⚠️இது வெறும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.
==========
ஒரு அடுப்பில் வைத்திருந்த குக்கர் ஸ்ஸ்ஸ் என்று விசிலடித்து தன் இருப்பை காட்ட, ஒரு கையால் அந்த குக்கரை எடுத்து கீழே வைத்து விட்டு கடாயை அடுப்பில் வைத்து
எண்ணெய் ஊற்றி சமையல் செய்ய ஆரம்பித்தான், மற்றொரு அடுப்பில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கடாயில் எதையோ வதக்கி கொண்டிருந்தான். இப்படி இரு அடுப்பிலும் வைத்திருந்த கடாய்களில் குழம்பு, கூட்டு என வகைவகையாய் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருந்தவன், பக்கத்து அறையிலிருந்து வந்த சத்தத்தை
கேட்டு சமையல் அறையை விட்டு வெளியே வந்தான்.
குளியலறையில் இருந்து தலை துவட்ட துண்டு கேட்ட தன் மனைவிக்கு துண்டை எடுத்துக் கொடுத்தவனின் நாசிக்கு அடுப்பில் ஏதோ கரியும் வாசனை எட்டியது, காரியமே கெட்டதே என புலம்பிக்கொண்டே சமையலறையை நோக்கி ஓடினான். அங்கு அவன் கடாயில் வைத்திருந்த
கூட்டு கரிய துவங்கியிருந்தது.
ஓடிச்சென்று கடாயை சட்டென அடுப்பிலிருந்து இறக்கிக்கொண்டே, "இப்படி ஆயிருச்சே... நேரமுமில்லை இப்ப என்னதான் செய்யறது" என பதட்டத்துடன் புலம்பிக்கொண்டே, குளித்துக்கொண்டிருந்த தன் மனைவியிடம், குளியல் அறையின் வெளியே நின்று காரியத்தை சொல்ல,
எரிச்சலடைந்த அவன் மனைவி "என்னமோ செஞ்சுத் தொல"என ஏசினாள்.
இவனும் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தவாரே சமையலறைக்குச் சென்று, கடகடவென உருளைக்கிழங்கை வெட்டி ஒரு கூட்டு தயார் செய்து கொண்டிருந்தான். அப்போது மீண்டும் அறையிலிருந்து ஒரு சத்தம், "என்னோட டிரஸ்ஸ இன்னும் அயன் பண்ணி
வைக்கலையா" என, "அயன் பண்ணி டேபில்ல வச்சிருக்கேன் அதுல பாரு" என சமையலறையிலிருந்தே குரல் கொடுத்தான்."
"நான் ரெடி ஆயிட்டு இருக்கேன் சீக்கிரம் டிரஸ்ஸ எடுத்துட்டு வா" என தலையை வாரிக்கொண்டு அவள் சொல்ல, இவனும் அவள் உடையை எடுத்து அவள் கையில் கொண்டு கொடுத்தான்.
சமையலறையில் காலை சமையலை முடித்து, மனைவிக்கு மதிய சாப்பாட்டை டப்பியில் அடைத்து எடுத்துக்கொண்டு வந்து அறையில் வைத்தான்.
"சரி சரி நேரமாகுது சாப்பாடு எடுத்து வை" என சொல்லிக் கொண்டே டைனிங் டேபிளை நோக்கி
வந்தாள் அவள்.
சமையல் அறையில் மீதமிருந்த வேலையை செய்து கொண்டே "சாப்பாடு எடுத்து டேபில்ல தான் வச்சிருக்கேன், நீயே எடுத்து போட்டுக்கோயேன்." என இவன் கூறியதும் அவள் முகத்தில் எள்ளும் கடுகும் பொறிந்தது.
அவள் முகத்தைப் பார்த்ததும் இவன் எதுவும் பேசாமல் டைனிங் டேபிளுக்கு சென்று
சாப்பாட்டை எடுத்து பரிமாறினான். அவள் வேகவேகமாக சாப்பிட்டு, பின் தன் பையை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டாள். அறையில் ஒரு போர்க்களமே நடந்து முடிந்தது போல எல்லாப் பொருட்களும் ஆங்காங்கே கிடந்தது.
"ஒருத்தி ரெடி ஆகுறதுக்கு வீட்டையே ரெண்டு பண்ணி வச்சிருக்கா" என தனக்குள்ளேயே
சொல்லிக் கொண்டு பொருட்களை எல்லாம் எடுத்து அதனதன் இடத்தில் வைத்துக் கொண்டிருந்தவனின் கைப்பேசி அழைக்க, "இது வேற....." என சலித்துக் கொண்டே அழைப்பது யாரென பார்த்தான், வேறு யாருமல்ல அவனின் அப்பா வழக்கம்போல நலம் விசாரிப்பு தான். அப்பாவிடம் பேசிக்கொண்டே ஒரு கோப்பை தேநீர் குடித்தான்.
பிறகு வழக்கம்போல தன் பணிக்கு ஆயத்தமானான், சமையலறைக்குச் சென்று அங்கு சிதறிக்கிடந்த குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு பாத்திரங்களை கழுவி அடுக்கினான். அப்படி இப்படி என சின்ன சின்ன சுத்தம் செய்தான், மறுநாள் இட்லிக்கு தேவையான மாவு அரைக்க அரிசியையும் உளுந்தையும் ஊற வைத்து,
பின் மாலை நேர சிற்றுண்டி வடை செய்ய தேவையான பருப்பையும் ஊற வைத்தான்.
இப்படியாக அவன் சமையல் அறையை விட்டு வெளியே வரும்போது நேரம் காலை 10 ஆகியிருந்தது. வயிற்றின் ஓரமாய் கிள்ளுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படவே, அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது தான் காலை உணவு சாப்பிடவில்லை என்று.
பிறகு வேக வேகமாக காலை உணவை முடித்தான்.
பின் படுக்கையறைக்கு வந்தவனின் கண்களில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த அழுக்கு துணிகள் பட்டது, அவற்றை எடுத்து வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, வீடு முழுவதையும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தான். பின் ஆங்காங்கு இருந்த அழுக்குகளையும் துடைத்து
தான் சுத்தப்படுத்திய வீட்டைக் கண்டு, மீண்டும் ஒரு முறை உறுதி செய்துகொண்டான், அழுக்குகள் இல்லை என.
வீட்டை துடைத்து முடிக்கவும் ஒரு ஓரமாய் வைத்திருந்த கைப்பேசி மீண்டும் அழைக்கவே, அதை பார்த்த அவனின் முகம் மலர்ந்தது..... ஆம், அழைப்பது அவன் மனைவி தான்.
"ஹலோ சொல்லு " என்றதும்
எதிர்புறமிருந்து வசைமாரி பொழிந்தது....
காரணம் காலை அவசர அவசரமாக செய்த கூட்டு சரியாக வேகவில்லை என.
மௌனமாய் அனைத்தையும் கேட்ட அவன், பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டது.
பெருமூச்சு விட்ட அவன் தன்னை தானே நொந்து கொண்டு சரி கொஞ்ச நேரம் கண் அசரலாம் என அவன்
படுக்கையில் சாயும் போது தான் நினைவுக்கு வருகிறது, வாஷிங் மெஷினில் போட்ட துணிகளை உலர்த்த வெளியே எடுக்கவில்லை என....
"ஐயோ.... நல்லவேளை இப்பயே நியாபாகம் வந்துச்சு, அப்படியே விட்டுருந்தா துணி எதுவும் காஞ்சிருக்காது" என சொல்லிக் கொண்டே, மெஷினில் இருந்து துணையை உலர்ந்த எடுத்து,
கொடிகளில் விரித்தான்.
சிறிது நேரம் கண்ணை மூடிய அவன் நினைவில் மாலை சிற்றுண்டிக்கு ஊற வைத்த பருப்பு நினைவுக்கு வரவே, அதை எடுத்து தேவையான பொருட்களை சேர்த்து அரைத்து வடை சுட தயாராக வைத்தான்.லேசான குளிர் ஆரம்பித்திருந்த காலம் என்பதால், வடைக்கு மாவு ஆட்டிய கையோடு குளிக்கச் சென்றான்.
குளித்து வந்து மதிய உணவை அவன் உண்ணும் போது மணி 3, பின் சிறிது நேரம் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தவனுக்கு திடீரென வெளியில் யாரோ காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது "அவளா தான் இருக்கும்" என சொல்லிக் கொண்டே கதவை திறக்க வந்தான். ஆம் அவன் எதிர்பார்த்தது சரிதான், அவன் மனைவி தான்
வரும் போதே ஏதோ எரிச்சல் நிறைந்த முகத்துடன் கடுகடுவென வீட்டிற்குள் நுழைந்தாள்.
" காபி போடட்டா" என அவன் கேட்டதும் "ம்" என பதிலளித்து அறைக்குச் சென்றவள், படுக்கையில் கண்ணை மூடி சாய்ந்து உட்கார்ந்து இருந்தாள்.
சமையலறைக்கு சென்று சுட சுட வடை சுட்டு தட்டில் அடுக்கி ஒரு கையில்
காபி இன்னொரு கையில் வடையுமாக படுக்கையறைக்கு வந்து வைத்தான்.
அவள் காபியும் வடையும் சாப்பிட்டுக்கொண்டே கைபேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் ஏதோ பேச ஆரம்பிக்க, "கொஞ்ச நேரம் பேசாம இரு, நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆய்ட்டு பேசுறேன்" என சற்று தணிந்த குரலில் அவள் கூறினாள்.
சரி, எதற்கு வம்பு என அவனும் அமைதியாய் காபி குடித்துக்கொண்டே இரவு என்ன சமைப்பது என யோசித்துக் கொண்டிருந்தான்.
அப்படி இப்படி என இரவு ஏழு மணி ஆனது, இப்போது இரவு உணவை தயார் செய்ய சமையல் அறைக்குள் நுழைந்தவன் கடகடவென சமைக்க ஆரம்பித்தான்.
இரவு உணவு தயாரானதும் டேபிளில் எடுத்து
வைத்துவிட்டு அவளை சாப்பிட கூப்பிட்டான், மனைவிக்கு சாப்பாட்டை பரிமாறி விட்டு, அவனும் சாப்பிட உட்கார்ந்தான். இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்தனர்,
பின் டேபிளில் இருந்த அனைத்தையும் அப்புறப்படுத்தி கழுவ வேண்டிய பாத்திரங்களை சிங்க்கிலும் மீதம் இருந்த சாப்பாட்டை பிரிட்ஜிலும் வைத்து
, பாத்திரம் கழுவி, சமையல் அறையை ஒதுக்கி, நாளை காலை இட்லிக்கு தேவையான மாவையும் அரைத்து எடுத்து வைத்துவிட்டு, கதவு பூட்டி இருக்கிறதா என சரி பார்த்து, பின் சமையலறை மற்ற அறைகளில் விளக்குகளை அணைத்து, எல்லா வேலையும் முடிந்ததா என மீண்டும் மீண்டும் சரி பார்த்து விட்டு படுக்கை அறைக்குள்
நுழைந்தான்.
அங்கு அவன் மனைவி கைப்பேசியில் எதையோ மிக மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் அறைக்குள் நுழைந்து முகம் கை கால்களை துடைத்துவிட்டு, அவள் அருகே சென்று ஏதோ பேச முற்படுகையில், இவன் அருகில் இருப்பது கூட தெரியவில்லை என்ற மட்டில் கைபேசியில் மூழ்கி இருந்தாள் அவள்.
இப்போது மீண்டும் அவளைத் தொந்தரவு செய்தால் அவள் என்ன சொல்வாளோ என தனக்குத் தானே கேட்டுக் கொண்டு அவளிடமிருந்து விலகி, தன் கைப்பேசியை பார்க்க துவங்கினான்.
அந்த அறை சட்டென இருளில் மூழ்கியது. என்ன என அவன் கண்களை உயர்த்தி பார்த்தான், அவன் மனைவி உறங்க ஆயத்தமாயிருந்ததால், விளக்குகளை
அணைத்து படுத்தாள். இவனோ கையில் மொபைலுடன் படுக்கையில் அமர்ந்திருந்தவன் இனியும் உறங்காமல் இருந்தால் வசைமாரி பொழியும் என புரிந்து மொபைலை ஓரமாக வைத்து விட்டு கண்களை மெல்ல மூடினான்....
=======
இது ஒரு கற்பனை காட்சி தான், இதை படிக்கும் போது பலருக்கும் வேடிக்கையாக இருக்கலாம்
அல்லது கோபம் வரலாம், ஆனால் இதில் ஆணுக்கு பதில் பெண்ணையும், பெண்ணுக்கு பதில் ஆணையும் வைத்துப் பார்த்தால் இது பல வீடுகளிலும் இயல்பாக நடக்கும் விஷயம் தான்.
வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் பெண்களை பார்த்து "நீ வீட்ல சும்மா தான இருக்க" என கேட்கும் ஆண்கள்,
அப்படி ஒருநாள் வீட்டில் house husband ஆக இருந்தால் அவர்களின் ஒரு நாள் வாழ்க்கை பயணம் இது போல தான் இருக்கும்.
Doing a house wife role in a family is not easy.❤️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கீழடி #thread
மதுரையிலிருந்து சுமார் 13 கிமீ தொலைவில் உள்ள வைகை ஆற்றங்கரையில் உள்ள கீழடி எனும் குக்கிராமத்தில் இந்திய தொல்லியல் துறையின் முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியின் தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சங்க காலம் கிமு 800க்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.
(1)
கீழடியைக் கண்டுபிடித்து, 2014 முதல் 2016 வரையிலான முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய K. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் சமீபத்தில் ஏஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் வி. வித்யாவதியிடம் தனது 982 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கை 12 அத்தியாயங்களில்
(2)
வரலாற்று பின்னணி மற்றும் அகழ்வாராய்ச்சியின் நோக்கங்களை விளக்குகிறது. முதல் இரண்டு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பண்பாட்டு எச்சங்களின் அடிப்படையில், சங்க கால தொல்பொருள் தளத்தின் காலம் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(3)
இன்று அனைத்து அரசு விழாக்களிலும், கல்வி நிலைய விழாக்களிலும் பாடப்படும் "நீராருங் கடலுடுத்த” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படவேண்டும் என ஆணை பிறப்பித்து கையெழுத்திட்டது.
ஒரு மனிதனை சக மனிதன் உட்கார வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் அவலம் நிறைந்த கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய கையெழுத்திட்டது.
குடிசை வீடுகள் இல்லா தமிழகத்தை அமைக்க 'குடிசை மாற்று வாரியம்’ உருவாக்க கையெழுத்திட்டது.
(2)
சுதந்திர தினத்தன்று பிரதமரும், குடியரசு தினத்தில் குடியரசுத் தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்கள் மட்டுமே கொடியேற்றுவது மரபாக இருந்த நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரைவிட மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களே கொடி ஏற்றும் உரிமை பெற்றவர்
(3)
மோடி அவர்களை குறித்து BBC ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுருக்கு, BBC யாருன்னா நம்மள ஆட்சி செஞ்ச பிரிட்டிஷ் காரர்களின் செய்தித்தாள் என சொல்லி இந்த வீடியோவை ஆரம்பிப்பதே, விடியோ பார்ப்பவர்களின் மனநிலையை BBC ஆவணப்படத்திற்கு எதிராக தயார் செய்வது போல் உள்ளது.
(1)
இந்தியாவின் இறையாண்மையை குலைக்க செய்யப்படும் சதி தான் இந்த ஆவணப்படம் எனவும், மோடி அவர்களை இழிவு செய்ய அவதூறு பரப்பும் விதமாக செய்யப்பட்ட விஷயம் இது எனவும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் சொன்னதாக பதிவு செய்துள்ளீர்கள்.முதலில் அவதூறு என்பது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி சொல்வது
(2)
என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், இந்த BBC ஆவணப்படத்தில் அவதூறு பரப்பப்படவில்லை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை வெறியாட்டத்தை வெளிச்சம் போட்டு கட்டியுள்ளனர். உண்மையாக நடந்ததை எடுத்து சொல்வது அவதூறு ஆகாது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.
(3)
ஊருக்குள்ள இருக்குற மொத்த சாதிவெறி அப்யூஸர் கூட்டமும் இந்த பதிவுக்கு கீழ தான் குத்தவச்சுருக்கு.
இவங்களுக்கெல்லாம் தான் ஏதோ இந்த கலாச்சாரத்தை தூக்கி நிறுத்துற மாதிரி நெனைப்பு. மூஞ்சி தெரியாத ஒரு ஐடில வந்து சாதி வெறியை காட்டுற கோழைகளின் ஒரு சின்ன sample தான் இந்த abuser கூட்டம்👇🏽
ஒருத்தர் என்னன்னா இந்த காதலர்கள அங்கையே கொலை செஞ்சிருக்கனும்னு சொல்லுறாரு, இன்னொருத்தர் ஏதோ வீட்ல உள்ள ஆடு மாடு மாதிரி நான் சொல்லுறத மட்டும் தான் என் பிள்ளைகள் கேக்கனும்னு சொல்லுறாரு, என் புள்ள யாருகூட வாழனும்னு நான் தான் முடிவு செய்வேன்னு சொல்லுறதெல்லம் அசிங்கம்னு கூட தெரியல 👇🏽
இன்னும் சாதியை கட்டிகிட்டு அழர இந்த சாதிவெறி கூட்டத்துக்கிட்ட இருந்து இந்த சமூகம் மேல வரனும்னா சுயமா யோசிக்க கத்துக்கனும், கலாச்சாரம் பண்பாடு எல்லாத்தையும் பொண்ணுங்க காலுக்கு நடுவுல வச்சிருக்கிற இந்த சாதிவெறி கூட்டம் சொல்லுறத ஒரு பொருட்டாகவே மதிக்காம கடந்து போறது தான் சரி 👇🏽
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை உள்ளது, இதை பற்றி ஏன் பேச வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பதிவை கடந்து செல்லலாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கூட சிறிதளவு பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.
(1)
அந்த வகையில் #BiggBossTamil வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல இந்த சமூகத்தின் ஒரு முன்மாதிரி (Prototype) என்று தான் என் புரிதல். இது ரியாலிட்டி ஷோ என சொல்லிக் கொண்டாலும் இதை ஒரு Social experiment எனவே பல உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
(2)
காஸ்மோஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் பிஹேவியரல் சயின்சஸ் (CIMBS) இயக்குனர் "சுனில் மிட்டல்" பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது "வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் மூடிய இடத்தில் வாழும் மக்களை வைத்து நடத்தப்படும் ஒரு சுவாரஸ்யமான Social experiment" என்று கூறுகிறார்.
(3)
பா. ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களில் பேசப்பட்ட சில புத்தகங்கள் குறித்த சில தகவல்கள்.
மெட்ராஸ் திரைப்படத்தில் "ஜி.கல்யாண ராவ்" அவர்கள் எழுதிய "தீண்டாத வசந்தம்" புத்தகத்தை காண்பித்திருப்பார்.
பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது அடையாளத்தையும்,
(1)
அங்கீகாரத்தையும் இந்த சமூகத்தில் பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார்கள் என்பதனை, நிலாத்திண்ணை வழியே எல்லண்ணா குடும்பத்தின் ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கையின் ஊடாக நமக்கு படம் பிடித்துக்காட்டும் உணர்வுப்பூர்வமான புத்தகம்.
(2)
கபாலி திரைப்படத்தில் "ஒய்.பி.சத்தியநாராயணா" அவர்களின் "My Father Baliah" எனும் புத்தகம் காண்பிக்கப்பட்டிருக்கும்.
தென்னிந்தியாவில் உள்ள ஒரு தலித் குடும்பத்தின் அசாதாரணக் கதை இது. நர்சியா தன் தந்தைக்கு ஒரு நிஜாம் அவர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட நிலத்தை இழந்து,