முன்மண்டபத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் கோபாலன் தனி சன்னதியில் அருளுகிறார். ராமர் சிலை வைக்கப்படும் முன்பு இவரே மூலஸ் தானத்தில் இருந்தார்.
2
பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இவ்வூர் "தெட்சிண அயோத்தி' என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்பக விமானம் எனப்படுகிறது.
3
*பிரார்த்தனை*
ராமரிடம் வேண்டிக்கொள்ள பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள், நியாய சிந்தனை உண்டாகும் என்பது நம்பிக்கை. நேர்த்திக்கடன் - சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
4
*தலபெருமை*
மூலஸ்தானத்தில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். ராமரின் பிறந்த நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் செய்து வழிபடுகிறார்கள்.
5
அன்று மாலையில் இவர் சீதையுடன் புறப்பாடாகிறார்.
ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்த்திருவிழா நடக்கிறது. ஐந்தாம் நாளில், இவர் ஆண்டாள் திருக்கோலத்தில் எழுந்தருளுவது விசேஷம். அட்சய திரிதியை அன்று ராமர் கருடசேவை சாதிக்கிறார். 6
*தல வரலாறு*
வனவாசம் முடித்தபிறகு, ராமபிரான் அயோத்திக்கு கிளம்ப தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற ராமர், மறுநாள் அவர்களைச் சந்திப்பதாக சொன்னார்.
7
தனது உருவத்தை சிலையாக செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார்.ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர்.
8
அதன் அழகில் லயித்து, ராமபிரானிடம், ""ராமா! இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. இது எப்படி வந்தது? அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,'' என்றனர்.
9
ராமர் ஒன்றும் தெரியாதவர் போல, ""அப்படியா! அப்படியானால் உங்களுடன் நான் இருப்பதைவிட அந்தச் சிலை இருப்பதைத்தான் விரும்புகிறீர்கள்போலும்!'' என்றார்.சிலையில் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையை தரும்படி கேட்டனர்.
10
அதன்படி ராமர் அவர்களிடம் சிலையை கொடுத்துவிட்டு, அயோத்தி திரும்பினார்.
பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். மேலும் சீதை, லட்சுமணர், பரதன், ஆஞ்சநேயருக்கும் சிலை வடித்தனர்.
11
அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர்.
தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டுவந்தபோது, ஒருநாள் மன்னரின் கனவில் தோன்றிய ராமர், தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார்.
12
அதன்படி தலைஞாயிறு சென்ற மன்னர் சிலைகளை மீட்டு வரும் வழியில் வடுவூரில் தங்கினார். அவரைச் சந்தித்த பக்தர்கள் சிலர், தங்கள் ஊரிலேயே சிலையைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.
13
பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற மன்னர், இங்கேயே ராமபிரானை வைத்துச் சென்றார். அதன்பின் மூலஸ்தானத்தில் கல் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.🙏
சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூர் ஒரு திவ்ய தேசம். மஹாலக்ஷ்மி இருப்பிடமாகக் கொண்டதலம் இது. நாளடைவில் மருவி தின்னனூர் என்றழைக்கப்படுகிறது.
இங்குள்ள புகழ்பெற்ற கோவில் பக்தவத்ஸலப் பெருமாளுடையது. இதே தலத்தில் தான் ராமபிரான் பக்தவத்ஸலர் ஆலயத்திற்கு அருகிலேயே ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இதுவும் பக்தவத்ஸலர் கோவிலைச் சேர்ந்த தனிக் கோவிலாகும்.
திருநின்றவூர் ஏரி ப்ரம்மாண்டமானதாக அக்கரையே தெரியாத அளவுக்குக் காட்சி அளிக்கிறது. அந்த ஏரிக்கு முன்புறமே அஞ்சன வண்ணனின் ஆலயம் உள்ளது.
*பரதனும் சத்ருக்கனனும் இணைந்து காட்சி தரும் ஸ்ரீராம அனுமன் கோயில்* முட்லூர்
‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இதில் நம்மாழ்வார் இராமாயணத்தை மட்டும் படிக்கச் சொல்லவில்லை. இராமபிரானைப் பக்தியோடு கற்க வேண்டும் என்கிறார்.
இந்திரஜித்துக்கும் இளையபெருமாளாகிய இலக்குவனனுக்கும் போர் நடக்கிறது. போர்க் களத்தில் இந்திரஜித் கடும் போர் செய்தான். சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்கிறான் இலக்குவன். ஆயினும் இந்திரஜித்தை வெல்ல முடியவில்லை.
அப்பொழுது ஒரு அர்த்த சந்திர பாணத்தை எடுத்து இராமனுடைய பெயரைச் சொல்லி பிரயோகம் செய்கின்றான் இலக்குவன். அந்த அர்த்த சந்திர பாணமானது இந்திரஜித்தை கீழே தள்ளுகிறது. பாணத்தைப் பிரயோகிக்கும்போது அவன் என்ன சங்கல்பம் சொல்கிறான் தெரியுமா?
கண்ணனிடத்திலே அதிக ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன், கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
தனக்கு கம்பன் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பதை தன்னுடைய சுயசரிதமான வனவாசத்தில் அவர் விவரித்து இருக்கிறார். அவர் கம்பராமாயணம் படிக்கத் தொடங்கியதன் நோக்கம், கம்பனை விமர்சிக்கவும், கம்பராமாயணத்தை எதிர்த்து மேடைகளில் பேசவும்தான் என்று அவரே சொல்லிவிட்டு,
கம்பனை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து கம்பனில் மூழ்கிய நான், அவனுக்கு அடிமையாகிப் போனேன். என் கவிதைகளுக்கும், திரைப்படப் பாடல்களுக்கும் துணை நிற்பது அவனுடைய பல கவிதைவரிகளும், சொற்களும்தான் என்பதை;