அன்பெழில் Profile picture
May 30 20 tweets 6 min read Twitter logo Read on Twitter
#மத்தூரு_உக்ர_நரசிம்மர்_ஆலயம்
கர்நாடக மாநிலத்தில் பல நகரங்கள், கிராமங்களில் நரசிம்ம பெருமானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. நரசிம்ம பெருமான் அவற்றில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் மற்றும் உக்ர நரசிம்மர் எனும் பெயரில் அவதாரம் எடுத்து அமர்ந்துள்ளார். இப்படியான ஓர் ஆலயம் உகர நரசிம்மர் Image
ஆலயம் எனும் பெயரில் மத்தூரில் வைத்யநாத ஸ்வாமி ஆலயத்தின் அருகில் உள்ளது. இதுவும் மஹாபாரத கதையுடன் இணைந்த கோவில் ஆகும். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. துவாபர யுகத்தில் பல மைல் தூர பரப்பளவில் இருந்ததாக கூறப்படும் மத்தூர் அன்று அர்ஜூனாபுரி என்று அழைக்கப்பட்டது. Image
அங்கு மஹாபாரத போரின் இறுதி கட்ட முக்கியமான சண்டை பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் இரு தரப்பிலும் பல உயிர்கள் செடிகொடிகள் வெட்டி சாய்ப்பதை போல வீழ்ந்து மரணம் அடைவதைக் கண்ட அர்ஜுனனின் மனம் தளர்ந்து போயிற்று. இறப்பவர்கள் எதிரிகளாக Image
இருந்தாலும் ரத்த சம்மந்தம் கொண்ட உறவினர்களே என்பதினால், இழந்த மன அமைதியை திரும்பப் பெற்று யுத்தத்தில் முழு மனதுடன் ஈடுபட, மனபலம் அதிகரிக்க வேண்டும் என எண்ணிய அர்ஜுனன் கிருஷ்ணனிடம் அவர் ஒருமுறை எடுத்த உக்ர நரசிம்ம அவதாரத்தைத் தனக்குக் காட்டுமாறு வேண்டினான். நரசிம்மர் சிங்க Image
முகத்தையும் மனித உடலையும் கொண்டவர் என்றாலும் தீமைகளை அழித்து நன்மைகளை அளிக்கவே அந்த பயங்கரமான உருவைக் கொண்ட அவதாரத்தை எடுத்தவர். லட்சுமி நரசிம்மர் அல்லது யோக நரசிம்மர் என்ற நிலையில் அவரை ஆராதிக்கும்போது நம் பாவங்கள் தொலைந்து துன்பங்கள் நீங்கும். நரசிம்ம பெருமானை வணங்கி Image
துதிப்போர்க்கு மன அமைதி கிடைக்கும், வளமான வாழ்க்கை அமையும், தீயவை விலகும், துன்பங்கள் மறையும் மற்றும் மனதில் பயமின்மை போன்ற நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏன் எனில் அவர் தீமைகளை அழித்து நன்மைகளை அளிப்பவர். அவர் தருவது வெளிப் Image
பார்வைக்கான மன அமைதி மட்டுமே அல்ல, அது உளமாற கிடைக்கும் ஆழ்ந்த மன அமைதி ஆகும். இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவரே நரசிம்மத் பெருமான் என்பதால் தான் அர்ஜுனன் தனக்கு அந்த அவதார கோலத்தை காட்டுமாறு பகவானிடம் வேண்டுகோள் வைத்தான். கிருஷ்ண பகவானுக்கு அர்ஜுனனின் மனம் புரிந்தது. தனது Image
உற்றாரும் உறவினரும் செடிகொடிகள் போல சாய்ந்து விழுவது அவன் உள்ளத்தில் தளர்ச்சியை ஏற்படுத்தி விட்டது,அதை அப்படியே விட்டு விட்டால் நடைபெறும் யுத்தத்தின் முடிவே மாறிவிடும் என்பதை உணர்ந்தார். அதே நேரத்தில் தான் அர்ஜுனனுக்கு நேரடியாக நரசிம்ம அவதாரத்தின் உக்ர கோலத்தைக் காட்டினால், அந்த Image
பயங்கரக் காட்சியைக் காணும் அவன் உடைந்து போன மனது மேலும் பயம் கொண்டு அவன் வீரத்தை தளர்ச்சி அடைந்து விட வைத்து விடும். ஆகவே அவனுக்கு முன் நேரடியாக அந்த காட்சியில் தான் தோற்றம் எடுக்கக் கூடாது என முடிவு செய்தார். அவன் வேண்டுகோளை ஏற்று அவன் முன் அந்த கோலத்தில் தான் தோன்றி விட்டால் Image
உடனடியாக சில காலம் தான் அவனுக்கு யுத்தத்தில் உதவிக்கொண்டு இருக்கும் கிருஷ்ணர் என்ற நிலையில் இருந்து விலகி நிற்க நேரிட்டு விடும் என்ற நியதியும் இருந்தது. ஆகவே தன்னால் எந்த உதவியையும் அர்ஜுனனுக்கு செய்ய இயலாமல் போய் விடும் என்பதாக அவனிடம் எடுத்துரைத்தார். அதே சமயம் அர்ஜுனனின் Image
ஆசையை நிராகரிக்க விரும்பாததால் அந்த கோலத்தை பிரும்மா மூலம் காட்டுவதாக அவனை சமாதானப் படுத்தினார். பிரும்மாவும் கிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று அதே இடத்தில் உக்ர நரசிம்மர் ஹிரண்யகசிபுவை எவ்வாறு அழித்தாரோ அதே கோலத்தில் தத்ரூபமாக நரசிம்மரின் சிலா ரூபத்தை நிர்மாணித்தார். எட்டு கைகள் Image
3 கண்களைக் கொண்ட த்ரிநேத்ர நரசிம்ம விக்கிரகத்தில் இரு கைகளினால் ஹிரண்யகசிபுவை தனது தொடையில் அழுத்தி வைத்துக் கொண்டு இன்னும் இரு கைகளினால் அவனது குடலைப் பிடுங்கி மாலையாக போட்டுக் கொண்ட காட்சி இருந்தது. அவனை வதம் செய்யும்போது மூன்றாவது கண்ணை திறந்து காட்டுகிறார் என்று அர்ஜுனனுக்கு Image
கேட்கும் வகையில் அசரீரி ஒலியை எழுப்ப வைத்தார். மற்ற நான்கு கைகளிலும் ஆயுதங்கள் இருக்க அவர் காலடியில் இடப்புறம் கருட பகவான் மற்றும், வலப்புறத்தில் பிரஹலாதன் காணப் பட்டார்கள். சாதாரணமாக சிவபெருமானுக்கு மட்டுமே 3 கண்கள் உண்டு என்பதினால் அந்த த்ரிநேத்ர நரசிம்ம பெருமான் மேன்மை Image
பெற்றவராக உள்ளார். அந்த கோலத்தில் அவரை தரிசிக்கும் பக்தர்கள் மன அமைதி பெற்று மன பலத்தையும் பெறுகின்றார்கள். இப்படிப்பட்ட மேன்மையான கோலத்தில் நரசிம்ம பெருமானை தரிசனம் செய்த அர்ஜுனன் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருந்தான். அவன் மீண்டும் கண் விழித்தபோது புதுப்பொலிவோடு
யுத்தத்தில் ஈடுபடும் மன உணர்வைப் பெற்று இருந்தான். அவனுடைய மனோதிடம் அதிகரித்து இருந்தது. அவன் எதிரில் கிருஷ்ண பகவான் சிரித்துக் கொண்டு நின்று இருந்தார். காலப்போக்கில் அந்த இடமே அதே விக்ரகத்துடன் கூடிய உக்ர நரசிம்மர் ஆலயமாயிற்று. பிரும்ம பகவான் நிர்மாணித்த சிலையைக் கொண்ட ஆலயத்தில்
பிற்காலத்தில் தனித் தனி சன்னதியில் கிருஷ்ண பெருமான் குழந்தை கோலத்தில் இருக்க அவரை தனது மார்போடு அழுத்தி வைத்துக் கொண்டு அவருக்குத் தன் மடியில் இருந்து பால் தரும் காட்சியில் தேவகி யசோதா இருக்க, ஸ்ரீனிவாசப் பெருமான் இன்னொரு சன்னதியிலும், நரசிம்ம பெருமானின் மனைவிகளான பூதேவி மற்றும்
ஸ்ரீதேவி எனும் தாயார்கள் சௌம்யா நாயகி மற்றும் நரசிம்ம நாயகி எனும் பெயர்களிலும், இன்னொரு சன்னதியில் ராம-லக்ஷ்மண சீதா சமேத சிலைகளும் அமைக்கப்பட்டன. அந்த ராம-லக்ஷ்மண சீதா சமேத சன்னதியில் ஆஞ்சநேய பகவான் கைகளைக் கூப்பி ராமபிரானை வணங்கி நிற்கும் காட்சியில் விக்ரகம் உள்ளது. ஹோய்சால
மன்னர்கள் ஆட்சி காலத்தில் நலிவடைந்து இருந்த இந்த ஆலயத்தை புதுப்பித்து உள்ளார்கள். இந்த இடம் கடம்ப முனிவர் காலத்தில் #கடம்பஷேத்ரா என அழைக்கப்பட்டு அந்த முனிவரும் இங்கு தங்கி இருந்து ஆலயத்தில் வழிபட்டு வந்ததாக ஆலய வரலாறு கூறுகிறது. குழந்தை செல்வம் அற்ற தம்பதிகள் இங்கு வந்து
திருமஞ்சனம் செய்து மஞ்சள் காப்பு சாத்தி அந்த திருமஞ்சனத்தை நீரை கலந்து அந்த தண்ணீரில் குளித்தால் அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும், மற்றும் ஸ்வாமிக்கு திருமஞ்சனம் சாத்தி வேண்டுதல்கள் செய்தால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது ஆலய நம்பிக்கை. இந்த ஆலயம் அற்புதமான ஆலயம் என்பதில்
சந்தேகமே இல்லை.
மாண்டியாவிற்கு 22 கிமீ, பெங்களூரிலிருந்து மைசூரு பேருந்து வழித்தடத்தில் மத்தூரு உள்ளது. மத்தூரு மாண்டியாவிலிருந்து 22 கிமீ மைசூரிலிருந்து 72 கிமீ, பெங்களூருவிலிருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது.
ஜெய் நரசிம்ம
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 1
#uthiramerur #Modi #NewParliamentBuilding #MahaPeriyava
While performing Bhumi Puja of the New Parliament building, our PM mentioned about a place known as Uthiramerur. There's some very good information about the Democratic Processes in ancient Bharateeya cities and villages! Image
Uthiramerur (TamilNadu) is a model of Democracy! Uthiramerur is situated in Kancheepuram District, about 90 kms from Chennai. It has a 1,250-year old history! There are three important Temples. The three Temples have a large number of inscriptions, notably those from the reigns Image
of Raja Raja Chola (985-1014 CE.) his son Rajendra Chola, and the Vijayanagar Emperor Krishnadeva Raya! During the period of Parantaka Chola [907-955 CE.] the village administration was honed into a perfect system, through elections by the people! In fact, inscriptions on Image
Read 17 tweets
Jun 1
#மகாபெரியவா
சங்கராம்ருதம் - 523
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

பல வருடங்களுக்கு முன் ஒருநாள் இரவு கொட்டித் தீர்த்துக் கொண்டு இருந்த மழையில், ஶ்ரீமடத்திலிருந்து ரெண்டு பேர், தொழிலதிபர் ஶ்ரீ A.C முத்தையாவின் வீட்டுக்கு வந்தார்கள். Image
அவர்களை தகுந்த முறையில் வரவேற்றார்.

“என்ன விஷயம்? இத்தன மழைல”

“பெரியவா ஆக்ஞை! சிதம்பரத்ல நடராஜருக்கு வைரக்ரீடம் பண்றதுக்காக நிதி தெரட்டச் சொல்லி பெரியவா உத்தரவிட்டிருக்கா! எங்களால ஓரளவுதான் முடிஞ்சுது. இங்க மெட்ராஸ்ல சில பேரைப் பாத்துக் கேக்கலாம்னு இருக்கோம். அதுக்கு நீங்க
தான் ஸஹாயம் பண்ணணும்”

பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர் ஶ்ரீ முத்தையா.

“அதுக்கென்னங்க? பெரியவா உத்தரவிட்டாப் போறுமே! கட்டாயம் எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்றேன் எவ்வளவு நிதி தெரட்டி தர முடியுமோ என்னால ஆனதை செய்யறேன் மீதி எவ்வளவு தேவையோ, அத நானே குடுக்கறேன் இது, எங்களோட பாக்யம்”
Read 12 tweets
Jun 1
#MahaPeriyava
Author: SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol. 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

A devotee who had been connected for long with the SriMatham was talking to Periyava. He was complaining about another Image
man saying, "That man is an utter kaarkotaka (the king of snakes)!"
After a moment’s silence,
Periyava said, "Do you mean he is good?"
The devotee could not understand. "I meant he is a kaarkotaka who has the dreadfully, poisonous venom..."

Periyava asked him: "You know
praatasmarana shloka?

Kaarkotakasya Naagasya Damayanthyaa Nalasya Cha
Rithuparnasya Raajarsheha Keerthanam Kalinaashanam

"Kaarkotaka, Damayanti, Nala, Rituparna just remembering them removes one of their sins. They are such punyavaans (sacred souls)."

The bhakta who had spoken
Read 5 tweets
May 31
#ஸ்ரீஅழகிய_மணவாளப்_பெருமாள் (#நம்பெருமாள்) #ஸ்ரீரங்கம் திரும்பிய நாள் இன்று! வைகாசி 17 (31.5.23)
652 ஆண்டுகளுக்கு முன்னர், பரீதாபி ஆண்டு(1371) இதே வைகாசி 17ஆம் நாள், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் 48 ஆண்டுகள் அந்நிய வாசம் முடிந்து, ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளினார்! 1323 ஆம் ஆண்டு, Image
பங்குனி மாதம், ஊலுக்கான் என்னும் முஸ்லீம் மன்னன் (முகமது பின் துக்ளக்) படைகள் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டன. ஸ்ரீரங்கநாதப் பெருமாள் உற்சவர், அழகிய மணவாளர் பங்குனி உற்சவம், எட்டாம் நாள் புறப்பாடு கண்டருளி, வட திருக் காவேரியில் உள்ள பன்றியாழ்வான் சந்நிதிக்கு எழுந்தருளியிருந்தார்.
அப்போது முஸ்லீம் படைகள் சமயபுரம் அருகே நெருங்கிவிட்டனர் என்று செய்தி வந்தது. உடனே அங்கு எழுந்தருளியிருந்த #ஸ்ரீபிள்ளைலோகாசார்யரும் மற்ற ஆசார்ய புருஷர்களும், பெருமாளுக்கு திரையிடச் செய்து, பெருமாளையும் உபய நாச்சிமார்களையும் பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு தெற்கு நோக்கிப் Image
Read 20 tweets
May 31
#ஸ்ரீமத்வர் மத்வரின் இயற்பெயர், வாசுதேவர். கர்னாடகாவில் உடுப்பிக்கு அருகில் உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். 8 வயதிலேயே துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் #பூர்ணப்பிரக்ஞர். இவர் மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் உடல் பலத்திலும், மந்திர Image
சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர். அநுமன், பீமன் இவர்களுக்கு பிறகு வாயு தேவனின் அவதாரமாக உதித்தவர் மத்வர். அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் இவர் #ஆனந்ததீர்த்தர் என்றே அறியப்படுகிறார். மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து
அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத் திறனும், கருத்து சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு
Read 5 tweets
May 31
#அன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில், சூரி - அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். #சுபத்ரா_கல்யாணம் என்ற நூலை இயற்றிய தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான #திம்மக்கா அன்னமாச்சாரியாரின் மனைவியாவார்.
அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் Image
தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. கோவில்களில் முதன்முதலில் பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை. இவர் 32,000க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை கர்நாடக இசை முறையில் இயற்றி
உள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப் பட்டிருந்தன, பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் சுமார் 12,000
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(