M.SivaRajan Profile picture
Feb 15 10 tweets 3 min read
#ராம_நாமம்

ஏழெழு ஜென்ம சாபல்யம் தீர்த்து ஏற்றம் தரும் ஸ்லோகம்...

தினமும் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் சொல்வதற்கு இணையான

"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"

என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது,
11 முறை சொல்லுங்கள்,
உங்கள் வீட்டில் சுபிட்சம் தேடி வரும்.

சகஸ்ரநாமம் என்றால்,
அது விஷ்ணு சகஸ்ரநாமம் தான்.

அதன் பின் மற்ற தெய்வங்களின் சகஸ்ரநாமங்கள் என
நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், விஷ்ணு சகஸ்ரநாமத்தை
தினமும் சொல்வதென்றால், குறைந்தது, அரை மணி நேரம் ஆகும். (நிறுத்தி சொல்ல வேண்டும்)
எனக்கு நேரமில்லை
என, சாக்கு போக்கு சொல்வோம்.

இதை நன்கு உணர்ந்த
பார்வதி தேவி, இது பற்றி சிவபெருமானிடம் கேட்டாள்.

’சுவாமி‘ விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் முழுமையாக சொல்ல முடியாதவர்கள், எளிதாக பாராயணம் செய்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள் ’ என, கேட்டாள் பார்வதி தேவி,
‘ராம ராம ராம’ என, மூன்று முறை சொன்னாலே, ஒருவனுக்கு தினமும்,

விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என பதில் அளித்தார் சிவபெருமான்.

ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம் வரும்.,

அதற்கு கனித அடிப்படையில்
பதில் உள்ளது.
எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன.

"ர" என்ற எழுத்துக்கு
எண் 2ம், "ம" என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும்.

மேலே சுலோகத்தில் "ராம" என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.

அதாவது 2X5 2x5 2x5. என்றால் 2X5=10x2=20x5=100x2=200x5=1000 ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.
இது தான் ராம நாமத்தின் அற்புதம்

அதனால் தான், ராம ராம ராம என்ற சொன்னால், விஷ்ணு சகஸ்ர நாம பலன் கிடைக்கும்.

தினமும் விஷ்ணு சகஸ்ர நாமத்தில் வரும்

"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே
ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"
என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும்.

ராம நாமம் தாரக நாமம்.

அதாவது த்ரேதா யுகம் முடிந்து த்வாபர யுகம் முடிந்து கலியுகத்தில் ஸ்ரீ ராமனின் நாமத்தை அனுதினமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்

கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அது தான் ராம நாமத்தின் மகிமை.

ராம என்பது இரண்டு அக்ஷரங்கள்.

நாராயணா என்ற நாமத்திலிருந்து "ரா" அக்ஷரத்தை முதல் அக்ஷரமாகவும்,

நம:சிவாய என்ற நாமத்திலிருந்து "ம" அக்ஷரத்தை இரண்டாவது அக்ஷரமாகவும் ராம நாமத்தில் உள்ளது.
"ரா" என்பது அக்னி பீஜம்.

"ம" என்பது அம்ருத பீஜம்.

"ரா" என்ற உச்சரித்ததும் நம்முடைய அனைத்து பாபங்களும் நம்மை விட்டு விலகி விடுகிறது.

"ம" என்று உச்சரித்ததும் பாபங்கள் ஏதும் நம்முள் செல்லாமல் தடுக்கப் படுகின்றது.

இது தான் ராம நாமத்தின் அற்புதம்.
நாம் எல்லோரும் அனு தினமும் ராம நாமத்தை சொல்லி
எழுதி ஜபித்து பயன் பெறுவோம்.

#ராம_நாமம்

#ராம_நாம_மகிமை

#ராம_நாம_பெருமை

#ராம_நாம_சிறப்பு

#விஷ்ணு_சகஸ்ரநாம_ராம_நாமம்

#ஜெய்_ஸ்ரீராம்

#ஓம்_நமோ_நாராயணாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Feb 16
#மஹா_சிவராத்திரி_சிறப்பு

1) பஞ்ச பூத தலங்கள் :

1.திருஆரூா் - பிருதிவி (நிலம்)

2.திருஆனைக்கா - அப்பு (நீா்)

3.திருஅண்ணாமலை- தேயு (தீ)

4.திருக்காளத்தி - வாயு (வளி)

5.சிதம்பரம் - ஆகாயம் (விண்) Image
2) பஞ்ச சபைகள் :
1.திருவாலங்காடு - இரத்தினசபை

2.சிதம்பரம் - கனகசபை (பொன்னம்பலம்)

3.மதுரை - ரஜத சபை (வெள்ளியல்பலம்)

4.திருநெல்வேலி -தாமிரசபை

5.திருக்குற்றாலம் - சித்திரசபை
3) சோழநாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள் ஒரே நாளில் தாிசிக்க வேண்டியவை :

1.முல்லைவனம் - திருக்கருகாவூா் - (உஷக்காலதாிசனம்)

2. பாதிாிவனம் திருஅவளிவநல்லூா் -
(காலசந்தி தாிசனம்)

3. வன்னிவனம் - திருஅரதைபெரும்பாழி அாித்துவாரமங்கலம் -
(உச்சிகால தாிசனம்)
Read 6 tweets
Feb 16
#திருவாரூர்_தியாகராஜர்

#மஹா_சிவராத்திரி_சிறப்பு

திருவாரூர் திருத்தல வரலாற்றை வடமொழியில் எடுத்துரைக்கும் நூல்கள்.

1) அஜபா ரஹஸ்யம்,

2) ஆடகேச்வர மஹாத்மியம்,

3) கமலாலய மஹாத்மியம்

4) நாகர கண்டம்,

5) தியாகராஜ லீலை

6) சமத்கார புர மஹாத்மியம், Image
7) தியாகராஜ மஹாத்மியம்,

8) தேவயாகபுர மஹாத்மியம்,

9) தேவாச்ரய மஹாத்மியம்,

10) முசுகுந்தபுர மாஹாத்மியம்,

11) ராமகயா மஹாத்மியம்,

12) ஸ்ரீ புர மஹாத்மியம்,

13) ஸ்கந்தபுர மஹாத்மியம்,

14) சேஷத்திரவர மஹாத்மியம் என்பன.

இத்தலத்துக்குரிய ஆகமம் காமிகம்.
விராட்புருஷனுடைய மூலாதாரமெனவும்,

பூமிதேவியின் இதய கமலமெனவும் பஞ்சபூதத் தலங்களுள் பிருதிவித் தலமெனவும்,

தேவர்கள் கறையான்வடிவு கொண்டியற்றிய புற்றை இடமாகக் கொண்டு இறைவன் சிவலிங்கப் பெருமானாக எழுந்தருளினமையின் வன்மீகபுரமெனவும்,
Read 10 tweets
Feb 16
#பள்ளியறை_பூஜை

#மஹா_சிவராத்திரி_சிறப்பு

*பலவித நன்மைகள் தரும் பள்ளியறை பூஜை*

ஆலயங்களில் நடக்கும் அனைத்து பூஜைகளுமே சிறப்புக்குரியதுதான்.

ஆனால் இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் விசேஷமானது.

அனைத்து ஆலயங்களிலும் பள்ளியறை பூஜை நடைபெறும். Image
அதே நேரம் சிவபெருமானின் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு, பல்வேறு பலன்கள் கிடைக்கப் பெறும்.

கணவன் - மனைவி ஒற்றுமை, உயர் பதவி கிடைக்க, விரைவில் திருமணம் நடந்தேற,
நீண்டநாள் நோய் அகல, கல்வியில் மேம்பட என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த பள்ளியறை பூஜை தீர்வாக அமையக்கூடும்.

கோவில் மூலவருக்கு அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு, சுவாமி தன்னுடைய சன்னிதியில் இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதிக்கு எழுந்தருள்வார்.
Read 15 tweets
Feb 16
#சகஸ்ர_லிங்கம்

சகஸ்ர லிங்க அபிஷேகத்தின் சிறப்பு :

ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டால் ஆயிரம் முறை சிவனை வழிபட்ட பலன் கிட்டும்.

அதேபோல் ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் ஆயிரம் லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட பலன் கிட்டும். Image
எனவே இத்தகைய உத்தமமான பலன்களை நல்கும் சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதற்கு சில விசேஷ அம்சங்களை சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
பால் அபிஷேகம்

சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு பசுவின் பால் அபிஷேகம் சிறப்புடையது.

பால் கறந்து சூட ஆறும் முன் அபிஷேகம் செய்வதால் விசேஷமான பலன்கள் கிட்டும்.

தயிர் அபிஷேகம்

நாம் அபிஷேகம் செய்யப்போகும் மூன்று தினத்திற்கு முன்னரே பசும் பாலை வாங்கிக் காய்ச்சி
Read 5 tweets
Feb 15
#மஹா_சிவராத்திரி_சிறப்பு

மஹா சிவராத்திரி அன்று விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக முக்கிய விஷயம்.

இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் அவர்களுக்கு என ஒரு சில குறிப்பட்ட விஷேச அபிஷேகம் செய்ய அவர்களுக்கு தேவையான கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம்.
சிவனுக்குரிய மஹாசிவராத்திரி திருநாளில் சிவனை நினைத்து, விரதமிருந்து இரவில் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்வது நல்லது.

மகாசிவராத்திரியில் விரத வழிபாடு நம் முன் வினைகள், ஜென்ப பாவங்கள் நீக்கி நல்லருள் கிடைக்கச் செய்யும்.
நாம் சிவனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யலாம், இருப்பினும் ஒவ்வொரு ராசியினரும் இங்கு குறிப்பிட்டுள்ள அபிஷேகம் செய்வது மேலும் நன்மையை தரும்.
Read 11 tweets
Feb 14
#வரம்

*கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?

பகவானே, உனக்கு கைங்கர்யம் செய்யும் வரத்தை கொடு என்று தான்.*

நமக்கு இந்த அருமையான மனிதப் பிறவியை கொடுத்து,

சிறு வயது முதலே நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மை பல கஷ்டங்களிலிருந்து காப்பாற்றி வரும் Image
அந்த பகவானுக்கு நம்மால் ஆன ஏதோ ஒரு செயலை எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு அர்ப்பணிப்பாக செய்வது தான் கைங்கர்யம்.

இறைவன் நமக்கு செய்த பல உதவிகளுக்கு கைமாறாகவும் அதைக் கொள்ளலாம் அல்லது பகவான் மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவும் அதைச் செய்யலாம்.
திருக்கோயில்களைச் சுத்தம் செய்வது, கோலம் போடுவது, பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பது இப்படி நம்மால் முடிந்த சிறுசிறு கைங்கர்யங்களை செய்வதை சிரமேற் கொள்ள வேண்டும்.

நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர்களாக நாம் இருக்கும் பட்சத்தில்,
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(