அன்பெழில் Profile picture
Jun 10 22 tweets 5 min read Twitter logo Read on Twitter
#சுந்தரேஸ்வரர்_எனும்_திருத்தோற்றமுடையார்_கோயில்
மேலப்பழுவூர் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில் அரியலூரிலிருந்து 15 கி.மீ, திருச்சியிலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது. மேலப் பழுவூரில் அமைந்திருக்கும் இக்கோயில் கல்வெட்டுகளில் #பகைவிடைஈஸ்வரம் என்றே குறிக்கப் பட்டுள்ளது, இவ்வூரின் அடுத்த Image
கல்வெட்டு பெயராக அறியப்படுவது மன்னு பெரும்பழுவூர். இவ்வூர் குன்றக் கூற்றம் என்ற நாட்டுப் பிரிவின் கீழ் இருந்துள்ளது. பழுவேட்டரையர்களால் கட்டப்பட்ட இக் கோயிலின் சிற்பங்ககள் பழுவேட்டரையர்கள் கால கலையழகினை வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் மகா மண்டபத்தில் வீற்றிருக்கும் ரிஷபத்தின் Image
சிற்பம் தத்ரூபமாக பெரிய அளவில் நிஜமாகவே அமர்ந்திருப்பது போல் இருக்கிறது. இங்குள்ள ஸப்தமாதர்கள் சிற்பங்களும், சண்டேஸ்வரர் சிற்பமும் பழுவேட்டரையர்களின் பிரமிக்க வைக்கும் கலைப்படைப்புக்கு எடுத்துக் காட்டாய் உள்ளது. சண்டேஸ்வரர் இளமை ததும்பும் கோலத்தில் உள்ளார். விநாயகர், அக்னி, Image
சூரியன், உமா மகேஸ்வரர், ரிஷபாரூடர், பைரவர், விஷ்ணு, தவ்வை, வெளிச்சுற்றில் சாஸ்தா, சப்தமாதர்களுடன் ஒரு ஊர்த்துவ தாண்டவர் எனப் பல்வேறு சன்னதிகள் உள்ளன. கோபுரத்தின் வெளியே பழுவேட்டரையர்களின் பாணியில் இரு துவாரபாலகர்கள் உள்ளனர். கோயிலின் அதிட்டானம் வரை தரைப்பகுதில் புதைந்து உள்ளது.
சுமார் 10 அடி உயரத்திற்கு படிகளின் வழியாக கீழே இறங்கி நடந்து சென்று முதல் வாயிலைக் கடக்கும்போது அங்குள்ள மூன்று நிலைகளுடன் கூடிய கோபுரத்தைக் காணமுடிகிறது. வலப்புறம் ஜமதக்னி ரிஷியும், சூரியனும் உள்ளனர். இடப்புறம் நவக்கிரகங்கள், சனீஸ்வரர், விநாயகர், உமாமகேஸ்வரர், நாகர், ரிஷபாரூடர், Image
நாகர், பைரவர், விஷ்ணு ஆகியோர் உள்ளனர். அடுத்துள்ள மண்டபத்தைக் கடந்து செல்லும்போது இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். வலப்புறம் இருக்கும் துவாரபாலகருக்கு அருகே விநாயகர் உள்ளார். அருகே நந்தியும், பலிபீடமும் உள்ளன. கிழக்கு நோக்கிய சன்னதியில் மூலவர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கருவறையில்
உள்ளார். மூலவர் சன்னதிக்குச் சற்று முன்பாக இடப்புறத்தில் தெற்கு நோக்கிய மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் கருவறைடன் கூடிய விமானம் கருங்கல் கட்டுமானப் பணியுடன் மிகவும் அழகாகக் காட்சியளிக்கிறது. திருச்சுற்றில் ஊர்த்துவ தாண்டவர், அகோரவீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி,
கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஒரு சன்னதியில் உள்ளனர். அடுத்து தேவிகோட்டை கருமாரியம்மன் சன்னதி உள்ளது. தொடர்ந்து கடன் நிவர்த்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி ஆகியோருக்கான தனித்தனி சன்னதிகள் காணப்படுகின்றன. மூலவர்
கருவறையில் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்குள்ள முருகன் மிக அழகிய கலைப் படைப்பாக உள்ளார். தேவி கோட்டை கருமாரியம்மன் என்று மற்றோரு சன்னதி உள்ளது. இத்தகைய கலைப் படைப்புகளையும், கோயிலையும் இங்குள்ள அர்ச்சகர் திரு. முருகானந்தம் Image
வாமதேவசிவம் அவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மிக நன்முறையில் பராமரித்து வருகிறார். வாயிலின் வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். உள்ளே கொடிமரத்திற்கு முன்பாக விநாயகர் உள்ளார். பலி பீடமும், நந்தியும் #கல்வெட்டுகள்
ஆதித்த கரிகாலனின் 4ம் ஆண்டில் பூவனூரை சேர்ந்த ஆத்திரயன்
சிவதாசன் எனும் உத்தமசோழ பிரமாதிராயன் இகோயிலுக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள், 400 பலம் எடையுள்ள விளக்கும் கொடுக்கப் பட்டுள்ளது.
பராந்தகனின் (பொ.யு 909) காலத்தில் பட்டுடையார் என்பவர் அவனி கந்தர்வ ஈஸ்வர கிரகத்திலிருந்து கொடை அளித்து உள்ளார். மேலும் இக்கோயிலில் தேவரடியாராக இருந்த நக்கன்
கிடந்த பெருமாள், பத்து பொன் கொடையாக கொடுத்து விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
உத்தம சோழனின் 16ம் ஆட்சியாண்டில் மன்னுபெரும் பழுவூரிலுள்ள திருத்தோற்றமுடையார் மஹாதேவர் கோயிலில் நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகளை பழுவேட்டரையர் கண்டன் மறவன் எனும் சிற்றரசர் கொடுத்துள்ளார். விளக்கெரிக்கும்
பொறுப்பை மறவனேரி ஊர் சபை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த திருத்தோற்றமுடையார் எனும் பெயரே சுந்தரேஸ்வரர் என்றாயிற்று. செம்பியன் மாதேவியும் நிலம் அளித்துள்ளார்.
ராஜ ராஜனின் 3 ம் ஆட்சியாண்டில் விளக்கெரிக்க 10 கழஞ்சு பொன்னை கண்டன் மறவரின் போகியார் அழியாநிலை விச்சாதிரி கொடுத்துள்ளார். மேலும்
4ம் ஆட்சியாண்டில் இக்கோயிலுக்கு கங்காணியாக, இளங்கோதி சூரியன் என்பவர் இக்கோயிலில் ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற அதிகாரியாக இருந்த கௌசிகன் நக்கன் மாறன் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ராஜ ராஜனின் 11 ம் ஆட்சியாண்டில் விளக்கெரிக்க நக்கன் வீர நாரணி அவருடைய அரை பங்கு நிலத்தை தேவ தானமாக
அளித்துள்ளார். மேலும் நக்கன் கரிய வீரநாரணி இக்கோயில் இறைவனுக்கு மாதம் தோறும் சங்கராந்திக்கு அமுது படைக்க நெல்லும், அரிசியும், தயிர், நெய், அடைக்காயமுது, திருவமுது படைக்க 4 கழஞ்சு பொன்னையும் தந்துள்ளார்
முதலாம் குலோத்துங்கனின் 10ம் ஆண்டில் ஸ்ரீ கண்டஈஸ்வரம் கோயில் தானத்தார்களும்
வருவாய் நிர்வாகிகளும் சேர்ந்து இக் கோயிலுக்கு திருநாவுக்கரசர் செப்பு திருமேனி செய்து தந்துள்ளனர்.
முதலாம் குலோத்துங்கனின் 15ம் ஆண்டில் பவித்திர மாணிக்க பேரேரி என்ற ஏரியின் கீழ் இருந்த நிலத்தை இக்கோயில் பூஜைக்காக வாண கோவரையன் சுத்த மல்லன் இலங்கேஸ்வரன் கொடுத்துள்ளார்.
முதலாம்
குலோத் துங்கனின் ஆட்சி ஆண்டில் வாண கோவரையன் சுத்த மல்லன் இலங்கேஸ்வரன், செங்கல்லால் இருந்த திருத்தோற்றமுடையர் கோயில் சிதலம் அடைந்ததால் கருங்கல்லால் கட்டி கோபுரம், பிரகாரம் மற்றும் அஷ்ட பரிவார ஆலயம் எடுப்பித்த செய்தியைத் தருகிறது. முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் திருத்
தோற்றமுடையர் கோயில் குலோத்துங்க சோழ ஈஸ்வரமுடைய மகாதேவர் என்று மாற்றம் பெற்று நிலம் தானம் அளிக்கப் பட்டுள்ளது. இதை தவிர்த்து மேலும் பல்வேறு கல்வெட்டுகள் இங்குள்ளன, இவற்றை மறைந்த கல்வெட்டு ஆய்வாளர். திரு. இல. தியாகராஜன் அவர்கள் படியெடுத்து விவரமாக தன்னுடைய அரியலூர் மாவட்ட
கல்வெட்டுகள் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
கலைக் கருவூலமாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும் திகழும் மேலப்பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மேற்காக இவ்வூர் பேரேரி உள்ளது. மல்லன் ஆதித்தன் குளம் என்னும் அந்த ஏரியினை பழுவூர் சங்கரப்பாடி மல்லன் ஆதித்தன் என்பான் ஏரியையும், கால்வாய்களை Image
தூர்வாரினான் என்ற செய்தியைக் குறிக்கும் மேலப்பழுவூர் கல்வெட்டு ஒன்று அகஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ளது. அந்த ஏரியிலிருந்து கிடைக்கும் மீன் குத்தகை வருவாயினை, ஏரியை ஆண்டு தோறும் தூர்வாரி, கரை கட்டி பராமரிக்கும் செலவுகளுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரிய தகவலைக்
காண்கிறோம். ஏரிகளைப் பராமரிப்பதில் நம் முன்னவர்கள் மேற்கொண்டொழுகிய நெறிமுறைகள் நம்மைச் சிந்திக்க வைப்பனவாகும்.
இவ்வளவு சிறப்புகளை தாங்கிய இக்கோயிலையும், ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாசலில் நின்று புன்னகை பூத்து காத்துக் கொண்டிருக்கும் துவாரபாலர்களையும் கண்டு வருவோம்.
திருச்சிற்றம்பலம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 11
#தேசியம்
இந்திரா காந்தியை இரும்பு பெண்மணி என்று அழைப்பார்கள். அது உண்மையா?
#விங்கமாண்டர்_அபிநந்தன் பெயரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
அந்த ஒற்றை பாரத வீரன் பத்திரமாக நாடு திரும்பவில்லை என்றால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருக்காது என்று முழக்கமிட்டவர் பாரத பிரதமர் Image
#மோடி. அபிநந்தன் போல வேறு சில விமானிகளின் பெயர் பட்டியல் இதோ!
விங் கமாண்டர் ஹர்சரன் சிங் டாண்டோஸ்,
படைத் தலைவர் மொஹிந்தர் ஜெயின்,
படைத் தலைவர் ஜே.எம்.மிஸ்திரி,
படைத் தலைவர் ஜே.டி.குமார்,
ஸ்க்வாட்ரன் லீடர் தேவ் பிரசாத் சாட்டர்ஜி,
விமான லெப்டினன்ட் சுதிர் கோஸ்வாமி
விமான லெப்டினன்ட்
வி வி டாம்பே,
பிளைட் லெப்டினன்ட் நாகசாமி சங்கர்,
பிளைட் லெப்டினன்ட் ராம் எம் அத்வானி,
ப்ளைட் லெப்டினன்ட் மனோகர் புரோகித்,
பிளைட் லெப்டினன்ட் தன்மய் சிங் டாண்டோஸ்,
பிளைட் லெப்டினன்ட் பாபுல் குஹா,
பிளைட் லெப்டினன்ட் சுரேஷ்சந்திரா சண்டல்,
பிளைட் லெப்டினன்ட் ஹர்விந்தர் சிங்,
ப்ளைட்
Read 8 tweets
Jun 11
#மகாபெரியவா
பாகவத ஸப்தாகம், நவாகம் என்றாலே பல பக்தர்களுக்கு மாயவரம் #சிவராமக்ருஷ்ண_சாஸ்த்ரிகள் தான் நினைவிற்கு வருவார். அப்படி ஒரு அருமையான ப்ரவசன மேதை! ப்ரவாகமாக ஸ்லோகங்களும் மேற்கோள்களும் வர்ஷிப்பார். கேட்டது போதும் என்று யாருக்குமே தோன்றாது. மெய் மறந்து கேட்கும் கூட்டம். Image
அப்படிப்பட்ட பண்டிதருக்கு திடீரென்று சரீர அசக்தி உண்டாகி, மனதிலும் மறதி இடம் பிடித்ததால், ப்ரவாகமாக வரும் பேச்சு தடைபட்டது. குடும்பமே கலங்கியது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை! என்று வேறு எங்கு போவார்கள்? பெரியவாளின் தரிசனத்துக்கு வந்து கதறி அழுதார்கள். சாஸ்த்ரிகளும் பேச்சு
வராவிட்டாலும், கண்களில் வழிந்த கண்ணீரால் தன் இயலாமையை கூறினார். சாதரணமாக நம்மைப் போல வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோர்க்கு, வாக்கு தடைபட்டால் "நல்லதாப் போச்சு!" என்று நம் குடும்பத்தாரே நினைப்பார்கள். ஆனால், சாஸ்த்ரிகளோ, பகவத் குணங்களை வர்ஷிப்பது தடைபட்டதே என்று உருகினார். அவருடைய
Read 10 tweets
Jun 11
#MahaPeriyava
Narrated by Sri Salem Ravi

A person who was working for a company at Ambattur had lots of problems in his life! Sick wife, useless children to name a few. He had a friend who was Maha Periyava’s devotee.
The friend advised the person, “Instead of going through the Image
trauma of facing your difficulties alone, go to Kancheepuram. Have darshan of our Maha Periyava once. All your difficulties will vanish at that instant”. The person listened to this advice and came to Kancheepuram. He thought, “Even Kings from different parts of the world,
Presidents and also poor peasants come for Maha Periyava’s darshan. There will be lots of people around Periyava all the time. In the midst of all the crowd, how can I go near Him and explain my problems”. He got out the bus and reached the Sri Matham. Big Surprise! There was
Read 16 tweets
Jun 11
#மகாபெரியவா அருள்வாக்கு

கிணற்று நீரில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பிக்கிறது. அது போல நம் துக்கங்களை ஞானமான தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கான காரணங்கள் இருந்தாலும், Image
தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரி துக்கம் லேசாகிவிடும்.

நல்ல செயல்கள் செய்தால் ஈஸ்வரன் நமக்கு கை கொடுப்பார், அவர் தான் நமக்கு கை, கால், கண் வழங்கியதுடன், ஆலோசிக்க புத்தியும் கொடுத்துள்ளார். இந்த சக்தியும், புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்
வழுக்கு மரத்தின் இயல்பு சறுக்குவது. சறுக்கிச் சறுக்கி விழுவதைச் சமாளித்துக் கொண்டு முயற்சி செய்து மேலே ஏறினால் வெற்றி உண்டாகும். அப்படியே வாழ்வில் சறுக்குவதும் இயல்பாகும்.
தீய எண்ணம் உள்ளவனோடு சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது தீய எண்ணம் ஏற்படுகிறது. கோபம், தீய எண்ணம் இல்லாத
Read 4 tweets
Jun 11
#Bhakti
#Narasin_Mehta, also known as Narasin Bhagat, was a 15th century poet-saint of Gujarat, India. Honoured as the first poet or Adi Kavi of Gujarati language, Narasingha became a devotee of Krishna and devoted his life to composing poetic works described as bhakti or Image
devotion to Krishna. His bhajans have been popular in Gujarat and Rajasthan for over 5 centuries. Narasingh was mute till the age of eight. He started speaking only after meeting a holy man who made him chant the phrase "Rade Shyam". Narasin and his wife Manekbai lived in the
house of his elder brother Panshidar, but Panshidar's wife treated them badly. She was a bad woman who mocked and humiliated Narasingh many times. One day, when her taunts and insults were too much for Narasingha, he left the house and went to a nearby forest to seek some peace,
Read 6 tweets
Jun 10
ஸ்ரீ அஹோபிலமடம் வேத ப்ரபந்த ஆதர்ஷ ஸம்ஸ்க்ருத மஹாவித்யாலயா மற்றும் ஓரியண்டல் உயர் நிலை பள்ளி, மதுராந்தகம Estd.1942
#ஸ்ரீஅஹோபிலமடம் ஸ்ரீமத் அழகியசிங்கர்களின் பூர்ண அநுக்ரஹத்துடன் ஸ்ரீ மாலோலன் கல்வி அறக்கட்டளையின்நிர்வாகத்தின் கீழ் நடைபெற்று வரும் ஸ்ரீ அஹோபிலமடம் வேத ப்ரபந்த ஆதர்ஷ Image
ஸம்ஸ்க்ருத மஹாவித்யாலயா மற்றும் ஓரியண்டல் உயர் நிலை பள்ளியில்2023 - 24 ஆண்டிற்கான #மாணவர்ச்சேர்க்கை நடைபெற்று வருகிறது. உபநயனம் முடிந்த மற்றும் முடியாத ஸ்ரீ வைஷ்ணவ மாணவர்கள் பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் வேத ப்ரபந்த வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். அவர்களுக்கு
சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்பதை உத்தேசித்து வேத ப்ரபந்தத்தோடு சேர்த்து ஸம்ஸ்க்ருத கல்வி மற்றும் பூர்வாபர வைதிக கார்யங்களுக்கான பயிற்சியும் அளிக்கப் படும். இது அவர்களுடைய வாழ்வாதாரத்தை மிகச் சிறந்த முறையில் முன்னேற்ற பாதையில் அமைத்துக்கொள்ள உதவும். 80ஆண்டுகளுக்கு முன்பு
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(