுபடியும் ராஜாவிடம் சென்று “குருக்கள் மரத்தைக் கட்டிக் கொண்டு பிராமணர் செய்யும்படிச் செய்ய வேணுமாகக் கேட்டுக் கொண்டார்” குருக்கள் மறுப்பளித்தார்.
ராஜா விடவில்லை மரத்தைக் கட்டிக் கொண்டு பிரமாணம் செய்யுமாறு ஆணையிட்டார். குருக்கள் மரத்தைக் கட்டிக் கொண்டு பிரமாணம் செய்தார். உடல் எரிந்து போய் விட்டது. ‘எரிச்சுக்கட்டி ஸ்வாமி’ என்பது அந்த ஆலய மூர்த்தியின் பெயர் திருநெல்வேலி ஜில்லாவில் அந்த ஆலயம் இருக்கிறது. பிறகு, பிராமணர் தம்
தனத்தை எடுத்துக் கொண்டு கிழவர் சொல்லியபடி பசு மாட்டைக் கண்டு கால்வாய் வெட்டினார் ‘கன்னடியன் கால்வாய்’ என்பது அதன் பெயர் திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கிறது. அந்தக் கால்வாயின் பிரதேசங்கள் இன்றைக்கும் செழித்திருக்கின்றன. இந்தக் கதையினால் ஸந்த்யாவந்தனத்தின் பெருமை நன்கு விளங்குகிறது
எனவே ஸந்த்யா வந்தனம் ஒரு கடமை. அது செய்வதால் உலக க்ஷேமம் ஏற்படுகின்றது. ஸ்ரத்தையுடன் செய்தால் மோக்ஷம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு, நமது கடமைகளில் ஒன்றாகச் செய்து வரவேண்டும் என்று உங்கள் எல்லோரிடமும் தெரிவிக்கின்றேன்” என்று ஸ்ரீ மகா பெரியவாள் அருளினார்கள்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பகவத்கீதை
பகவத் கீதை இந்துக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்குமான வாழ்க்கைத் தத்துவ நூலாகும். வயதானவர், ஓய்வு பெற்றவர் மட்டுமின்றி எல்லா வயதினரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். உலகளாவிய நலனுக்கும் வழி வகுக்கிறது, அன்றாட பிரச்சனைகளுக்கும் கீதை பதில் அளிக்கிறது.
கீதையின் அழகு, அதன் பொருள், விளக்கம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவை பகவான் கண்ணனின் உபதேசத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது. வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு கோணங்களில் அதைப் பார்த்தார்கள். எனவே, ஆரம்பகால ஆய்வுகள், ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜர், மத்வா, அபிநவகுப்தர்,
பாஸ்கர, நிம்பர்கா, வல்லபா, மதுசூதன சரஸ்வதி, சைதன்யா போன்றவர்களின் கீதைச் செவ்வியல் விளக்கங்களின் தத்துவ அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கப் பட்டிருந்தன. கீதையின் நவீன விரிவுரையாளர்களான பாலகங்காதர திலகர், ஸ்ரீஅரபிந்தோ, ஸ்ரீ சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஸ்ரீ சின்மயானந்தா
#விசிஷ்டாத்வைதம்#ஸ்ரீவைஷ்ணவம்#த்வயம் என்பது
ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ
திருமால் ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். இதன் பொருள் லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுக்கு பிராட்டியின்
சேர்த்தியிலே கைங்கர்யம் புரிய வேண்டும் என்பதே ஆகும். எம்பெருமானின் இரு அவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாஸ்ரமத்தில் உபதேசித்தது. பகவானின் உடைமையான ஜீவாத்மா அவரின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்பது இதன்
எளிய பொருள். #திருவாய்மொழி த்வயத்தின் பொருளை விளக்க ஆழ்வார்களின் தலைவரான #நம்மாழ்வார் நமக்கு அருளியது. ஆறாம் பத்தில் இறுதியில் நம்மாழ்வார் திருவேங்கடமுடையானிடம் சரணாகதி அனுஷ்டிக்கிறார். ரகஸ்ய த்ரயத்திலே வீரு கொண்டு விளக்கும் மகா மந்திரம் முன் வாக்கியத்தாலே சரணாகதி அனுஷ்டிப்பதையும
#ஸ்ரீவைத்யவீரராகவபெருமாள்#திருஎவ்வுள்
புருபுண்ணியர் என்ற முனிவர் புத்திர பாக்கியத்திற்காக மகாவிஷ்ணுவை வேண்டி சாலியக்ஞம் (யாகம்) நடத்தினார். இதன் பலனாக பிறந்த ஆண் குழந்தைக்கு யாகத்தின் பெயரால், #சாலிகோத்ரர் என்று பெயர் சூட்டினார். சாலிகோத்ரரும் பெருமாள் பக்தராக விளங்கினார்.
இங்குள்ள தீர்த்தக்கரையில் பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். பெருமாளுக்கு தினைமாவு படைத்து யாராவது ஒருவருக்கு கொடுத்த பின்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் பூஜையின் போது வந்த முதியவர் பசிப்பதாக சொல்லி உணவு கேட்டார். மகரிஷி அவருக்கு தினை மாவு கொடுத்தார்.
அதைச் சாப்பிட்டவர் தனக்கு மேலும் பசிப்பதாகச் சொல்லவே தான் சாப்பிட வைத்திருந்த மாவையும் கொடுத்தார். தனக்கு களைப்பாக இருப்பதாகச் சொன்ன அந்த முதியவர் உறங்குவதாக கூறினார். சயனத்தில் மகாவிஷ்ணுவாக சுயரூபம் காட்டியருளினார். பெருமாள் காட்சி தந்த நாள் தை அமாவாசை. பின் இவ்விடத்தில் கோவில்
#ஆதிசங்கரர்#அனாயாச_மரணம் படுக்கையில் பலநாள் படுக்காமல், உடம்பெல்லாம் பீஷ்மர் போல் ஊசி தைத்துக் கொள்ளாமல், அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே, தண்ணீர் குடிக்காதே என்று வெள்ளைக் கோட்டின் கட்டுப்பாடில்லாமல், ஆஸ்பத்திரிகளை அணுகாமல், ஊரெல்லாம் கடன் வாங்கி பில் கட்டியும் பலனின்றி,
உறவினர் நொந்து கொள்ளாமல், யாருக்கும் ஆஸ்பத்திரி, மருந்து, டாக்டர் செலவு, வைக்காமல் வந்தோம் போனோம் என்று மறையக் கொடுத்து வைக்கவேண்டாமா?
ஆதி சங்கரர் அதற்காக இந்த ஸ்லோகத்தை இயற்றியுள்ளார்.
अनायासेन मरणं विनादैन्ये- न जीवनं देहि मे क्रिपय शम्भो भक्तिं अचन्चलं
#மகாபெரியவா 1983 ல் நடந்த சம்பவம் இது. ஜகத்குரு ஆதிசங்கரருக்கு அஞ்சல் தலை வெளியிட விரும்பினார் அன்றைய பிரதமர் இந்திரா. மஹா பெரியவரின் கருத்தை அறிய சி. சுப்பிரமணியம் அவர்களை அனுப்பினார்.
மஹாராஷ்டிராவிலுள்ள சதாராவில் சுவாமிகளைச் சந்தித்தார்
சி. சுப்பிரமணியம்.
"வெளியிடலாமா என்பது
குறித்து மத்திய அரசு எனது கருத்து கேட்கிறதா? அல்லது ஆசியைக் கோருகிறதா? முன்பே முடிவு ஆகிவிட்டால் நான் ஆட்சேபிக்கவில்லை" என்றார் பெரியவா.
"தங்களின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு செய்வோம்" என்றார் சுப்புரமணியம்.
"நல்லது. அப்படியானால் சொல்கிறேன். அஞ்சல் தலை தேவையில்லை. அவதார
புருஷரான ஆதிசங்கரர் பிறப்பிலேயே பெருமை மிக்கவர். தபால் தலையில் அவரது படத்தை வெளியிட்டால் என்னவாகும்? நாக்கால் எச்சில் படுத்தி அஞ்சல் உறை மீது ஒட்டுவார்கள். நடைமுறையில் மக்கள் இப்படித் தான் செய்கிறார்கள். அது மரியாதையாகுமா?” எனக் கேட்டார் பெரியவா. அதிர்ச்சியடைந்த சி.சுப்புரமணியம்
#ஶ்ரீராமானுஜர் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக் கொடுத்தவர் விசிஷ்டாத்வைத ஶ்ரீவைஷ்ணவ ஆசார்யர் ஸ்ரீ ராமானுஜர். அத்துழாய், ஆண்டாள், பொன்னாச்சி, தேவகி, அம்மங்கி, பருத்திக் கொல்லை
அம்மாள், திருநறையூர் அம்மாள், எதிராசவல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்! அவர் பெண் குலம் தழைக்க வந்த ஸ்ரீ பெரும்பூதூர் மாமுனிகள். ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கும் இந்துக் கோயிலில் பூஜைகள் வைத்தார். அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. அதுவும் சுமார்
ஆயிரம் ஆண்டுக்கு முன்பு? பெண்களை அன்றே சரிசமமாக பார்க்கப்பட்ட சமூகம். அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது! அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு என்றால் சும்மாவா?
எப்போதோ ஆண்டாள் பாடிய ஒரு பாட்டு...“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி