இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை.. #திருவிளையாடல் படப் பாடல் இது.
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -
மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பாடலின் இடையில் வரும் வரிகள் இவை.
பாடலை எழுதியவர் #கவியரசர்_கண்ணதாசன்.
இந்த ஓர் வரிக்குப் பின்னால் அரிய புராண நிகழ்வு உள்ளது.
காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் அரதன குப்தன் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதுரையிலேயே வாழ்ந்து வந்தான். காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும் அவள் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனத்துக்குள் ஆசை.
எதிர்பாராமல் ஒரு நாள் அரதன குப்தனின் தங்கையும் அவள் கணவரும் இறந்துவிட்டதாக தகவல் வர
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்
வரும் வழியில் #திரும்புறம்பயம் என்ற இடத்திலே ஒரு புன்னைவனம். அதில் ஒரு வன்னிமரம். அருகில் ஒரு சிவலிங்கம். சற்றுத் தள்ளி ஒரு கிணறு. கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கி விட்டனர் இருவரும். காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள். அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்.
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது. கதறியழுதாள் ரத்னாவளி. தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர்.
நடந்ததை அறிந்து அவர் ஈசனிடம் முறையிட உயிரோடு எழுந்தான் அரதன குப்தன். சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டார் சம்பந்தர்.
“ஈசனுக்கு முன்பாக இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி, இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ” என்றார் அவர். மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன். இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள், அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும், சிவலிங்கமும்தான். இருவரும் மதுரை
வந்து சேர்ந்தனர். கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி கொதித்துப் போனாள். ரத்னாவளி நடந்த விஷயங்களை, உள்ளது உள்ளபடியே சொல்ல, அதை கொஞ்சமும் நம்பவில்லை முதல் மனைவி. வழக்கு சபைக்கு வந்தது. திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள். “மனிதர்கள்
யாருமில்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி” என்று கூறினாள் ரத்னாவளி. முதல் மனைவி கேலியாக “ஓஹோ அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” என்று கேட்டாள். கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். கூனிக் குறுகிப் போன ரத்னாவளி கைகூப்பி அழுதாள் தொழுதாள்.
கண்களில் கண்ணீர் வடிய கதறினாள் ரத்னாவளி. “ஈசனே இது என்ன சோதனை? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்?சொல்?” ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ, அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல்.
"நாங்கள் சாட்சி.”
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப்
பார்க்க, ஈசன் அங்கே எழுந்தருளி நின்றிருந்தார்.
“ஆம் இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான். ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக கல்யாணம் நடந்த இடமான #திருப்புறம்பியத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் சாட்சியா
இருக்கும்.” என்று சொல்லி மறைந்தார் ஈஸ்வரன். பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்கள். இப்போதும் மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில் வன்னி மரம், கிணறு, சிவலிங்கம் ஆகியவை உள்ளன. கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் #சாட்சிநாதர்
என்றும் #ஸ்ரீசாட்சிநாதசுவாமி என்ற பெயர் கிடைத்தது திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு. கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திருப்புறம்பியம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் உள்ளது.
[பொன்னியின் செல்வன் நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறார் கல்கி]
அறிவோம் நம் புராணம், அதை ஒரு வரியில் விளக்கிய கவியரசருக்கு நன்றி கூறுவோம். இந்த மாதிரி ஆன்மீக கவிஞர்கள் மீண்டும் தமிழகத்தில் தோன்ற அந்த ஈசனை வேண்டுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
சொன்னவர்-ரேவதி கிருஷ்ணமூர்த்தி சென்னை 33
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
திருமணமாகிப் 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பேறு இல்லை. பக்தி சிரத்தையான குடும்பம். பிறந்தது - புகுந்தது என்ற இரண்டுமே வீடுபேறு பெற்ற பரம்பரை. என் மாமனார்,
புதுக்கோட்டை டாக்டர் ந.தியாகராஜன், புதுக்கோட்டை சங்கர மடத்தில் அப்போதைய முத்ராதிகாரி. மகா பெரியவாள் இளையாத்தங்குடியில் தங்கி இருந்தபோது (1965) சிறிது உடல் நலம் குன்றியிருந்தார். கோயில் குளத்தில் நீராடி விட்டு, என் மாமனார்தான் பெரியவாளை தொட்டு சிகிச்சை அளிக்கும் பாக்கியம் பெற்றவர்
மகா பெரியவாளின் பூர்வாசிரம சகோதரர் பிரும்மஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், கடைசிக் காலங்களில் நோய்வாய்ப் பட்டிருந்த போது, சில மாதங்கள் எங்கள் மருத்தவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், விவாகமான நாள் முதல் (2-2-1977) நானும் என்
#நற்சிந்தனை
ஒரு முறை #மகாகவி_காளிதாசர் வயல் வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப் பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள். காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக இருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா என்று கேட்டார்
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன்
இன்னொருவர் சூரியன். இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள். சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர். உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான். ஒன்று செல்வம், மற்றொன்று இளமை. இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள். சற்று
ஸ்ரீ மடத்து யானைகளுக்கு, தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப் பாகன், தன் கையால் உருண்டையை எடுத்து, யானையின் வாய்க்குள்
செலுத்துவார். ஒரு நாள், யானைக்கு உணவு கொடுக்கும் வேளையில், பெரியவா தற்செயலாக அங்கே வந்து விட்டார்கள். உருண்டைகளாகச் சாதம் உருட்டி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள். அருகிலிருந்த சிஷ்யரிடம், "இந்த உருண்டைகளை யானைக்குக் கொடுக்க வேண்டாம்" என்று பாகனிடம் சொல்லும்படி உத்தரவிட்டு
"யானைக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அன்னம், சரியாக வேகவில்லை. காய்ந்து பொறுக்குத் தட்டிப் போயிருந்தது. இப்படி எல்லாம் அசிரத்தையாய் தீனி கொடுக்கக் கூடாது. வாயில்லாப் பிராணி என்பதால், வெந்ததும்,வேகாததுமாக சாதம்
#MahaPeriyava
Source: Translated from Chapter 11 of the book Anbe Arule by Sri Bharanidharan
He was a Maha Siddhar (A Yogi of great stature). He was capapble of performing a lot of miracles. He had the capacity to cure some diseases too. After a surgery, my brother was having
unbearable stomach pain and so I wanting some immediate relief for him I took him to this Yogi at that time. After doing Pooja, the Yogi gave some Vibhoothi Prasadam to my brother. As I had gone to him, the Yogi thought that I would definitely write about him. But when he saw
that I showed no interest in doing that, he kept sending invitations to me to attract me towards him. (So that I would get interested enough to write about him). During yet another unavoidable situation, I went to him again. It was almost midnight. He closed the door and
#ராமநாம_மகிமை
காசியில் வாழ்ந்து வந்த பெரும் செல்வந்தரான குமரன் எனும் வியாபாரி , குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டார். மன வருத்தம் அடைந்த அவர், 'மனைவி, மக்கள், ஏராளமான செல்வம் எல்லாம் இருந்தும், ஆரோக்கியம் இல்லா விட்டால் என்ன பலன்’ என்று வருந்தினார். ஒருநாள் மனைவி, மக்கள், சுற்றத்தார்
அனைவரையும் அழைத்து, 'இனிமேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கும் தொல்லை. என்னை அழைத்து போய், கங்கையில் போட்டு விடுங்கள்’என்றார். முதலில் மறுத்த உறவினரும், மற்றவர்களும், வேறு வழியின்றி செல்வந்தரின் வற்புறுத்தலுக்கு இணங்கினர்.
குமரனை துாக்கிப் போய், அவர் தலையிலும்
கால்களிலும் காலி பானைகளை கட்டி, கங்கையில் மிதக்கவிடத் தயாராகினர். அந்த நேரத்தில், #கபீர்தாசரின் சீடரான #பத்மநாபர், அங்கு வந்து, விவரம் அறிந்தார். என்ன அக்கிரமம் இது! புல்- பூண்டு என பல பிறவிகள் எடுத்த பின்பே, அரிதான இந்த மானுடப் பிறவி கிடைக்கிறது. அப்படிக் கிடைத்த இந்தப் பிறவியை