#நற்சிந்தனை
ஒரு பெரிய நாட்டின் மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடு பட்டார்கள். அவர்கள் முயற்சி பலிக்கவில்லை. மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. எங்கிருந்து
எல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்.
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை. மன்னனால் தூங்க முடியவில்லை. உணவும் குறைந்து பொலிவு இழந்தான். மன்னனோடு சேர்ந்து நாடும் களை இழந்தது. இந்த நேரத்தில் இமய மலையிலிருந்து ஒரு துறவி அங்கு வந்து சேர்ந்தார். மன்னனின் காதை நன்றாகப்
பரிசோதித்தார்.
"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது. இங்கிருந்து 3000 மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத் தான் இந்தப் பூச்சி கட்டுப்படும். இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன். எப்படியும் ஒரு மாத காலத்திற்குள்
அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள். அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்.” என்றார். மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள். மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது. அடுத்த சில
நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது. மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி.
மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான். நன்றாக உண்டான். பழைய பொலிவு திரும்பி விட்டது. அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன். அவர்கள் நாட்டு எல்லையை
தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்.
"குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''
துறவி புன்னகை பூத்தார்.
"பூச்சி அத்தனை நாள் மன்னனின் செவிக்குள் இருந்தது என்று நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்து
இருக்கலாம். சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும் அல்லது வெளியே வந்திருக்கும். அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது. அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்தப் பூச்சி காதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக்
கொண்டிருந்தான்."
"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தி இருக்கலாமே”
"மனோவியாதியை அப்படி எளிதாகக் குணப்படுத்திவிட முடியாது! பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான். அதனால் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன். தொலை தூரத்தில் இருந்து
மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்."
“அந்த மூலிகை?”
“நம் ஊரில் சாதாரணமாக விளையும் தூதுவளைதான். அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன். பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்
காட்டினேன். மன்னன் நம்பி விட்டான். அவன் நோயும் தீர்ந்தது."
இன்று மனித இனத்தைப் பீடித்து இக்கும் நோய்களில் பெரும்பான்மை ஆனவை நம் மனங்களில் தான் இருக்கின்றன. காதில் நுழைந்த பூச்சி செத்து விட்டது. மனத்தில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது. இன்று நம்மில் பலர்
சூழ்நிலையைக் காரணம் காட்டி நம் வாழ்க்கையைத் நாமே கெடுத்துக் கொண்டிருக்கிறோம். பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி-கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை. அது நம் மனத்தில் இருக்கிறது. இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக் கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப்
புறப்பட்டனர். அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம்? நாமும் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். அவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில
தங்கி ஓய்வெடுத்தனர். விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவதைப் புண்டரீகன் பார்த்தான். அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர
#ராமநாம_மகிமை 1. நமக்கு நன்மை வர வேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நம் ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் வெளியேறுதலும் வேண்டும்.
2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச் சிறந்த பிராயச்சித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும்
தண்டனையை ஏற்பதும், பிராயச்சித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ராம்' என்றே நடக்க வேண்டும்.
3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கில் இருந்து விலகி விடுவோம். அது போல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்தில்
இருந்து விலகி செல்கிறோம்.
4. ‘ராம நாம' ஜபத்திற்கு குரு கிடைக்க வேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது 'ராம நாமம்.'
#ஶ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம்_சொல்வதால்_ஏற்படும்_நன்மைகள்
மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர் நோக்கிப் படுத்திருக்கிறார். கதறிக் கொண்டிருந்த கொல்லப்பட்ட வீரர்களின் மனைவிகள், தாய்மார்கள் மத்தியில் இன்னொரு தெய்வப் பெண்மணியும் தனியாக நின்று அழுதாள். அதைக்
கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, "இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், "இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை. பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப் போகிறாள் அவள்”என்றார். தர்மபுத்திரரை பயம் சூழ்ந்து கொண்டது. காரணம்-
பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதா என்கிற பயம்தான் அது. "தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ "அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைக் கேள், அவர் சொல்வார்” என்றார்.
songs by the Saivite Nayanmars. The temple has been built according to the agama Sastra. In the north-eastern part of the temple there was a huge tree. Is it still there?”
The Sivacharya was not very sure but all the same said, “Yes.”
“The Lord Paramesvara in your village is
very fond of you. He does not wish that you go to serve in small temples and struggle. Go back to your village and assist your father.”
The Sivacharya returned to his village and resumed service in the Siva temple there just as Periyava had instructed. A surprise lay in store
there for him! The very next month the village got together and appointed a committee to renovate the temple. The kumbhabhishekham took place the next year. Since the temple in the village was celebrated in the hymns sung by the Nayanmars, crowds of devotees gathered there. Two
#காசி_விஸ்வநாதர்_ஆலயம் #சிம்மாசனம்
காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்து, பூஜை எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று #குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம்
தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார்.
"கிழவரே நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது
தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள் தருகிறேன்" என சொல்லி விட்டு எழுந்து போனார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார். ஞானிகள் என்போர் எளிமையானவர்கள். எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன்