சிந்தனை Profile picture
Jun 6 57 tweets 9 min read Twitter logo Read on Twitter
மோடி எனும் மாயபொம்மை.

உலகம் தகவல் தொழில் நுட்பத்தின் மீதேறி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது, மேற்குலகின் சந்தைப் பொருளாதாரம் மிகப்பெரிய தேவைகளோடு உற்பத்தியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது, பில்லியனர்களின் கைகளில் இருந்த பங்குச் சந்தைகளில் நுழைந்து எவரும் பரிவர்த்தனை Image
செய்யலாம் என்றொரு புரட்சி நிகழ்ந்தது.

நுகர்வுக் கலாச்சாரம் உலகைக் கட்டிப் போட்டது, உலக ஊடகங்கள் அனைத்தும் வீடுகளுக்குள் நுழைந்து பெரு நிறுவனங்களுக்கான லாபி செய்து கொண்டிருந்தன. அப்போதும் இந்தியா மெல்ல அசைந்தாடியபடி தன்னுடைய சாதிக் கட்டமைப்பை இறுக்கமாகப் பற்றியபடி ராமர்
கோவிலுக்காக செங்கல் அனுப்பிக் கொண்டிருந்தது.

விடுதலைக்குப் பின்பான அதன் குடிமக்கள் நாள் முழுவதும் உழைத்தார்கள், உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையும், அதிக இளைஞர்களும் நிரம்பி இருந்த இந்தியாவின் கூட்டு மனசாட்சி எப்படியும் நாம் ஒரு வளர்ந்த நாடாக உருவாகி விடுவோம் என்ற
நம்பிக்கை கொண்டிருந்தது.

இந்திரா காந்தியின் எதிர்பாராத மரணம் தேசத்தின் பாதையைத் திடீரெனப் புரட்டிப் போட்டது, உள்ளார்ந்த சாதி மத ஒருங்கிணைவாலும், அரதப் பழைய மரபு சார்ந்த அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளாலும் தேங்கிக் கிடந்த இந்தியாவின் பாதையை ராஜீவ் காந்தியின் துடிப்பான இளம்
குருதியும், மேலைக் கல்வி தந்த வாழ்வனுபவமும் ஒரு அரேபியக் குதிரையின் வேகத்தில் பயணிக்க வைத்தது.

தகவல் தொடர்பையும், தொழில் நுட்பத்தையும் அவர் நாட்டின் கடைக்கோடிக்குக் கடத்தி விட முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்தார், அவருடைய இளம் நண்பர்கள் அடங்கிய ஒரு கூட்டணி புதிய பாதைகளை
நோக்கி இந்தியாவை நகர்த்த முயற்சித்தது, கல்வி மற்றும் சமூக அரசியலில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் தொழில்நுட்பம் கொண்டு வந்த மாற்றங்கள் உற்பத்தியைப் பெருக்க உதவியது.

அப்போது அரசியலைக் குறித்த பெரிய அறிவேதுமில்லாத பள்ளி மாணவனாக இருந்த என்னைப் போன்ற லட்சக்கணக்கான இளம்
இந்தியர்கள் ராஜீவ் காந்தியின் மீது ஈடுபாடு கொள்ள அவரது துடுக்கான தடாலடி முடிவுகளும், மிரட்டலான நிலவியல் அரசியலும் உதவியது.

தீவிரமாகி இருந்த இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது, மிராஜ் 2000 வானூர்திகளைத் தாழப் பறக்க விட்டு உணவுப் பொட்டலங்களை அதிரடியாக அவர் தூக்கி எறிந்த போது
தன்னெழுச்சியான ஒரு தலைவராக தமிழகத்திலும் உருவாகத் துவங்கினார்.

மதவாதப் பிற்போக்குத் தனமும், சாதிய உணர்வுகளும் மேலோங்கிய அவரது தேசத்தின் சக அரசியல்வாதிகளும், இந்தியாவின் வளத்தையும், அதிகார விநியோகத்தையும் ஒற்றை மேலடுக்கிலேயே வைத்துப் பாதுகாத்த பார்ப்பனீய அதிகார வர்க்கமும், ராஜீவ்
காந்தியின் அசுரத்தனமான வளர்ச்சியை அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே காவு வாங்கிக் கொண்டது.

இடைப்பட்ட காலத்தில் விஸ்வநாத் பிரதாப் சிங் அரசியல் வானில் ஒரு விடிவெள்ளியைப் போல வந்து இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மக்கள் மன்றத்துக்கான நீதியை வழங்கும் "மண்டல் கமிஷன்" அறிக்கையை
ஆட்சியை விலையாகக் கொடுத்து செயல்படுத்திக் காட்டி வரலாற்றில் நிலை கொண்டு விடை பெற்றார்.

பிறகு ஐ.கே.குஜ்ராலும், தேவகவுடாவும் வந்து அந்த நாற்காலியில் கொஞ்ச காலம் அமர்ந்திருந்தார்கள். மிதமான மதப் பிற்போக்குத் தன்மையும், பார்ப்பனீய அடிப்படைவாதமும் நிரம்பிய காங்கிரஸ் கட்சியைத்
தாண்டி மாநில அரசியலை நோக்கி மக்கள் பயணித்ததன் விளைவாக உருவான நாடு தழுவிய கூட்டணியின் பயனாகக் காங்கிரஸ் அல்லாத பிரதமர்கள் அணிவகுத்தார்கள்.

நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது தான் மௌனமாக உலகளாவிய சந்தைப் பொருளாதாரத்தின் கதவுகள் இந்தியாவில் திறக்கப்பட்டது,
பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும் உலக சந்தைப் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சி கொண்டு வந்து சேர்த்த புகழ் மாலையை நரசிம்மராவ் பொருத்தமில்லாமல் அணிந்து கொண்டார்.

இடைப்பட்ட காலத்தில், வட இந்தியர்களின் உளவியலை அதீத தேசப்பற்று மற்றும் மத உணர்வுகளால் ஒருங்கிணைத்து இந்திய
வலதுசாரிகளும், பார்ப்பனீய நிறுவனமுமான ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் முகமான பாரதீய ஜனதாவை வலுவாக்கிக் கொண்டே வந்தது.

கவிஞரும் மிதவாத வலதுசாரி அரசியல் விற்பண்ணருமான அடல் பிகாரி வாஜ்பாயியின் முகமும், கவர்ச்சிகரமான சொற்களும் ஒரு புதிய எழுச்சியை பாரதீய ஜனதாவுக்கு வழங்கியது. பெரிய அளவிலான
ஆர்பபாட்டங்களும், கட்டமைப்பும் இல்லாமல் அவர்கள் தங்கள் இருப்பை ஹிந்தி பேசுகிற வட மாநிலங்களிலும், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் உறுதிப் படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

லால் கிருஷ்ண அத்வானி, ரதயாத்திரையின் மூலமாக ஒரு மிகப்பெரிய மதப் பிளவை உருவாக்கவும், அதன் மூலமாக
அதிகாரத்துக்கு வரவும் பெருமுயற்சி செய்தார், பாரதீய ஜனதாவின் அரசியல் அடையாளம் அந்த ரத யாத்திரையின் தேர்க்கால்களில் தான் எழுதப்பட்டது.

வாஜ்பாயி அரசு காலத்தில் தான் இந்திய இயற்கை வளங்களையும், அரசு சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளங்களையும் லாபிகள் மூலமாக பனியாக்கள்
கைப்பற்றுகிற கலை காங்கிரஸிடம் இருந்து பாரதீய ஜனதாவுக்குக் கை மாறியது.

ராஜீவ் கொலைக்கு நீதி வழங்கும் விதமாக மக்கள் ஒரு கரிசனத்தை காங்கிரஸ் கட்சியின் மீது காட்டினார்கள். சோனியா தனக்கு முன்பிருந்த வாய்ப்பை மறுத்து டாக்டர் மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்.

நவீன உலகின் அரசியல்
வரலாற்றில் இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய மனிதவளம் கொண்ட நாட்டின் பிரதமராக 10 வருடங்கள் ஒரு பொருளாதார மேதை வீற்றிருந்ததன் விளைவாக மெல்ல இந்தியா என்றொரு தேசம் வளர்ச்சியும், நிலைத்தன்மையும் கொண்டதாக மாறத் துவங்கியது, அவர் வெளிப்படையாக சில உண்மைகளைப் போட்டு மக்கள் மன்றத்தில் உடைத்தார்
"விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள்" என்றார், உலகின் மிகப்பெரிய விவசாய நாடான இந்தியாவின் பிரதமர் ஒருவரே தனது குடிமக்களை விவசாயத்தை விட்டு வெளியே வாருங்கள் என்று சொன்னது வியப்பான துயரமாகவும், மறுக்க முடியாத பொருளாதார உண்மையாகவும் இருந்தது.
ஆனால், நிலையான பெரிய அளவிலான அரசியல் குழப்பங்கள் இல்லாத அந்தப் பத்தாண்டுகளில் தான் உலகம் இந்தியாவின் பலத்தை அறிந்து கொண்டது, இந்திய இளைஞர்களின் தலைமைப் பண்புகளும், தகவல் தொழில்நுட்பத்தில் அவர்கள் காட்டிய மதியூக செயல்திறனும் மட்டுமில்லாமல், இந்திய இறையாண்மையின் ஆழமான மதிப்பீடுகளை
தனது அறிவார்ந்த பொருளாதார சிந்தனைகளால் உலக நாடுகளுக்கு உணர்த்தியவராக டாக்டர் மன்மோகன் சிங் அப்போதே உருமாறி இருந்தார்.

வலது சிந்தனையில் திளைத்திருந்த நாடும், எதிர்க்கட்சிகளும் அவரை ஒரு நடமாடும் பொம்மை என்று கேலி பேசின,அதை ஒரு மென்மையான புன்னகையால் எதிர்கொண்டு கடந்து வந்தார் அவர்.
மறுபக்கத்தில் சுதேசி இந்தியா, மசூதி இடிப்பு, ராமர் கோவில், பாகிஸ்தான் என்று உணர்ச்சிகரமான அரசியலின் பிண்ணனியில் அசுர வேகத்தில் வளர்ந்தது பாரதீய ஜனதா. லால் கிருஷ்ண அத்வானி பிரதமராகும் கனவில் திளைத்திருந்தார்.

ஆனால், இல்லாத ரயில் நிலையத்தில் இருந்த தேநீர்க் கடையொன்றில் இருந்து
புறப்பட்ட பிற்படுத்தப்பட்ட முகமான நரேந்திர தாமோதரதாஸ் மோடிக்கு அந்த வாய்ப்பை வழங்குவதென பாரதீய ஜனதாவின் தலைமைப் பீடமான நாக்பூர் மடாதிபதிகள் முடிவு செய்திருந்தார்கள்.
அவர்கள் இந்த தேநீர்க்கடையிலிருந்து பிறந்த குஜராத் முதல்வர் தங்கள் தேச வளச் சுரண்டலுக்கான ஒரு நற்கருவியாக இருப்பார் என்றுதான் குஜராத் மாநிலத்தை உலகின் சொர்க்கம் என்று ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கின.

நரேந்திர தாமோதரதாஸ் மோடி ஆர்.எஸ்.எஸ் மடாதிபதிகளின் மனங்கவர் நாயகனாக உருவெடுத்து
வளர்ச்சியின் நாயகன், தேசப்பாதுகாவலன், நற்கடவுளரின் அவதாரம் என்று புகழப்பட்டு இந்திய அரசியலில் இதுவரை இல்லாத விதமாக சந்தைப்படுத்தப்பட்டார்.

அவரை முன்வைத்து இந்தியாவின் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்கள், கிடைக்கிற இடங்களில் எல்லாம் நசுக்கப்படுவதைக் கூட அறியாத அல்லது
அறிந்தும் அதுகுறித்த சிந்தனைப் பின்புலத்தை நோக்கிப் பயணிக்கிற ஒரு மனிதராக நரேந்திர தாமோதரதாஸ் மோடி இல்லை.

அரசியலின் பின்புலத்தில் இயங்கும் பழமைவாத ஆற்றல்களை ஓரளவுக்குப் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் புரிந்துணர்வை நோக்கி மெல்ல நகரத் துவங்கி இருந்த இந்திய சாமானிய இளைஞர்களின்
முன்பாக மோடி என்கிற பிம்பம் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டது.

திருநள்ளாறுக்கு மேலே வருகிற செயற்கைக் கோள்கள் இப்போதும் நின்று போவதாக நம்புகிற அதே கூட்டமும், அதன் நம்பிக்கைகளும் தான் நரேந்திர மோடி இந்தியாவை உய்விக்க வந்த பத்தாவது அவதாரம் என்று பினாத்துவதற்கு ஆள் சேர்த்தது.
உண்மையிலேயே இவர்தான் வளர்ச்சியின் நாயகராக இருப்பாரோ? என்கிற தடுமாற்றத்தை நோக்கி இளைய இந்தியாவை நகர்த்தியது நாக்பூர் மடாதிபதிகளின் அறிவுத் தளம்.

தனது நம்பிக்கையை நாக்பூர் மடாதிபதிகளிடம் முறையாக நிரூபித்த நரேந்திர தாமோதரதாஸ் மோடி, பெருத்த ஆரவாரத்தோடு பிரமரானார். அவருக்குத்
தெரியாமலேயே அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த இலக்கு, இந்தியா என்கிற நாட்டை ஒரு வணிக நிறுவனமாக மாற்றுவது.

எல்லையற்ற அதன் வளங்களை முற்றிலுமாக மடாதிபதிகளின் கடைக்கண் பார்வையைப் பெற்ற சிலருக்கு மடை மாற்றுவது, மேலோட்டமாக இந்த எளிய இலக்குகள் இருந்தாலும் இந்துத்துவ அடிப்படைவிதிகளின்
உண்மையான இலக்கு வேறு. இந்தியாவை 60-70 ஆண்டுகள் பின்னுக்கு நகர்த்தி தேசத்தை புராதான பிற்போக்கு மதவாத வர்ண அமைப்பாக மாற்றி, பார்ப்பனீய இந்தியாவைக் கட்டமைப்பது.

மோடி இன்றுவரை நாக்பூர் மடத்தின் விருப்பத்தை சரியாகப் பூர்த்தி செய்கிற ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளராகவே இருக்கிறார்,
அவருக்குப் பெரிய அளவில் கல்வி அறிவு இல்லை, தேசத்தின் உண்மையான சிக்கல்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலோ, சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கிற திறனோ முற்றிலுமாக இல்லை. அவர் ஒரு விளம்பர பொம்மை. அதற்காக அவருக்கு அணிவிக்கப்படும் ஆடைகள் மற்றும் வசதிகளைத்தான் அவர் பிரதமர்களின் தகுதி
என்று கருதுகிற மண்குதிரை.

அவர் கையில் எடுத்த எந்த ஒரு திட்டமும் இந்த ஏழு ஆண்டுகளில் வெற்றி பெறவில்லை, அவர் விளம்பரங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு போலி பிம்பம் என்பதைப் பெரும்பாலான இந்தியர்கள் பெருந்தொற்றின் இரண்டாம் அலை வரும் வரை அறிந்திருக்கவே இல்லை.

இந்தியா என்கிற மாபெரும்
மக்களமைப்பின் உள்ளீடுகளைத் தன்னுடையது என்று அரசியல் அதிகார மயக்கத்தில் அவர் நம்பினார், பொருளாதார அறிவோ, தனது குடிமக்களைப் பற்றிய புரிந்துணர்வோ இல்லாத ஒரு செருக்கை அவர் வளர்த்துக் கொண்டே இருந்தார்.

ஒரே இரவில் பொருளாதாரத்தின் முதுகெலும்பை பணமதிப்பிழப்பு என்கிற தான் தோன்றித்தனமான
முடிவால் உடைத்து நொறுக்கினார்,ஒரு மிகப்பெரிய முடிவைத் துணிந்து எடுத்த பிரதமர் என்கிற புகழை மட்டுமே அதன் மூலமாக அவர் அடைய நினைத்தார்.

தேசமோ அதிர்ந்து நின்றது. ஆனால் அதற்குப் பின்னால் ஆதிநாக்பூர் மடாதிபதிகளின் சேவகர்களான முதலாளிகளின் பெருமளவிலான கருப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டது
பொருட்கள் மற்றும் சேவை வரியின் தவறான செயலாக்கத்தால் இந்தியாவின் சிறு குறு வணிகர்களைக் கடையடைக்க வைத்தார், ஆனால் பாவம் அவர்கள் தான் இன்றும் அவருக்காக தேசமெங்கும் லாபி செய்கிற தியாகிகள், இரக்கமேயின்றி அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தார்.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றை
விற்று முதலாக்கி நாக்பூர் மடாதிபதிகள் கைகாட்டியவர்களுக்குப் பரிசளித்தார்.

மத உணர்வுகளைத் தூண்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு சராசரி தற்குறியாக அவர் மேடைகளில் வலம் வந்தார், காஷ்மீரை மீண்டும் அரசதிகாரத்தின் சிறைக்கூடமாக மாற்றி விட்டு அதை சாதனையாகப் பறை சாற்றினார்.
அமைப்புகளை சிதைத்து தனது புகழ் பாடும் நிறுவனங்களாக மாற்றிக் கொண்டார், உச்சநீதிமன்றத்தை அரசின் கைக்கூலியாக மாற்றினார், தேர்தல் ஆணையத்தை பாரதீய ஜனதாவின் கிளை அமைப்பாகவும் திருத்தி அமைத்தார். இந்த 9 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஊடகங்களை சந்திக்காத பிரதமராக இருந்து கொண்டு "மன்கீபாத்"களில்
ஜனநாயகம் குறித்து வாய் கிழியப் பேசுகிறார்.

கல்வி நிறுவனங்களை அரச பயங்கரவாதக் கரம் கொண்டு தாக்கிய முதலும் கடைசியுமான பிரதமர் இவராகத்தான் இருக்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களை நாடாளுமன்ற விவாதங்கள் இன்றி திருத்தி அமைத்தார். தனது அதிகார நிழலான உள்துறை அமைச்சரின் வழியாக எண்ணற்ற
மாநிலங்களின் ஆட்சியைக் குலைத்தார்.

மாநிலக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவதில் விற்பன்னரானார். அறிவியலுக்குப் புறம்பானவற்றை அள்ளித் தெளிக்கிற தனது சகாக்களையோ, இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுகிற தனது கட்சிக்காரர்களையோ ஒருபோதும் கண்டிக்க மறுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களை காவல்துறை கொண்டு ஒடுக்குவது, அவர்களின் மீது அதிகாரக் கட்டமைப்புகளைக் கொண்டு மிரட்டுவது என்று முழுமையான மன்னராட்சி முறையாக தனது ஆட்சிமுறையை மாற்றிக் கொண்டார், "கங்காதேவி என்னை அழைக்கிறாள்" என்று வாரணாசி தொகுதியில் போட்டியிடச் சென்றபோது முழங்கியவர்,
பிறகு வாரணாசியின் கங்கைக் கரை முழுதும் பிணங்களால் நிரம்பி இருந்த சூழலில் திரும்பிப் பார்க்க மறுத்தார், ஓடி ஒளிந்து கொண்டார்.

பிண்ணனியில் நடக்கிற பல்வேறு கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் வளச் சுரண்டல்கள் குறித்து ஓரளவு அவருக்குத் தெரியும், ஆனால் அதிகாரம் தருகிற போதையில்
மூழ்கித் திளைப்பவராக அவர் மாறி நெடுங்காலமாகிறது.

அவரை மீட்பர் என்று விளம்பரம் செய்த நாக்பூரின் படைகளை வழிநடத்துகிற பெரிய மடாதிபதியான "மோகன் பகவத்" மக்களுக்கும் அரசுக்கும் இடைவெளியாகி விட்டது என்று சொல்லுமளவுக்கு அவரது ஆட்சியின் அவலம் பெருந்தொற்றுக்
காலத்தில் இருந்து தொடர்கதையாகி இருக்கிறது.

பெருந்தொற்றின் அவலமான முதல் அலையின் போது, "விளக்கேற்றுங்கள், ஒலி எழுப்புங்கள்" என்று ஊடகங்களில் காட்சி அளித்து உலக அரங்கில் நாட்டைத் தலைகுனிய வைத்தார்.

உலகின் பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கான பெருந்தொற்றுக்கால நிவாரணமாக நேரடியாகப்
பணம் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருக்க, இவரது நிதித்துறை சகா கார்ப்பரேட் வரிச்சலுகைகளையும், பொதுத்துறை நிறுவன விற்பனைகளையும் குறித்தே பேசிக்கொண்டிருந்தார்.

இவருக்கும் பொருளாதார அறிவில்லை என்பது துணைக்கதை. பல லட்சம் கோடி நிவாரணம் என்ற பெயரில் பழைய வரவு செலவுத் திட்ட
ஒதுக்கீடுகளை வைத்துப் படம் காட்டிய நிதி அமைச்சரை வேடிக்கை பார்த்தார். புலம் பெயர்ந்த கூலித் தொழிலாளிகள் நாடு முழுவதும் சாலைகளில் கேட்பாரற்றுத் திரிந்த போது வாய் திறக்காது கள்ள மௌனம் காத்தார்.

ஏறத்தாழ ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராடிக் கொண்டிருந்த விவசாயிகளின் குரல் இந்த
வேலைக்காரரின் காதுகளில் இறுதி வரை விழவில்லை. பிறகு வேண்டா வெறுப்பாக தனது முதலாளி சேவகர்களின் எரிச்சலோடு திரும்பப் பெற்றுக் கொண்டார்.

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிதைக்கப்பட்ட நேரத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாகத் திரண்ட தனது கட்சிக்காரர்களைக் கண்டிக்கிற குறைந்த பட்ச
மனித நேயமற்றவராகத்தான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி இருந்தார்.

130 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி வழங்க வேண்டுமே என்கிற எந்த அக்கறையும் இல்லாமல் தனது படங்களைப் போட்டு தடுப்பூசிகளை வேறு நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்த பிரதமர், பிறகு தனது வெளியுறவுத்துறை அமைச்சரை அமெரிக்காவுக்கு
அனுப்பி உலகத் தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

பெருந்தொற்றுக் காலத்தில் உலக நாடுகளில் மிக மோசமாக செயல்பட்ட தலைவர்களின் வரிசையில் முதலிடத்தில் நின்றவர் பரிதாபகரமான இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி.

இந்திய இறையாண்மை, டாக்டர் மன்மோகன் சிங்
காலத்தில் அடைந்த நம்பகத் தன்மையைக் குலைத்தது மட்டுமின்றி சொந்த தேசமும் சரி, பிற தேசங்களும் சரி, நம்பகத் தன்மையற்ற, குடிமக்களின் மீது அக்கறையற்ற பிரதமர் என்று இவரைப் பொது வெளியில் தூற்றத் துவங்கி இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சிக் குறியீட்டு எண்களை‌ வைத்து ஒப்பீடு செய்தால்
இந்தியாவை விட மிகச்சிறப்பான வளர்ச்சி விகிதத்தை வைத்திருக்கிறது பங்களாதேஷ்.

உலகின் ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக இருந்த திருப்பூர், கோவை நகரங்களை விழுங்கி ஏப்பமிட்டு அவரையும் அறியாமல் பிற ஆசிய‌ நாடுகள் அந்த வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துக் கொண்டதை வேடிக்கை பார்த்தார்.
இப்போது வாய்ப்புகள் மங்கிக் கொண்டே வருவதையும், மோடியின் விளம்பர நாடகங்கள் தங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை என்ற‌ உண்மையை தேசத்தின் எளியவர்கள்‌ உணரத்துவங்கி‌ இருக்கிறார்கள்.

மோடியின் முதலாளிகளான நாக்பூர் மடாதிபதிகள் மதவெறுப்பு மூலமாகப் பிடித்து வைத்திருந்த கர்நாடக மக்களே
திருந்தி 26 கிலோமீட்டர்கள் சாலைக்காட்சி நடத்தியும் மோடியைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தார்கள். தோற்கடித்தார்கள்.

தேசம் தனது அதிகார போதையைப் பறித்து விடுமோ என்ற‌ அச்சம் அவரது கண்களில் ஒட்டிக் கொண்டது. ஆனால், நாக்பூர் மடாதிபதிகள் புதிய வழியில் இந்திய மக்களை மதவயப்படுத்த செங்கோல்,
ஹோமம், ஆதீனங்கள் என்று மதிப்புமிக்க மதச்சார்பற்ற நாடாளுமன்றத்தை இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கூடாரமாக மாற்றி அமைக்க உத்தரவிட்டார்கள்.

இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது, பழைய பஞ்சாங்க முறைப்படி பார்ப்பனீயக் காலனி ஆதிக்கத்தை நிலை நாட்டுவது போன்ற நாக்பூர்‌ மடாதிபதிகளின் திட்டங்களை‌ப்
பற்றி பெரிய அளவிலான புரிந்துணர்வும், சமூக விழிப்புணர்வும் அற்றவர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி.

இந்துத்துவப் பிற்போக்குவாதிகளின் கூடாரமான மோடியின் முதலாளிகள் இந்திய ரயில்வேயை‌ முற்றிலுமாக விற்று முதலாக்க ஆசைப்பட நல்வாய்ப்பாகவோ, உருவாக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவோ ஒரிசா ரயில் விபத்தில்
எளிய மக்களின் உயிரைக் காவு வாங்கினார்கள்.

நாக்பூரில் இருந்து இப்போது வந்திருக்கும் வழிநடத்தல் செய்தி இதுதான், "ஒரிசா ரயில் விபத்தை சதியாக மாற்று, இஸ்லாமியர்களின் மீது பழியைப் போடு". 2024 தேர்தலில் மிக முக்கியமான ஆயுதமாக இந்த மதவெறுப்பு‌ பிரச்சாரத்தை முன்னெடுத்து
மறுபடி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் திட்டம்.

விபத்தையும் கூட இவர்களே நிகழ்த்தி இருப்பார்களோ என்று மானுட நீதியை மீறி மனிதர்கள் மீது சந்தேகப்படும் அளவுக்கு இந்த தேசத்தின் மனசாட்சியைக் குலைத்துப் போட்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் வரலாறு அப்படி.

இந்தியாவின் மிக மோசமான ஒரு
பிரதமரின் கீழ், அடிப்படை அரசியல் அறிவற்ற தத்துவங்களின் ஏவலடிமையின் கீழ், மானுட நீதியை மறுக்கும், முட்டாள் ஒருவரின் ஆட்சிக்காலத்தில் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வாழ்ந்தோம் என்கிற அவச்சொல்லை எப்படி விலக்குவது என்று தெரியவில்லை.

வரலாறு எல்லாவற்றையும் குறித்துக் கொள்ளும். ஆனால்,
நீதியை மட்டுமே மறுபடி மறுபடி எழுதும்.

கை.அறிவழகன்

#kaivarivazhagan #writerarivazhagan #arivazhaganstories #arivazhaganmorningstories #facebookarivazhagan #OdishaTrainMishap #arivazhagankaivalyam #CommonMan #TrainCrash #NarendraModi #india #hinduism
@rattibha

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

Jun 8
இதுதான் உண்மை !

ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் ஒரு இந்திய பிராமணரை பேட்டி கண்டார்.

பத்திரிகையாளர் :

உலகில் யாராவது சுரண்டப்பட்டால், சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது_
ஏற்படும்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை (BC,MBC,SC,ST) தங்களுக்கு கீழ்
வைத்துள்ளீர்கள், அவர்கள் எண்ணிக்கை 85%. ஆக உள்ளது.
இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் சுரண்டலுக்கு எதிராக, பிராமணியத்திற்கு எதிராக அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை?

பிராமணரின் பதில் :

அவர்கள் (பிராமணர் அல்லாதார்) ஒரு குழந்தையை உருவாக்க முடியும், ஆனால் தங்கள் குழந்தைக்கு
பெயரிட முடியாது.

அவர்கள் வீடுகளை கட்ட முடியும். ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்கள் தாங்களாகவே வீட்டிற்குள் நுழைய முடியாது.

அந்த நபர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் நாங்கள் இல்லாமல் திருமண தேதி பெற முடியாது.

அந்த நபர்கள் எந்த வியாபாரத்தையும் செய்ய முடியும், ஆனால் நாங்கள்
Read 8 tweets
Jun 8
ரஸ்யாவின் நெருக்கடி மிகுந்த சரவாதிகார ஆட்சிகாலத்தில், அங்கிருந்து வெளியேற பல்வேறு முயற்சிகள் செய்து ஒருவழியாக அனுமதி பெற்று இஸ்ரேலுக்கு கிளம்பினான் ஒரு யூதன்.

மாஸ்கோ விமான நிலையம்..!
அவனது பெட்டியில் ஒரு லெனின் சிலை இருப்பதைக் கண்ட அதிகாரி..

என்ன இது?
ஐயா...தவறான கேள்வி..
என்ன
இது என்றல்ல...
யார் இது என்று கேட்டிருக்க வேண்டும்...
இவர் தோழர் லெனின்..
சோசலித்துக்கு அடிப்படை அமைத்து
எதிர்காலத்தில் வளமான பலமான ரஸ்யாவை உருவாக்கும் சிற்பி..
நமது அன்புக்குரிய தலைவரை நினைவில் வைப்பதற்காக என்னுடன் எடுத்துச் செல்கிறேன்..

அந்த ரஸ்ய சுங்க அதிகாரி மகிழ்ச்சியுடன்
வேறு எதுவும் கேட்காமல் அவரை அனுப்பி வைத்தார்...

டெல்அவிவ் விமான நிலையம்..!
யூத சுங்க அதிகாரி அதே கேள்வியை கேட்டார்...

என்ன இது?

ஐயா..தவறான கேள்வி..யார் இது என்று கேட்டிருக்க வேண்டும்...
இவன் லெனின்..கொடுங்கோலன்..
ரஸ்யாவிலிருந்து ஒரு யூதனாகிய என்னைத் துரத்திய பாவி..
நாள்தோறும்
Read 7 tweets
Jun 8
மேல்பாதி கிராமத்தின் வன்னியர்களின் குல தெய்வமான திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் !

வேங்கைவயல் பிரச்சனையில், ஏழு மாதங்கள் ஆகியும், அங்கு பட்டியல் சமூக மக்களுக்கு நீதி வழங்க வக்கில்லாத திமுக அரசு,
இன்று வேண்டுமென்றே திரௌபதி அம்மன் கோவிலை ImageImage
பூட்டி சீல் வைத்துள்ளது.

மேல்பாதி ஊரில் உள்ள பிடாரி அம்மன் கோவில், அனுமன் கோவில், விநாயகர் கோவில், முருகன் கோவில் ஆகிய கோவில்களில் பட்டியல் சமூக மக்கள் அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு தீண்டாமை இருப்பதாக சொல்லப்படுவது அபத்தமானது.

எறையூரில் சில வருடங்களுக்கு முன்பு
வன்னியர் கிருஸ்தவர்களுக்கும், ஆதி திராவிட கிருஸ்தவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு இரண்டு பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த பிரச்சனையில், அந்த ஊரின் சர்ச் சீல் வைக்கப்படவில்லை.

ஆனால், மேல்பாதி-யில் மட்டும் வேண்டுமென்றே இந்து கோவில் என்பதால் அதன் வழிபாடு
Read 10 tweets
Jun 8
அதிமுகவின் நில அபகரிப்பு

வெள்ளைக்காரன் காலத்தில் தோட்டக்கலை சங்கம் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு லீசுக்கு விடப்பட்ட நிலமானது நியாயமாக தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. அதன் மதிப்பு ரூ.1000 கோடி ரூபாய். இவ்வளவு பெருமானமுள்ள சென்னையில் நடுவில் அமைந்துள்ள நிலத்தை அபகரித்து வைத்திருந்தான
அதிமுக கிருஷ்ணமூர்த்தி.

1989லிருந்து ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் கலைஞர் அந்த நிலத்தை மீட்க ஆணையிட்டார். அதிமுக வழக்கு தொடுத்தது. அதன்பின் ஆட்சி மாறினாலும் நியாயமாக தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்பதில் முழு முனைப்புடன் இருந்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போதெல்லாம்
நீதிமன்றத்தில் வழக்கை நடத்தாமல் இழுத்து அடித்தார்.

அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க கலைஞர் எடுத்த நடவடிக்கையால் கோபம் கொண்ட ஜெயலலிதா "பாப்பாத்தி நான் கலைஞரிடம் தோற்பதா" என்று அரசு நில மீட்பு விவாகரத்தை தன்னுடைய தனிப்பட்ட பிரச்சினையாக எடுத்துக் கொண்டார்.

இது எந்தளவுக்கு சென்றது
Read 11 tweets
Jun 7
*எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதை போல...*
*இரயில் விபத்தில்..மோடி அரசுக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைக்க..*

*சங்கியனுங்க யார் மேல் பழியை போடலாம்‌.. என்று தினமும் ஏதாவது வீடியோக்களை பொய்யாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு திசை திருப்பும் வேலை ஈடுபட்டு வருகின்றனர்..*
*அந்த வகையில் இன்று..* ஒரு சிலிண்டரை தண்டவாளத்தில் போட்டு இரயிலை கவிழ்க முயற்ச்சித்தார்கள் என பரப்பிவந்தனர்.. ஆனால் வழக்கம் போல அதுவும் ஒரு பழைய வீடியோ என்று நிறுபனம் ஆகி சங்கிகள் பொய் அம்பலம் ஆனது.

*அந்த வீடியோ ஜூன் 2022 ஹல்த்வானியிலிருந்து எடுக்கப்பட்டது.*
*உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிஹாரிலாலின் மகன் கங்காராம் என்பவர்,* ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது, ​​ஒரு காலி எரிவாயு உருளையை ரயில் தண்டவாளத்தில் வைத்துவிட்டு செல்ல,
ரயில் வந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்,
தற்போது ஜாமீனில் உள்ளார்.
Read 4 tweets
Jun 7
புதிய பாராளுமன்றத்தில் 888 இருக்கைகள் ஏன்? பலவீனமாக்கப்படும் தமிழ்நாடு!

கடந்த ஞாயிறன்று புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்தார் இந்திய ஒன்றியப் பிரதமர் மோடி. புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்க இந்திய குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததைக் கண்டித்து 19 எதிர்க்கட்சிகள் Image
நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணித்தன. திறப்பு விழாவின் போது ஆட்சியதிகாரத்திற்கான குறியீடாக செங்கோல் முன்னிறுத்தப்பட்டதும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில் மோடி அரசால் திறக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களுக்கென்று 888 இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது
முந்தைய பாராளுமன்றத்தின் மக்களவையில் 552 இருக்கைகள் மட்டுமே இருந்தன; பாராளுமன்ற  உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆகும்.  ஆனால் புதிய பாராளுமன்றத்திலோ மக்களவை  உறுப்பினர்களுக்கான இருக்கைகளின் எண்ணிக்கை 888 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கான
Read 55 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(