#மகாபெரியவா
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்- எம். சுப்புராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
மும்பை வேத ரக்ஷண நிதிக்குழுவினர் (சுமார் 150 பேர்) தரிசனத்துக்கு வருவதாக முன்னதாகவே தகவல் கொடுத்திருந்தோம்.
சாதுர்மாஸ்ய விரதத்தைப் பக்திப் பரவசத்துடன் நடத்தி வந்த
உள்ளூர்ப் பிரமுகர்களை அழைத்தார்கள் பெரியவா.
“எனக்காக (வேதத்துக்காக) உழைக்கும் பக்தர்கள் மும்பையில் இருந்து வருகிறார்கள். அவர்களை நல்ல முறையில் வரவேற்க வேணும்”
பெரியவா ஒரு வார்த்தை சொன்னால் போதாதா! ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்கெல்லாம் மாலை மரியாதை; வழி நெடுகிலும் தோரணங்கள்! கோலாகலம்
உற்சாகம், அமர்க்களம் எங்களுக்கு எல்லாம் ரொம்பவும் திகைப்பாக இருந்தது. நாங்கள் என்ன முக்கியப் பிரமுகர்களா? கோடீஸ்வரகளா? பலவித அலுவல்கள் செய்து வரும் சாதாரண மக்கள். எங்களுக்கு ஏன் இவ்வளவு தடபுடலான வரவேற்பு? எங்களில் ஒருவர், உள்ளூர்ப் பிரமுகரைக் கேட்டேவிட்டார்.
“ஸ்ரீசரணாளே
ஆக்ஞாபித்து விட்டார்கள். வேத ரக்ஷணத்துக்காகப் படாதபாடுபட்டு, நிதி திரட்டி, எடுத்துக் கொண்டு மும்பையிலிருந்து பக்தர்கள் வருகிறார்கள். வேத மாதாவை ரக்ஷிக்க உழைக்கும் மகா புண்ணியசாலிகள். அவர்களுக்குத் தக்கபடி மரியாதையுடன் வரவேற்கணும், நாங்கள் ஏதோ எங்களால் முடிந்த அளவுக்கு கொஞ்சமாகத்
தான் செய்திருக்கிறோம்”
ஆகா இந்தக் கோலாகல வரவேற்பு, வயிற்றைக் கழுவிக் கொள்ள நாங்கள் செய்துவரும் லௌகிக அலுவல்களுக்காக அல்ல. வேதத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் மாபெரும் பணியில் அணில் தொண்டு செய்து வருகிறோமே, அதற்காக. லிஇதற்கெல்லாம் காரணம் பெரியவாளுடைய எல்லையில்லாத கருணை, வாத்ஸல்யம்
மட்டுமல்ல, இதற்கெல்லாம் மேலே மேலே இருக்கக் கூடிய மகத்தான ஓர் இயல்பு – தெய்வாம்சம். முகாம் இருந்த இடத்துக்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். நீராடல் முதலியன முடித்துக் கொண்டு, பெரியவாள் தரிசனம் கொடுக்கும் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு, தைத்ரீய உபநிஷத் பாராயணம் செய்யத் தொடங்கினோம். ஸ்ரீ
ஸ்வாமிகள் மண்டபத்திற்குள் நேராக வராமல், மண்டபத்தைச் சுற்றிவரத் தொடங்கினார்கள். எங்களுக்கு எல்லாம் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஏன் எங்களைக் கண்டு கொள்ளாமல், எங்கள் பாராயணத்தைக் கேட்காமல் சுற்றிக் கொண்டு போகிறார்களே என்று. உடனே மண்டபத்திலிருந்து எல்லோரும் எழுந்து, பெரியவா சுற்றி
வரும் வழியில், வராந்தாவில் போய் நின்று கொண்டு உபநிஷத் பாராயணத்தைத் தொடர்ந்தோம். பெரியவா எங்களைப் பார்த்ததும், வராந்தாவிலிருந்து இறங்கி எங்களைத் தவிர்ப்பது போல கீழே இறங்கி மண்டபத்தை வலம் வந்து சுற்றி நடக்க ஆரம்பித்தார்கள். என்ன செய்வது? மறுபடியும் மண்டபத்துக்கே வந்து, பாராயணத்தைத்
தொடர்ந்து நடத்தினோம். ஆச்சரியம்! பெரியவா, அந்த மண்டபத்தை வலம் வந்துவிட்டு, வழக்கமாகத் தரிசனம் கொடுக்கும் இடத்துக்கு வந்து, சுவரில் சாய்ந்து, ஒற்றைக் காலால் நின்றபடியே, மும்பைக் குழுவின் தலைவர் ஸ்ரீகோகுலம் அவர்களை அருகில் அழைத்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு
ஒவ்வொருவராக அழைத்து, சுமார் ஒன்றரை மணிநேரம் ஒற்றைக்காலில் நின்ற நிலையிலேயே எங்களுக்கு அநுக்ரஹம் செய்தார்கள். ரொம்பவும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால், ‘உபநிஷத் பாராயணம் செய்த மண்டபத்துக்குள் ஏன் நேராக வரவில்லை நாங்கள் என்ன தவறு செய்தோம்’ என்ற ஆதங்கம் மறையவில்லை. வேத பாராயணம்
செய்பவர்களையும், அது நடக்கும் இடத்தையும் பிரதட்க்ஷிணம் செய்ய வேண்டும். அதனால்தான், அந்த மண்டபத்தையே வலமாக வந்தார்கள். ஒற்றைக் காலால் தவம் செய்வது போல் நிற்பானேன் என்றால், அப்படி நின்று அநுக்ரஹம் செய்வதன் மூலம், வேதபாராயணம் செய்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும், பலவகையில் உதவி
செய்தவர்களுக்கும் க்ஷேமம் உண்டாகும் என்று பின்னர் தெரிந்துகொண்டு மிகவும் சமாதானம் அடைந்தோம். பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். வேதமாதா அவர்களை அவ்வளவு தீவிரமாக ஆட்கொண்டிருந்தாள். தரிசனம் முடிந்தவுடன் எங்கள் எல்லோரிடமும் பொதுவாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள். எங்களுடன் மும்பை
வழக்கறிஞர், ஸ்ரீவித்யா உபாஸகர், குஜராத்திக்காரர் ஆர்.ஸி.அஞ்ஜாரியா என்பவரும் வந்திருந்தார். அவரை ஸ்ரீஸுக்தம் சொல்லும்படி ஆணையிட்டு, அதைக் கேட்டு ரசித்தார்கள் பெரியவா. டாக்டர் கிரிதாரி சர்மா என்ற ஒரு மார்வாரிக்காரர் சுக்ல யஜுர்வேதம் மாத்யந்தின சாகையைச் சேர்ந்தவர். தன் சாகையை
அத்யயனம் செய்தவர். பிரபலமான இருதய நோய் நிபுணராக இருந்தாலும், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இரு புதல்வர்களுக்கும் வீட்டிலேயே வேதாத்யயனம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய புத்திரர்களுக்கு வேதம் கற்பிக்கும் ஆசிரியரும் வந்திருந்தார். அவர்கள் சாகையிலிருந்து ஒரு பகுதியை
பாராயணம் சொல்லக்கேட்டு ஆனந்தித்தார்கள் பெரியவாள். வேத அத்யாபகருக்கு உயர்ந்த சால்வையைப் போர்த்தச் செய்து பாராட்டினார்கள்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#காலகாலேஸ்வரர்_கோவில் கோயம்புத்தூர். 1,000-2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் இது. இங்குள்ள குரு பகவான் உலகிலேயே மிக உயரமானது. இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது. அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோவில்களில் வித விதமான அபிஷேகம் செய்து பூஜை
செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச் சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை
வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம்
#நற்சிந்தனை
சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் சந்தேகம். வாலியை வீழ்த்தும் அளவு வலிமை ராமனுக்கு உள்ளதா எனச் சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான்.
அருகில் இருந்த வனத்துக்கு அழைத்துச் சென்ற சுக்ரீவன், 'ராமா! வாலி தன் வில்லில் இருந்து பாணம் போட்டால், அது
பெருத்த சால மரத்தையே துளைக்கும். அவ்வாறு உன்னால் பாணம் போட முடியுமா?' என்று கேட்டான். ராமன் புன்னகை செய்தபடி தன் கோதண்டத்தில் பாணத்தைப் பூட்டி எய்தான். அது வரிசையாக ஏழு சால மரங்களைத் துளைத்துக் கொண்டு சென்றது. அதை கண்டபின் தான் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் நம்பிக்கை
உண்டானது. இவ்வாறு பலவிதமான சாகசங்களைப் புரிந்து தன் பக்தர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையை உண்டாக்கி அதை வளர்ப்பவராகத் இறைவன் திகழ்வதால் #ப்ரத்யய: என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 94-வது திருநாமம். தன்நம்பிக்கையை நாம் இழக்கும் போதெல்லாம் “ப்ரத்யயாய நம:”என்ற திருநாமத்தைச்
#foodforthought
When Akbar saw a Brahmin begging in a pitiable condition, he sarcastically said towards Birbal - 'Birbal! These are your Brahmins! Who is known as Brahmadeva. They are beggars. Birbal did not say anything at that time. But when Akbar went to the palace, Birbal
came back and asked the Brahmin why he begged. Brahmin said - 'I have no money, jewellery, land and I am not much educated either. Hence, begging is my compulsion for the maintenance of the family.
Birbal asked - How much is received in a day by begging?
The Brahmin replied - Six
to eight coins.
Birbal said - If you get some work, will you stop begging?
Brahmin asked - What should I do?
Birbal said - You will have to take bath in Brahmamuhurt and wear clean clothes and chant 101 Gayatri Mantra daily and for this you will get 10 coins daily. The Brahmin
#அழகாபுத்தூர்_படிக்காசுநாதர்_கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய முருகப் பெருமானின் அபூர்வத் தோற்றம் இங்கு! கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். இத்தலத்து இறைவன் திருநாமம் படிக்காசுநாதர். இறைவியின் திருநாமம் அழகம்மை.
முருகப்பெருமான்
இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். ஒரு சமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர்.
திருமால் முருகனுக்கு தனது சங்கு,
சக்கரத்தை கொடுத்தார்.
ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக உள்ளது.
இந்திர மயில்
#பூரி_ஸ்ரீஜெகன்நாதர் கோவிலில் குடி கொண்டிருக்கும் விஷ்ணு பகவான், தினமும் காலையில் எழுந்து ராமேஸ்வரம் சென்று விட்டு, மதிய உணவுக்கு மீண்டும் பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு வந்து விடுவதாக ஓர் ஐதீகம். அதனால் தினந்தோறும் இந்த கோவிலில் இறைவனுக்காக விருந்து மிகவும் தடபுடலாக செய்யப்
படுகிறது. இந்த விருந்து சமைக்கும் முறை சற்று வித்தியாசமானது. கோயிலின் சமையலறை உலகிலேயே மிகப் பெரியது. பாரம்பரியம் மிக்கது. 56 வகையான சைவ உணவுகள் வெங்காயம், பூண்டு இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. கங்கா மற்றும் யமுனை எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு தீர்த்தக் கிணறுகளில்
இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி மண் பானைகளில் மட்டுமே சமையல் செய்யப்படுகிறது. இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில்
#MahaPeriyava
Author: Radha Ramamoorthy, Pudukottai (in Tamil)
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol.2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
This happened at a village near Villupuram. A man from the Narikurava tribe who was camping there
decided to commit suicide due to family complications. He came to the railway station and stretched himself on the platform, with the intention of jumping onto the rails when the next train came.
The man slept in a place nearby thinking about this in his mind. He had a dream-like
vision, wherein a sage appeared before him and said, "You need not end your life. Come and see me. I shall grant you peace." He woke up with a start. A wave of freshness spread through his body. It occurred him to search for the sage who came in his dream. He sold the gold ring