#ஸ்ரீவைஷ்ணவம்#எம்பார் வைணவ பெரியோர்களில் மிக்கப்புகழுடைய எம்பார் ஸ்ரீபெரும்பூதூர் அருகிலுள்ள மழலை மங்கலத்தில் (மதுரமங்கலம்) 1026 ஆம் ஆண்டு தை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் கமலநயன பட்டர், ஸ்ரீதேவி அம்மாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார். ஸ்ரீதேவி அம்மாள் இராமானுஜருக்கு சிற்றன்னை
தாய் மாமனான திருமலை நம்பி இவருக்கு இட்ட பெயர் கோவிந்தபட்டர். திருப்புட்குழியில் தன் அண்ணன் இராமானுஜருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றார். பின்னாளில் எம்பார் என வைணவர்களால் புகழ்பெற்றவர் இவரே. அருளிச்செயலுக்கு பொருள் கூறுவதில் மட்டுமல்லாது, ஸ்ரீராமாயண ஸ்லோகங்களுக்கும் பொருள்
கூறுவதில் வல்லவர். ஸர்வேஸ்வரனான எம்பெருமானுக்கும் ஓர் அறியாமை, மறதி, மற்றும் செய்ய முடியாத ஒன்று உண்டு என்று எம்பார் அருளிச் செய்வாராம். எம்பெருமானை ஒருவன் சரணடைந்து விட்டால், அவன் செய்த குற்றங்களை எம்பெருமான் மறந்து விடுகிறான். அறியாமல் அவன் செய்யும் குற்றங்களை அறியாமல் இருந்து
விடுகிறான். சரணமடைந்த ஒருவனை, கைவிடுவது என்பது மட்டும் எம்பெருமானால் இயலாத காரியமாகி விடுகிறது என்று அருளிச் செய்வாராம். எம்பெருமானின் திருவருள் என்கிற வெள்ளம், கரை புரண்டால் அதனை தடுக்க எம்பெருமானாலும் முடியாது என்பது நம்பிள்ளையின் திருவாக்கு. வீபஷணாழ்வான் சரணாகதி செய்த
சமயத்தில், வானரர்கள் அவரை ஏற்றுக் கொள்ள கூடாது என்று கூற, சக்கரவர்த்தி திருமகனோ, "இராமா! நான் உன் நண்பன் என்று சொல்லிக் கொண்டு வந்தாலும், அவனிடம் அநேக குற்றங்கள் இருந்தாலும் அவனை நான் கைவிட மாட்டேன்" என்று கூறியது இங்கு நோக்கதக்கது. சக்கரவர்த்தி திருமகன் அருளிய அவ்வார்த்தைக்கே
எம்பார் இவ்வாறு சுவைபட எம்பெருமானுக்கு அறியாமை, மறதி, செய்ய முடியாதது என்று ஒன்று உண்டு என்று அருளிச்செய்தார்.
சரணாகத வஸ்தலனான சக்கரவர்த்தி திருமகனும், எம்பாரும் ஒரே திருநக்ஷத்திரத்தில் (புனர்பூசம்) அவதரித்தவர்கள் என்பது கூறிப்பிடத்தக்கது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பக்தனுக்காக_எதையும்_செய்யும்_பகவான்
சேனாயி ஒரு முடி திருத்துபவர், விட்டலன் பக்தர். தனது குடிசையில் அழகிய பாண்டுரங்கன் ருக்மணி சிலைகளை வைத்து இரவும் பகலும் பாண்டுரங்கன் பஜனை செய்வார். மற்ற பக்தர்களும் அவரோடு சேர்ந்து அகண்ட பஜன் செய்வதும் வழக்கம். அவர் வாழ்ந்த காலம் நமது தேசத்தை
மொகலாயர்கள் ஆண்ட நேரம்! பந்தர்பூர் மற்றும் பல ஊர்களுக்கும் அதிகாரியாக ஒரு நவாப் மொகலாய சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக பண்டரிபுரத்தில் இருந்தான். அவனுக்கு ஒரு பிரத்யேகமான முடி திருத்துபவன் தேவை. ஒரு நல்ல ஆள் கிடைத்தால் அவனது மாளிகை அருகிலேயே இருக்க இடம் கொடுத்து, சகல குடும்ப
செலவுகளையும் ஏற்று, ஸௌகரியமாக வைத்துக் கொள்வதாக அறிவிப்பு வந்தது. நவாபிடம் வேலை செய்பவன் மற்றெவர்க்கும் பணி புரியக்கூடாது. இதிலென்ன கஷ்டம்? வேலைக்கு வேலையும் மிச்சம், கை நிறைய காசு, இருக்க வீடு, சகல தேவைகளும் நவாப் செய்து கொடுப்பார். தினமும் ஒரு அரைமணி நேரம் நவாபிடம் வேலை,
#நற்சிந்தனை யாரையும் திட்டாமல், சாபம் விடாமல், கெடுதல் நினைக்காமல் இருப்போம். நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். நாம் மனம் வருந்தினாலே போதும் நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை கிடைத்து விடும். எதை செய்தாலும் யாரையும் காயப் படுத்தாமல் வாழப் பழகுவோம். கடவுள் நாம்
கேட்டதை தரவில்லை என்று கவலைப்படாமல் கெட்டதை தரவில்லை என்று மகிழ்ச்சி கொள்வோம். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழவும், இல்லாததை நினைத்து கவலைப்படாமல் இருக்கவும் பயிற்சி எடுப்போம். நம்மைப் படைத்த கடவுளுக்கு தெரியும் நமக்கு எந்த நேரத்தில் எது தேவை என்று. அவன் மேல் நம்பிக்கையுடன்
பொறுமையாக இருந்தால் நல்லதே நடக்கும்! எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்போம். தாங்கவே முடியாத துன்பம் வந்தால் கூட பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்வோம். யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு ஒழிப்போம். அது நம் நிம்மதியை தான் தொலைக்க வைக்கும்.
#ராஜமாரி_அம்மன்_திருக்கோயிலில்
மூலவர் : ராஜமாரி அம்மன்
ஊர் : ஒன்னிப்பாளையம்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
பல வருடங்களுக்கு முன் ஒன்னிபாளையத்தில் வசித்த மக்கள், சத்தியமங்கலம் அருகிலிருக்கும் கொத்தமங்கலத்திற்குச் சென்று அங்கே கோயில் கொண்டிருந்த அம்மனை வழிபட்டு
வந்தனர். அங்கு விவசாயம் செழித்தும், மக்கள் வசதி வாய்ப்போடும் இருப்பதற்கு அந்த அம்மனே காரணம் என நம்பினர். அதுபோல் நம் ஊரிலும் ஒரு கோயில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணினர். அதை அந்த அம்மனிடமும் கோரிக்கையாக வைத்தனர். அச்சமயத்தில் ஒருநாள், ஒன்னிபாளையத்தைச் சேர்ந்த பெரியவர்
ஒருவரை ஆட்கொண்ட அம்மன், நான் கொத்தமங்கலத்துக்காரி இப்போது உங்கள் ஊரில் நிலைகொள்ள வந்திருக்கிறேன். எனக்கு இங்கு கோயில் எழுப்பினால், சுற்றியுள்ள எட்டு ஊர்களையும் ஏகபோகமாக வாழவைப்பேன் என்று அருள்வாக்குக் கூற, அப்படி அமைந்ததுதான் ஒன்னிப்பாளையம் ராஜமாரியம்மன் கோயில். துவக்கத்தில்
#MahaPeriyava
Narrated by the blessed devotee, Smt. Prathiyangara Padmasini, sharing her interactions with Him!
One lady used to say, "He is like Lord Krishna and we are always swarming Him like those calves, enjoying His presence".
It was Gokulashtami. Kanchi MahaSwamigal had
gone to the backyard for His morning duties at 4am. His Kainkaryam Sri Srikantan told me, "Mami, I will open the door secretly for you. You should put the necessary kolams and Kutty Krishna's feet on the floor as quickly as possibly and run from here, Ok?"
I said Ok! He said,
"If you want, I will close the backyard door. Let me know the moment you are finished with the kolams and then I will open it again for Him".
He was talking like as if the Sarveshwaran will not know about our plans! I put the kolams, the Kutty Krishna's feet came out so
#MahaPeriyava Pattappa is a well known name in Mylapore for his catering and here is the experience of his son Sri. Balaji Pattappa. We have seen people referring Sri Mahaperiyava as ‘Sarvagyan’ and ‘Sarvavyapi’ and from episode one will firmly believe that HE is omniscient and
omnipresent. The most interesting part of this episode is that this gentleman does not have any connection with Sri Mahaperiyava and the Kanchi Mutt but still the ‘Karuna Moorthy’ had decided to shower his blessings on him. Sri Balaji was affected by Covid -19 and was fighting
for his life. The Doctors were hopeless and strongly believed that they will not be able to save him at any cost. ‘Man proposes and god disposes’ . After all, who are we to decide things? It is HE who decides everything. Moments passed…Sri Balaji closed his eyes and had a quick
#மீனாட்சிசொக்கநாதர்_திருக்கோயில் #கோச்சடை
மதுரை மாநகரில் உள்ள மிகப் பழமையான கோயிலில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் மண்டபங்களை ஆராய்ச்சி செய்த தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் மிக பழமையான கோயில் இது என்பதை உறுதி செய்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில்
மீனாட்சி அம்பாள் உடனுறை சொக்கநாதர் எழுந்தருளி அருள் பாலிக்கும் இத்திருத்தலம் உள்ளது.
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சிவ தீர்த்தம்
புராண பெயர்: #கோவிச்சடையன்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார். ஆண் வில்வ மரமும் பெண் வில்வமரமும் அருகருகே
அதுவும் சுவாமிக்கு மிகவும் பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் மிக முக்கியச் சிறப்பு. இங்குள்ள ஆண் வில்வ மரத்தின் ஒரு இணுக்கில் 3 வில்வ இலைகள் இருக்கும். பெண் வில்வ மரத்தில் ஒரே இணுக்கில் 7 வில்வ இலைகள் வரை இருப்பது அதிசயம். பொதுவாக அரசமரமும் வேப்ப மரமும் ஒருங்கே அமையப்பெற்ற இடத்தில்