#ஸ்ரீதிரிநேத்ர_தசபுஜ_வீர_ஆஞ்சநேயர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்த மங்கலம் கிராமத்தில ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடக்கு நோக்கிய சன்னதியில் நாற்கரங்களும் நெற்றிக்கண்ணும் உடைய திரிநேத்ர தசபுஜ வீர
ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது. ராஜகோபால சுவாமி கோவிலின் நுழைவு வாயிலில் மொட்டை கோபுரமே உள்ளது. நுழைவு வாயிலை அடுத்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன. தென்கிழக்கு மூலையில் அக்னி திசையில் திருமடப்பள்ளி உள்ளது.
தெற்கு பிரகாரத்தில் தாயார் சன்னதி உள்ளது. கருவறையில் செங்கமலவல்லித் தாயார் எழுந்தருளி உள்ளார். கருடாழ்வாரை தரிசித்து மூலவர் பெருமாள் சன்னதிக்கு சென்ற பின் மகா மண்டபத்தில் உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். வடக்கு பிரகாரத்தில் அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில்
திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை தரிசனத்துக்கு எழுத்தருள செய்யும் கிழக்கு நோக்கிய மண்டபம் உள்ளது. இக்கோவில் கருவறையில் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவ பெருமாள் உள்ளார். இந்த மூலவருக்கு அருகே உற்சவர் ராஜகோபால பெருமாள், ருக்மணி-சத்யபாமாவுடன் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில்
எழுந்தருளி உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் 3 கண்களையும், 10 கரங்களையும் உடையவர். சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு சாட்டை, நவநீதம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தி முதுகின் இரு பக்கங்களிலும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சி அளிக்கிறார். இது போன்ற ஆஞ்சநேயரின்
திருமேனி இக்கோவிலில் மட்டுமே உள்ளது. இலங்கையில் யுத்தம் செய்து சீதையை மீட்டபின், புஷ்பக விமானத்தில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் ஆகியோர் ஆயோத்திக்கு திரும்பினர். வழியில் அவர்கள் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி விருந்துண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர், ராமபிரானிடம்,
ராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு உள்ளனர். அவர்களுள் இரக்தபிந்து, இரக்தராட்சசன் ஆகிய இருவரும் மிக கொடியவர்கள். அவர்கள் தற்போது கடலுக்கடியில் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவம் நிறைவேறினால் அவர்கள் ராவணனைப் போல பலம் பெற்றுவிடுவார்கள். எனவே, உலக
நன்மைக்காக அவர்களை நீங்கள் அழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற ராமபிரான், அரக்கர்களை அழிக்க மாவீரனான அனுமனை பணித்தார். அனுமனோ, அழியாவரம் பெற்றவர். அளவில்லா ஆற்றல் உடையவர். இருப்பினும் அரக்கர்களை அழிக்க திருமால் தன் சங்கு சக்கரத்தையும் அனுமனுக்கு அளித்தார். பிரம்மா,
பிரம்மா, பிரம்ம கபாலத்தை அனுமனுக்கு வழங்கினார்.
ருத்ரன் மழுவையும், ராமபிரான் வில்-அம்புகளையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும் வழங்கினா். இவ்வாறு தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களை தாங்கி அனுமன் 10 கரங்களுடன் காட்சி அளித்தார். அப்போது கருடாழ்வார் தன் இரு சிறகுகளையும் அவருக்கு தந்தார்.
கடைசியாக அங்கு வந்த சிவபெருமான், 10 கரங்களிலும் ஆயுதங்களுடன் நின்ற ஆஞ்சநேயரை கண்டு தான் என்ன தருவது என சிந்தித்து தனது 3-வது கண்ணை அனுமனுக்கு அளித்தார். 3 கண்கள் (திரிநேத்ரம்), 10 கைகளுடன் வீர அனுமான் புறப்பட்டு சென்று கடலுக்கு அடியில் பதுங்கி தவம் செய்து கொண்டிருந்த இரக்தபிந்து,
இரக்தராட்சசன் ஆகிய இருவரையும் சம்ஹாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமரை சந்திக்க வந்தார்.வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பியுள்ள இடத்தை கண்ட அனுமன் ஆனந்த மிகுதியால் அங்கு தங்கினாா். அந்த இடமே அனந்தமங்கலமானது. இந்த கோவிலில் 6 கால பூஜை நடந்து வருகிறது.
அமாவாசை தோறும் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், திருவராதனங்களுடன் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு செல்கின்றனர். மார்கழி மாதம் அமாவாசையின் போதும் சிறப்பு வழிபாடு மிகவும் பிரமாண்டமாக நடக்கிறது. அனந்தமங்கலம் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை
வழிபட்டால் திருமால், சிவபெருமான், பிரம்மன், ராமன், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பயன் கிடைக்கும். சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனை வழிபட்டால் நீண்ட ஆயுளை பெறலாம். அறிவு கூர்மையாகும். உடல் வலிமை பெருகி மன உறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய்கள் நீங்கும்
வாக்கு வன்மை வளமாகும். நவக்கிரகதோஷம் நீங்கும். அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்ய வாசஸ்தலம் என்பதால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட கால நேரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் வழிபடலாம். இருப்பினும் சில குறிப்பிட்ட காலங்களில் வழிபடும் போது அதிக பயனை பெறலாம். மார்கழி மாதம் மூல
நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை ஆஞ்சநேயருக்கு அவதாரத் திருநாள். அன்று ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் வெப்பம் பட்ட வெண்ணெய் போல் கரைந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆஞ்சநேயரை வழிபட்டு அல்லல் அகன்று ஆனந்தம் பெறுவோம்
#மகத்துவம்_நிறைந்த_மாசிமாதம்
மாசி மாதத்தினை #கும்ப_மாதம் என்றும் அழைப்பார்கள். மாசி மாதத்தில் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன. மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் மூன்றாவது அவதாரமான #வராக_அவதாரம் எடுத்து உலகை
காப்பாற்றியது இந்த மாசி மாத்தில்தான் என்பது மாசி மாதத்திற்கேயுரிய கூடுதல் சிறப்பாகும் #மாசி_பௌர்ணமி
இந்த ஆண்டு மாசி 23ஆம் தேதி அதாவது செவ்வாய் கிழமை (07.03.2023) மாசிபௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு
திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது, #மாசி_மகம்
மாசி மகம் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில்
#MahaPeriyava
Source: Maha Periyavar by S. Ramani Anna
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
This incident happened several years ago. A Vedic Pundit, Ramanatha Ganapadigal who hailed from Karur was living in Srirangam. His wife’s name was Dharmambal.
Their only daughter was Kamakshi. Though the Pundit was a master in Vedas, he did not pursue Vaideegam (performing Vedic rituals) for his livelihood but used to do Upanyasam (spiritual discourses) for a living with whatever remuneration he received for his discourses. The family
members were staunch devotees of Sri Maha Periyava. Their daughter’s marriage was fixed suddenly and the groom was a teacher in a nearby village. His wife Dharmambal asked her husband, “Our daughter’s marriage has been fixed. How much savings have we got?” Ganapadigal replied,
#நவநீதகிருஷ்ணன்_கோவில் திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வீ.கே.புதூர் என்னும் வீரகேரளம்புதூர் கிராமத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் இறைவனை ‘தமிழகத்தின் குருவாயூரப்பன்’ என்று போற்றுகிறார்கள்.
மூலவர்: நவநீதகிருஷ்ணன்
உற்சவர்: ஸ்ரீதேவி,
பூதேவி சமேத நவநீதகிருஷ்ணன்
இக்கோவிலுக்கும் கருடாழ்வாருக்கும் நிறையதொடர்பு உண்டு. “பறவைகளுள் நான் கருடன்” என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறியுள்ளார். கண்ணன் துவாரகைக்கு வெளியே இருந்த போதெல்லாம், துவாரகையை காத்தவர் கருடன். “வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியில் விளங்குவாய்” என்று
கருடனுக்கு திருமால் வரம் அளித்துள்ளார். கருட தரிசனம் உள்ளத்தில் ஊக்கத்தை உண்டாக்கும். ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். எதிரிகளை முறியடிக்கும் அதிர்வலைகளை கருட தரிசனம் அருளும். கருடனைக் கண்டாலே காரிய வெற்றி கிடைக்கும். பாண்டியமன்னர்கள் ஆளுகைக்கு
#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள்
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை
#MahaPeriyava
The value of annadhanam
Author: Sri S. Ramani Anna (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
It was the time when Maha Swamigal was staying in Kalavai, many years ago. It was a Sunday. A large crowd had gathered for darshan.
One by one the devotees prostrated to the sage, received His blessings and moved away. A middle-aged couple prostrated to Acharyal and stood up with folded palms. Keenly looking at them, Swamigal said, "Adede, who (is this) Palur Gopalan! You had come a year back. That time you
spoke about some problems. Are you fine now?" and laughed.
Palur Gopalan replied, "We are very fine Periyava. As directed by you, from the time we started feeding an athithi at noon time every day, only good things are happening, Periyava! Good harvest in (my) fields. The cows
#கண்ணா#கிருஷ்ணா#முகுந்தா#கோவிந்தா
துவாபர யுகத்தில் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரமம். மிதமிஞ்சி ஆடிய கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். சொந்த மருமகனை கொல்ல துணிந்த
கம்சன், பங்காளிகளை ஒழிக்க தேடிய துரியன், பெரும் அதர்மவாதிகள் சிசுபாலன், ஜராசந்தன் என கணக்கில் அடங்கா கெட்டவர்கள் மண்டி கிடந்தனர். இது போக அரக்க கூட்டம், பாம்பு கூட்டம் இன்னும் மானிடரை அறவழி வாழவே விடாத பெரும் அராஜக கும்பல்கள் ஆட்டம் போட்ட காலமாய் இருந்திருக்கின்றது.
யாருக்கும்
தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியோருக்கு தெரிந்தபடி சவால்விட்டு பிறந்தான் கண்ணன், பிறந்த நொடியில் இருந்து அவனுக்கும் அதர்மத்துக்குமான போர் தொடங்கியது. அவன் வாழ்வினை படித்தால், அந்த குழந்தையினை கொஞ்ச தோன்றும். அந்த வாலிபனை ரசிக்க தோன்றும், அவன் வீரத்தில் உடல் சிலிர்க்கும், அவன்