Lijo Jose Pellissery இன் அட்டகாசமான படைப்பு. இந்த படம் வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுத்திச்சு, முக்கியமா அந்த காடும் மலையும் அதன் சத்தங்களும் பின்னணி இசையும் கூடவே பயணித்த உணர்வை கொடுத்திச்சு. கூடவே பல குறியீடுகளும்🚶.
முன் கதை :
"உனக்கு பெருமாடன் யாரென்று தெரியுமா சாஜிவா? , அவன் எல்லோரையும் வழி தவற வைக்கும் மாயை" என்று கதை சொல்ல ஆரம்பிக்கும் பெண், பெருமாடனை பிடிக்க காட்டிற்குள் சென்ற திருமேனியையும் அவர் பெருமாடனால் வழி தவறி காட்டிற்குள் சுற்றுவதை பற்றியும் கூறுகிறாள்.
நிகழ்காலம் : அந்தோனி, சாஜிவன் என்னும் புனை பெயருடன் இரண்டு போலீஸ்காரர்கள் ஜோய் என்பவனை பிடிப்பதற்காக 'சுருளி' என்ற இடத்திற்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் அனுபவிக்கும் அமானுஷ்யங்களும், இறுதியில் ஜோயை கைதுசெய்தார்களா? என்பதுதான் கதை. ரொம்ப சிம்பிளான கதைதான் என்றாலும் making அதகளம்.
நான் செஞ்ச உருப்படியான விஷயம் நான் யாருக்கும் கதை சொல்லலை. கதிருக்கு மட்டும் தெரியும். எடுக்கப் போகும் காட்சியை காலையில் சொல்லுவேன். டயலாக் அதிகம் இருந்தால் முந்தைய நாள் இரவு கொடுப்பேன். க்ளைமேக்ஸ் சொன்னேன். ஜெய் கலங்கிட்டான்.
சுவாதி அங்கிருந்து எழுந்துபோய் அறையில் அழ ஆரம்பித்துவிட்டாள்.
அறையிலிருந்து போன் செய்து ‘அப்ப நான் என்ன முதுகுல குத்துற ஆளா?’ என்று கேட்டு புலம்ப ஆரம்பிச்சிருச்சு. கதாபாத்திரத்தோடு அவர்கள் ஒன்றிப் போயிருந்தது எனக்கு சந்தோஷம் கொடுத்தது.
ரொம்ப நாளைக்கு பிறகு நெகிழ்ச்சியான feel good movie. Down syndromeல பாதிக்கப்பட்ட அண்ணனுக்கும், அவரின் தம்பிக்கும் இடையிலான பாசப்போராட்டம்தான் கதை. ரொம்ப இயல்பான நடிப்பு, வசனங்கள் என்று படம்முடியும் போது ஒரு மன நிறைவைத் தருகிறார்கள்.
எப்போவும் நிறைய positivity இருக்கிற படங்களை பார்க்க பிடிக்கும். Depressionல இருக்கிறப்போ எல்லாம் இந்த மாதிரி படங்களை பார்க்கிறப்போ டக்குன்னு நம்மளை boost பண்ணும். பிடித்த மனிதர்களும், படங்களும்தான் என்னோட happy pills.
படத்துல ஒரு வசனம் வரும், "உன்னால முடியாது என்று சொன்னவங்களுக்கு முன்னால, நீ அதை உன்னால முடியும்னு செய்து காட்டு". எத்தனை சத்தியமான வார்த்தைகள்.