#திரிம்பகேஸ்வரர்_கோவில் #நாசிக்
சுயம்பு லிங்கம் உள்ள இத்தலத்தின் கருவறையில் எப்பொழுதும் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கத் தலங்களுள் இத்தலம் ஒன்றாகும். சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கும் மூன்று சிறிய லிங்கங்கள்
ஒரே ஆவுடையாரில் உள்ளன. இங்கே தான் நீர் எப்போதும் ஊறிக்கொண்டே இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 2500 அடி உயரத்தில் மலை மீது, #பிரம்மகிரி என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடனும், அதில் நான்கு
வாயில்களைக் கொண்டும் உள்ளது. இக்கோவில் பதினெட்டாம் நூற்றாண்டில் மூன்றாம் பேஷ்வாவான நானாசாகிப் காலத்தில் கட்டப்பட்டது. கோவிலின் கருவறையின்மேலே வழைப்பூ வடிவில் கூம்பான விமானம் அமைந்துள்ளது. அதன் உச்சியில் தங்கக் கலசமும், சிவனின் சூலமும் அமைந்துள்ளது. கோவிலின் முதன்மைத் தெய்வமான
திரிம்பகேஸ்வரரின் லிங்கத்தில் ஆவுடையார் மட்டுமே உள்ளது லிங்கம் இருக்கவேண்டிய இடத்தில் உரல் போன்று பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்திகளைக் குறிக்கும் மூன்று சிறு லிங்கங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரனாக கருதுகின்றனர். நாள்தோறும் இந்த ஆவுடையர் குழிமேல் ஒரு
முகம் கொண்ட வெள்ளிக்கவசமோ அல்லது மூன்று முகம் கொண்ட கவசமோ சாத்தப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு நாட்களில் ஐந்து முக தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. சிவ பெருமானின் கிரீடம் ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 4-5 மணி முதல் காட்டப்படுகிறது. இக்கோவில் திருக்குளம் அமிர்தவர்ஷினி.
பிரம்மகிரியில் இருந்து தான் #கோதாவரி நதி உற்பத்தியாகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த #கௌதம_முனிவர் தன் மனைவியுடன் இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த #கங்கையை அவிழ்த்து விட்டார் என்றும் அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக
ஓடிக் கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க #சிவன், #பிரம்மா, #விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் அதனாலேயே இங்கு மூன்று லிங்கங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அம்மலையில் #கௌதமர் வாழ்ந்த குகையும் அவரால் உண்டாக்கப் பட்ட புனித
தீர்த்தமும் உள்ளன. கௌதமர் வழிபட்ட 1008-லிங்கங்களும் அக்குகையில் இருக்கின்றன. இங்கு சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் ரீதியாக, இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை புலப்படவில்லை. அறிவியலால் அறிய முடியாது பல ரகசியங்கள் நம்
நாட்டில் பல உண்டு என்பதற்கான ஒரு சிறந்த சான்று இந்த நீரூற்று அபிஷேகம் என்றே கூறலாம்.

அமைவிடம்: #திரியம்பகேஸ்வரர் திருக்கோவில் மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 1
#பக்தனுக்காக_எதையும்_செய்யும்_பகவான்
சேனாயி ஒரு முடி திருத்துபவர், விட்டலன் பக்தர். தனது குடிசையில் அழகிய பாண்டுரங்கன் ருக்மணி சிலைகளை வைத்து இரவும் பகலும் பாண்டுரங்கன் பஜனை செய்வார். மற்ற பக்தர்களும் அவரோடு சேர்ந்து அகண்ட பஜன் செய்வதும் வழக்கம். அவர் வாழ்ந்த காலம் நமது தேசத்தை Image
மொகலாயர்கள் ஆண்ட நேரம்! பந்தர்பூர் மற்றும் பல ஊர்களுக்கும் அதிகாரியாக ஒரு நவாப் மொகலாய சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக பண்டரிபுரத்தில் இருந்தான். அவனுக்கு ஒரு பிரத்யேகமான முடி திருத்துபவன் தேவை. ஒரு நல்ல ஆள் கிடைத்தால் அவனது மாளிகை அருகிலேயே இருக்க இடம் கொடுத்து, சகல குடும்ப
செலவுகளையும் ஏற்று, ஸௌகரியமாக வைத்துக் கொள்வதாக அறிவிப்பு வந்தது. நவாபிடம் வேலை செய்பவன் மற்றெவர்க்கும் பணி புரியக்கூடாது. இதிலென்ன கஷ்டம்? வேலைக்கு வேலையும் மிச்சம், கை நிறைய காசு, இருக்க வீடு, சகல தேவைகளும் நவாப் செய்து கொடுப்பார். தினமும் ஒரு அரைமணி நேரம் நவாபிடம் வேலை,
Read 13 tweets
Feb 1
#நற்சிந்தனை யாரையும் திட்டாமல், சாபம் விடாமல், கெடுதல் நினைக்காமல் இருப்போம். நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். நாம் மனம் வருந்தினாலே போதும் நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை கிடைத்து விடும். எதை செய்தாலும் யாரையும் காயப் படுத்தாமல் வாழப் பழகுவோம். கடவுள் நாம் Image
கேட்டதை தரவில்லை என்று கவலைப்படாமல் கெட்டதை தரவில்லை என்று மகிழ்ச்சி கொள்வோம். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழவும், இல்லாததை நினைத்து கவலைப்படாமல் இருக்கவும் பயிற்சி எடுப்போம். நம்மைப் படைத்த கடவுளுக்கு தெரியும் நமக்கு எந்த நேரத்தில் எது தேவை என்று. அவன் மேல் நம்பிக்கையுடன்
பொறுமையாக இருந்தால் நல்லதே நடக்கும்! எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்போம். தாங்கவே முடியாத துன்பம் வந்தால் கூட பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்வோம். யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு ஒழிப்போம். அது நம் நிம்மதியை தான் தொலைக்க வைக்கும்.
Read 4 tweets
Feb 1
#ராஜமாரி_அம்மன்_திருக்கோயிலில்
மூலவர் : ராஜமாரி அம்மன்
ஊர் : ஒன்னிப்பாளையம்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
பல வருடங்களுக்கு முன் ஒன்னிபாளையத்தில் வசித்த மக்கள், சத்தியமங்கலம் அருகிலிருக்கும் கொத்தமங்கலத்திற்குச் சென்று அங்கே கோயில் கொண்டிருந்த அம்மனை வழிபட்டு Image
வந்தனர். அங்கு விவசாயம் செழித்தும், மக்கள் வசதி வாய்ப்போடும் இருப்பதற்கு அந்த அம்மனே காரணம் என நம்பினர். அதுபோல் நம் ஊரிலும் ஒரு கோயில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணினர். அதை அந்த அம்மனிடமும் கோரிக்கையாக வைத்தனர். அச்சமயத்தில் ஒருநாள், ஒன்னிபாளையத்தைச் சேர்ந்த பெரியவர் Image
ஒருவரை ஆட்கொண்ட அம்மன், நான் கொத்தமங்கலத்துக்காரி இப்போது உங்கள் ஊரில் நிலைகொள்ள வந்திருக்கிறேன். எனக்கு இங்கு கோயில் எழுப்பினால், சுற்றியுள்ள எட்டு ஊர்களையும் ஏகபோகமாக வாழவைப்பேன் என்று அருள்வாக்குக் கூற, அப்படி அமைந்ததுதான் ஒன்னிப்பாளையம் ராஜமாரியம்மன் கோயில். துவக்கத்தில் Image
Read 13 tweets
Feb 1
#MahaPeriyava
Narrated by the blessed devotee, Smt. Prathiyangara Padmasini, sharing her interactions with Him!
One lady used to say, "He is like Lord Krishna and we are always swarming Him like those calves, enjoying His presence".
It was Gokulashtami. Kanchi MahaSwamigal had Image
gone to the backyard for His morning duties at 4am. His Kainkaryam Sri Srikantan told me, "Mami, I will open the door secretly for you. You should put the necessary kolams and Kutty Krishna's feet on the floor as quickly as possibly and run from here, Ok?"
I said Ok! He said,
"If you want, I will close the backyard door. Let me know the moment you are finished with the kolams and then I will open it again for Him".
He was talking like as if the Sarveshwaran will not know about our plans! I put the kolams, the Kutty Krishna's feet came out so
Read 6 tweets
Jan 31
#MahaPeriyava Pattappa is a well known name in Mylapore for his catering and here is the experience of his son Sri. Balaji Pattappa. We have seen people referring Sri Mahaperiyava as ‘Sarvagyan’ and ‘Sarvavyapi’ and from episode one will firmly believe that HE is omniscient and
omnipresent. The most interesting part of this episode is that this gentleman does not have any connection with Sri Mahaperiyava and the Kanchi Mutt but still the ‘Karuna Moorthy’ had decided to shower his blessings on him. Sri Balaji was affected by Covid -19 and was fighting
for his life. The Doctors were hopeless and strongly believed that they will not be able to save him at any cost. ‘Man proposes and god disposes’ . After all, who are we to decide things? It is HE who decides everything. Moments passed…Sri Balaji closed his eyes and had a quick
Read 5 tweets
Jan 31
#மீனாட்சிசொக்கநாதர்_திருக்கோயில்
#கோச்சடை
மதுரை மாநகரில் உள்ள மிகப் பழமையான கோயிலில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் மண்டபங்களை ஆராய்ச்சி செய்த தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் மிக பழமையான கோயில் இது என்பதை உறுதி செய்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில் Image
மீனாட்சி அம்பாள் உடனுறை சொக்கநாதர் எழுந்தருளி அருள் பாலிக்கும் இத்திருத்தலம் உள்ளது.
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சிவ தீர்த்தம்
புராண பெயர்: #கோவிச்சடையன்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார். ஆண் வில்வ மரமும் பெண் வில்வமரமும் அருகருகே Image
அதுவும் சுவாமிக்கு மிகவும் பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் மிக முக்கியச் சிறப்பு. இங்குள்ள ஆண் வில்வ மரத்தின் ஒரு இணுக்கில் 3 வில்வ இலைகள் இருக்கும். பெண் வில்வ மரத்தில் ஒரே இணுக்கில் 7 வில்வ இலைகள் வரை இருப்பது அதிசயம். பொதுவாக அரசமரமும் வேப்ப மரமும் ஒருங்கே அமையப்பெற்ற இடத்தில் Image
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(