#கீழடி #thread
மதுரையிலிருந்து சுமார் 13 கிமீ தொலைவில் உள்ள வைகை ஆற்றங்கரையில் உள்ள கீழடி எனும் குக்கிராமத்தில் இந்திய தொல்லியல் துறையின் முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியின் தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சங்க காலம் கிமு 800க்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.
(1)
கீழடியைக் கண்டுபிடித்து, 2014 முதல் 2016 வரையிலான முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய K. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமீபத்தில் ஏஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் வி. வித்யாவதியிடம் தனது 982 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கை 12 அத்தியாயங்களில்
(2)
வரலாற்று பின்னணி மற்றும் அகழ்வாராய்ச்சியின் நோக்கங்களை விளக்குகிறது. முதல் இரண்டு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பண்பாட்டு எச்சங்களின் அடிப்படையில், சங்க கால தொல்பொருள் தளத்தின் காலம் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(3)
சங்க காலம் கிமு 300 முதல் கிபி 300 வரை என நம்பப்படுகிறது. புதிய அறிக்கையின் ஆதாரங்களின் அடிப்படையில் 800 BCE மற்றும் 300 CE இடையே சங்க காலம் குறிப்பிடப்படுகிறது. வரலாற்றின் இந்த காலம் மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
(4)
கிமு 800 முதல் கிமு 500 வரையிலான ஆரம்பகால வரலாற்றுக் காலம், கிமு 500 முதல் கிமு 1 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை முதிர்ந்த ஆரம்ப வரலாறு மற்றும் கிமு 1 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 300 வரையிலான ஆரம்பகால வரலாறு என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
(5)
இந்த அறிக்கையின்படி, அப்பகுதியின் வளமான தன்மை மற்றும் கால்நடை வளர்ப்பு அதன் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என புரிந்துகொள்ள முடிகிறது. இது அதிகப்படியான நெல் உற்பத்தி மற்றும் மக்களின் கடல் வணிகத்திற்கு வழி வகுத்தது.
(6)
யு.எஸ்., புளோரிடாவில் உள்ள பீட்டா அனலிட்டிகல் லேப்பில் ஆக்சிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (AMS) டேட்டிங் செய்யப்பட்ட 23 மாதிரிகள் பற்றிய ஒரு தனி அத்தியாயம் உள்ளது. இது மற்ற பல்கலைக்கழகங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிதளத்தில் இருந்து வரும்
(7)
மலர் மற்றும் விலங்கினங்களின் எச்சங்களின் ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கீழடியில் சுமார் 5,800 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் திரு. ராமகிருஷ்ணா அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்.
(8)
பின்னர் மூன்றாவது கட்டத்தில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை என்று கூறி ASI கீழடியில் அகழ்வாராய்ச்சியை நிறுத்தியது. பின் 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை மீண்டும் கீழடியில் அகழ்வாராய்ச்சியை துவங்கியது,
(9)
அதில் பண்டைய தமிழர்களின் வளமான நகர்ப்புற வாழ்க்கையை உறுதிப்படுத்தும் விதமாக ஆயிரக்கணக்கில் தொல்பொருள் எச்சங்கள் கிடைத்தன.
2019 ஆம் ஆண்டில், TNSDA, அதன் அறிக்கையில், (நான்காம் கட்ட) அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள்
(10)
கிமு 6 ஆம் நூற்றாண்டு மற்றும் கிமு 1 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று கூறியது. 353 செ.மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட ஆறு மாதிரிகளில் ஒன்று, அமெரிக்காவில் கார்பன் டேட்டிங்கிற்காக அனுப்பப்பட்டது, இது கிமு 580க்கு முந்தையது.
(11)
TNSDA அறிக்கையின் கண்டுபிடிப்புகள் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்களை முன்பு நம்பியதை விட சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு சென்றுள்ளது, அதாவது கிமு 3 ஆம் நூற்றாண்டு.
(12)
இப்போது வெறும் 2% இடத்தை மட்டுமே ஆய்வு செய்து சமட்பிக்கப்பட்ட ASI அறிக்கை, சங்க காலத்தை மேலும் 800 BCE ஆக உயர்த்தியுள்ளது.
பேய் மழையில் வேரோடு பெயர்ந்து வந்த கருவேல மரத்தின் கீழ் புதைந்து கிடந்த தங்கமகள் கோதையும்,
(13)
நடுகல்லில் வீற்றிருக்கும் அந்துவனும், கடல் கடந்து வணிகம் செய்யப் போன வியாபாரிகளும் நமக்கு சொல்ல காத்திருக்கும் செய்திகள் இன்னும் பல உள்ளன.
அடுத்த கட்ட அகழாய்வில் வெளிவரபோகும் உண்மைகள் என்ன என அறிய காத்திருப்போம்.
நன்றி ❤️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்று அனைத்து அரசு விழாக்களிலும், கல்வி நிலைய விழாக்களிலும் பாடப்படும் "நீராருங் கடலுடுத்த” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படவேண்டும் என ஆணை பிறப்பித்து கையெழுத்திட்டது.
ஒரு மனிதனை சக மனிதன் உட்கார வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் அவலம் நிறைந்த கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய கையெழுத்திட்டது.
குடிசை வீடுகள் இல்லா தமிழகத்தை அமைக்க 'குடிசை மாற்று வாரியம்’ உருவாக்க கையெழுத்திட்டது.
(2)
சுதந்திர தினத்தன்று பிரதமரும், குடியரசு தினத்தில் குடியரசுத் தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்கள் மட்டுமே கொடியேற்றுவது மரபாக இருந்த நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரைவிட மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களே கொடி ஏற்றும் உரிமை பெற்றவர்
(3)
மோடி அவர்களை குறித்து BBC ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுருக்கு, BBC யாருன்னா நம்மள ஆட்சி செஞ்ச பிரிட்டிஷ் காரர்களின் செய்தித்தாள் என சொல்லி இந்த வீடியோவை ஆரம்பிப்பதே, விடியோ பார்ப்பவர்களின் மனநிலையை BBC ஆவணப்படத்திற்கு எதிராக தயார் செய்வது போல் உள்ளது.
(1)
இந்தியாவின் இறையாண்மையை குலைக்க செய்யப்படும் சதி தான் இந்த ஆவணப்படம் எனவும், மோடி அவர்களை இழிவு செய்ய அவதூறு பரப்பும் விதமாக செய்யப்பட்ட விஷயம் இது எனவும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் சொன்னதாக பதிவு செய்துள்ளீர்கள்.முதலில் அவதூறு என்பது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி சொல்வது
(2)
என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், இந்த BBC ஆவணப்படத்தில் அவதூறு பரப்பப்படவில்லை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை வெறியாட்டத்தை வெளிச்சம் போட்டு கட்டியுள்ளனர். உண்மையாக நடந்ததை எடுத்து சொல்வது அவதூறு ஆகாது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.
(3)
ஊருக்குள்ள இருக்குற மொத்த சாதிவெறி அப்யூஸர் கூட்டமும் இந்த பதிவுக்கு கீழ தான் குத்தவச்சுருக்கு.
இவங்களுக்கெல்லாம் தான் ஏதோ இந்த கலாச்சாரத்தை தூக்கி நிறுத்துற மாதிரி நெனைப்பு. மூஞ்சி தெரியாத ஒரு ஐடில வந்து சாதி வெறியை காட்டுற கோழைகளின் ஒரு சின்ன sample தான் இந்த abuser கூட்டம்👇🏽
ஒருத்தர் என்னன்னா இந்த காதலர்கள அங்கையே கொலை செஞ்சிருக்கனும்னு சொல்லுறாரு, இன்னொருத்தர் ஏதோ வீட்ல உள்ள ஆடு மாடு மாதிரி நான் சொல்லுறத மட்டும் தான் என் பிள்ளைகள் கேக்கனும்னு சொல்லுறாரு, என் புள்ள யாருகூட வாழனும்னு நான் தான் முடிவு செய்வேன்னு சொல்லுறதெல்லம் அசிங்கம்னு கூட தெரியல 👇🏽
இன்னும் சாதியை கட்டிகிட்டு அழர இந்த சாதிவெறி கூட்டத்துக்கிட்ட இருந்து இந்த சமூகம் மேல வரனும்னா சுயமா யோசிக்க கத்துக்கனும், கலாச்சாரம் பண்பாடு எல்லாத்தையும் பொண்ணுங்க காலுக்கு நடுவுல வச்சிருக்கிற இந்த சாதிவெறி கூட்டம் சொல்லுறத ஒரு பொருட்டாகவே மதிக்காம கடந்து போறது தான் சரி 👇🏽
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை உள்ளது, இதை பற்றி ஏன் பேச வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பதிவை கடந்து செல்லலாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கூட சிறிதளவு பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.
(1)
அந்த வகையில் #BiggBossTamil வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல இந்த சமூகத்தின் ஒரு முன்மாதிரி (Prototype) என்று தான் என் புரிதல். இது ரியாலிட்டி ஷோ என சொல்லிக் கொண்டாலும் இதை ஒரு Social experiment எனவே பல உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
(2)
காஸ்மோஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் பிஹேவியரல் சயின்சஸ் (CIMBS) இயக்குனர் "சுனில் மிட்டல்" பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது "வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் மூடிய இடத்தில் வாழும் மக்களை வைத்து நடத்தப்படும் ஒரு சுவாரஸ்யமான Social experiment" என்று கூறுகிறார்.
(3)
பா. ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களில் பேசப்பட்ட சில புத்தகங்கள் குறித்த சில தகவல்கள்.
மெட்ராஸ் திரைப்படத்தில் "ஜி.கல்யாண ராவ்" அவர்கள் எழுதிய "தீண்டாத வசந்தம்" புத்தகத்தை காண்பித்திருப்பார்.
பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது அடையாளத்தையும்,
(1)
அங்கீகாரத்தையும் இந்த சமூகத்தில் பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார்கள் என்பதனை, நிலாத்திண்ணை வழியே எல்லண்ணா குடும்பத்தின் ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கையின் ஊடாக நமக்கு படம் பிடித்துக்காட்டும் உணர்வுப்பூர்வமான புத்தகம்.
(2)
கபாலி திரைப்படத்தில் "ஒய்.பி.சத்தியநாராயணா" அவர்களின் "My Father Baliah" எனும் புத்தகம் காண்பிக்கப்பட்டிருக்கும்.
தென்னிந்தியாவில் உள்ள ஒரு தலித் குடும்பத்தின் அசாதாரணக் கதை இது. நர்சியா தன் தந்தைக்கு ஒரு நிஜாம் அவர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட நிலத்தை இழந்து,
நீலம் இது ஒரு நிறம் மட்டுமல்ல இச்சமுதாயத்தில் அது ஆற்றிய தொண்டுகள் பல. ஆம், நீலம் என்றாலே நினைவிற்கு வருவது நம் நாட்டின் புரட்சியாளர் கற்பி புரட்சி செய் ஒன்று சேர் என்று கூறிய மாமேதை,
சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்றுறைத்த சீர்திருத்தவாதி.
(1)
நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை , இதற்கெல்லாம் மேலாக "#ஜெய்_பீம்" என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர், அவர் தான் பாபா சாகேப் என்றழைக்கப்படும் Dr. B. R . அம்பேத்கர்.
(2)
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்,உயர் கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்,பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர், தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்து கலகம் செய்தவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்;
(3)