2009-ல் #தமிழீழ மண்ணில் உச்சகட்ட போர் நடந்துகொண்டிருந்தபோது!!
அப்போதைய காங்கிரசு தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி ! சிங்கள இனவெறி இராணுவத்துக்கு இந்திய அரசு செய்துகொண்டிருந்த ஆயுத உதவிகளை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்றுங்கள் +
என்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து தமிழ் உணர்வாளர்கள். அழுகையும் ஆத்திரமுமாக தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் வேண்டுகோள்கள் வைத்த வண்ணம் இருந்த நாட்கள் அவை.
தமிழகத்தில் அப்போது உருவான தன்னெழுச்சியை, கிளர்ச்சியை கட்டுப்படுத்தவும்,
மட்டுப்படுத்தவும் #கருணாநிதி +
தலைமையிலான திமுக அரசு, வாரம் இரண்டு முறை பிரணாப் முகர்ஜி மற்றும் சிவசங்கர மேனன் இருவரையும் மாறி மாறி தமிழகம் அழைப்பார்கள். அடுத்தநாள் காலையில் அனைத்து ஊடகங்களிலும் #தலைப்பு செய்திகளில் "தமிழர்கள் உயிரை உடனே காப்பாற்ற கருணாநிதி கோரிக்கை" "போரை நிறுத்தாவிட்டால் +
நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது - கருணாநிதி #மிரட்டல்" "ஒருவாட்டி முடிவெடுத்துவிட்டால், என் பேச்சை நானே கேட்கமாட்டேன் - கருணாநிதி கதறல்" இப்படியாக பரபரப்பாக செய்திகள் உலவிய நாட்கள் அவை.
இதையும் உண்மை என்று நம்பி #தமிழ் உணர்வாளர்கள் ஆங்காங்கே.. ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், +
கொட்டும் மழையில் மனிதச்சங்கிலி, தந்தி அடித்தல், துண்டறிக்கை கொடுத்தல்.என இப்படியாக தங்களால் முடிந்த முயற்சியை எடுத்துக்கொண்டு, இந்த திமுக-காங்கிரசு அரசுகள் எப்படியாவது போரை நிறுத்த உதவி செய்யாதா!நம் உறவுகள் கொத்து கொத்தாக மடிவதை தடுக்க முயலாதா!என்று வேதனையுடன் இருந்தநாட்கள் அவை.+
இந்த பிரணாப் முகர்ஜி ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும், விமான நிலையத்தில் நின்று கொண்டு"கருணாநிதி வேண்டுகோளுக்கு இணங்க, இப்போ #இலங்கை சென்று ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்த போயிட்டு இருக்கேன். நம்பிக்கையுடன் இருங்கள், தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள்"என்று சொல்லிவிட்டு போவார் +
ஆனால் அங்கு இறங்கியவுடன் #விடுதலை_புலிகள் பயங்கரவாதிகள். தீவிரவாதத்தை அழிக்க இந்தியா எப்போதும் இலங்கையுடன் துணை நிற்கும். தமிழர்களை விட்டுவிட்டு புலிகளை மட்டும் அழியுங்கள் என்று 'துக்ளக் படிப்பவர்கள் போல' அறிக்கை விட்டுவிட்டு, அங்கிருந்த #டெல்லி பறந்து போன நாட்கள் அவை.+
மே-2009 இறுதிவரை திமுக-காங்கிரசு நடத்திய நாடகங்களில் மிக முக்கிய கதாபாத்திரமாக மிக தத்ரூபமாக நடித்த பெரும் பங்கு, இந்த முன்னாள் #வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு உண்டு என்பதை தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அறிவார்கள்..!!
சரி சொல்லவந்த விசயத்தையே மறந்துட்டேன்..
இந்த பிரணாப் முகர்ஜிக்கு சில நாட்களுக்கு முன்பு மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவருக்கு #கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை தொடர்வதாகவும் +
#செய்திகள் வெளியாகியுள்ளன.
கீழே நடப்பவற்றை மேலிருந்து #இறைவன் மட்டுமல்ல #மாவீரர்களும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்..!!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
