அன்பெழில் Profile picture
Apr 3 16 tweets 6 min read Twitter logo Read on Twitter
#ஶ்ரீரங்கம் #நம்பெருமாள் #பங்குனி_உத்திர_பிரம்மோத்சவம்
#பழையசோறும்_மாவடுவும்

நம்பெருமாள் கண்டருளும் இந்த உத்சவம் பங்குனி ஆதி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான 30/03/23 நடைபெற்றது. நம்பெருமாள் 29/03 இரவு 9 மணிக்கு பெரிய கோயில் கண்ணாடி அறையல் இருந்து புறப்பட்டு, சில
இடங்களில் வழிநடை உபயங்கள் கண்டருளி 30 காலை 11 மணிக்கு ஜீயர்புரம் ஆஸ்தான மண்டபம் (திருச்சி-கரூர் சாலையில்)
சென்று அடைந்தார். மண்டபத்துக்குப் பக்கத்தில் உள்ள பலாச தீர்த்தக் குளத் தீர்த்தத்தில் திருவடி விளக்கினார்.
மண்டபத்தில் எழுந்தருளி மாலை 6 மணி வரை பக்தர்களைக் கடாட்சித்தார். twitter.com/i/web/status/1…
அங்கிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.30 மணிக்குப் பெரிய கோயில் சென்று சேர்ந்தார். நம்பெருமாள் புறப்பாடு செல்லும் இடங்களுள் இதுவே அதிக தூரமானது, 14 கி.மீ. எங்கும் பெருமாளை கீழே இறக்கி வைத்தலோ அல்லது கட்டை குடுத்து நிறுத்தி வைத்தலோ கிடையாது. இந்த பிரம்மாண்ட புறப்பாட்டை
சிறப்பான கைங்கர்யமாகச் செய்யும் ஸ்ரீரங்கத்தைச் சேர்நத அரங்கன் அடியார்களுக்குப் பல்லாண்டு பாடுவோம்! நம்பெருமாளுடன் சென்று வருவது என்பது ஒரு அற்புதமான அனுபவம். சாலையில் நடந்து, காவிரி ஆற்றில் இறங்கி, நீரில் நடந்து, மணலில் ஓடி, மேடேறி, முட்புதர்க் காட்டில் குறுகலான பாதையில் ஓடி,
சோலைகள் நந்தவனங்கள் சூழ்ந்த பாதைகளில் புகுந்து வந்தார் நம்பெருமாள். இவ்வளவும் ஒரு அடியாருக்காக! ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்ட நம்பெருமாள் ஒவ்வொரு ஆண்டும் அங்கு சென்று வருகிறார். என்னே அவரது வாத்ஸல்யம்! செளஸீல்யம்! செளலப்யம்! இந்த வைபவத்தைப் பற்றி twitter.com/i/web/status/1…
ஶ்ரீ ரங்கம் பெரியகோவில் அர்ச்சகர் ஶ்ரீமான் முரளி பட்டர் ஸ்வாமி சாதித்தது:
“நம்பெருமாள் #ஜீயர்புரம் எழுந்தருளுகிறார். மற்ற எல்லா உற்சவங்களைக் காட்டிலும் இந்த உற்சவத்தில் நம்பெருமாளுக்கு
அலைச்சல் மிகவே அதிகம். அன்பு பெருக்கு வெள்ளமாய் வழிகையில் அலைச்சல் அதிகமாகத் தானே இருக்கும்.
இந்த திருநாள் சுவாரசியமான பிண்ணனி கொண்டது. எம்பெருமானார் காலத்திற்கு முன் நடந்த ஒரு நிகழ்வாக இருந்திருக்கலாம். அரங்கன் மீது ஆராத காதல் கொண்ட வயதான பாட்டி மற்றும் அவளது பேரன். பேரனின் திருநாமம் #ரங்கன். ஜீயர்புரம் என்னும் ஒரு சிறு கிராமம். காவிரிக்கரை ஓட்டி அமைந்துள்ள ஒரு அழகான
இடம். அந்நாளில் என்றும் காவிரி வற்றாது ஓடிக் கொண்டிருந்த ஒரு காலம். பேரன், சவரம் செய்துகொண்டு திரும்பி வந்து விடுகிறேன் என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். சவரம் செய்து கொண்டு காவிரியில் குளிக்க இறங்கியவனைக் காவிரி அள்ளிக் கொண்டு புரண்டோடினாள். அரங்கனது கடாக்ஷத்தினால்
அவன் மீது மாறாத பக்தி கொண்ட பேரனை ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்தின் அருகே கரை சேர்த்தாள் காவிரித்தாய்! நன்றிப் பெருக்குடன் நெக்குருக அரங்கனைத் தரிசித்தான் பேரன். பாட்டி தவிப்பாள் என்ற நினைவு வந்து அரங்கனிடத்து அவளுக்கும் சேர்த்து பிரார்த்திக்கின்றான். இங்கு ஜீயர்புரத்தின்
காவிரிக்கரையில் பாட்டி பேரனைக் காணாமல் ரங்கா! ரங்கா! என கதறிக் கொண்டிருக்கின்றாள். அப்போதுதான் சவரம் செய்த முகத்துடன் பேரன் ரங்கனுடைய உருவம் கொண்டு புன்சிரிப்போடு பாட்டிக்கு காட்சி தந்தான் இந்த மாயன். தவித்துப் போன பாட்டி பதட்டம் தணிந்தாள். தனது இல்லம் திரும்பி பேரனுக்கு பழைய
சோறும், மாவடுவும் படைத்தாள். இதனிடையே காவிரி கொண்டு சென்ற அவளது அசல் பேரனும் இல்லம் திரும்ப, மாயன் ரங்கன் மாயமானான். அரங்கனது அன்பு கண்டு, பாடடிக்கு எந்தவிதமான சந்தேகமும் வரக்கூடாது என்று சவரம் செய்த முகத்துடன் காட்சியளித்த அவனது கருணை கண்டு திருவரங்கம் நோக்கி வணங்கியது
ஜீயர்புரம். இந்த நெகிழ்வு மிக்க அரங்கனின் அன்பினைப் பாரோர் அறிந்து மகிழவும், இந்நிகழ்வு மறந்து விடாமலிருக்கவும், இன்றும் அரங்கன் ஜீயர்புரம் எழுந்தருளி அங்கு கருணையுடன் அனைவரையும் கடாக்ஷிக்கின்றார். ஜீயர்புரத்தில் காவிரிக்கரையில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். இந்த முதல்
மண்டகப்படி அங்குள்ள #சவரத்தொழிலாளர்களின் மண்டகப்படி. ஒரு காலத்தில் கருட மண்டபத்தில் பெருமாள் இத்திருநாளின் 2ம் திருநாளன்று எழுந்தருளி இருக்கையில், மிராசு சவரத் தொழிலாளியினால் நம்பெருமாளுக்கு நேர் எதிரே கண்ணாடி காட்டப்பட்டு அங்கு கண்ணாடியில் தெரிகின்ற நம்பெருமாளின்
பிரதிபிம்பத்திற்கு சவரம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று பின்பு அந்த சவரத் தொழிலாளி கௌரவிக்கபபட்டதாயும் இங்குள்ள நன்கு விஷயம் அறிந்த ஒரு பெரியவர் கூறுகின்றார். #எம்பெருமானார்_வைபவத்தில் இந்நிகழ்வு உள்ளது என்கின்றார். எவ்வளவோ நிகழ்வுகள் காலவெள்ளத்தில் கரைந்து போயுள்ளன.
அவற்றில் இதுவும் ஒன்றாய் இருக்கலாம். ஆனால் இன்றும் பெருமாள் காவிரிக்கரைச் சென்று சேர்ந்ததும் அவருக்கு ஆகும் முதல் நிவேதனம் அன்று பேரன் ரங்கனாய் பெருமாள் பாட்டிக்குக் காட்சியளித்த போது படைத்தாளே! “பழைய சோறும் மாவடுவும்”. அதே போன்றுதான் இன்றளவும் பழைய சோறும் மாவடுவும்.
ரங்கா ரங்கா
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 5
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-05-2016 தேதியிட்ட குமுதம் பக்தி (சுருக்கமான ஒரு பகுதி)
பழையனூர் என்ற ஊரில் மகா பெரியவாளின் பக்தர் ஒருவர் மாதம் ஒரு முறையாவது பெரியவாளை தரிசனம் பண்ண வந்துடுவார். சொந்த ஊரில் வேலை பார்த்து வந்த Image
அவரை சென்னைக்கு வேலை மாத்தல் உத்தரவு வந்தது. பட்டணம் வந்ததும் வாங்கின சம்பளத்தில் செலவெல்லாம் போக மிச்சம் பார்த்த அவருக்கு இங்கே கைக்கு வாங்கறது வாய்க்கும் வயத்துக்குமே சரியா இருக்கு என்பது புரிந்தது. மாதம் ஒரு முறை பெரியவாளை தரிசனம் செய்தவர் ஆறேழு மாசத்துக்கு ஒரு தரம் கூட வர
முடியலை. பொருளாதார நிலைமை குறைந்து கொண்டே போனது. ஒரு நாள் காதில் போட்டு இருந்த கடுக்கனையும் கழட்டி விற்கிற நிலைமை வந்தது. ரொம்பவே மனம் உடைந்து போனவர், பரமாசார்யா படத்துக்கு முன்னால் நின்னு, "இப்படி ஒரு நிலை எனக்கு வந்துடுத்தே. பகவானே நீங்க பார்த்துண்டு இருக்கலாமா? பாரம்பரியமா
Read 15 tweets
Apr 5
#ஆபத்தைபோக்கும்_நீக்கும் #ஆபத்பாந்தவனின்_நாமங்கள் #ஸ்ரீமன்_நாராயணன்_திருநாமங்கள்
#தினசரி_சொல்லவேண்டியவை
ஓம் ஹரி
ஸ்ரீஹரி
முரஹரி
நரஹரி
க்ருஷ்ணாஹரி
அம்புஜாக்ஷா
அச்சுதா
உச்சிதா
பஞ்சாயுதா
பாண்டவ தூதா
லக்ஷ்மீ ஸமேதா
லீலாவிநோதா
கமலபாதா
ஆதீ மத்யாந்த ரஹிதா
அநாதரக்ஷகா
தாமோதரா Image
அகிலாண்டகோடி ப்ரஹ்மாண்ட நாயகா
பரமானந்த முகுந்தா
வைகுந்தா
கோவிந்தா
பச்சைவண்ணா
கார்வண்ணா
பன்னகசயனா
கமலக்கண்ணா
ஜனார்தனா
கருடவாஹனா
ராக்ஷஸமர்த்தனா
காளிங்கநர்த்தனா
சேஷசயனா
நாராயணா
பிரம்மபாராயணா
வாமனா
நந்த நந்தனா
மதுஸூதனா
பரிபூரணா
சர்வகாரணா
வெங்கடரமணா
சங்கடஹரணா
ஸ்ரீதரா
துளஸீதரா
பலபத்ரா Image
பீதாம்பரா
சீதா மனோஹரா
மச்சகச்ச
வராஹாவதாரா
சங்கு சக்ரா
பரமேஸ்வரா
ஸர்வேஸ்வரா
கருணாகரா
ராதா மநோஹரா
ஸ்ரீரங்கா
ஹரிரங்கா
பாண்டுரங்கா
லோகநாயகா
பத்மநாபா
திவ்ய ஸ்வரூபா
புண்ய புருஷா
புருஷோத்தமா
ஸ்ரீராமா
ஹரிராமா
பரந்தாமா
ந்ரஸிம்ஹா
த்ரிவிக்ரமா
பரசுராமா
ஸஹஸ்ர நாமா
பக்த வத்சலா
பரமதயாளா Image
Read 6 tweets
Apr 5
#MahaPeriyava
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Paramacharya had announced a plan, with the intention of spreading the divine karma of writing and chanting the holy Rama Nama, among all the people far and wide. According to this plan, He would Image
give a gold coin along with kumkum, to everyone who wrote One Lakh numbers of ‘Rama Jayam’ and submitted it to Him. Many people started writing Rama Nama, for the sole purpose of receiving a gold coin from Paramacharya. Many devotees, when they came for darshan used to bring the
notebooks containing ‘Rama Jayam’, submit to Paramacharya and receive the gold coin from Him.
In order for this good habit to grow among people more and more, He made another plan, according to which, those who were unable to write One Lakh Namas, could write at least one eighth
Read 16 tweets
Apr 4
#ஜாம்பவான் திருமாலின் அவதாரங்களில் மிகவும் முக்கியமான இரண்டு அவதாரங்கள் இராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும். தேவர்கள் மற்றும் முனிவர்களை தவிர்த்து இந்த இரண்டு அவதாரங்களையும் பார்த்தது யாருமில்லை என்று நினைப்போம். ஆனால் உண்மையில் ஒருவர் மட்டும் இந்த இரண்டு அவதாரங்களிலும் வந்ததோடு Image
அவர்களுக்கு உதவியும் செய்துள்ளார்.
யாருக்குமே கிடைக்காத இந்த அதிர்ஷ்டம் கிடைத்த அவரின் பெயர் #ஜாம்பவான். இவரை #ஜாம்பவந்தா என்றும் அழைப்பார்கள். கரடிகளின் ராஜாவான இவர் மிகவும் சோம்பேறியான கரடியாக அனைவராலும் அறியப்படுகிறார். பிரம்மாவின் மகன்களுள் ஒருவரான இவர் சாகாவரம் பெற்றவர்
என்று கூறப்படுகிறது. இவர் #ரிக்ஷராஜா என்று அழைக்கப்பட்டார். ரிக்ஸ என்பது வானரங்களின் ஒருவகையாகும் பின்னாளில் இது கரடி என்று கூறப்பட்டது. இவர் ராவணனுடனான போரில், இமயமலையின் மன்னராக இருந்த இவர், இராமருக்கு உதவி செய்ய கரடியாக படைக்கப் பட்டார். போரில் உதவி செய்ததற்காக இவருக்கு இராமர் Image
Read 13 tweets
Apr 4
#நரநாராயணர் #பத்ரிகாஸ்ரமம்
தவத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்ட மகாவிஷ்ணு எடுத்த இரட்டை அவதாரமே நர நாராயணர்கள். கடவுள் மனிதனாகவும், மனிதன் கடவுளாகவும் ஆகமுடியும் என்ற தத்துவத்தை விளக்குவது இத்திருவவதாரம். மகா விஷ்ணுவின் பல்வேறு திருநாமங்களுண்டு. முக்கியமான 245-வது நாமம் Image
'நாராயணா’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கூறுகிறது. #நாராயணா என்றால், 'எல்லா ஜீவன்களும் உறையுமிடம்’ என்று பொருள். ஸ்ரீமந் நாராயணனிடம் இருந்து தான் சப்தரிஷிகளும், தேவர்களும், பஞ்சபூதங்களும், அனைத்து ஜீவராசிகளும் தோன்றி உள்ளன என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது.
'ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திரம் Image
பகவான் விஷ்ணுவைச் சரணடையவும், மோக்ஷத்தை அடையவும் வழிவகுக்கும் உன்னத மந்திரம் என்று புராணங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. நர நாராயணர் என்பவர்கள் பகவான் விஷ்ணு எடுத்த இரட்டை அவதாரம்.
நரன் என்பது மனிதத் தன்மையையும், நாராயணா என்பது தெய்வத் தன்மையையும் விளக்குவது.
'நர நாராயணன்’ Image
Read 24 tweets
Apr 4
#நற்சிந்தனை
கழுதையை நடக்க விட்டு அதன் சொந்தக்காரரரும், அவர் மகனும் அதன் கூட நடந்து சென்றனர். வழியில் மக்கள் இதை பார்த்து சிரித்தனர். மகன், ஏன் இப்படி சிரிக்கிறீர்கள் என்று கேட்டான்.
'எந்த மடையனாவது கழுதையை நடக்க விட்டு, அதனுடன் நடந்து செல்வானா? கழுதை ஒரு வாகனம்' என்றான். Image
பெரியவர் தன் மகனை கழுதையில் அமர்ந்து சவாரி செய்ய அனுமதித்தார். சிறிது தூரத்தில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. மக்கள் கூட்டம் தென்பட்டது. அதில் ஒருவன் கழுதையை தடுத்து நிறுத்தினான். ஏன் தடுக்கிறாய் என்று மகன் கேட்டான்.
'என்ன அநியாயம்! நீ சிறுவன். உன் தந்தை வயதானவர். அவர் தான் கழுதை
மேலமர்ந்து பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.'
பெரியவர் கழுதையில் அமர்ந்தார். சிறுவன் அவர் பின்னால் நடந்தான்.
வழியில் வேறு ஒரு ஊர் குறுக்கிட்டது. பெரியவரைப் பார்த்து அங்கு நின்ற ஒரு மனிதன் சாடினான். என்ன விஷயம், ஏன் கோபமாக இருக்கிறீர்கள் என மகன் வினவினான்.
'என்ன கொடுமை இது. நீ சிறுவன். Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(