அன்பெழில் Profile picture
Jun 6 7 tweets 3 min read Twitter logo Read on Twitter
#காஞ்சி_வரதராஜப்_பெருமாள்
வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம் திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில். சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 31வது திவ்ய தேசமாகும். இக்கோயிலில் பாஞ்சராத்திரம் Image
ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. 1053ல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப் பெற்றது என்று கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். 14ஆம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் Image
அமைக்கப்பட்டது. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர் ஸ்ரீ ஸ்ருங்கிபோர் எனும் முனிவரின் குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை
கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்து விட்டார். பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சிபுரம் சென்று வராதராஜ பெருமாளை தரிசித்தால் மன்னிப்பு உண்டு என்று கூறினார். பிறகு இருவரும் சப்த புரிகளையும் சுற்றி வந்து விட்டு காஞ்சீபுரம் சென்று வரதராஜப் பெருமாளை
தரிசித்து மோட்சம் கேட்டு வேண்டிக் கொண்டனர். பெருமாள் உங்கள் ஆத்மா வைகுண்டம் செல்ல வேண்டும் என்றால் உங்கள் சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருந்து, என்னை தரிசிக்கவரும் பக்தர்கள் உங்களையும் தரிசித்தால் சகல தோஷம் நீங்கி ஷேமம் உண்டாகும் என்று அருளினார். சூரியன் சந்திரன் இதற்கு Image
சாட்சி என்று மோட்சம் அளித்தார். ஆகையால் இந்த தரிசனம் இன்றும் முக்கியமானதாகும். #வையமாளிகை_பல்லி தரிசனம் சிறப்பானது. (தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது.) இதைத் தொட்டு வணங்கு பவர்களுக்கு பல்லி விழுவதால் ஏற்பட கூடிய சகல தோஷங்களும் Image
பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.இன்றும் பக்தர்கள் பெருமாளை தரிசித்து பின்னர் பிரகாரம் சுற்றி வரும்போது இந்த பல்லிகளையும் தரிசித்து வருகின்றனர். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 7
#ராகுகாலம் தெரியும். அது போல கேது காலத்துக்கு என்ன பெயர்? அது #எமகண்டம்.
ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமைகள் இல்லை. ஆனால் அவை பலமில்லாத கிரகங்கள் என்று பொருளல்ல. நவகிரகங்களில் புதனும் அதை Image
விடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள். ராகு- Image
கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணிநேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி
Read 30 tweets
Jun 7
#காலகாலேஸ்வரர்_கோவில் கோயம்புத்தூர். 1,000-2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் இது. இங்குள்ள குரு பகவான் உலகிலேயே மிக உயரமானது. இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது. அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோவில்களில் வித விதமான அபிஷேகம் செய்து பூஜை Image
செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச் சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை Image
வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம் Image
Read 11 tweets
Jun 6
#நற்சிந்தனை
சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் சந்தேகம். வாலியை வீழ்த்தும் அளவு வலிமை ராமனுக்கு உள்ளதா எனச் சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான்.
அருகில் இருந்த வனத்துக்கு அழைத்துச் சென்ற சுக்ரீவன், 'ராமா! வாலி தன் வில்லில் இருந்து பாணம் போட்டால், அது Image
பெருத்த சால மரத்தையே துளைக்கும். அவ்வாறு உன்னால் பாணம் போட முடியுமா?' என்று கேட்டான். ராமன் புன்னகை செய்தபடி தன் கோதண்டத்தில் பாணத்தைப் பூட்டி எய்தான். அது வரிசையாக ஏழு சால மரங்களைத் துளைத்துக் கொண்டு சென்றது. அதை கண்டபின் தான் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் நம்பிக்கை Image
உண்டானது. இவ்வாறு பலவிதமான சாகசங்களைப் புரிந்து தன் பக்தர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையை உண்டாக்கி அதை வளர்ப்பவராகத் இறைவன் திகழ்வதால் #ப்ரத்யய: என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 94-வது திருநாமம். தன்நம்பிக்கையை நாம் இழக்கும் போதெல்லாம் “ப்ரத்யயாய நம:”என்ற திருநாமத்தைச்
Read 6 tweets
Jun 6
#foodforthought
When Akbar saw a Brahmin begging in a pitiable condition, he sarcastically said towards Birbal - 'Birbal! These are your Brahmins! Who is known as Brahmadeva. They are beggars. Birbal did not say anything at that time. But when Akbar went to the palace, Birbal Image
came back and asked the Brahmin why he begged. Brahmin said - 'I have no money, jewellery, land and I am not much educated either. Hence, begging is my compulsion for the maintenance of the family.
Birbal asked - How much is received in a day by begging?
The Brahmin replied - Six
to eight coins.
Birbal said - If you get some work, will you stop begging?
Brahmin asked - What should I do?
Birbal said - You will have to take bath in Brahmamuhurt and wear clean clothes and chant 101 Gayatri Mantra daily and for this you will get 10 coins daily. The Brahmin
Read 12 tweets
Jun 6
#அழகாபுத்தூர்_படிக்காசுநாதர்_கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய முருகப் பெருமானின் அபூர்வத் தோற்றம் இங்கு! கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். இத்தலத்து இறைவன் திருநாமம் படிக்காசுநாதர். இறைவியின் திருநாமம் அழகம்மை.
முருகப்பெருமான் Image
இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். ஒரு சமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர்.
திருமால் முருகனுக்கு தனது சங்கு, Image
சக்கரத்தை கொடுத்தார்.
ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக உள்ளது.
இந்திர மயில்
Read 4 tweets
Jun 6
#பூரி_ஸ்ரீஜெகன்நாதர் கோவிலில் குடி கொண்டிருக்கும் விஷ்ணு பகவான், தினமும் காலையில் எழுந்து ராமேஸ்வரம் சென்று விட்டு, மதிய உணவுக்கு மீண்டும் பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு வந்து விடுவதாக ஓர் ஐதீகம். அதனால் தினந்தோறும் இந்த கோவிலில் இறைவனுக்காக விருந்து மிகவும் தடபுடலாக செய்யப் Image
படுகிறது. இந்த விருந்து சமைக்கும் முறை சற்று வித்தியாசமானது. கோயிலின் சமையலறை உலகிலேயே மிகப் பெரியது. பாரம்பரியம் மிக்கது. 56 வகையான சைவ உணவுகள் வெங்காயம், பூண்டு இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. கங்கா மற்றும் யமுனை எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு தீர்த்தக் கிணறுகளில்
இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி மண் பானைகளில் மட்டுமே சமையல் செய்யப்படுகிறது. இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(