#திருநீறு_குங்குமம்_சந்தனம்_அணிவது_ஏன்#அறிவியல்உண்மை
அருகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. நம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம் உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகிறது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்
கொள்ளும் தன்மை வாய்ந்தது. உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துகள் வழக்கம். வைணவர்கள் திருமண் காப்பாக இட்டுக் கொள்கிறார்கள். அதுவும் விசேஷமான மண் வகை. மனித உடலிலே நெற்றி முக்கிய பாகம். நெற்றியிலேயே வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகிறது, உள்ளிழுக்கவும்
படுகிறது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுப்படுகிறது.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை, இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து
குளிப்பதை பார்த்திருக்கிறோம். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகிறது. அதே போல்த் தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான
புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கிறது. இரு புருவங்களுக்கு இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால்அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச்
செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகிறது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்
பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகிறது. முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex
சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி வித்தியாசமாக பிறருக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு என்று இந்துகளே முதலில் உனர வேண்டும். இரு புருவங்களுக்கும் இடையே
நெற்றிப் பொட்டிலே பட்டும் படாமலும் சுண்டு விரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன்
இருக்க சந்தனம் சரியான மருந்து.
குங்குமம்
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை
வைத்தால் அமைதி கிடைக்கும். ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு புருவங்களுக்கு இடையிலுள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைசுற்றல் வரும்.
மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். சந்தனம், திருநீறு, குங்குமம் திருமண் காப்பு, இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம்
குளிர்ச்சியாக இருக்க இவற்றைத் தரித்து புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும்படி இருக்கிறோம். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளை நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வசித்து வந்தனர். லம்பாடி இனத்தைச் சேர்ந்த அவர்கள் தற்போதும் வசித்து வருகின்றனர். முன்பு ஒரு சமயம், அந்த லம்பாடி இனத்தைச் சேர்ந்த வயதான கிழவர் ஒருவர், மிகவும் ஏழை, தனக்கு காட்டில் கிடைத்த தேன், தினை மாவு, கொஞ்சம் அரிசி, பருப்பு, பழங்கள் இவைகளை சிறிய மூங்கில் கூடையில் எடுத்துக்
கொண்டு, அக்காட்டு வழியே இரவு 11 மணிக்கு மேல் ஸ்ரீ மட்டப்பள்ளி மஹாே சக்திரத்தை வந்தடைந்தார்.ஊரே அடங்கி நிசப்தமாய் இருக்கின்றது. வெளியிலுள்ள மண்டபத்தில் வந்து அமர்ந்து கொண்டார். என் செய்வார்? அவரது பஞ்சடைந்த கண்கள் குளமாயின. கதறுகிறார். "ஸ்வாமி, உன்னைக் கண்களார சேவிக்க வேண்டும்
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-14-01--2016தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி-சுருக்கப்பட்டது)
ஒரு சமயம் மடத்தி இருப்பவர்களோடு பேசிக் கொண்டு இருக்கும்போது, "இங்கே காஞ்சிபுரத்துல ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப்
பக்கத்துல சிவாவிஷ்ணு ஆலயம் ஒண்ணு இருந்ததாமே. உங்கள்ள யாராவது கேள்விப்பட்டிருக்கேளா? எங்கே இருந்தது, இப்போ எப்படி இருக்குனு யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டார் பெரியவா.
எல்லாருமே தெரியாது என்று சொன்னதும் மறுநாள் காலை புறப்பட்டு குறிப்புகளில் இருக்கும் அந்த இடத்தை தானே தேடி கண்டு
பிடிக்க முடிவு செய்தார். அடுத்த நாள் சுமார் 30 பேர் அவருடன் கிளம்பினார்கள். மடத்துக் குறிப்புகள்ல இருந்த இடத்தைக் கண்டுபிடித்து கோயிலை எதிர்பார்த்துப் போய் நின்னவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அங்கே வீடு தான் இருந்தது! பெரியவா அங்கே வந்திருக்காங்கற விஷயம் தெரிந்ததும்
#வெற்றிலைபாக்கு_மகிமை பெண்கள் செய்யக்கூடிய தாம்பூல தானம் லக்ஷ்மி தேவியை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று. வெற்றிலையும் பாக்கும் இணைந்ததே தாம்பூலம் ஆகும். வெற்றிலையில் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என மூன்று தேவியும் இருப்பதால் அதை தானம் செய்வோருக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக உள்ளது.
என்ன தானம் செய்தாலும் அந்த தானத்துடன் தாம்பூலமும் இணைத்து கொடுப்பது உத்தம பலனை தரும். வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் குங்குமமாவது கொடுக்க வேண்டும். வெற்றிலை காமதேனுவின் அம்சம். அதனால் தான் இன்றும் நிச்சயதார்த்த நிகழ்வின்
போது வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். தெய்வத்தை ஆதாரமாகக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது பெரும் பாவத்தைத் தேடித் தரும். எல்லா தெய்வ பூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை பாக்கு மிகவும் அவசியம். வெற்றிலை, பாக்கு,
#HowToAcceptThePrasadGivenInTheTemple
Prasad is a variety of pure food, leaves, flowers given to the Lord as an offering. They are then distributed to the devotees. Different types of offerings are offered in each temple. In Siva temple Vilva leaves and sacred ash is given as
Prasad. In Vishnu temples Besil (Thulasi) and sacred water are given as Prasad. When Prasad is distributed, we have to stand in a proper line and placing our right hand over the left hand accept the sacred water or ash or vilva leaves or kumkum. Water should be consumed
immediately with the right hand in which we received. You cannot pour the water received in your hand to another person's hand. But for your child or an elderly person who is incapable of taking the prasad himself, you can give it in his/her mouth yourself. In a similar fashion
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.-
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கவியரசர் கண்ணதாசன், தான் எழுதிய #அர்த்தமுள்ள_இந்துமதம் என்ற புத்தகத்தை ஒரு தட்டில் வைத்து, பெரியவாளிடம் சமர்ப்பித்தார். பெரியவாள், புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்கள்.
"பெரிய விஷயங்களையெல்லாம், எளிமையா எழுதியிருக்கே போலிருக்கு" -பெரியவா
கவிஞரின் இதயம் ஆனந்தத்தில், திளைத்துக் கொண்டிருந்தது. பெரியவாள் தொடர்ந்தார்கள். "பாரத தேசத்திலே, எத்தனையோ மஹான்கள் இருந்திருக்கா. ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒரு விசேஷம் இருக்கும். சில சந்யாஸிகள், பால் மட்டுமே
உட்கொண்டு வாழ்ந்திருக்கா. ஒருத்தர் கங்காஜலம் மட்டும்தான் சாப்பிடுவாராம்! ஸித்தர்கள் எல்லாம் ரொம்ப ஆஸ்சர்யமான பழக்க வழக்கங்கள் கடைப்பிடிச்சிருக்கா. சில ஸித்தர்கள், பச்சையாகக் கருணைக் கிழங்கை மட்டும் சாப்பிடுவா. ஓருத்தர் மரத்திலேயே தங்கியிருந்தார். இன்னொருத்தர் யமுனை நதி நடுவில்
#சமித்து
வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்லி அக்னி குண்டத்தில் இடும் குச்சிகளுக்கு சமித்து என்று பெயர். ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து: நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து: சுக்கிரனுக்குப்